டாக்டருக்கு நோயாளி, தட்டானுக்குத் தங்கம், ஐயருக்கு பக்தன் வேண்டும் ! (Post 10,114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,114

Date uploaded in London – 20 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் சுவையான கவிதை!

மனிதர்களின் மனோபாவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அற்புதமான கவிதை ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் கடைசியில் உள்ளது. இது சோமபானம் பற்றிய பகுதி RV.9-112

முதலில் கவிதையைப் படியுங்கள். பின்னர் என் கருத்துக்களை சொல்கிறேன்.

Xxx

9-112-1

சோமனே ! நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச்  செய்கிறோம் ;

மனிதர்கள் செய்யும் தொழில்கள் பலதரப்பட்டவை; தச்சன் மரத்தை விரும்புகிறான் ;

அட்டைகள் (Doctors) காயமடைந்தவர்களை விரும்புகிறது ; பிராமணர்கள்  வழிபடுவோர்  வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

Xxxx

9-112-2

காய்ந்த, முதிர்ந்த  மரங்களினாலும், பறவைகளின் சிறகுகளாலும் அம்புகள் செய்யப்படுகின்றன

கொல்லன் பட்டறைத் தட்டானும் தங்கத்துக்காக அலைகிறான்

(இங்கு கொல்லன் பட்டறையைக் குறிக்கும் ஊதுலையும் வருவதால் அக்கால இரும்பு/ ஆயுத ஆலைகளைக் குறிக்கின்றன)

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

9-112-3

நான் ஒரு புலவன் (ரிஷி சிசு ஆங்கிரசன்  இதைப்  பாடுகிறார்); என் தாய் திரிகைக் கல்லில் தானியங்களை அரைக்கிறாள் ;என் தந்தை ஒரு டாக்டர். பலவிதத் தொழில்களை செய்யும் நாங்கள் செல்வத்தை விரும்பி , இவ்வுலகத்தில் தொழுவத்திலுள்ள பசுக்களை போல இருக்கிறோம்;

(ஒரே இடத்தில் அடைந்து கிடக்கிறோம்) . இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

(இந்த இடத்திலும் கிரிப்பித் Griffith டாக்டர் என்பதை அட்டை என்று மொழி பெயர்த்துள்ளார் . ஆயினும் அட்டைகளை மருத்துவத்தில் பயன்படுத்தியது சுஸ்ருதர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதுதான். Please see the link at the end))

Xxx

9-112-4

இழுக்கும் குதிரை இழுப்பதற்கு சுகமான (எடை அதிகம் இல்லாத) தேரை விரும்புகிறது . விருந்தினர்களை அழைப்பவர்கள் இன்பத்தை (கேளிக்கை , அரட்டை, மகிழ்ச்சி )  விரும்புகின்றனர் ; காதலனோ காதலி வருகையை விரும்புகிறான் ; தவளையோ ஆற்று வெள்ளத்துக்காக ( அதை எதிர்பார்த்து) காத்திருக்கிறது .

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

எனது கருத்துக்கள் !

ரிக் வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமை அடி , மிதி அடி கொடுக்கும் பாடல் இது. அந்தக்காலத்தில் எத்தனை வகை தொழில்கள் இருந்தன என்பதும் ஆயுதம் செய்யும் தச்சனுக்கு கொள்ளை பணம்- தங்கக் கட்டிகள்/ காசுகள் கிடைத்ததும் இந்தப் பாடலில் இருந்து தெரிகிறது.

ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதையும் மூன்றாவது பாடல்/ மந்திரம் விளக்குகிறது .

அந்தக் காலத்தில் குலத் தொழில் முறை இல்லை. ஒரே குடும்பத்தில் கவிஞன், டாக்டர், மாவு அரைக்கும் பெண்மணி ஆகியோரையும்  காண்கிறோம். ஜாதித் தொழில்கள் இல்லை

பாடலின் கடைசி வரிகள் ஒரே மாதிரி இருப்பதை நோக்கவும். இது போல பல்லவி உடைய கவிதைகள் ரிக் வேதம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. இதை சங்க இயக்கியமான ஐங்குறு நூறு பின்னர் வந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணலாம். இது ‘கும்மியடி, கும்மியடி’ போன்ற பாட்டுக்கள் போன்றவை. அந்தக் காலத்தில் இசை வளம் பெருகியதை இந்தப் பல்லவிப் பாட்டுக்கள் காட்டுகின்றன

xxx

டாக்டர்கள் – பிராமணர்கள் – ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் !

அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக காயமடைந்தோருக்காக காத்திருக்கின்றன என்பது R T H GRIFFITH கிரிப்பித் சொல்லும் தகவல் ; இந்த இடத்தை ‘நோயாளிகளுக்காக காத்திருக்கும் மருத்துவர்கள்’ என்று ஜம்புநாதன் மொழி பெயர்க்கிறார்   ((மருத்துவன் நோய்கள் (பெருக) வேண்டும் என்று விரும்புகிறான்)) ; ரிக் வேத ஸம்ஸ்க்ருத பகுதியில் மருத்துவர்/ டாக்டர்/ பிஷக்  என்ற சொல்லே உள்ளது .

அலட்சியமாக , பொருத்தமில்லாத சிகிச்சை தரும்  மருத்துவர்களை அட்டை leech என்று கிண்டல் அடிப்பது உண்டு . இது மரியாதைக் குறைவான சொல். தமிழில் பணப் பெருச்சாளி என்றும் ஆங்கிலத்தில் சுறாமீன் loan sharks  என்றும் சொல்லுவது போல.

அப்படியென்றால் டாக்டர்களும் அட்டைகளும் ஒன்று ! ஒருவன் பணத்தை உறிஞ்சுகிறான். அட்டையோ ரத்தத்தை உறிஞ்சுகிறது . இதே போல பிராமணர்களையும் இந்த மந்திரத்தில் சேர்த்திருப்பது அவர்களையும் கிண்டல் செய்யும் விதத்தில் இருக்கிறது. தட்சிணைக்காக காத்திருக்கிறார்கள் என்று பொருள்படும்

பாரதியாரும் இதை மனதில் கொண்டுதான் பிராணர்களைச் சாடும் வரிகளை எழுதினார் போலும் (பேராசைக்காரனடா பார்ப்பான்; அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்)

Xxx

நாலாவது மந்திரத்தை, பாடலைப் பாருங்கள்; மனித சுபாவத்தை அப்படியே படம் பிடித்து விட்டது. எல்லோரும் சுகத்தை விரும்புகின்றனர். விருந்து கொடுப்போர், தனது வீட்டுக்கு, கல்யாணத்துக்கு, வந்த அனைவரும் கேளிக்கை, தமாஷ் ஆகியவற்றை அனுபவித்து திருப்தியாக மகிழ்ச்சியாக வீடு திரும்புவதை விரும்புகின்றனர்.

பொதுவாக நாம் எல்லோரும் குறைந்த வேலை; நிறைந்த சம்பளத்தை எதிர் பார்க்கிறோம். அது போல தேர் இழுக்கும் குதிரையும் ஆட்கள் அல்லது பொருளின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதுதான் மனிதனின் எண்ணமும்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் ஆழ்ந்து படிக்கவேண்டும். தேரின் பா கங்கள் தேர் சவாரி, அது கொண்டு வரும் பொருள்கள் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள்/மந்திரங்கள் உள்ளன. இது அந்தக் கால சாலைகளின் உயர்ந்த நிலை,போக்குவரத்து Road Transport வசதிகளைக் காட்டுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அற்புதமான சாலைப் போக்குவரத்து இருந்திருக்கிறது . தேர்கள் பற்றி மட்டுமே வேத கால இலக்கியத்தில் 60-க்கும் மேலான சொற்கள் இருக்கின்றன. ‘வைகலும் எண் தேர் செய்யும் தச்சன்’ என்று சங்க இலக்கியமும் இயம்பும். ரிக் வேதமோ அதற்கு 3000 ஆண்டுகளுக்கும் முந்தையது!

1. WE all have various thoughts and plans, and diverse are the ways of men.

     The Brahman seeks the worshipper, carpenter seeks the cracked wood, and leech the maimed. Flow, Indu, flow for Indra’s sake.

 

2. The smith with ripe and seasoned plants, with feathers of the birds of air,

     With stones, and with enkindled flames, seeks him who hath a store of gold. Flow, Indu, flow for Indra’s sake.

 

3. A bard am I, my dad’s a leech, mammy lays corn upon the stones.

     Striving for wealth, with varied plans, we follow our desires like kine. Flow, Indu, flow for Indra’s sake.

 

4. The horse would draw an easy car, gay hosts attract the laugh and jest.

     The male desires his mate’s approach, the frog is eager for the flood, Flow, Indu, flow for Indra’s sake.

नानानं वा उ नो धियो वि वरतानि जनानाम |
तक्षा रिष्टं रुतं भिषग बरह्मा सुन्वन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


जरतीभिरोषधीभिः पर्णेभिः शकुनानाम |
कार्मारो अश्मभिर्द्युभिर्हिरण्यवन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


कारुरहं ततो भिषगुपलप्रक्षिणी नना |
नानाधियोवसूयवो.अनु गा इव तस्थिमेन्द्रायेन्दो परि सरव ||


अश्वो वोळ्हा सुखं रथं हसनामुपमन्त्रिणः |
शेपो रोमण्वन्तौ भेदौ वारिन मण्डूक इछतीन्द्रायेन्दो परि सरव ||

nānānaṃ vā u no dhiyo vi vratāni janānām |
takṣā riṣṭaṃ rutaṃ bhiṣagh brahmā sunvantamichatīndrāyendo pari srava ||


jaratībhiroṣadhībhiḥ parṇebhiḥ śakunānām |
kārmāro aśmabhirdyubhirhiraṇyavantamichatīndrāyendo pari srava ||


kārurahaṃ tato bhiṣaghupalaprakṣiṇī nanā |
nānādhiyovasūyavo.anu ghā iva tasthimendrāyendo pari srava ||


aśvo voḷhā sukhaṃ rathaṃ hasanāmupamantriṇaḥ |
śepo romaṇvantau bhedau vārin maṇḍūka ichatīndrāyendo pari srava ||

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் (Post No.8033)

https://tamilandvedas.com › இரத்…

· 

24 May 2020 — அட்டை (Leech) என்பது நீரில் வாழும் பிராணி . … சுஸ்ருதரும் அட்டை வைத்தியம் பற்றி …

— subham–

tags — குலத் தொழில், டாக்டர் ,அட்டை, பிராமணன் , தட்டான், தங்கம் ,புலவன்

2000 ஆண்டுக்கு முன் பாடிய ரோமானிய நையாண்டிப் புலவன் ஜுவெனால் (Post.9970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9970

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் தலைநகரான ரோம் ROME நகரிலிருந்து பல கொடுங்கோல் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அதற்கு முன்னர் நல்லோரும் ஆண்டனர். ஆனால் கண்ணகி போல வெகுண்டெழுந்து பகிரங்கமாக மன்னர்களைக் குற்றம் சாட்டியோரும் உண்டு. பலர் கவிதைகளையும், சொற் பொழிவுகளையும், நாடகங்களையும் அரசுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தினர் இரண்டு கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்துப் பாடி , அவர்களின் கோபத்துக்கு உள்ளான ஜுவெனால் Juvenal என்ற கவிஞரின் வரலாற்றைக் காண்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது ரோமானிய சாம்ராஜ்யம் (ROMAN EMPIRE). அதற்கு முந்தைய 500 ஆண்டுகளில் கிரேக்க சாம்ராஜ்யம் எப்படி கிரேக்க மொழி இலக்கியம் மூலம் ஐரோப்பிய சிந்தனையை வழிநடத்தியதோ அது போல அடுத்த 500 ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி இலக்கியம் வாயிலாக ஐரோப்பாவை செம்மைப்படுத்தியது லத்தீன் மொழி படைப்புகள். அந்த வரிசையில் சமுதாயத்தின் குற்றம் குறைகளை அச்சமின்றி உரைத்தவர் Juvenal  ஜூவெனால் ; அதையும் அழகாக கேலி, பகடி, நக்கல், கிண்டல் , நையாண்டி மூலம் , நம்ம ஊர் சோ CHO ராமசாமி போல நையாண்டி செய்து பாடல்களாகப் பாடினார்.

புலவருடைய முழுப்பெயர் டெசிமஸ் ஜூனியஸ் ஜூவெனாலிஸ்DECIMUS JUNIUS JUVENALIS . அக்காலப் புலவர்களைப் போல அவரும் நல்ல பணக்கார குடும்பத்தில்  பிறந்தார் .அதனால் நல்ல கல்வி வசதிகள் கிடைத்தன. தென் இத்தாலிய நகரான அக்வினத்தில் பிறந்தார் பின்னர் ரோமாபுரிக்குச் சென்று ‘பேசும் கலை’ பற்றிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஆனார்.ரோமானிய ராணுவத்தில் கொஞ்ச காலம் பணியாற்றியதாகவும் தெரிகிறது .அவருடைய இளமைக் காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யத்தை நீரோ NERO மன்னனும் டொமிடியன் DOMITIAN மன்னனும் ஆண்டனர்.

இருவரும் நல்லாட்சி புரியவில்லை. மக்கள் மீது கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சி மக்களுக்குச் சொல்லொணாத் துயர் கொடுத்தது. டொமீடியன் ஆட்சிக் காலத்தில் புலவர் ஜுவெனலுக்கும் ஏதோ ஒரு குற்றத்துக்காக தண்டனை கிடைத்தது ஒருவேளை அவர் சொற்பொழிவு ஆற்றுகையில் மன்னரைக் கடிந்து பேசியிருக்கலாம். ஊழல் மலிந்த ஆட்சியும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் புலவரின் சீற்றத்தைத் தூண்டிவிட்டன. எடுத்தார் பேனாவை; தொடுத்தார் கவிகளை. பழைய ரோமானிய பண்பாடு மறைந்து போய்விட்டது. பணக்கார ரோமானியர்கள் ஆடம்பர வாழ்க்கையில்தான் அக்கறை கொண்டுள்ளனர்; மக்களின் நலனில் அல்ல என்று சாடினார் ; கவி பாடினார்.

ஆயினும் மன்னர் டொமீடியன் இறக்கும்வரை அவர் தனது கவிதைகளை அச்சிடவில்லை. கி.பி 110 வாக்கில் ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியாயின.அப்போது புலவருக்கு வயது 55.

அடுத்த 20 ஆண்டுகளில் ஜுவெனால் 16 அங்கதப் பாடல்களை இயற்றினார். பணக்கார ரோமானியர்கள், சொகுசு வாழ்க்கை நடத்திய உயர்குலப் பெண்கள், ரோமானிய ராணுவம் என்ற பல விஷயங்களை சாடினார் . அவருடைய பெரும்பாலான தாக்குதல் டொமீடியன் மன்னர் மற்றும் அவருடைய ஆதரவாளர் மேல்தான் பாய்ந்தது .

பிறந்த  ஆண்டு –  கிபி.65

இறந்த ஆண்டு – கி.பி.140

வாழ்ந்த ஆண்டுகள் 75

எழுதிய கவிதைகள் ( 5 நையாண்டிக் கவிதைத் தொகுப்புகள் )

CE 110 – BOOK I (SATIRES 1-5)

116- BOOK II (SATIRE 6)

120- BOOK III (SATIRES 7-9)

125 – BOOK IV (SATIRES 10-12)

127 – BOOK V (SATIRES 13-16)

-SUBHAM-

  tags-  ரோமானிய, நையாண்டி, புலவன், ஜுவெனால், Juvenal