மஹரிஷி அரவிந்தர் – 1 (Post No.9973)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9973

Date uploaded in London –  14 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

மஹரிஷி அரவிந்தர் – 1

.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.  இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்த பெரும் மஹரிஷி!.

அரவிந்தப் புதிர்

சென்ற நூற்றாண்டு கண்ட பெரிய மஹரிஷி அரவிந்தர்.

ஆனால் அவரை உலகம் முழுதுமாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதத் துடித்த ஒரு அன்பர் அவரை அணுகிய போது அவர் சொன்ன பதில்: என் வாழ்க்கை மக்கள் பார்க்கக் கூடிய அன்றாட வாழ்க்கை நிகழ்வில் இல்லை” என்று பதில் கூறினார்.

அது அகத்தின்  மூலம் அண்ட பிரபஞ்சத்தில் ஏற்படுத்திய மகத்தான முன்னேற்றம் என்பதாலும் பிரம்மாண்டமான சக்தியை யோகத்தின் மூல்ம் பூமியில் இறக்க முயன்ற மஹா யாகம் என்பதாலும் அநத வாழ்க்கையை மேற்பார்வையாகப் பார்த்து உணர முடியாது;அதை எழுதி விவரிக்க முடியாது. அரவிந்தர் விடுவிக்க முடியாத ஒரு புதிர்!

அவரது அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர் நிரோத் பரன்.

சுமார் 4000 கடிதங்களை அரவிந்தரிடமிருந்து பதிலாகப் பெற்றவர்.

103 வயது என்ற அதிசயமான நிறை வாழ்வை வாழ்ந்தவர் அவர்.

அவரிடம் அரவிந்தர் ஒரு சமயம் நான் காலத்திற்கு முன்பாகத் தோன்றிப் பிறந்து விட்டவன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்த ஞானம்

அவரது ஞானம் யாராலும் அளக்க முடியாத அளவு எல்லையற்றது. அவர் தொடாத நல்ல பொருளே இல்லை. விளக்காத விஷயமே இல்லை.

 அரவிந்த அன்னை ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்: “அவர் டைப்ரைட்டர் முன்னால் அமர வேண்டியது தான்; அனைத்து பிரம்மாண்டமான ஞானமும் தட தடவென அருவி போல அங்கு வந்து விழும்” என்றிருக்கிறார்.

     அன்னை அவர்களே தன்னாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள  முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் அவருடன் ஆஸ்ரமத்தில் இருந்தாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவள் என்று சொல்ல முடியாது என்றிருக்கிறார்.

     இப்படிப்பட்ட ஒரு பெரும் மஹரிஷியைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அவரது நூல்களைப் படிக்க வேண்டும்; அவரது உபதேச மொழிகளை ஓர்ந்து உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.

        அவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன என்பது இறைவனின் திருவருளாளும் நமது அதிர்ஷ்டத்தினாலும் என்றே கொள்ளலாம்.

      அரவிந்த கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட மஹரிஷி அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும் ஸ்வர்ணலதா அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தனது சகோதரர்களோடு டார்ஜிலிங் லோரெட்டோ கான்வெண்டில் சேர்ந்து படித்த அவர் 1879ஆம் ஆண்டு மேற்கல்வி கற்பதற்காக அவர்களுடன் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். 250 பேர் எழுதிய ICS தேர்வில் 11வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். ஆனால் கிங்ஸ் காலேஜில் பயிற்சிக்காக சேர்ந்த அவர் அதில் ஆர்வம் இன்றி வேண்டுமென்றே தானாகவே தகுதியை இழந்தார்.   

      இந்தியாவின் சுதந்திர உத்வேகம் அவரை உந்தவே அங்குள்ள ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். 1893இல் இந்தியா மீண்ட அவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அவர் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற ஒரு தவறான தகவலைக் கேட்ட அவர் தாய் ஸ்வர்ணலதா தேவி மனம் பாதிக்கப்பட்டு நோயாளியானார்.

      இந்தியா திரும்பிய அரவிந்தர் பரோடா சம்ஸ்தானத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணி புரிந்த பின்னர் வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கவே ஒரு பெரும் எழுச்சி மக்களிடையே ஏற்பட்டது. இதனால் கொதித்த அரவிந்தர் இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார். பல்மொழிகளில் வல்லுநர் என்பதாலும், ஏராளமான நூல்களைக் கற்றதனாலும் நுட்பமான அறிவைக் கொண்டிருந்ததாலும் தேசீய எழுச்சிக்கென பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். 1905ஆம் ஆண்டு வந்தே மாதரம் என்ற இதழை ஆரம்பித்தார். சந்திரபாலருடன் பல்வேறு கூட்டங்களிலும் பேசலானார். அவரது பேச்சாலும் எழுத்தாலும் மிரண்டு போன ஆங்கில அரசு அவரை 1907இல் கைது செய்தது. மீண்டும் 1908இல் அலிப்பூர் குண்டு வீச்சுக் கேஸில் அவர் கைது செய்யப்பட்டு ஒராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அத்துடன் சிறையிலேயே விவேகானந்தரின் குரலை அவர் கேட்டார். இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆதர்சமும் அவருக்குச் சிறையில் கிடைத்தது. சிறையில் யோக சாதனையில் அவர் ஈடுபட்டார்.

     அரவிந்தர் எள்ளளவும் பயமின்றி கர்மயோகி என்ற ஆங்கிலப் பத்திரிகை மற்றும் தர்மா என்ற வங்கப் பத்திரிகை ஆகியவற்றின் வாயிலாக தேசீய உணர்வை எழுப்பலானார்.

     மீண்டும் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்ய முனைவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. 1910இல் அவருக்கு அந்தராத்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது – “பாண்டிச்சேரிக்குப் போ என்ற அந்தக் குரலைக் கேட்டு அவர் புதுவை நோக்கிப் பயணமானார். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவைக்கு அவர் வரவே அவர் மீதான கைது வாரண்டை பிரிட்டிஷ் அரசு ரத்து செய்தது.

    அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். மஹாகவி பாரதியார் அவரை வரவேற்றார். எளிமையான ஒரு வீட்டில் முதலில் தங்கி இருந்த அரவிந்தர் தனது யோக சாதனையை ஆரம்பித்தார். பிரம்மாண்டமான இறைசக்தியை பூவுலகில் இறக்க முனையும் அந்த சாதனை மஹாயோகம் – Integral Yoga – எனப்பட்டது.

    நாளடைவில் அரவிந்தரின் யோக ஆற்றலால் ஈர்க்கப்பட்ட சாதகர்கள் ஏராளமாகப் பெருகவே ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. பாரிஸில் பிறந்த மிரா அல்பாஸா என்ற பெயரைக் கொண்ட அன்னை தம் தியானத்தில் ஒரு மஹாபுருஷரைக் கண்டார். அவர் அரவிந்தரே என்பதை உணர்ந்த அன்னை புதுவையில் வந்து தங்க ஆரம்பித்தார். 1926இல் அரவிந்த ஆசிரமத்தையும் அவரே நிறுவியதோடு தான் சமாதியாகும் 1973ஆம் ஆண்டு வரை அதைத் திறம்பட நிர்வகித்தும் வந்தார். 1968ல் உலக சமாதானத்திற்காகவும் நலனுக்காகவும் ஆரோவில் என்ற ஒரு நகரையும் அன்னை உருவாக்கினார்.

        அரவிந்தர் தனது ஆன்மீக சிந்தனைகளை 1914 முதல் 1921ஆம் ஆண்டு முடிய ஆர்யா என்ற இதழில் எழுதி வரலானார். சாவித்திரி என்ற மஹா காவியத்தையும் படைக்க ஆரம்பித்தார்.

      அவரது சாவித்திரி காவியம் 24000 வரிகள் கொண்ட, மரணத்தை வெல்ல வழி வகுக்கும் ஒரு மஹா காவியம்.

      தன் இறுதி வரை அவர் பலமுறை தன் அனுபவத்தில் ஏற்படும் மேம்பாடுகளுக்குத் தக அதை மாற்றி மெருகேற்றிக் கொண்டே இருந்தார்.

அந்தக் காவியம் படிப்பதற்கு சுவையானது; ஆனால் கஷ்டமானது. புரிந்து கொள்ளச் சற்று சிரமமானது. பலமுறை படித்தால் ஒரு சிறிது பொருள் புரியும்; ஆன்மீக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.

·                                                                           தொடரும்

tags — மஹரிஷி ,அரவிந்தர்,

பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் (Post No.9880)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9880

Date uploaded in London – 22 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் கூறியவை!

ச.நாகராஜன்

பாகிஸ்தான் உருவான விதத்தை பாரத தேச மக்கள் அனைவரும் அறிவோம்.

இப்படி ஒரு நாடு உருவாவதை மஹாத்மா காந்திஜி விரும்பவில்லை.

அவர் கூறிய சில சொற்கள் இவை:-

அதை அப்படியே ஆங்கிலத்தில் காணலாம்.

“I am firmly convinced that the Pakistan demand as put forth by the Muslim League is un-Islamic and I have not hesitated to call it sinful”.

–       Harijan 6, October 1946

–        

“முஸ்லீம் லீக் முன் வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கை இஸ்லாமுக்கு எதிரானது. அது பாவகரமானது என்று சொல்ல நான் தயங்க மாட்டேன்.”

இது தான் அவரது நிலைப்பாடாக 1946 அக்டோபரில் – அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் பாகிஸ்தான் உருவாவதற்கும்  சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் – இருந்தது.

பாகிஸ்தான் அவரது விருப்பமில்லாத நிலையில் 1947 ஆகஸ்டில் உருவானது.

அவர் கூறினார் அடுத்து:-

 “If Pakistan persists in wrong doing there is bound to be war between India and Pakistan.”

–       Harijan 28, September 1947

பாகிஸ்தான் தவறு செய்வதைத் தொடர்ந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் உருவாகும். – இப்படி அவர் 1947 செப்டம்பரில் கூறினார் – அதாவது அவர் மறைவதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக.

அஹிம்சையை வாழ்நாள் கொள்கையாக வலியுறுத்திய அவராலேயே பாகிஸ்தானின் தவறான போக்கும் செயலும் சரியில்லை என்பது கூறப்பட்டது. அது தொடர்ந்தால் போர் தவிர்க்க முடியாது போய் விடும் என்றார் அவர்.

போரை அவரால் என்றேனும் ஆதரிக்க முடியுமா?

அவர் அடுத்துக் கூறுவதைப் பார்ப்போம்:

“I have been an opponent of all warfare. But if there is no other way of securing justice from Pakistan, if Pakistan persistently refuses to see its proved error and continues to minimize it, the Indian Government will have to go to war against it. If there is a war, the Hindus in Pakistan cannot be fifth columnists there. No one will tolerate that.  If their loyalty lies not with Pakistan they should leave it. Similarly the Muslims whose loyalty with Pakistan should not stay in the Indian Union.

–       Harijan 6, October 1947

–        

“எல்லாப் போரையும் எதிர்த்து வருபவன் நான். ஆனால் பாகிஸ்தானிலிருந்து நீதி கிடைக்காதிருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் தொடர்ந்து தனது தவறுகளைச் செய்து கொண்டிருப்பதைக் காணாதிருப்பின், அதைக் குறைப்பதற்கு மறுப்பின், அதற்கு எதிராக இந்திய அரசு போருக்குச் செல்ல வேண்டியிருக்கும். போர் ஏற்படின் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் ஐந்தாம் படையாக அங்கு இருக்க முடியாது. அதை யாரும் பொறுக்க மாட்டார்கள். அவர்களின் விசுவாசம் பாகிஸ்தானிடம் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். அதே போல பாகிஸ்தானுக்கு விஸ்வாசமாக உள்ள முஸ்லீம்கள் இந்திய யூனியனை விட்டு வெளியேற வேண்டும்.”

மிகத் தெளிவாக இப்படி 1947 அக்டோபரில் அவர் கூறினார்.

பாகிஸ்தானைப் பற்றிய மிகத் தெளிவான பார்வையை அவர் கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.

பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பை 1947லிருந்து இன்றைய வரை இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஹிந்துக்களும் நன்கு உணர்வர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஓரிழையில் இணைந்து பாகிஸ்தானை நோக்கினால் பாகிஸ்தான் தனது வாலை ஆட்ட நினைத்தும் பார்க்காது.

இனி மஹரிஷி அரவிந்தர் பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.

திருச்சி வானொலி நிலையத்திற்கு ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு உரையை மஹரிஷி அரவிந்தர் தந்தார்.

அதில் “The Partition must go” – பிரிவினை போக வேண்டும் என்ற தன்  கருத்தைத் தெரிவித்திருந்தார்.

“(பாகிஸ்தான்) பிரிவினை என்பது செயற்கையானது. அது போக வேண்டும். போய் விடும்” என்பது அவர் கருத்தாக இருந்தது.

எதிர்காலம் காணும் மஹரிஷியின் தீர்க்க தரிசனமாகவே இதைக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் பிரிவினை பற்றி மஹாத்மா காந்திஜி கூறிய கருத்துக்களும், அதே போல 1950 முடிய வாழ்ந்த மஹரிஷி அரவிந்தர் கூறிய கருத்துக்களும் தனியே தொகுக்கப் பட வேண்டும்.

அது ஒரு தெளிவான எதிர்காலத்தை பாரத தேச மக்களுக்குக் காட்டும்!

NDEX

Mahatma Gandhiji on Pakistan.

Aurobindo on Pakistan

The division is unnatural

War between India and Pakistan

Division will have to go; will go

tags- பாகிஸ்தான் ,காந்திஜி, அரவிந்தர்

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்! (Post No.6778)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 14 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  18-12

Post No. 6778

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

ஸ்ரீ அராவிந்த கோஷ் 15-8-1872 – 5-12-1950)

இந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.

சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்

இந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,

பத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.

அரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்

Tags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை

–subham–

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-3 (Post No.4299)

Written by S.NAGARAJAN

 

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 5–31 am

 

 

Post No. 4299

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 3

.நாகராஜன்

 

6

அரவிந்த இலக்கியம் பெரிய கடலைப் போன்றது. அதில் நீந்திக் கரையேற முடியுமா? முடியாது.

அரவிந்தர் (1872-1950) கிங்ஸ் காலேஜ், கேம்பிரிட்ஜில் படித்தவர்.1893இல் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் அவர் பரோடா காலேஜில் ஆங்கில, பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்பித்தார்.

வால்மீகி, ஹோமர், மில்டன் பற்றி அவர் ஏராளமான அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு கருத்துகளை மட்டுமே இங்கு பார்க்க முடியும் – இடம் கருதி!

அரவிந்தர் நூல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அன்பர்கள் சிறிது நேரம் ஒதுக்கி அவர் இந்திய பண்பாட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்று படித்து மகிழலாம்.

இந்தியக் கலை, இந்திய இலக்கியம் பற்றிய அவரது அருமையான கருத்துக்களை The Renaissance in India and other Essay on Indian Culture என்ற நூலில் காணலாம்.

விண்ணை அளக்கும் கம்பீரமான வார்த்தைகளால் அவரது புகழாரத்தைப் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது.

அதில் இலக்கியம் பற்றிய மூன்றாவது கட்டுரையில் ஆரம்பத்திலேயே திருவள்ளுவர், கம்பன் உள்ளிட்ட கவிஞர்களைப் பெருங்கவிஞர்கள் வரிசையில் சேர்க்கிறார்.

பின்னர் அவர் கூறுவது:

The pure literature of the period is represented by the two great epics, the Mahabharata, which gathered into its vast structure the greater part of the poetic activity of the Indian mind during several centuries, and the Ramayana.

 

 

These two poems are epical in their motive and spirit, but they are not like any other two epics in the world, but are entirely of their own kind and subtly different from others in their principle.

 

It is not only that although they contain an early heroic story and a transmutation of many primitive elements, their form belongs to a period of highly developed intellectual, ethical and social culture, is enriched with a body of mature thought and uplifted by a ripe nobility and refined gravity of ethical tone and therefore these poems are quite different from primitive edda and saga and greater in breadth of view and substance and height of motive — I do not speak now of aesthetic quality and poetic perfection — than the Homeric poems, while at the same time there is still an early breath, a direct and straightforward vigour, a freshness and greatness and pulse of life, a simplicity of strength and beauty that makes of them quite another kind than the elaborately constructed literary epics of Virgil or Milton, Firdausi or Kalidasa.

 

 

This peculiar blending of the natural breath of an early, heroic, swift and vigorous force of life with a strong development and activity of the ethical, the intellectual, even the philosophic mind is indeed a remarkable feature; these poems are the voice of the youth of a people, but a youth not only fresh and fine and buoyant, but also great and accomplished, wise and noble.

This however is only a temperamental distinction: there is another that is more far-reaching, a difference in the whole conception, function and structure.

 

அடுத்து உலக கவிஞர்களை நுணுகி ஆராய்ந்த அவர் வால்மீகி, வியாஸர், ஹோமர், ஷேக்ஸ்பியர் ஆகிய நால்வரை முதல் வரிசையில் வைத்தார்.

அடுத்து இரண்டாவது வரிசையில் தாந்தே, காளிதாஸர், Aeschoylus, Sophocles, வர்ஜில், மில்டன் ஆகியோரை வைத்தார். கதே மட்டும் மூன்றாம் வரிசை இடத்தைப் பெற்றார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

Vyasa and Valmiki, Foundations of Indian Culture, Talks with Nrod Baran உள்ளிட்ட பல நூல்களை அன்பர்கள் படித்தால் இலக்கிய சிகரத்தில் ஏறலாம்; கம்பன், வால்மீகி, வர்ஜில், ஹோமர், மில்டன் ஆகியோர் பற்றிய அவர் கருத்துக்களை அறியலாம். இது ஒரு தனி நூலுக்குரிய ஆய்வாக அமைகிறது என்பதால் இந்த அளவில் இதை முடித்துக் கொள்வோம்.

7

மில்டனின் கவிதைத் திறத்தை மெச்சுவோர் இருளைப் பற்றி வர்ணிக்கும் அவனது அருமையான சொற்றொடரான, ‘Palpable darkness’ – தொட்டு உணரலாகும் இருட்டு என்பதை மேற்கோளாகக் காட்டுவர்.

கம்பனது காவியத்திற்கு வருவோம்.

ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதைப் படலத்தில் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பு) வரும் செய்யுள்களைப் பார்ப்போம். (138 முதல் 142 முடிய உள்ள பாடல்கள்)

சீதை மேல் மையல் கொண்ட ராவணன் ‘கன்னக் கனிய இருள் தன்னை பார்ப்போம். சூரியனை விட சந்திரன் சுடுகிறான்’ என்று கூறி சந்திரனை வரவழைக்கிறான். “நீ நீங்கு” என்றவுடன் இருள் வருகிறது.

அது எப்படி இருந்தது?

“ஆண்டப் பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்           தீண்டற்கு எளிதாய்ப் பல தேய்ப்பன தேய்க்கலாகி           வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகிக்        காண்டற்கு இனிதாய்ப் பல கந்து திரட்டல் ஆகி”

என்று ஆரம்பித்து இன்னும் மூன்று பாடல்களில் இருளை வர்ணிக்கிறான்.

அடுத்த பாடலில் ‘அம்பும் அனலும் நுழையா கன அந்தகாரத்து’ என்று வர்ணிக்கிறான்.

அதாவது பாணமும் அக்கினியும் உள்ளே சென்று பிளக்க முடியாத அடர்ந்த இருள் என்று வர்ணிக்கிறான்.

தீண்டற்கு எளிதாக – தொட்டு உணருவதற்கு எளிதாக இருந்த இருள், அம்பும் அனலும் நுழையா கடும் அடர் இருளாக மாறியது.

மில்டனை விட ஒரு படி மேல் சென்று எப்படி தண்ணீர் அடர்த்தியான ஐஸ்கட்டி போல ஆகிறதோ அது போல இருள் கெட்டியான கட்டி ஆகி விட்டதாகக் கூறுகிறான்.

எப்படிப்பட்ட வர்ணனை?

புராணம் கூறும் கிருஷ்ண சரித்திரத்திற்கு வருவோம்.

தனது குருவின் இறந்த புதல்வனை மீட்க கிருஷ்ணனது சஹஸ்ர கோடி சூர்யனுக்குச் சமமான சுதர்ஸன சக்கரம் அடரத்த இருளே குகை போல (கெட்டியாக, அடர்த்தியாக) இருந்ததை ஊடுருவிச் சென்றது என்பதைப் படிக்கிறோம்.

(இந்த உவமையைப் பல காலும் படித்து மகிழ்ந்து பிரமித்திருக்கிறேன்.)

ஆக காவியம் இயற்றிய் இரு பெரும் கவிஞர்களின் ம்னோ சஞ்சாரம் பற்றி அறிய இருள் பற்றிய இந்த உவமை வெளிச்சம் தருகிறது இல்லையா?

இப்படி நுணுகிப் படித்து மகிழ்ந்தால் பல முத்துக்களைப் பெறலாம்.

8

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களும் திரு டிஎஸ்கே ரகு அவர்களும் பதிவு செய்த கருத்துக்களினால் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், வ.வே.சு.ஐயர், மஹ்ரிஷி அரவிந்தர் உள்ளிட்டோரின் நூல்களை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி.

அன்பர்களுக்கு எனது நன்றி.

****

இது வம்புத் தொடர் அல்ல; கரும்புத் தொடர் என்று ஆகி விட்டது. இத்துடன் தொடர் நிறைவுறுகிறது.

 

 

 

பிரார்த்தனையின் சிறப்பு

Indian devotees touches the foot while praying and seek blessings at a 52 foot tall idol of the elephant-headed Hindu god Lord Ganesh during the 'Ganesh Chaturthi' Hindu festival in Hyderabad on September 2, 2011. Hindu devotees bring home idols of Lord Ganesha during the 'Ganesh Chaturthi' in order to invoke his blessings for wisdom and prosperity, during the eleven day long festival which culminates with the immersion of the idols in the Arabian Sea.   AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

 AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

Compiled by S NAGARAJAN

Article No.1929

Date :13th June 2015

Time uploaded in London: 20-34

 

By ச.நாகராஜன்

பிரார்த்தனையின் சிறப்பு

பிரார்த்தனை மனிதனுக்கே உள்ள தனி உரிமை. தனிச் சிறப்பு. ஈ, எறும்பு, சிலந்தி, யானை போன்றவை இறைவனை அழைத்து உயர்ந்ததை புராண வாயிலாகப் படிக்கிறோம். என்றாலும் நூலறிவாலும் பட்டறிவாலும் இறைவனின் பெருமையை அறிந்து அவனைத் துதித்துப் போற்றுவது மனிதனுக்கே உரியதாகும்.

ஆகவே தான் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவையாரும் ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் என ஆதி சங்கரரும் மனிதப் பிறப்பைச் சிறப்பித்தனர்.

மனிதர்களில் நாத்திகரைத் தவிர அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக. சி.ல பலிக்கின்றன. சில பலிப்பதில்லை.

அரவிந்தரின் அருளுரை

மஹரிஷி அரவிந்தர் இது பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம். அவரது சீடராக இருந்தவர் இசை விற்பன்னர் திலிப் குமார் ராய்

“Sri Aurobindo came to me” என்ற நூலில் அரவிந்தருடனான தனது அனுபவங்களைச் சுவைபடத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இடத்தில் பிரார்த்தனையின் பலிதம் பற்றி அரவிந்தரின் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

அரவிந்தரின் தாய்வழி மாமன் ஶ்ரீ கிருஷ்ண குமார் மித்ராவின் மூத்த பெண் டாக்டர்களால் கை விடப்பட்டு விட்ட நிலை. அவர் தந்தை கூறினார்: “கடவுள் ஒருவர் தான் இனி துணை; பிரார்த்தனை செய்வோம்” அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன் குணம் தெரிய ஆரம்பித்தது. டைபாய்ட் ஜூரம் போயே போனது. நோயாளி பிழைத்தார். சில பிரார்த்தனை பலிக்கும். சில பலிக்காது. அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்று பலிக்க வைத்தால் கடவுள் மிக மோசமான நிலையில் தள்ளப்படுவார்.

அரவிந்தரின் எழுத்துக்களில் இவை சொல்லப்படுகிறது இப்படி:-

“As for prayer, no hard and fast rule can be laid down. Some prayers are answered, all are not. The eldest daughter of my maternal uncle, Sri Krishna Kumar Mitra (the editor of Sanjivani – not by any means a romantic, occult, supra-physical or even an imaginative person) was abandoned by the doctors after using every resource, all medicines stopped as useless. The father said: ‘There is only God now, let us pray.’

He did and from that moment the girl began to recover, the typhoid fever and all symptoms fled, death also.

