இந்துமதத்தில் எறும்பு – 1 (Post No.13,180)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,180

Date uploaded in London – –   26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்துக்கள் வணங்காத பொருள்கள் இல்லை; கோவில் மணி முதல் பக்தர்களின் பாதக்குறடுகள் வரை எல்லாமே வணங்கப்படுகின்றன. அதே போல எறும்பு முதல் யானை வரை உள்ள எல்லா உயரினங்களும் வணங்கப்படுகின்றன. . அவைகளிலுள்ள தெய்வாம்சங்ககளை மட்டுமே அவர்கள் காண்பர்; எல்லோரையும் சமாகக் காணும் போது அவைகள் தீங்கிழைக்காது; ஆதி சங்கரர் முதல் அப்பர் வரை பிராணிகளைக் கண்டு அஞ்சியதில்லை ; ஏனெனில் ஒன்றாகக் காண்பதே காட்சி என்ற கொள்கை யுடையோர் அவர்கள்.

கோலம் போடுவது ஏன் ?

எறும்புக்கு இந்து மதத்தில் தனி இடம் உண்டு. தமிழர்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் போடுவார்கள்  எதற்காக இந்தக் கோலங்கள் ? அதிலுள்ள மாவு எறும்புக்கு உணவாகப் போகிறது . இது இந்துக்கள் தினமும் செய்யும் ஐவேள்விகளில் — பஞ்ச பூத யக்ஞத்தில் ஒன்று .

ஓடும் எறும்புகளைக் கண்டவுடன் அதை நசுக்கிக் கொல்ல விரைவது குழந்தைகள் சுபாவம்; உடனே தாய்மார்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று எச்சரிப்பார்கள் ; குழந்தைகள் ஏன் என்று வினவும்போது அடுத்த ஜென்மத்தில் நீ எறும்பாகப் பிறப்பாய் ; அப் போது அது மனிதனாகப் பிறந்து உன்னை   நசுக்கும் என்பார்கள் . ஆக இளம் வயதிலேயே மறுபிறப்புக் கொள்கையையும் கர்ம வினைக் கொள்கையையும் கற்பிக்க உதவுவதும் எறும்புகளே!

கட்டெறும்புகளை இந்துக்கள் கொல்ல மாட்டார்கள்; தீங்கிழைக்காத – கடிக்காத– கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்பு என்பார்கள் .

தமிழில் உள்ளது போல எறும்பு விஷயங்கள் சம்ஸ்க்ருதத்தில் கூட இல்லை. நிறைய பழமொழிகள், வசனங்கள், கதைகள், தலங்கள் தமிழில்தான் உள்ளன.

xxxx

திரு வெறும்பூரும் தென்காசியும்

திருச்சிக்கு அருகிலுள்ள திரு எறும்பு ஊர் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு அரக்கன் பிரம்மாவை வரம் கேட்கவே அவர் திருவெறும்பூர் சிவனை வழிபடச் சொன்னார். அந்த அரக்கனை வீழ்த்த  தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.; சிவலிங்கத்தின் மீது ஏறிய எறும்புகள் வழுக்கி விழுவதைக் கண்ட சிவனே எறும்புப் புற்றை  உண்டாக்கி அவைகள் சறுக்காமல் ஏற உதவினார் என்பது தல புராணம் ஆகும்.

இதே போல தென்காசிக்கும் எறும்புக்கும் தொடர்பு உண்டு. அந்த வட்டார மன்னரும் ராணியும் காசிக்குச் சென்று வழிபட்டதிலிருந்து தென்காசியில் கோவில் கட்ட எண்ணினர். சிவனே அவர்கள் கனவில் தோன்றி அரண்மனையிலிருந்து வரிசையாகச் செல்லும் எறும்புகளைப்  பின்பற்றிச் சென்றால் அங்கு ஒரு சிலலிங்கத்ததைக் காணலாம் ; அங்கே கோவிலை எழுப்பு என்று கட்டளை பிறப்பித்தார். அதன்படி பெரிய கோவில் எழுந்தது .

பார்வதியும் பரமசிவனும் கதை

பெண்களுக்கு உயிரினங்கள் மீது தாய் போல அன்பு உண்டு.  பார்வதி தேவியும் எல்லையற்ற கருணை உடையவர். ஆனால் சிவனுக்கு இப்படிக் கருணை இல்லையோ என்று சந்தேகப்பட்டார். ஆயினும் சிவனை இது பற்றிக்கேட்ட பொழு து எல்லோருக்கும் உணவு வழங்குவது நான்தான் என்கிறார். இதை நம்பாத பார்வதி ஒரு  சிறிய பெட்டிக்குள் உயிருள்ள எறும்புகளை பிடித்துப் போட்டு மூடி வைத்தார். சிவபெருமான் காணாத இடத்தில் ஒளி த்தும் வைத்தார்.

மறுநாள் காலையில் “அன்பரே நீவீர் எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?” என்று வினவ, சிவனும் “அன்பே! ஆருயிரே! இதில் என்ன ஐயப்பாடு? நா ன் உணவு படைத்து விட்டேனே” என்றார். சிவன் பொ ய் சொல்கிறார் என்று எண்ணிய பார்வதி,  தான் ஒளித்து வைத்திருந்த எறும்பு டப்பியைத் திறந்து காட்டி இவைகளுக்கு உணவு படைக்கவில்லையே என்று சொல்ல முனைந்தார்; ஆனால் வாயடைத்துப் போனார். ஏனெனில் அந்த டப்பாவுக்குள்ளும் சிவபெருமான் போட்ட உணவுப் பிட்சை இருந்தது. எறும்புகள் அதைச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக மிச்சம் மீதி வேறு வைத்திருந்தன.

