நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 2

(English translation is already posted here)

(“மாயா இன மக்கள், இந்திய நாகர்கள்” என்ற கட்டுரையையும், நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1 என்ற கட்டுரையையும் படித்துவிட்டு இந்தக் கட்டுரையைப் படிக்கவும்)

 

31. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.

 

32. மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நாமகரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.

33. இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.

 

34. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.

35.மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.

36. வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.

 

37. இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.

38. டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.

39. மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.

40. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.

 

41.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர்? ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர்? இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர்? ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர்? உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர்? ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார்? எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன்? ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார்? ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர்? ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி? இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.

 

41.மாயாக்களுமிந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.

42. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.

43. இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.

44. இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.

45. இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

46.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.

47. கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.

 

48. பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.

49. மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.

50. பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.

51. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.

52. பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.

 

53.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது

54.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.

 

55. இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.

57. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.

58. குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.

59. தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.

60. ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.

 

61. “சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.

62. தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.

63. திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.

64. மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்

65. மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.

66. போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.

 

67. இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.

68. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் தடயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் !!

 

69. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.

*********

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: