மே 2024 காலண்டர்: மேலும் 31 கருட புராண பொன்மொழிகள் (Post No.13,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,187

Date uploaded in London – –   28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பண்டிகைகள் – 1 மே தினம்; 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; 10- அட்சய திருதியை; 12 ஆதி சங்கரர் ஜெயந்தி; 22 வைகாசி விசாகம், நரசிம்மர் ஜெயந்தி;  23 புத்த பூர்ணிமா,28 அக்னி நட்சத்திரம் முடிவு

அமாவாசை- 7;  பெளர்ணமி – 23;

ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 4, 19

முகூர்த்த நாட்கள் — 3, 5, 6, 13, 19, 26

xxx

மே 1 புதன் கிழமை

வேலைக்காரர்கள் மூன்று விதம்; உத்தமம், மத்யமம், அதமம்; அவர்களுக்கு  தரத்திற்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும் 1.112.1. கருட புராணம்

XXXX

மே 2 வியாழக் கிழமை

தங்கத்தின்  தரத்தை உரை கல்லில் உரசியும், வெட்டியும், தகடாக அடித்தும் , உருக்கியும் 4 விதங்களில் பரிசோதிக்கிறோம். வேலைக்கார்களையும் தோற்றம், நடத்தை, குலம் , செய்யும் வேலைகளைக்கொண்டு பரிசோதிக்க வேண்டும் 1.112.3.

XXXX

மே 3 வெள்ளிக் கிழமை

1.112.4. கஜானாவுக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டியவருக்கு நல்லொழுக்கம், நேர்மை, நல்ல குணங்கள், அழகு, , இனிமையாக பழகும் சுபாவம் இருக்க வேண்டும் .

XXXX

மே 4 சனிக் கிழமை

1.112.5. நகைகளின் மதிப்பு ஜொலிப்பு முதலியவற்றை அறிந்தவரை நகைகளை மதிப்பிட அதிகாரியாக நியமிக்கிறோம்; அது போல வீரர்களின் பலம், பலவீனத்தை அறிந்தவரைத்தான் தளபதியாக நியமிக்க வேண்டும்.

XXXX

மே 5 ஞாயிற்றுக் கிழமை

1.112.6. கண்காணிக்கும் அதிகாரிக்கு பிறரின் எண்ணத்தை அறியும் சக்தி இருக்க வேண்டும்; ஒருவரின் நடை உடை பாவனைகளைக் கவனித்து உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

XXXX

மே 6 திங்கட் கிழமை

1.112.8. அரசனின் தூதர் அஞ்சாமல் பேசுபவராகவும் புத்தி சாலியாகவும், குறிப்பறிந்து ஒழுகுபவராகவும் கடுகடுப்பானவராகவும் இருத்தல் அவசியம்.

xxxx

மே 7  செவ்வாய்க் கிழமை

1.112.14. கெட்டவனின்  வாயும் பாம்பின் வாயும் ஒன்றுதான். இருவருக்கும் இரட்டை நாக்குகள். பயங்கர வலியைஉண்டாக்கும் .

XXXX

மே 8 புதன் கிழமை

1.112.15. அறிவாளியாக இருந்தாலும் கெட்டவனை அணுகக் கூடாது; பாம்பின் தலையில் ரத்தினம் இருந்தாலும் யாரும் அணுகுவதில்லையே

XXXX

மே 9 வியாழக் கிழமை

1.113.7. பாம்புப் புற்று, தேன் , நிலவு , பிச்சை இடுதல் இவைகள் வளரந்து கொண்டே வரும் 

XXXX

மே 10 வெள்ளிக் கிழமை

1.113.8. ஒவ்வொரு நாளும் கொஞ்சம்  எடுத்தாலும் கண் மை குறையும்; காலமும் அப்படித்தான் குறைந்து கொண்டேவருகிறது.;ஆகையால் நேரத்தை வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும்

