சுவாமிஜிக்கு ஆவிகள் மீதும் பரிவு! (Post No.2583)

coin1

Written by S Nagarajan

 

Date: 29  February 2016

 

Post No. 2583

 

Time uploaded in London :–  5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

coin2

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)

ச.நாகராஜன்

 

 

ஆவிகள் மீதும் பரிவு

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் ஆவிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

சென்னையில் அவர் இருந்த சமயம் சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.

 

இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது என்றெல்லாம் அவை ஸ்வாமிஜியை அடிக்கடி பயமுறுத்தி வந்தன.

இதெல்லாம் பொய் என்பதை ஸ்வாமிஜி நன்கு அறிவார். என்றாலும் தொந்தரவு தொந்தரவு தானே!

 

ஆரம்பத்தில் ஸ்வாமிஜி இவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆவிகளின் தொந்தரவு கட்டுக் கடங்காமல் எல்லை மீறிப் போனது.

அவர் சற்று கோபம் கொண்டார். இதைக் கண்ட ஆவிகள் இப்போது தங்கள் பரிதாப நிலையைத் தெரிவித்துக் கெஞ்ச ஆரம்பித்தன. தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின.

ஒரு நாள் அவர் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டார். அதையே தர்ப்பணப் பொருளாகப் பாவித்து அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

 

அந்த ஆவிகளின் தொந்தரவு அன்றோடு நீங்கியது. அவை நற்கதி பெற்று விட்டன போலும்!

 

ஸ்வாமிஜியின் எல்லையற்ற கருணை ஆவிகளுகும் கிடைத்தது ஒரு அதிசயமே!

coin3

 

கழுத்தில் வெட்டுண்ட ஆவி

 

இன்னொரு சம்பவம் கோபால் லால் என்பவரின் தோட்ட வீட்டில் நடந்தது. ஸ்வாமிஜி ப்ரேமானந்தருடன்  ஒரு முறை அமர்ந்தவாறு அந்த வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவரை நோக்கிய ஸ்வாமிஜி, பாபுராம்!  நீ இப்போது எதையாவது கண்டாயா?” என்று கேட்டார்.

அவர், “இல்லை” என்றார்.

 

“இப்போது நான் ஓரு ஆவியைக் கண்டேன். அதன் கழுத்து அறுபட்டிருந்தது. கெஞ்சும் பார்வையில் அது தனக்கு நற்கதி அருளுமாறு கேட்டது.” என்றார் ஸ்வாமிஜி.

பின்னர் கைகளைத் தூக்கி அந் ஆவிக்காகப் பிரார்த்தித்து அவர் அதை ஆசீர்வதித்தார்.

 

விசாரித்த போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது.

அங்கே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தான்.

 

பணத்தைக் கடனாகக் கொடுத்து வந்த அவன் கொள்ளை வட்டி வசூலித்து வந்தான்.

 

இந்த வட்டியின் கொடுமை தாங்காத ஒருவன் அந்த பிராமணனைக் கழுத்தை வெட்டிக் கொன்று விட்டான்.

அலைந்து திரிந்த அந்த அந்தணனின் ஆவியே ஸ்வாமிஜியிடம் அருள் வேண்டிக் கெஞ்சியது.

 

அனைவருக்கும் அருள் பாலிக்க வந்த ஸ்வாமிஜி ஆவிக்கா மாட்டேன் என்பார். அருளாசி தர, ஆவியும் நற்கதி அடைந்தது.

இது போல இன்னும் சில நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் உண்டு.

  • தொடரும்
  • தொடரில் முன் நான்கு அத்தியாயங்களைப் படிக்காதவர்கள் படிக்கலாம்..

 

–subam-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: