QUIZ  முருகன், கந்தன் QUIZ (Post No.12,866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,866

Date uploaded in London – –   30 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.92

1.அறுபடை வீடுகளில் எந்த இரண்டு தலங்களில் பழம் இருக்கிறது?

xxxx

2.முருகன் பெயரைச் சொன்னவுடன் எந்த இரண்டு பறவைகள் நினைவுக்கு வரும்?

xxx

3.கந்த புராணத்தையும் , கந்த சஷ்டிக் கவசத்தையும் இயற்றியோர் யாவர்?

xxxx

4.சங்க இலக்கிய நூல்களில் எந்த நூல் முழுக்க முழுக்க முருகன் புகழைப்பா டுகிறது ? காய் இயற்றியவர் யார் ?

xxxx

5.சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை என்னும் எட்டு நூல்களில் முருகன் பற்றிய பாடல்கள் எதில் உள்ளன?

xxxx

6.சுவாமிநாதன், தண்டாயுதபாணி , செந்தில் ஆகிய முருகன் பெயர்களை அறுபடை வீடுகளில் எதனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?

xxxx

7.திருப்பதி பாலாஜியை/ வெங்கடாசலபதியை முருகன் என்று பாடியவர் யார் ?

xxxx

8.காங்கேயன் என்றால் என்ன பொருள்?

xxxx

9.எந்த இரண்டு நட்சத்திரங்களை முருகன்/கந்தனுடன் தொடர்புபடுத்துவீர்கள் ?

xxxx

10.ஊமையாகப் பிறந்து முருகன் அருளால் கவிபாடும் திறன் பெற்ற புலவர் யார் ? அவர் பாடிய முக்கிய நூல்கள் என்ன?

xxxx

விடைகள்

1.பழம் உதிர் சோலை, பழம் நீ (பழனி)

xxxx

2.மயிலும் , சேவலும்

xxxx

3.கந்த புராணம் ஆசிரியர்- கச்சியப்ப சிவாச்சார்யார்

கந்த சஷ்டிக் கவச ஆசிரியர்- தேவராய சுவாமிகள்

xxxx

4.திருமுருகாற்றுப்படை; அதை நக்கீரர் இயற்றினார்.

xxxx

5.பரிபாடலில் உள்ளன.

xxxx

6.சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் குடிகொண்டுள்ள முருகனின் பெயர்கள் அவை .

xxxx

7.அருணகிரிநாதர் திருப்புகழ் நூலில் இப்படிப்பாடியுள்ளார்

xxxx

8.முருகனையும் பீஷ்மரையும் கங்கையின் மைந்தர்கள் என்று குறிப்பிட்ட காங்கேயன் என்ற பெயரைப் பயன் படுத்துவார்கள் 

xxxx

9.கார்த்திகை , விசாகம் ஆகிய இரண்டு விண் மீன்களை;

Xxxx

10.குமார குருபரர் ; அவர் பாடிய பல நூல்களில் மிகவும் பிரபலமானவை :

மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகல கலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்; கந்தர் கலிவெண்பா.

xxxx

—subham—-

Tags- முருகன் கேள்வி பதில் , QUIZ  முருகன், கந்தன் QUIZ

முருகன் கேள்வி பதில்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

30 Apr 2016 — பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது? 7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது? 8.பழனி மலையில்

Leave a comment

Leave a comment