நாராயணனின் 4 கவிதைகள் (Post No.9989)

WRITTEN BY LONDON POET A NARAYANAN

Post No. 9989

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட்  2021ல் எழுதிய 4 கவிதைகள் :

(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)

xxx

தாமரையோ மறையோ

குவித்த கரமொத்த தாமரை மொட்டு

குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்

டதோ காலை இளங்கதிரோன்  விரிந்ததோ

இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்

கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்

நடுவே மகரந்தமே மந்தகாசமாக

நறுமணம் வீசிய நல் வரவேற்பில்

தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய

ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்

ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?

இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை

யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை

யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த

இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்

பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த

வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு

களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்

கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம

வேதமாய் வேய் குழலொலித்த கானம்

தாமரை தன்னுள்ளடக்கிய மறையே

— நாராயணன்

xxxx

எது வழி?

உருவமும் அருவமும் அவரவர் அறி வழி

தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி

நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி

நிர்க்குணமும் சகுணமும் நிழலும்

நிசமும் போன்ற மொழி

சமத்துவமும் தத்துவமும்

சம நிலை மனமொழி

அரியும் அயனும் அவரவர் அறியும் வழி

— நாராயணன்

xxxx

மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

–நாராயணன்

xxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்

நாராயணன் 

–subham—

tags-  நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ 

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

ஹைகூ கவிதைகள்! (Post No.5803)

Written by S Nagarajan

Date: 20 DECEMBER 2018


GMT Time uploaded in London –6 -56 am


Post No. 5803

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஜப்பானிய இலக்கியம்

ஹைகூ கவிதைகள்!

ச.நாகராஜன்

ஜப்பானியக் குட்டிக் கவிதை தான் ஹைகூ. 6 விநாடிகளில் இதைச் சொல்லி முடித்து விடலாம்.

3 வரிகளில் அமையும். 17 அசைகளைக் கொண்டிருக்கும். முதல் வரியில் 5 அசைகள், அடுத்த வரியில் 7 அசைகள், இறுதி அடியில் 5 அசைகள்!

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைகள் இவை.

நிகழ்காலத்தைக் குறிக்கும்.

ஹொக்கு என்பதிலிருந்து உரு மாறி 17ஆம் நூற்றாண்டில் பிரபலமானது ஹைகூ.

பாஷோ (Basho-1644-1694) என்ற கவிஞர் தான் ஜப்பானில் ஹைகூவிற்கு முன்னோடியாக இருந்தார். ஆயிரத்தி எண்ணூற்றி ஐம்பதுகளில் ஹைகூ மேலை நாடுகளுக்குப் பரவியது.

இதன் வடிவமோ சிறிது. கருத்தோ பெரிது. ஆகவே பல அறிஞர்களும் கவிஞர்களும் இதைப் போற்றிப் பாராட்டினர்.

ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், அமி லொவெல் (Amy Lowell)என இதை விரும்பும் மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் பட்டியல் நீ விரிகிறது.

ஆனால் 17 அசை என்பது ஆங்கிலத்தில் முடியாது என்பதால் சுருக்கமான மூன்று வரிக் கவிதை என்று வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் ஹைகூ உருவாக ஆரம்பித்தது.

பாஷோ ஜப்பான் முழுவதும் சுற்றி வந்தவர். தனது அனுபவங்களை ஹைகூவில் குழைத்துக் கொடுத்தார். அதை ஜப்பானியர் பெரிதும் விரும்பினர்.

உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு உன்னதக் கவிதைக் கலையாக ஹைகூ வளர ஆரம்பித்தது. மசாவொ ஷிகி(Masaoka Shiki),டகஹாமா க்யோஷி(Takahama Kyoshi), கவாஹிகஷி ஹெகிகோடோ (Kawahigashi Kekigoto) ஆகியோர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இதை வளர்த்தனர்.

21ஆம் நூற்றாண்டிலோ ஹைகூ இயற்றுவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டு விட்டது.

மூன்று வரிகள், சிறிய சொற்கள் என்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் உள்ளிட்ட உலக மொழிகளில் ஹைகூ பாடுவது வளர்ந்து விட்டது.

பாஷோவின் கவிதை இது:

Summer grasses-

All that remains

Of warriors’ dreams

பாஷோ தனது பயணத்தில் இயற்றிய யுத்தம் பற்றிய கவிதை இது. ஃப்யூஜிவாரா வமிசத்தில் நடந்த ஒரு போரை அவர் பார்த்தார்.யுத்த களம் முற்றிலும் ரத்தம் ஆறாக ஓட, சதைத் துண்டங்கள் சிதறிக் கிடந்தன. அவர் அழுதார்.அனைத்தும் அழியும் உலகில் அழியாத உண்மை பற்றிய சிந்தனை அவர் உள்ளத்தில் எழுந்தது.

யுத்தகளத்தில் மாண்டு கிடந்த போர்வீரர்களின் சடலங்கள் அவருக்கு நிலையாமையை உணர்த்த என்றும் நிலைத்திருக்கும் பேருண்மையை அவர் ஒரு கணத்தில் உணர்ந்தார்.

பெரும்பாலும் இப்படி பேரனுபவ ஞானம் ஒரு கணத்தில் உள்ளத்தில் ஒளிரும் போது எழுவது தான் ஹைகூ.

இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.

சோடோ யமகுச்சி எழுதிய ஹைகூ இது.

This spring in my hut

there is nothing

there is everything  (Sodo Yamakuchi)

எளிமையில் தான் எல்லா அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்திஜி உலகில் விட்டுச் சென்ற பொருள்களின் எண்ணிக்கை இரு கை விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டாது. ஹென்றி தோரோ எளிமையைப் போற்றினார்.

எளிமையாக வாழும் போது வளமையின் உச்சத்தை அவர்கள் பெற்றனர்.

சொத்தைச் சேர்க்கச் சேர்க்க மனம் கனமாகிறது. வெளியில் செல்வம்; ஆனால் அகத்தினுள் தரித்திரம்!

வசந்த காலத்தில் என் குடிலில்

ஒன்றுமே இல்லை

எல்லாம் இருந்தது.

என்ன அழகிய ஹைகூ.

கை (Kai) என்ற இடத்தில் பிறந்த சோடோ (1643-1716) பின்னர் டோக்கியோ சென்றார். அங்கு பாஷோவுடன் நெருங்கிப் பழகி அவரது நண்பரானார். சீன இலக்கியத்தில் பாண்டித்யம் கொண்ட இவரது அறிவைப் பார்த்து பாஷோ  பிரமித்தார்.

இன்னொரு அருமையான கவிதை இது.

இதை எழுதியவர் கிறிஸ்டோபர் ஹெரால்ட்.

First light

Everything in this room

Was already here    (Christopher Herold)

ஒளி அனைவருக்கும் பொதுவானது. அது புகாத இடமில்லை. அது உள்ளே புகுந்தவுடன் நமது பார்வை திறக்கிறது.

இதுவரை இருளில் தெரியாத அனைத்தும் தெரிகிறது.

ஆனால் அவை அங்கு தான் இருந்தன. நமக்குத் தான் தெரியவில்லை.

பார்வையை மாற்றுங்கள். அனைத்தும் பிரகாசமாகும்.

சிறையில் தூக்கிப் போடப்பட்டவன் வெளியில் வந்தவுடன் சுதந்திரமான உலகத்தைப் பார்க்கிறான்; பிரமிக்கிறான். அட, என்ன ஒரு அற்புதமான உலகம் இது!

மருத்துவமனையில் மாதக் கணக்கில் அடைந்து கிடந்தவன் உடல் நலம் தேறி வெளியே வருகிறான்.

அடடா, அனைத்தும் அற்புதம் தான் அவனுக்கு.

ஆனால் உலகம் மாறவில்லை. அவன் பார்வை தான் மாறி இருக்கிறது.

இந்த ஹைகூ அனைத்தையும் ஒளியுடன் பார்க்க உத்வேகம் ஊட்டுகிறது. அந்த ஒளியில் புதிய பார்வை இருக்க வேண்டும். அப்போது அனைத்துமே நமக்குச் சரியாகப் புலப்படும்.

இதை எழுதிய அமெரிக்கரான கிறிஸ்டோபர் ஹெரால்ட் 1948இல் பிறந்தவர். ஜென் பிரிவில் அடங்காத ஆர்வம் கொண்டவர். அதை அனைவருக்கும் போதிக்கும் ஆசிரியரும் கூட.The Heron’s nest என்ற பன்னாட்டு ஹைகூ பத்திரிகையின் ஆசிரியரும் கூட.

ஆயிரக் கணக்கில் ஹைகூ கவிதைகள் இன்று உருவாகின்றன.

ஆனால் மூன்று வரிகளில் இருப்பதெல்லாம் ஹைகூ அல்ல. நூற்றுக் கணக்கில் ஈசல் போலப் பிறக்கும் கவிதைகள் வெறும் சொற் கதம்பம் தான்.

நிஜமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் தான் ஹைகூவின் அருமை தெரிய வரும்.

108 ஹைகூ கவிதைகளைத் தொகுத்து பாட்ரியா டொனெகன் (Patricia Donegan) எழுதிய ஹைகூ மைண்ட் (Haiku Mind) குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.

இது போல நூற்றுக் கணக்கில் உள்ள சிறந்த ஹைகூ தொகுப்பு நூல்களைப் படித்தால் மனம் சிறக்கும்; சிறகடித்துப் பறக்கும். இருளகன்று உளத்தில் ஒளி பிறக்கும்!

tags-  ஹைகூ,  கவிதைகள்

***

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் எங்கே? (Post No.4308)

 

 
Written by S.NAGARAJAN

 

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 7–47 am

 

 

Post No. 4308

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஞானபூமி பாரதம்

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் – எங்கே?

 

ச.நாகராஜன்

 

1

நல்ல கவிதை சாகா வரம் பெற்றது.

காலத்தை வென்றது தான் கவிதை.

 

அனவஹித: கிமஷக்தோ

விபுதைரம்யர்தித: கிமதிரஸிக: I

சர்வகஷோபி காலம்

கிரயதி சூக்தானி ந கவீனாம் II

 

வல்லபதேவர் என்ற கவிஞரால் ஆர்யா சந்தத்தில் இயற்றப்பட்ட கவிதை இது.

பெரிய உண்மையைக் கூறும் இந்தக் கவிதையின் பொருள் இது தான்:

 

 

காலம் தன் கவனக்குறைவினால் வலிமை இழந்து விட்டதோ!
அல்லது நேர்த்தியானவற்றைப் மிகவும் போற்றுவதனால், அறிஞர்களால் அதற்கு வேண்டுகோள் விடப்பட்டதா?

அனைத்தையும் அழிப்பது தான் காலம் என்றாலும் கூட, அது கவிஞர்களின் நல்ல கவிதைகளைத் திரை போட்டு மறைப்பதில்லை (ஒளித்து விடுவதில்லை)

 

இதன் ஆங்கில் மொழியாக்கம்:

 

Is Time powerless by oversight? Is it, as a very good appreciator of excellencea, he has been requested by the wise? Time, though a destroyer of every thing, does not screen (conceal) the good sayings of poets.

Translation by A.A.Ramanathan

 

உண்மை தான்; நல்ல கவிதைகளை காலம் திரை போட்டு மறைப்பதில்லை.நல்ல கவிதைகளை காலம் சிரஞ்சீவித்வம் கொண்டதாக ஆக்கி விடுகிறது.

காலமே, உனக்கு நமஸ்காரம்!

 

2

இப்போது ஒரு கேள்வி எழுகிறது.

காலம் அழிக்கவில்லை என்றால் நமது நாட்டில் தோன்றிய கவிதைகள் எங்கே?

முதலில் எவ்வளவு கவிதைகள் தோன்றியிருக்கலாம் என்பதை ஒரு உத்தேச மதிப்பீடு செய்து பார்க்கலாம்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முறபட்டது வேதகாலம்.

(ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று இது : ஞான தீபம் மூன்றாம் பாகம்)

 

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதத்தில் மன்னரின் கதைகள் பல உண்டு.

 

ஆக மன்னர் காலம் அப்போதிலிருந்தே தொடங்கி விட்டது.

ஒரு தலைமுறை என்பது சுமாராக முப்பது வருடம் என்று வைத்துக் கொண்டு, ஒரு மன்னரின் அரசாட்சி காலம் உத்தேசமாக முப்பது வருடங்கள் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் எட்டாயிரம் ஆண்டுகளில் சுமார் 266 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

 

பாரதத்தில் 56 தேசங்கள் உண்டு.

 

ஆக 56 தேசங்களில் 56 X 266  = 12896 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வெண்டும்.

 

ஒரு மன்னனின் அரசவையில் முப்பதாண்டு காலத்தில் பத்து கவிஞர்கள் இருந்தனர் என்று வைத்துக் கொண்டால் 1,28,960 கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் முப்பதாண்டு காலத்தில் வெறும் பத்து கவிதைகளே புனைந்திருந்தனர் என்று வைத்துக் கொண்டால் வரும் எண்ணிக்கை 12, 89,600.

 

பத்து தானா, சே, மோசமான மதிப்பீடு, ஆயிரக்கணக்கில் கவிதைகள் இயற்றியுள்ள புலவர்களை நமக்குத் தெரியாதா என்று கேட்டு இதை நூறு கவிதைகள் என்று வைத்துக் கொண்டால் வருவது 1,28,96,000.