XXXX

மே 11 சனிக் கிழமை

1.113.9. காம எண்ணமுள்ள மனிதன் காட்டுக்குள் சென்று தவம் செய்தாலும் 100 இடையூறுகள் வரும். ஐம்புலன்களை அட்டக்கத் தெரிந்தால் வீடே தபோவனம் ஆகி விடும்

XXXX

மே 12 ஞாயிற்றுக் கிழமை

1.113.10. உண்மை என்பது குணத்தைப் பாதுகாக்கும் ; அறிவு என்பது படிக்கப் படிக்கப் பெருகும்; குடம் என்பது தேய்க்ககத் தேய்க்க மெருகு ஏறும். குடும்பம் என்பது நன்னடத்தையால் பெருமை பெறும்

XXXX

மே 13 திங்கட் கிழமை

1.113.11.சொந்தக்காரர்களிடம் போய் பணம் கொடுங்கள் என்று கெஞ்சசுவதைவிட, விந்திய மலையில் வசிக்கலாம் ; உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கலாம்; பாம்புகளிடையே வசிக்கலாம் ; நீர்ச் சூழலில் குதிக்கலாம் .

xxxxx

மே 14  செவ்வாய்க் கிழமை

1.112.13. கணக்குப்பிள்ளையோ எழுத்தரோ, தலைமை அதிகாரியோ யாரானாலும் சோம்பேறியாக இருந்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் .

xxxx

மே 15 புதன் கிழமை

1.113.32. பாம்பை விரட்டினால் கிணற்றுக்குள் போய்விடும்; யானையை மரத்தில் கட்டிவிடலாம் ; எலியை விரட்டினால் பொந்துக்குள் போய்விடும்; ஆனால் கர்ம வினை இதைவிட வேகமானது; எங்கும் தப்பித்து ஒளிய முடியாது

XXXX

மே 16 வியாழக் கிழமை

1.113.39. எப்போதும் கெடுதி செய்பவன் கெட்ட எண்ணங்களால் மரத்துப் போய்விடுகிறான். 100 குடம் ஜலத்தால்கூட அவனை சுத்தம் செய்ய முடியாது .

XXXX

மே 17 வெள்ளிக் கிழமை

1.113.34. நியாயமாக சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்; குணத்தால் மேலும் வளரும்; ஆகையால் முதலில் குணத்தை நாடுங்கள் ; உலகப் புகழ் பெறலாம் .

XXXX

மே 18 சனிக் கிழமை

1.113.17. தாய் என்பவள் லட்சுமி; தந்தை என்பவர் விஷ்ணு; அப்படியும்  மகன் கெட்டவனாக இருந்தால் யாரைத் தண்டிக்க முடியும்?

XXXX

மே 19 ஞாயிற்றுக் கிழமை

1.114.19. பொய் சொல்லி நண்பனாக்கிக் கொள்வோரும் பாவங்களைச் செய்து நல்லவன் போல காட்டுபவனும் மற்றவர்களை கண்ணீர் சிந்தவைத்து சம்பாதிப்பவனும் ; கொடுமை செய்து பெண்களை திருமணம் செய்வோரும் புத்திகெட்டவர்கள் .

xxxx

மே 20 திங்கட் கிழமை

1-113-41. சாது என்பவர் யார் ? கோபத்தில் கொடிய சொற்களை உதிர்க்கமாட்டார்; பாராட்டும்போது கர்வம் அடையமாட்டார்; இகழும்போது துன்பம் அடைய மாட்டார்.

xxxx

மே 21  செவ்வாய்க் கிழமை

1.113.20. ஒரு மனிதன், அவன் செய்த செயலிலிருந்து தப்பிக்கவே முடியாது; வானத்தில் தூக்கி எறியமுடியாது; கடலில் மூழ்கடிக்க முடியாது; அவனுடைய அம்மாவே பிடித்து தன்னிடம் வைத்து பாதுகாத்தாலும் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

XXXX

மே 22 புதன் கிழமை

1.114.18.  சிறுவர்களுக்கு இனிப்பு கொடுப்பவர்கள், நல்லோரிடம் பணிவானவர்கள், பெண்களுக்கு  செல்வம் தருவோர், இறைவனை தவத்தால் போற்றுவோர் , மக்களுக்காக உழைப்போர் — ஆகியோரே அறிவாளிகள்.

