

Written by london Swaminathan
Date – 28th December 2019
Post No.7392
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
ஜனவரி 2020 காலண்டர்
மார்கழி மதம், விகாரி வருஷம்
சுபமுகூர்த்த தினங்கள் – ஜனவரி 20, 27, 30
முக்கிய பண்டிகைகள் – ஜனவரி 1 புத்தாண்டு தினம்; 6 வைகுண்ட ஏகாதஸி ; 10 ஆருத்ரா தரிசனம்; 14 போகிப்பண்டிகை; 15 தைப்பொங்கல்; 16 கனு, மட்டுப் பொங்கல்; 16 திருவள்ளுவர் தினம் ; 17 உழவர் திருநாள்; 24 தை அமாவாசை; 26 குடியரசு தினம்.
அமாவாசை – 24; பவுர்ணமி -10, ஏகாதசி – 6, 20/21

KR – KAHAVATRATNAKAR; AM – AVI MARAKA DRAMA OF BHASA
RM – RAMAYANA MANJARI; BM – BHARATA MANJARI
RT – RAJA TARANGINI OF KALHANA; SVD -SVAPNAVASAVADATA OF BHASA
SP- SARNGADHARAPADDATHI; KSS – KATHA SARIT SAGARA
அநாயாசம் அம்ருதம் பத கசிய ந ரோசதே –பி எம்
வேலையே செய்யாமல் அமிர்தம் கிடைத்தால் யார் வேண்டாமென்று சொல்லுவார்
X
ஜனவரி 2 வியாழக் கிழமை
அநித்யபதநோச்ராயாஹா விசித்ரா பாக்யவ் ருத்தயஹ — ஆர் டி 5-262
மேடும் பள்ளமும் கொண்ட விதியின் விளையாட்டு விநோதமானதே
x
ஜனவரி 3 வெள்ளிக் கிழமை
அதிருட்டத்திற்கு அறிவில்லை – தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 4 சனிக் கிழமை
அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல– தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 5 ஞாயிற்றுக் கிழமை
அனுகூலே யதா தைவே க்ரியா ல்பா சுபலா பவேத் – சம்ஸ்க்ருத பழமொழி
இறைவன் அருள் இருந்தால் தினை அளவு முயற்சியும் பனை அளவு பலன் தரும்
x
ஜனவரி 6 திங்கட் கிழமை
அனுபத் னாதி பவ்யானாம் உதயே அப்யுதயாந்தரம் — ஆர் டி 8-2275
அதிர்ஷ்டம் கண் பட்டால் அலைபுரண்டு வரும் செல்வங்கள்
x
ஜனவரி 7 செவ்வாய்க் கிழமை
அபவ்யாஹா ப்ராப்தமப்யர்த்தம் நைவ ஜானாதி ரக்ஷிதம் – கதா சரித சாகரம்
கிடைத்த செல்வத்தையும் பாதுகாக்க வழிதெரியாது துரதிருஷ்ட சாலிகளுக்கு
x
ஜனவரி 8 புதன் கிழமை
அபீஷ்டம் லப்யதே தைவாத்யக்தம் ந புனரேதி தத் –ஆர் எம்
நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வது அதிர்ஷ்டம்; ஒருமுறை புறக்கணித்தால் மீண்டும் வராது .
x
ஜனவரி 9 வியாழக் கிழமை
ஆயாசபாஜனோ நிதியம் பாக்யஹீ னா னுகோ ஜனஹ — பி எம்
துரதிருஷ்டசாலிகளைப் பின்பற்றுவோருக்கு எப்போதும் கஷ்டம்தான்
x
ஜனவரி 10 வெள்ளிக் கிழமை
சக்ராபங்த்திரீவ கச்சதி பாக்ய பங்த்திஹி –எஸ் வி டீ
அதிர்ஷம் என்பது சக்கரம் போல சுழலும்
x
அதிருட்டமுள்ளவன் அலைகடலிலும் அமிழான் — தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 12 ஞாயிற்றுக் கிழமை
அதிருட்டம் ஆறாய் பெருகுகிறது —- தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 13 திங்கட் கிழமை
பாக்யா னாம் உதயே விசந்தி சதசோ த்வா ரைர்ன கைஹி ஸ ம்பதஹ – ஆர் டி
அதிர்ஷ்டம் உச்ச நிலையில் இருக்கும்போது பல வாசல்கள் வழியாக நூறு மடங்கு செல்வங்கள் வரமாட்டாதா ?
x
ஜனவரி 14 செவ்வாய்க் கிழமை
ரக்ஷந்தி பாவிகல்யாணம் பாக்யான்யேவ — கதா…………
அதிர்ஷ்டமே மேலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்
x
அதிருட்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 16 வியாழக் கிழமை

