பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 7 (Post No.13,205)

அவுரி அல்லது நீலி Indigofera

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,205

Date uploaded in London – –   4 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் 7

91. Albizia amara (Roxb.) Boivin

அல்பிஸியா அமரா / உசிலை

திருநெல்வேலி ஜில்லா மலை ஜாதி மக்கள் உசிலை மரப்பட்டை,  இலை ஆகியவற்றை மசித்து வேப்பெண்ணெயில் வேறு இரண்டு தாவரங்களுடன் வதக்கி பாம்பு கடித்த இடங்களில் பத்து நாளைக்கு அப்புகிறார்கள் இத் துதட ன் பயன்படுத்தும் வேறு இரண்டு தாவரங்கள் –கோரைக்கிழங்கு, வன மல்லிகா/கட்டு மல்லிகை.

xxxx

92. Albizia lebbeck (L.) Benth.

அல்பிஸியா லேப்பெக்

பாகிஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பயன்படும் மூலிகை இது.

xxxxx

93. Bauhinia variegata L.

பெள ஹினியா வேரி கேடா

பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் பயன்படும் மூலிகை இது.

xxxxx

94. Butea monosperma (Lam.) Taub.

பூட்டியா மானொஸ்பெர்மா / புரசு /பலாச

புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசு, பொரசு, புரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு

பாகிஸ்தானிலும் கர்நாடக மாநில சிக்மகளூரிலும் மத்திய இந்தியாவில் பில் பழ ங்குடி மக்களும் இதன் இலைச்  சாற்றையோ அல்லது பட்டையின் கஷாயத்தையோ கொடுக்கிறார்கள் .

xxxx

95. Butea superba Roxb.

பூட்டியா சுபர்பா

கொடிப்பலாசம் /கொடிமுருக்கன் / பலாச லதா

குஜராத்தில் இந்தத் தாவர சாற்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .

xxxxx

96. Caesalpinia bonduc (L.) Roxb.

சீசல்பினியா பாண்டுக் / கழற்சி

உத்தர பிரதேசத்தில் விதைகளைப் பொடிசெய்து தருகிறார்கள்

கழற்சி (Guilandina bonduc,)  பொதுவாக grey nicker, nicker bean [2] fever nut [3] அல்லது knicker nut என்றும் அழைக்கப்படுகிறது)

வேறு பெயர்கள்

Caesalpinia bonduc (L.) Roxb.

Caesalpinia bonducella (L.) FlemingN J J

Caesalpinia crista auct. Amer.

Guilandina bonducella L.

xxxx

97. Cassia fistula L. சரக்கொன்றைசரக்கொன்னை

கேசியா பிஸ்டுலா

கர்நாடகத்திலும் தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைகளிலும் உத்தரப்பிர தேசத்திலும் மக்க ள் இதன் பழ த்தையும் விதைகளையும் பொடி செய்து பயன்படுத்துகின்றனர் .

xxxxx

98. Cassia hirsuta L.

கேசியா ஹிர்சூதா / மலையாவாரம்

வங்கதேச சக்மா பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

commonly known as: hairy senna, woolly senna • Kannada: ಅಡವಿ ತಂಗಡಿ adavi thangadi • Malayalam: പൊന്നാവീരം ponnaaveeram • Manipuri: থৌনম thounam • Tamil: மலையாவாரை malaiyavarai, மலையாவாரம் malaiyavaram, மலையாவிரை malaiyavirai • Telugu: నూగు తంగేడు nugu tangedu • Tulu: ಕಾಟ್ಟು ತಜಂಕ್ kattu thajanku.

xxxxx

99. Cassia occidentalis L. பொன் ஆவாரை

கேசியா ஆக்சிடெண்டாலிஸ்

வங்க தேசம், பாகிஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாம்பு கடித்தால் கொடுக்கின்றார்கள் .

xxxx

100. Cassia tora L.

கேசியா தோரா /தகரை , ஊசித் தகரை

ஹிமாசலப் பிரதேச, உத்தரப் பிரதேச மக்கள் மத்திய இந்தியாவின் கோண்ட் இனமக்கள் இதன் வேரையும் விதைகளையும், இலைகளையும்  பயன்படுத்தி  பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

xxxx

101. Clitoria ternatea L.

கிளைட்டோரியா டெர்னாடியா/ கருவிளம் /செரு விளை / அபராஜித

சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். காக்கணாம் கொடி. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர். மேகாலயா முதல் மத்திய பிரதேசம் வரை இதன் வேரைப்பொடிசெய்து பாம்புக்கடி மருந்தாகக் கொடுக்கின்றனர் .

xxxx

102. Crotalaria pallida Aiton

க்ரோட லேரியா பல்லிடா

மத்திய அந்தமான் தீவுகளில் பழங்குடி மக்கள் இதை உபயோகிக்கிறார்கள் .xxxxx

103. Crotalaria prostrata Rottler ex Willd.

கிலுகிலுப்பை தாவர வகை

க்ரோடலேரியா ப்ராஸ்ட்ரேட்டா

கர்நாடக பிடார்  ஜில்லா மக்கள் இதன் இலைகளை ,அசித்து தண்ணீரில் கலந்து குடிப்பதற்குத் தருகிறார்கள் . அவள் இதை பீலி குல்குலி என்று அழைப்பர்.

xxxxx

104. Derris scandens (Roxb.) Benth.

டெரிஸ் ஸ்கேண்டென்ஸ்

குஜராத்தில் மரப்பட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை தருகின்றனர்.

XXXX

105. Desmodium gangeticum (L.) DC.

டெஸ்மோடியம் காஞ்செடிகம்

மூவிலை (DESMODIUM GANGETICUM) இத்தாவரம் பூக்கும் வகையைச் சார்ந்த, பபேசியே குடும்பம்பத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பாகங்கள் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.சம்ஸ்க்ருதத்தில் சால் பர்ணி என்று சொல்லுவர்.

செடியின் வேரை உத்தரப் பிரதேச மக்கள் உபயோகிக்கின்றனர் .

XXXX

106. Entada rheedei Spreng.

எண்டாடா ரீடை ஸ்ப்ரங் / இரிக்கி

ஒரிஸ்ஸா மக்கள் இதை ஹனுமான் லோடா என்பார்கள்.

விதைகளை மசித்து பாம்புக் கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.

commonly known as: African dream herb, nicker bean, sea bean, St.Thomas bean • Hindi: barabi, chian, घीला ghila, गीला gila • Kannada: ganape kaayi • Malayalam: perim-kaku-valli • Marathi: गारभी garabhi, गारबी garabi, गारंबी garambi, गरूडवेल garudwel • Tamil: இரிக்கி irikki • Telugu: gilla teega, tikka tivva

XXXX

107. Erythrina indica Lam.

எரித்ரைனா இண்டிகா /கல்யாண முருங்கை (Kalyana murungai) Indian Coral Tree

கல்யாண முருங்கை,முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கு, முள் முருக்கு, என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

மிஜோரம் முதல் கர்நாடகா சிக்மகளூர் வரை இதன் பட்டை யையோ வேரையோ வைத்து சிகிச்சை தருகிறார்கள்.

XXXXX

108. Erythrina variegata L.

எரித்ரைனா வேரிகேடா

இந்து மஹா சமுத்திரத் தீவுகளில் இலைகளை பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள்.

XXXXX

109. Indigofera tinctoria L.

இண்டிகோபெரா டிங்க்டோரியா / அவுரி அல்லது நீலி 

கேரளத்தில் வயநாட்டில் வேரின் சாற்றையோ இலையின் சாற்றையோ குடிக்கக் கொடுக்கின்றனர்.

அவுரி  அல்லது நீலி  (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர்.

XXXXX

110. Mimosa pudica L.

மைமோசா பியூடிகா / தொட்டாற் சிணுங்கி

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி  மைமோசா பியூடிகா (Mimosa pudica)

நாகலாந்து முதல் தமிழ் நாட்டின் விழுப்புரம் வட்டாரம் வரை பாம்புக்கடிக்கு இதன் வேரை பயன்படுத்துகின்றனர்.

XXXXX

TO BE CONTINUED………………………………

tags– பாம்புக் கடி,  200  மூலிகைகள் , Part 7 , தொட்டாற் சிணுங்கி, அவுரி 

Leave a comment

Leave a comment