XXXX

மே 23 வியாழக் கிழமை

1.114.16. மதில் சுவருள்ள கோட்டையில் பெண்களை அடைத்து வைக்கலாம்.ஆயினும் நீண்ட கூந்தல் இல்லாதவரை அவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்; நீண்ட கூந்தலை வைத்தே தப்பித்துவிடுவார்கள் .

XXXX

மே 24 வெள்ளிக் கிழமை

1.114.14. பிராமணன் இலக்கண வித்தகனாக இருப்பதில் அதிசயமில்லை; நல்ல நிர்வாகம் செய்யும் அரசன், குணவானாக இருப்பதில் அதிசயமில்லை; ; அழகான பெண், கற்பிலிருந்து விலகுவதில் அதிசயமில்லை; ஏழைகள் பாவங்களை செய்வதிலும் அதிசயமில்லை;.

XXXX

மே 25 சனிக் கிழமை

1.113.14. பீமன், அர்ஜுனன் முதலியோர் இளவரசர்கள்தான்; சூரியன், சந்திரன் போல பிரகாசமானவர்கள்; கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆயினும் அவர்களை கிரகங்கள் ஆட்டிப்படைத்தன.

XXXX

மே 26 ஞாயிற்றுக் கிழமை

1.114.13 தீ, தண்ணீர், பெண்கள், அரச குடும்பம் ஆகியவற்றை எல்லோரும் உதவிக்கு அணுகுவார்கள்; ஆயினும் அவர்கள் திடீரென்று உயிரைப் பறித்து விடுவார்கள்.

XXXX

மே 27 திங்கட் கிழமை

1.113.19. தீதும் நன்றும் பிறர் தர வாரா; நாமே நமக்கு வருவித்துக் கொள்வதுதான்; யாரிடம் பிறக்கப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுப்பதும் நாமே (கர்ம வினை).

xxxx

மே 28 செவ்வாய்க் கிழமை

1.113.21. பலசாலி ராவணனும் காலத்தின் கோலத்தால் அழிந்தான்;திரிகூட மலையி ல் கோட்டை; கடலே அவனுக்கு அகழி.சிப்பாய்களோ ராக்ஷஸர்கள்; அவன் பின்பற்றிய சாஸ்திரமோ உசனஸ்/ சுக்ரன் கவி கொடுத்தது. அப்படியும் காலதேவன் அவனை முடித்துவிட்டான்.

xxxx

மே 29 புதன் கிழமை

1.114.10. ஆண்கள் காணப்படாதவரைதான் பெண்கள் கற்புக்கரசிகள் ;ஒரு மனிதனுடன் வசிக்கும்போது வேறு மனிதனை பெண்கள் அன்பாகப் புகழ்வார்கள்

XXXX

மே 30 வியாழக் கிழமை

1.114.22. நம்பத்தகாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே; நண்பர்களிடம் கூட ரகசியங்களை சொல்லாதே ; அவனுக்கு கோபம் வந்தால் ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவான்.

xxxx 

மே 31 வெள்ளிக் கிழமை

1.114.21. தேவையான பொருள்கள்/ சூழ்நிலை   இருந்ததால் மட்டும் ஒருவன் சந்நியாசி ஆகிவிடமாட்டான்.  மதுபானம் அருந்தும் பெண் கற்புக்கரசியாக இருக்க முடியுமா ?

–subham–

Tags- மே 2024 காலண்டர் , மேலும் 31 , கருட புராண,  பொன்மொழிகள்

Leave a comment

Leave a comment