பார்வதி யைப் பார்த்து சிவன் ஏதும் சொல்லாமல் புன்னகை பூத்தார்

எறும்பு முதல் யானை வரை உணவளிப்பவன் இறைவனே என உணர்ந்தார் . இது போல பல கதைகள் உண்டு.

xxxx

வேதத்தில் எறும்புகள் !

உலகிலேயே பழமையான புஸ்தகம் ரிக் வேதம் ; அதிலுள்ள மரணம் தொடர்பான துதிகளில் எறும்பு குறிப்பிடப்படுகிறது; இதே போல அதர்வண வேதத்திலும் விஷக்கடி பற்றிய துதிகளில் எறும்பு பற்றியும் வருகிறது . சம்ஸ்க்ருதத்தில் எறும்பினை பிபீலிகா என்பர். தமிழ் அகராதியிலும் இந்தச் சொல்லைக் காணலாம். ஏனெனில் பழந்தமிழருக்கு ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இரு கண்கள்; ஆகையால் தமிழ் அகராதி என்ற புஸ்தகம் அனைத்திலும் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்!

வால் மீகி = எறும்புப் புற்று = பாம்புப் புற்று

வால்மீகி ராமாயணத்தை எழுதிய வேடர் பெயர் எறும்புப் புற்று; அவர் தவம் செய்தபோது அவரைச் சுற்றி புற்று உருவானதால் வேடன் என்ற பெயர் மறைந்து வால்மீகி என்ற பெயரே நிலைத்தது . இதன் பொருள் புற்று 

இதே பெயரில் புறநானூற்றிலும் ஒரு புலவர் இருக்கிறார் !! மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும்தான் சுவையான கதைகள் உள்ளன. பூமிக்கடியிலிருந்து தங்கத்தைக் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் கூறுகிறது ; இதனால் தங்கத்தின் பெயரும் பிபீலிகம்; அதாவது எறும்புத் தங்கம் .

இதை வைத்து கிரேக்க இலக்கியத்தில் கதைகள் உண்டு; 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றை எழுதிய ஹெரோடோட்டஸ் என்பார் இந்தியாவில் நரிகள் போல பெரிய எறும்புகள் இருப்பதாகவும் அவைகள் பூமிக்கடியில் சென்று தங்கத்தைக் கொண்டுவந்து கொட்டுவதாகவும் எழுதிச் சென்றார் . பின்னர் வந்தவர்கள் இது எத்தியோப்பியாவில் நடப்பதாக எழுதிச் சென்றனர் .உண்மையில் எறும்பு போல ஊர்ந்து சென்று தங்கம் எடுத்த ஊழியர்களுக்கு எறும்பு மனிதர்கள் என்ற பெயர்  இருந்திருக்கும். மஹாபாரதம் முதலி ய கதைகள் கிரேக்க நாட்டுக்குப் பரவிய போது எறும்புகளே தங்கம் எடுத்து வருவதாக எழுதி விட்டனர் போலும்.

xxxx

Press News

எறும்புகள் கண்டுபிடித்த தங்க சுரங்கம்.. பீகாரில் ஒரு K G F!

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த பழமையான தங்க வயல்களில் ஒன்றான கோலார் தங்க வயல் (K G F) கடந்த 2001ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவு அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தங்க சுரங்கத்தை மையமாக வைத்துதான் கேஜிஎப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்றைப் பெற்றது.

கோலார் தங்க வயலை விட மிகப் பெரிய தங்க சுரங்கம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது (June 2022) . அதைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அங்கு 222 மில்லியன் டன் தங்கம் இருப்பதும் இது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% என்பதும் தெரியவந்துள்ளது.

அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜமுயி பகுதியின் செம்மண் நிலத்தில் எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது.

இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரசு சார்பில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியபோது அங்கு தங்கம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘Ants’ give whereabouts of 230 million tons gold mine in Jamui! Bihar Government on lookout

How was this gold found?

1. No one has ever realised that such a huge gold reserve is hidden under the red soil of the Maoist-dominated Jamui.

2. It has taken 40 years to find the gold reserves here. That’s also possible for ants. 

3. Legend has it that forty years ago, there was a huge banyan tree in the area. To escape the heat and heat of the sun, ants start building nests under the banyan tree. 

4. When the ants began to lift the soil from the bottom, the locals saw tiny particles of yellow shingles mixed in the soil. At that moment, the news spread among the people of the area. That’s the beginning of the search. 

The highest number of gold in India is found in the state of Karnataka. Kolar gold mine in this state is one of the oldest and major gold mines in India. In 2001, however, the gold mine was closed. (June 2022 Press Cutting)

To be continued…………

எறும்பு, பிபீலிகா , இந்து மதத்தில் , வேதத்தில், மஹாபாரதத்தில்,எறும்பு தோண்டும் , தங்கம் , ஹெரோடோட்டஸ், gold digging ants

Leave a comment

Leave a comment