 

பத்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட் மஹா பாரதம், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், காளிதாஸன், பவபூதி, தண்டி, ஹர்ஷன் போன்றோர் இயற்றிய காவியங்கள் என்ற நீண்ட பட்டியலை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சுலபமாக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி என்ற எண்ணிக்கையை நமது கவிதைகள் தாண்டி விடுகின்றன!

 

நூறு கோடி அற்புதமான கவிதைகள்!

 

ஒரு கவிதையிலேயே உயிரைக் கொடுத்து எழுத்துக்கு அக்ஷர லட்சம் பொன் கொடுத்த நாட்டில் ஒரு பில்லியன் – நூறு கோடிக் கவிதைகள் என்றால், அடடா உள்ளம் பூரிக்கிறது.

 

என்ன ஒரு அறிவு!

என்ன ஒரு அழகு!

என்ன ஒரு சொல்வளம்!

என்ன ஒரு கருத்து வளம்!

என்ன ஒரு கலை வளம்!

 

 

 

3

அந்த நூறு கோடிக் கவிதைகள் எங்கே?

காலம் அவற்றை ஒளிக்காது, மறைக்காது,அழிக்காது என்றால் இன்று அவை எங்கே?

முகமதியரின் முட்டாள்தனமான, கொடூரமான, அழிவுக் கலாசாரத்தினால் பல நூல்கள் அழிந்து பட்டன. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த நூல்கள் பல நாடுகளுக்கும் பரவி இருந்தன. ஆகவே அவற்றில் அழிந்தது போக பலவும் மீதம் இருக்க வேண்டுமல்லவா?

 

அவை எங்கே?

 

இருக்கின்றன! அவை இருக்கின்றன!

இதில் அந்தக் கால மொழியாகப் பரவி இருந்த சம்ஸ்கிருத நூல்களை மட்டும் பட்டியலிடப் புகுந்து தன் வாழ்நாளிம் பெரும் பகுதியை அர்ப்பணித்த டாக்டர் வி.ராகவன் நூல்களின் பட்டியல் அடங்கிய ஒரு கலைக்களஞ்சிய தொகுதியையே வெளியிட்டுள்ளார்.

 

அவருக்கு நமது உளங்கனிந்த நமஸ்காரம்.

நான்கு லட்சம் சுவடிகள் பிரிக்கப்படாமல் ஆங்காங்கு உள்ளன.

அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக பல ஆயிர்ம் நூல்கள் உள்ளன.

 

சரஸ்வதி மஹால், புனே பண்டார்கர் நிலையம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிலையங்கள் பணமின்றித் தவித்து இவற்றை அரும்பாடு பட்டுப் பாதுகாத்து வருகின்றன.

 

நூறு கோடிக் கவிதைகள் என்றால் உலகின் மொத்த அறிவுக் களஞ்சியம் என்று பொருள்.

 

வளமார்ந்த ஒரு உலக சமுதாயத்தின் உன்னதமான எண்ணங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளின்

எண்ணிக்கை என்று பொருள்.

 

எண்ணவும் (TO COUNT) இனிக்கிறது.

எண்ணவும் (TO THINK) இருக்கிறது.

பாரத அறிவுச் செல்வத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு திருக்கூட்டமாக மாறி ஏதேனும் செய்ய வேண்டாமா?

செய்ய வேண்டும்.

 

 

4

ஒரு சில கவிதைகளைப் படித்து மகிழ்ந்து சில கட்டுரைகளைப் படைத்த எனக்கே இப்படி ஒரு ஆதங்கம் என்றால் அறிஞர்களுக்கும் என்னைப் போன்ற இதர ஆர்வலர்களுக்கும் என்ன ஒரு உத்வேகம் எழ வேண்டும்.

இருக்கின்றவற்றைப் பாதுகாப்போம்.

 

இருப்பதைப் பரப்புவோம்.

 

இல்லாததைத் தேடுவோம்.

 

தேடிக் கண்டனவற்றைப் பதிப்பிப்போம்.

 

பதிக்க முன்வருவோருக்கு உதவி செய்வோம்.

 

எந்த மொழியில் இருந்தாலும் நமது கவிஞர்களின் கவிதைகளை – நூற்றொரு கோடியாக இருந்தாலும் அனைத்தையும் -மீட்டெடுப்போம்.

 

 

புவன ச்ரேஷ்டம் பாரதம்; நல்லறிவின் தலைமையகம் பாரதம்.

புனர் நிர்மாணம் செய்து பழைய தலைமையை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டுவோம்!

***