துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061)

0c79b-ar2bkanda9.jpg

கவந்தன் படலம்

 

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3061

Time uploaded in London :– 12-47

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

கம்பன் காவியம் ஒரு கல்கண்டு! சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

 

 

ராமன் ஒரு அவதாரம்; ஆயினும் மனிதனாகத் தோன்றினால் மனிதன் போலவே நடந்தால்தான் அவனை நாம் பின்பற்றுவோம். ராமன் தனது வாழ்க்கை மூலம் பல அரிய பண்புகளை நமக்குக் கற்பிக்கவந்தவன். ஆகவே துணையின் பெருமை, நட்பின் பெருமை, உதவி பெறுவதன் பெருமை ஆகியவற்றையும் நமக்குக் காட்டுகிறான்.

 

பஞ்ச தந்திரங்களில் ஒன்று சரியான நட்பைப் பெறுதல்; துணை இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. ஏழு கோடி அவுணர்களை வீழ்த்திய ராமனும் கூட துணை இல்லாமல் ஒருவேலையைச் செய்ய இயலாது.

 

 

ராமன் உதவி பெறுவதைவிட, கம்பன் அதை நமக்குச் சொல்லும் அழகு தனியே!

 

சுக்ரீவனின் நட்பைப் பெறுக – என்று ராம பிரானுக்கு  கவந்தன் அறிவுரை அறிவுரை வழங்குகிறான்

 

கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்

இணை இலாதாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்

துணை இலாதவருக்கு இன்றால் பகைப் புலம் தொலைத்து நீக்கல்

 

–ஆரண்ய காண்டம், கவந்தன் படலம்

 

பொருள்:-

அம்புகளை வீசும் வில்லை உடைய (கணை உலாம் சிலை) உன்னைக் காப்பதற்கு பலம் உடையவர் யாருமில்லை.ஆயினும் ஒப்பில்லாத சீதையைத் தேடுவதற்கு (இண இலாள் தன்னை நாடற்கு), உதவி தேவை.

 

எதைப் போல என்றால்,

கப்பல் இல்லாமல் கடலைக் கடக்க முடியாது (புணை இலாதவற்கு வேலை/கடல் போக்கு அரிது)

 

அதேபோல

துணை இல்லாமல் பகைப் புலத்தை அழிக்க முடியாது.

kamban_stamp

நல்ல உவமை: இந்த உவமையை இந்துமத நூல்கள் முழுவதும் காணலாம். கடல் என்பது அவர்களுக்குத் தெப்பம் போல; உலகம் முழுதும் சென்று நாகரீகத்தைப் பரப்பியவர்கள் இந்துக்கள். அதனால் வேதம் முதல் நேற்றைய இலக்கியம் வரை கப்பல்-கடல் உவமை வரும்.

 

சம்சார சாகரம் = பிறவிப் பெருங்கடல் என்பதை கீதையிலும்  குற ளிலும் காணலாம். நிற்க.

 

திருவள்ளுவரும் இதை வலியுறுத்துவார்:-

 

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

–குறள் 677

ஒரு செயலைச் செய்பவன், ஏற்கனவே அந்தப் பணியைச் செய்து அறிவு பெற்றவனின் அனுபவத்தைப் பகிர்ந்து, அதைச் செய்வதே முறை.

MySt Kambar fdc

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: