அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)

Written by London Swaminathan

Post No. 16,164

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–

PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.

வெற்றிவேற்கை

1

அதி வீர ராம பாண்டியன்  யார் ?

2

அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?

3

வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன  ?

4

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

5

உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச  தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான  வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன்  என்ன சொல்கிறார் ?

6

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற  வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?

7

பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன்  சொல்லும் அறிவுரைகள் என்ன ?

8

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

9

தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?

10

பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?

*********************************

விடைகள்

1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce)  என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.

***

2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி.  அதிவீரராம பாண்டியன்  செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.

***

3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

****

4.  முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :

உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .

 மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.

அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.

— கதாவாசகம்.

***

5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 

தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.

 நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.

— பாகவதம்.

*****

6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.

— திருவிளையாடற் புராணம்.

———-

 எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.

— புலவர் புராணம்.

****

7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.

***

8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.

— பாகவதம்.

***

9. தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:

தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.

முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.

— இராமாயணம்.

***

10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:

பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.

நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.

–subham—

Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர்சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதிநாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன்உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவதுமாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103; இந்து மத கலைச்சொல் அகராதி-103 (Post.16,124)

Written by London Swaminathan

Post No. 16,124

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already

தைத்திரீய சம்ஹிதா தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம்  கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு.  அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார்.  பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —

•     சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.

•     ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.

•     பிருகு வல்லி:  பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது

***

தாள துவஜம்  – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன  பலராமனின் கொடி.  2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994)  அழகாக விளக்கியுள்ளார்

***.

தக்ஷக

நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை  தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால  பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில்  ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான்  ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காருஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத்  தோற்றுவித்தனர் .  பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில்  மண்ணைத் தூவினான். 

***

தமஸ், தமோ குணம்

தமஸ் என்றால் இருள், அறியாமை .

மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன மைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை  ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே;  மூன்றாவது வகை தமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .

***

தாம்ரபரணி

பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு;  பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்

 128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

***

தாண்டவம்

சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை  இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.

ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது  பூமி, தண்ணீர், அக்கினி,  வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி,  இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.

***

தாரக அசுரன்

தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்;  இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்;  அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ;   தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.

***

தாரா

(கற்பழிக்கப்பட்ட கதை)

Planet Jupiter and its four large moons.

தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை;  பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .

To be continued……………….

Tags- தாரா ,

இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்

மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102)

Written by London Swaminathan

Post No. 16,102

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மலைபடு கடாம் நூல் எந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது? அதை எழுதியவர் யார்?

 2

இப்படி தடா புடா கடா முடா என்று பல்லை உடைக்கும் தலைப்பைக் கொடுத்து இருக்கிறாரே ! அதன் பொருள்தான் என்ன ?

3

இவர் யாரை வைத்து இந்த நூலினை இயற்றினார் ? அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ?

4

இந்த நூலுக்கு வேறு பெயரும் உண்டாமே! அது என்ன ?

5

இந்த நூலின் ஆசிரியரை உலகப்புகழ்பெற்ற ஒரு கவிஞருடன் ஒப்பிடுகிறார்கள்.ஏன் ?

6

இவர் நூலில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது கூத்தர் ஆற்றுப்படை என்பதிலிருந்து புலனாகிறது ; அதற்கு ஆதாரம்/ சான்று  என்ன ?

7

காரியுண்டிக்கடவுள்” என்று புலவர் பாடியுள்ளார் ; யார் அது ? அப்படி ஒரு கோவில் உள்ளதா ?

8

மலைகளில் எழும் ஓசையை இவர் 40 வரிகளில் கொட்டி முழக்கியுள்ளாராமே! கொஞ்சம் சாம்பிள் கிடைக்குமா?

9

கார்த்திகை நட்சத்திரம் பற்றியும், பெண்களின் தழை உடை, நகை நட்டுகள் குறித்தும் பாடிய புலவர் குழந்தை பிறந்தால் பெண்கள் வளையல் அணிய மாட்டார்கள் என்கிறாரே ! இது என்ன புது வழக்கம் ?

10

புலவர் சரியான பத்தாம் பசலி ஆள். ஏனெனில் ஆடல்- பாடல் மாக்களிடம் சகுனம் பாத்துப் புறப்படு என்கிறார் வேறு என்ன பொன்மொழிகளை உதிர்க்கிறார் ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

1.சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உண்டு; அதாவது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் 10+8= 18 ; அந்த 18 ல் பத்துப்பாட்டில் ஒரு நூல் மலைபடு கடாம். இதை எழுதியவர் ஒரு பிராமணர் ; அந்தப் பார்ப்பானின் பெயர் இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார் . அந்த அந்தணன் கெளசிக கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

***

2.மலைகளிலிருந்து ஒழுகும் ஓசை; அதாவது மலை என்பது யானைக்கு உவமை; ஆகவே யானையிலிருந்து ஒழுகும் மதம்.

***

3.நன்னன் என்ற மன்னனைப் பாராட்டி இந்த நூலினை யாத்தார் ; ஆவர் ஆண்டது திருவண்ணாமலைக்கு அப்பாலுள்ள நவிர மலைப்பகுதி. சேயாறு பாயும் ஊர் நன்னன் நகர்.

***

4.ஆமாம் கூத்தர் ஆற்றுப்படை என்றும் பெயர் ; ஏனெனில் கூத்தர் என்னும் நாடக / ஆடல் மக்களை மன்னனிடம் போய் பரிசுபெறுங்கள் என்று வழிப்படுத்தலால் — ஆற்றுப்படுத்துவதால் — கூத்தர் ஆற்றுப்படை என்றும் சொல்லுவார்கள்.

***

5.ஆங்கிலத்தில் ஏராளமான இயற்ககைக் கவிதைகளை யாத்த புலவன் WILLIAM WORDSWORTH வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் . அவரைப்போல பெருங் கெளசிகனாரும் இயற்கையைப் பாடியுள்ளார் . ஆகவே இவரை தமிழ் வோர்ட்ஸ்வொர்த் என்பார்கள் பாடலில் மொத்த வரிகள் 583. அதில் 400 வரிகள் இயற்கையைப் பற்றியது .

***

6.பாடலின்/ நூலின் முதல் 10, 15 வரிகளில் இசைக்கருவிகளின் பெயரை அடுக்கி , நூலினைத் துவக்குகிறார். கூத்தர் பலவகை இசைக்கருவிகளைப் பையில் போட்டுக் கொண்டு போகிறார்கள்

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்

விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,

திண் வார் விசித்த முழவொடுஆகுளி,

நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,

மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,   5

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,

இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,

விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,

நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,

கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,  10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,

கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,

நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)—மலைபடுகடாம்

(பிறவும் = பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை)

**

பேரியாழின் இயல்பு

தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ,   25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை

***

7.விஷத்தை உண்டவன் என்ற பொருள்படும்படி சிவபெருமானை காரி உண்டிக்கடவுள் என்று பாடிப் பரவியுள்ளார். இப்போதும் காலகண்டீஸ்வரர் கோவில் உள்ளது .தமிழகத்தில் அடையபுலம் காலகண்டீஸ்வரர் கோயில் (திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில்) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நாவலூர் உள்ளிட்ட சில இடங்களில் காலகண்டீஸ்வரர் (சிவன்)  கோயில்கள் உள்ளன. இவர் பாடியது திருவண்ணாமலை மாவட்ட கோவிலாக இருக்கலாம்

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும், 

***

8. மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்  295

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;

சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின்   300

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை   305

மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்,   310

கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை   315

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு,   320

மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து,   325

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு   330

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,

நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;   335

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்   340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,   345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக், (292 – 348)

Various Sounds Heard in the Mountains

Male monkeys dig out jackfruits and their oozing

juice sprays in the wind, spreading fragrances in

all directions.

There are sweet sounds from waterfalls, that rise

when celestial women catch the rapidly flowing

water in their hands and play in the waterfalls,

sounding like those produced by your musical

instruments.

There are sounds of forest dwellers sitting on high

platforms chasing a stray bull elephant with raised

tusks, that has strayed from his herd and entered

their millet field, and laments of those from whom

a porcupine with sharp quills, that resides in a cave,

escaped.

A mountain woman with wavy hair sings songs,

believing that it will heal the deep chest wounds

of her husband who was attacked by a tiger with curved

stripes.  Women who want to wear fresh vēngai flowers

shout ‘tiger’ ‘tiger’ without fear.

In the tall mountains, the painful roaring trumpets of a

naive, tender-headed pregnant cow elephant and her herd

are heard, since she was attacked by a tiger when her strong

mate went to get her food.  An uproar was caused by a

black-fingered female monkey and her troop who feed on

sprouts, when her untrained young child fell off the

mountains since she did not hold it tight.

In the tall mountains, the painful roaring trumpets of a

naive, tender-headed pregnant cow elephant and her herd

are heard, since she was attacked by a bright-colored, mighty

tiger when her strong mate went to get her food.  An uproar

was caused by a black-fingered female monkey and her troop

who feed on sprouts, when her untrained young child fell

off the mountains since she did not hold it tight.

Climbing on bamboo ladders on the tall mountains where

even male monkeys are unable to climb, forest dwellers

gather honey collected by bees from huge honeycombs,

and celebrate happily since they have destroyed forts

of their enemies, and that the loot got will serve as

gifts to Nannan with perfect spears.  The men drink

liquor and celebrate with kuravai dances in the sky-high

mountain, with their women, to the accompaniment of

small, loud deer hide parai drums.

There are roaring sounds produced by rivers with rocks

as they enter rocky crannies,

appearing like beautiful chariots riding in a row.

There are clamors of elephant trainers who speak mixing

languages, who bind their fierce elephants to tall posts,

reducing their great rage, after saving them when they fell

into huge whirlpools, and there are the sounds of bamboo

gadgets used by women to chase parrots from millet fields.

A bull with a moving hump, that strayed from its herd and a

marai stag that came from the mountains, fine males, fought

with each other with strength without backing down, causing

wounds to each other,

and ruining thick-petaled kulavi flowers and kurinji plants,

and cattle herders and mountain dwellers raised uproars.

There are noises made by children who thresh the

seeds of sweet, mature jackfruits that grow in clusters,

dropped on the ground by many who ate the fruits, using

calves that they control with ladle-like clusters of fragrant

kānthal flowers.

There are loud noises of machines which crush sugarcane

rapidly in factories, where crushed juice pours like pouring

rain.

Vallai songs are sung by women pounding millet grains.

There are roars of parai drums beat by those who grow

turmeric and chēmpu yam, beaten to chase marauding pigs.

All these and other sounds, countless in numbers, are

heard in the canyons and mountain peaks in all directions.

The sounds join together and ooze from the mountain like

musth flowing from a bull elephant.

(Vaidehi Herbrrt’s translation is given;thanks)

***

9.உண்மைதான். குழந்தைக்குப் பாலூட்டும்போது வளையல் சத்தம் கேட்டல் அது பால் குடிப்பதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கும்; மேலும் வளையல்களில் துருசு, தும்பு, பாக்டீரியா, வைரஸ் ஒட்டியிருந்தால் ரெசிஸ்டன்ஸ் பவர் குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தொற்று நோய் வரக்கூடும். மேலும் அந்த காலத்தில் மலைவாழ் மக்கள் அணி ந்தது கண்ணாடி அல்லது சங்கு வளையலாக இருக்கலாம் அவை உடைந்தாலோ குழந்தைகள் அதைக் கடித்தாலோ ஹெல்த் ரிஸ்க் அதிகம் ; இன்ன பல காரணங்களால் புலவர் புதுமைச் செய்தியை மொழிகிறார் .

 புள் கை போகிய (253) – நச்சினார்க்கினியர் உரை – பிள்ளையைப் பெற்றால் பெண்கள் வளையல் இடார்.  ஆதலின் வளை போதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்கு காரணமான மகார் என்றவாறு.

***

10.

பொன்மொழிகள் உவமைகள்

ஞமலி நாவின் அன்ன

துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடிக் நாக்கு (நாயின் போன்ற சிற்றடி)

****

வரையர மகளிர் இருக்கை காணினும்,   190

உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;

பல நாள் நில்லாது, நிலநாடு படர்மின்(தெய்வீகப் பெண்கள் இருக்கும் மலை )

***

பராவு அரு மரபின் கடவுட் காணின்,   230

தொழாநிர் கழியின் அல்லது வறிது (போகும் வழியில் உள்ள கோயிலில் கடவுளைக்கும்பிட்டு விட்டுச் செல்லுங்கள் )

***

கயம் கண்டன்ன அகன் பை அம் கண்

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்   260

துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,

(யானைகளை விழுங்கும் மலைப்  பாம்புகள் வழியில் இருக்கும்; பார்த்தால் காய்ந்த மரம் போல இருக்கும்; ஜாக்கிரதை; உஷார்! உஷார் !)

***

பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசைக்

காடு காத்து உறையும் கானவர் உளரே;

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்   280

புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,

(மலை வாழ் மக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பார்கள்; ஆற்றில் விழுந்த ஒருவனை நாம் எவ்வளவு விரைவாகக் காப்பாற்றச்  செல்வோமோ அந்த வேகத்தில் உதவி செய்வார்கள்!)

***

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட,

கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்   390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்; (376 – 391)

***

புதியவர்களுக்கு வழி தெரியபுல்லை முடிந்து

இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்; (392 – 393)

(கானகத்தில் செல்லுவோர், வழி தவறுவது மிகவும் அதிகம்; ஆகையால் பாதையின் இருபுறங்களிலும் உள்ள செடிகளில் புதர்களில் முடிச்சுப் போடுவார்கள்; இதைப்பார்த்து எல்லோரும் நடப்பார்கள்; அருமையான செலவில்லாத உத்தி).

***

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த,   435

சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;

(போகும் வழியில் உங்களுக்குத் புளியஞ்சாதம் கிடைக்கும்; அதில் நல்ல விதைகள், அவரை முதலியன போட்டு வழங்குவார்கள் ((நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது). இதற்கு முன்னர் மாமிச உணவு கிடைப்பது பற்றியும் புலவர் பாடியுள்ளார் )

****

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு,   465

(முள்ளை அகற்றிய மீன்களோடு சோறும் கிடைக்கும்)

***

இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து,   565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்

அருமையான மெல்லிய ஆடை ; நல்ல மாமிச உணவு; எல்லாம் கொடுப்பான் நன்னன் ; முதல் நாள் விருந்து போல எத்தனை நாள் தங்க்கி னாலும் கிடைக்கும் . பழைய பழமொழி:

(முதல் நாளில் தலை வாழை இலை விருந்து ;

இரண்டாம் நாள் கையில விருந்து;

மூன்றாம் நாள் தரையில விருந்து– என்பது நன்னனிடம் கிடையாது )

***

உணவு வகைகள் பற்றியும் , இசைக்கருவிகள் வகைகள் பற்றியும் , கானகத்தில் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகள் பர்றியும் அங்கே காணப்படும் விலங்குகள், தாவரங்கள் பற்றியும், வரிக்கு வரி காணலாம் !!

–subham—

Tags- மலைபடு கடாம் , 10 கேள்விகள், இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார், கூத்தராற்றுப்படை ,தமிழ் வோர்ட்ஸ்வொர்த்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்