ரூபேண ஹீனஹ பிரபலஸ்ச பாக்யாத் – கே ஆர்
ஆள் அவலட்சணம்தான் ; அதிர்ஷ்டம் அவனுக்கு அள்ளித்தருகிறது
x
ஜனவரி 17 வெள்ளிக் கிழமை
பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பராஹா – கதா ………………….
அதிர்ஷ்டம் வந்தால் நல்லவை மலை போல பெருகும்
x
ஜனவரி 18 சனிக் கிழமை
நல்லவை எல்லா அவாந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு – குறள் 375
விதி நன்றாக இருந்தால் கெட்டதும் நல்லதாகிவிடும் ; அதிர்ஷ்டம் இல்லையானால் நல்லதும் கெட்டுப்போகும்
x
ஜனவரி 19 ஞாயிற்றுக் கிழமை
பாக்யவந்தம் ப்ரஸு ஏ தாஹா மா சூ ரம் மா ச பண்டிதம் — எஸ் பி
வீரனும் வேண்டாம், அறிவாளியும் வேண்டாம், உனக்கு அதிர்ஷ்டசாலி கிடைப்பானாக
x
ஜனவரி 20 திங்கட் கிழமை
பாக்யம் ப்ரபூணாம் பலவத்தரம் ஹி – கே ஆர்
பலமுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் மேலும் சக்தி கிடைக்கும்
x
ஜனவரி 21 செவ்வாய்க் கிழமை
பாக்யம் பலதி சர்வத்ர ந வித்யா ந ச பவ் ருஷம் — கே ஆர்
கல்வியும் இல்லை, வீரமும் இல்லை, அதிர்ஷ்டமே பலன் தரும்
x
ஜனவரி 22 புதன் கிழமை
பாக்ய க்ரமேண ஹாய் தனானி வாந்தி யாந்தி — எம் கே 1-13
செல்வம் வருவதும் போவதும் அதிர்ஷ்டத்தைப் பொருத்தே
X
ஜனவரி 23 வியாழக் கிழமை
அதிருட்டம் இல்லாதவனுக்கு கலப் பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும் — தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 24 வெள்ளிக் கிழமை

குதிரை ஏற யோகமிருந்தால் கொண்டேற வேண்டுமா ? தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 25 சனிக் கிழமை
அதிருட்டம் கெட்டதுக்கு அறுபது நாழியும் தியாஜ்ஜியம் தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை
அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு குதிரை கு …….க்குக் கீழே தானே வந்து நிற்கும் — தமிழ்ப் பழமொழி
x
ஜனவரி 27 திங்கட் கிழமை
பிரயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஹ தத்ரைவ யந்த்யா பதஹ– நீதி சாஸ்திரம் 84
து ரதிருஷ்டசாலிகளைத் துன்பங்கள் தொடரும்
x
ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை
சவுபாக்கியேன வைத்யானாம் ரோகர்த்தோ ஜாயதே ந்ருபஹ — கே ஆர்
அரசனுக்கு வியாதி; வைத்தியர்களுக்கு அதிர்ஷ்டம்
X
ஜனவரி 29 புதன் கிழமை

ஹஸ்தி ஹஸ்த சஞ்சலானி புருஷ பாக்யானி வாந்தி – ஏ எம்
யானையின் தும்பிக்கை போன்றது .
X
ஜனவரி 30 வியாழக் கிழமை
ஹே பூஷன், எல்லாவித அதிர்ஷ்டங்களையும் கொண்டுவருவாயாக .தங்க வாள்
ஏந்தியவனே , செல்வங்கள் அனைத்தும் எங்களுக்கு எளிதில் கிடைக்கட்டும் -ரிக்வேதம் 1-42
X
ஜனவரி 31 வெள்ளிக் கிழமை
மணமகளே, உன் கணவர் வீட்டுக்குள் வருவாயாக, அங்குள்ள மக்களுக்கும் பிராணிகளுக்கும் அதிர்ஷ்டத்தைத் தருவாயாக – ரிக் வேதம் 10-85-44
X
You must be logged in to post a comment.