முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 26 (Post.13,19)

கோரைக்கிழங்கு,

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,179

Date uploaded in London – –   26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 26

கோ

265.மேனியழகுண்டாக

கோங்கிலவன் பூவை பாலிலிட்டு க் காய்ச்சியுண்டு வந்தால் நரை திரை தீரும்.  கொடிய வியாதிகள் யாவும் தீரும். மேனி பொன் போலாகும் . நல்ல அழகு கொடுக்கும்.

XXXX

பவழ பற்பம்

கோங்கிலவன்  இலையை  அரைத்து அந்த முத்தைக்குள் , தக்கபடி சுத்தி செய்த பவழத்தை வைத்துப் புடமிட பற்பமாகும். ; க்ஷயம், இருமல் முதலிய வியாதிகளுக்கு கொடுக்கலாம் .

XXXX

வெள்ளை

கோங்கிலவன் கொழுந்தை  பாலில் அரைத்துக் கலக்கியுண்டு வந்தால் வெட்டை சூடு வெள்ளை விழுதல் நிவர்த்தியாகும் .

XXXX

பலத்திற்கும் பால் சுரக்கவும்

கோரோசனையை பாலில் கலக்கி காய்ச்சியுண்டு வந்தால்  முலைப்பால் சுரக்கும்; கண்நோய்  சுரம் இவை தீரும். மூலச்சூடு தணியும்; தொடர்ந்து உயோகித்து வந்தால் தேகத்தில் அழகும் பலமும் உண்டாகும் .

XXXX

நீர்த்தாரையில் சுருக்குச் சுருக்கென்று

குத்தி சுக்கிலம் விழுவதற்கு

கோரைக்கிழங்கு- விஷ்ணுக்கிரந்தி –மிளகு  வகைக்கு ஒன்றரைப்பலம் எடுத்து ஒன்றிரண்டாயிடித்து 4 படி தண்ணீர் வைத்து 1 படி கிஷாயமாகயிறக்கி  ஒருவேளைக்கு அரைக்கால் படி வீதம் ஆறு வேளை கொடுக்காத தீரும்; இச்சாபத்தியம் .

XXXX

விஷ சுரத்திற்கு

கோழியவரை வேர் –சித்திர மூலம் – வேப்பம் ஈர்க்கு சிறு புள்ளடி பற்பட  சுக்கு – செவியம்  வகைக்கு  பலம் (கால்) இரண்டு படி தண்ணீர் வைத்து  அரைப்படியாகக்காய்ச்சி இறக்கி வடிகட்டி  முரித்த தேன் முலைப்பால் கொஞ்சம் விட்டு  கொடுக்கவும். (அதாவது) வேளைக்கு  வீசம் படியாக ஒரு நாளைக்கு  3 வேளை கொடுக்கவும் தீரும். இத்துடன் இழைக்க வேண்டிய மாத்திரைகள் – பார்வ தி பரணீயத்தில் பார்த்து  க்கொள்ளவும்

xxxx

அதிசாரக் கழிச்சலுக்கு

கோறைக்கிழங்கு வில்வ வேர்  கொ த்த மல்லி சிறுநாகப் பூ  இவை சமன் கொண்டு நறுக்கி கஷாயம் வைத்து கொஞ்சம் தேன் வீட்டுக் கொடுக்கவும்.

xxxx

கழிச்சலுக்கு

கோரோஜனை — களிப்பாக்கு – சீரகம் — காசுக்கட்டி — இவைகள் சமன் கொண்டு எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து – பாக்குப் பிரமாணம்  எடுத்து முளைப்பாலில் கலக்கிக் கொடுத்தாள்  கழிச்சல் உடனே நிவர்த்தியாகும்

xxxx

காலெரிவு காந்தல்  கற்றாழை நாற்றத்திற்கு

கோஷ்டத்தைப் பசும்பால் விட்டரைத்து பாலில் கலக்கியுட்கொண்டு வந்தால் கை காலெரிவு  மூட்டுகளில் கீலுகளி ல்  வலி  கற்றாழை நாற்றம் தீரும்.

xxxx

காமாலை சோகை பாண்டுக்கு

கோசலமென்னும் – சிறுவர் (சிறுநீரும்) வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டுவந்தால் காமாலை சோகை பாண்டு பித்தம்  இவை தீரும் .

xxxx

பாண்டு சோகைக்கு

கோசலமும் வில்வஇலையும் இடித்து சாறு பிழிந்து மூன்று தரம் வடிகட்டி அரைக்கால் பட்டிவீதம் ஆறு நாள் கொடுக்க மேற்படி வியாதிகள் நிவர்த்தியாகும். புளி தள்ள வேண் டியது .

xxxx

பித்த வாய்வு மது மேகம்

கோடக சாலை  என்னும் மூலிகையை பாலில் அரைத்து பாலில் கலக்கியுட்கொண்டு வந்தால்  கிரந்தி- கொப்புளம் – கு ட்டம் – புண் — பித்த வாய்வு- மது மேகம் – வயிற்றுப புழு , வாய்வி ரணம் — இவை தீரும்

xxxx

277. கல்நார் பஸ்மம்

கோழி யவரை  இலையை அரைத்து  அதனுள் கல்நாரை வைத்து கவசம் செய்து தகுந்த புடமிட பஸ்மாமாகும் . இ ந்த இலையை கிரமப்படி உட்கொண்டால்  குடல் வாதம் – கு ட்டம் – ஆமைக்கட்டி இவைகள் தீரும் .

–subham—

Tags- முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள் 26, கோரைக்கிழங்கு, கோழி அவரை, கோங்கிலவன்

Leave a comment

Leave a comment