வினோத (வி) சித்திரங்கள்: பாலஸ் மியூசிய அதிசயங்கள் -9 (Post No.13,171)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,171

Date uploaded in London – –   23 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வினோத (வி) சித்திரங்கள் திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் – 9

திருவனந்தபுரம்  பாலஸ் மியூசியத்தை ஒட்டி சித்ராலயம் மியூசியம் இருக்கிறது; அங்கு போட்டோ எடுக்க அனுமதி கிடையாது  ; அங்குள்ள அதிசயங்களில் ஒன்று வினோத சித்திரங்கள் ஆகும் . ஒரு காகிதத்தில் எலிகள் படங்களாக இருக்கும். அதன் மீது கூம்பு வடிவ கண்ணாடியை வைத்தால் அந்த கண்ணாடிக்குள் கணபதியைக் காணலாம். இதே போல வண்ணத்தைக் கொட்டிய பேப்பரில்  கூம்பு வடிவ கண்ணாடியை வைத்தால் மஹாத்மா காந்தி தெரிவார். இது போல 10, 15 சித்திரங்களைக் காணலாம். இந்த உத்தியை அனமார்ப்பிக் ஆர்ட் ANAMORPHIC ART   என்பார்கள்.இது கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவான சொல். அன என்றால் மீண்டும், பின்னே என்று பொருள் மார்ப்பிக் என்றால் உருவம். அதாவது ஒரு படத்தைச் சிதைத்துவிட்டு அதை மீண்டும் நல்ல உருவத்தில் சித்திரமாகப் பார்ப்பதாகும். இத்தாலிய மேதை லியர்னாடோ டாவின்சி இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார் 1485 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய கண் சித்திரம்தான் இவ்வகையில் முதன்மையானது.

அடுத்த 300 ஆண்டுகளில் இது மிகவும் வேகமாகப் பரவியது. ரகசியச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், அரசியல் பரப்புரைகள் செய்யவும், ஆபாசப் படங்களை அனுப்பவும் இந்த சிதைக்கப்பட்ட சித்திர உத்தி கையாளப்பட்டது. ஒரு கூம்பு அல்லது பிரமிட் அல்லது உருளை/ சிலிண்ட்ரிகல் கண்ணாடியை வைத்தால்தான் உண்மையில் அது என்ன என்பது தெரியும்.

எட்டாவது ஹென்றி மன்னரின் ஆஸ்தான ஓவியர் HANS HOLBEIN ஹோல்பேய்ன் என்பவர்தான் மிகவும் புகழ்பெற்ற சிதைந்த சித்திரத்தை உருவாக்கியவர் . கீழை நாடுகளில் பின்னர் இது பரவியது .

சித்ராலயா மியூசியத்தில் உள்ள வினோத வி/ சித்திரங்களை உருவாக்கியவர் கேரள மாநில திருஸ்சூரைச் சேர்ந்த பள்ளிசேரி வின்சென்ட் ஆவார். இவர் கலைப் பள்ளியில் பயின்றவர் . தற்போது கொச்சி கல்லூரியில் ஆசிரியரா உள்ளார். இந்தியாவில் இந்தக் கலையைப் பின்பற்றுவோர் மிகச் சிலர்தான்.

இவரது வி/ சித்திரங்களை லண்டனில் பக்கிங்ஹாம் அரண் மனை, அபுதாபி அரண் மனை, வங்க தேச தலை நகர் டாக்கா , திருச்சூர் சர்ச் , திருவனந்தபுரம் சித்திராலயம் ஆகியவற்றில் காணலாம் .

xxxx

கத்தி கபடாக்கள், துப்பாக்கிகள் பெரிய நிலைக் கண்ணாடிகள் , சீனா  ஜப்பானிலிருந்து வந்த ஊறுகாய் ஜாடிகள், வண்ணக் கோப்பைகள், பொம்மைகள் பீங்கான் பொருட்களையும் பாலஸ் மியூசியத்தில் காணலாம். ஒவ்வொரு பொருளின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். யார் கொடுத்தார்கள், எப்போது, எதற்காகக் கொடுத்தார்கள் என்பனவெல்லாம் ஆராய்ச்சியாளருக்கு முக்கியமான தகவல் ஆகும். அதே போல கத்தி கபடாக்கள் , துப்பாக்கிகள் ஆகியன போர்ச்சுகீசிய, டச்சு, ஆங்கில ஆக்கிரமி ப்பாளருடன் , திருவாங்கூர் மன்னர்கள் செய்த யுத்தங்களின் கதைகளை சொல்லும் .

ஒரு யானையின் தோலை, தந்தங்களை அப்படியே எடுத்து உயிருடன் இருக்கும் யானை போலவே வைத்துள்ளதை மியூசியத்துக்கு வெளியே வருகையில் காணலாம்.

அனைவரும் காண வேண்டிய மியூசியம் இது . நான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன் .

இத்துடன் இந்த 9 பகுதி படக்கட்டுரை நிறைவு பெறுகிறது .

—சுபம்—

TAGS- ANAMORPHIC ART, TRIVANDRUM, PALLISERY VINCENT, DA VINCI, PALACE MUSEUM, PART 9, வினோத (வி) சித்திரங்கள் திருவனந்தபுரம், பாலஸ் மியூசிய அதிசயங்கள்  9

Leave a comment

Leave a comment