I know any number of cases like that. Well? You may ask why should not then all prayers be answered. But why should they? It is not a machinery; put a prayer in the slot and get your asking. Besides, considering all the contradictory things mankind is praying for at the same moment, God would be in a rather awkward hole if he had to grant all of them; it would not do.”

 

மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இருவர் இரு வேறான நிலைகளில் எதிரும் புதிருமாக பிரார்த்தித்தால் கடவுள் யாருக்கு அருள்வார்?

இறைவனின் வழிகள் தனி. விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. (ஏடிஎம் மெஷினில் கார்டை செருகி வேண்டியதை எடுப்பது போல அல்ல பிரார்த்தனை!)

THF_Memorial02

லண்டனிலொரு நிகழ்ச்சியில் திருமதி சீதா வெங்கட்ராமன், திரு.கல்யாண குருக்கள் பிரார்த்தனை

வள்ளுவர், மணிவாசகர், தாயுமானவர் ஆகியோரின் அருளுரைகள்

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்ற வள்ளுவர் குறளில் (குறள் 4) இறைவன் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ;

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய்

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன்தன் விருப்பன்றே” என்கிறார் மாணிக்கவாசகர்.

எனக்கு நல்லது எது என்பது உனக்கே தெரியும்; அதை அருள்வது உனது பொறுப்பு என்ற அவரது அருளுரை மனித குலத்திற்கே ஒரு வழி காட்டுதலாக அமைகிறது.

தாயமானவரின்,

எனக்கெனச் செயல் வேறிலை யாவும் இங்கு ஒரு நின்                          தனக்கெனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்                         மனத்தகத்து உள அழுக்கெலாம் மாற்றி                                     எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

(நீதம் – முறை)

என்ற பிரார்த்தனை அருமையான பிரார்த்தனை. என் மன அழுக்கை மாற்றி, நீ நினைத்ததை எனக்கு அருள் என்று இறைவனிடம் பொறுப்பை அவர் ஒப்படைக்கிறார்.

பிரார்த்தனை பற்றிய தெளிவு மகான்களின் வாக்கால் பிறக்கிறது.

***************

அரவிந்தர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள்

sri-aurobindo

டிசம்பர் 5ஆம் தேதி அரவிந்தர் மஹாசமாதி தினம். அதையொட்டி அவரைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை இது.

Post No 730 dated 4th December 2013

அரவிந்த யோகம் by ச.நாகராஜன்

வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்திலே நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மானவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே!

-கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்

வேத நெறி தழைக்க வந்த அவதாரம்

தேசீயம் தெய்வீகம் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதையே தன் வாழ்க்கையாக்கி மனித குலத்தை சனாதன தர்மம் தந்த வேத நெறியில் உயர்த்த அவதரித்தவரே மஹரிஷி அரவிந்தர்.

மஹாசக்தி வழி நடத்திய புருஷர்

ஒரு மாபெரும் சக்தி அவரை வாழ்க்கை முழுவதும் வழி நடத்தி வந்தது. அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களோ ஏராளம்!
1908ஆம் ஆண்டு மிர்ஜாபூரில் வெடித்த குண்டைத் தொடர்ந்து அரவிந்தர் அலிபூர் சிறையில் ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.அங்கு அனைத்தையும் வாசுதேவனாகக் கண்டார். ‘சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்’ என்ற மகத்தான அநுபூதியைப் பெற்றார். ஒரு நாள் அவர் உடல் தரையிலிருந்து மேலே சிறிது எழும்பியது. அந்த நிலையில் கைகளையும் உயர்த்தினார். எப்படி முயன்றாலும் அடைய முடியாத ஒரு விசித்திரமான நிலையில் அவர் உடல் இருக்கவே, அதைப் பார்த்த சிறை வார்டர் அரவிந்தர் இறந்து விட்டதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் ஓடோடி வந்து பார்த்த போது அரவிந்தர் இயல்பான நிலையில் இருந்து.
சிரித்தார். தன்னை இறந்ததாக அறிவித்தவனை முட்டாள் என்றார்!

இயல்பாகவே அரவிந்தருக்குத் தீர்க்கதரிசனக் காட்சிகள் தோன்றி வந்தன. அவரே கூறிய ஒரு சம்பவம் இது:- “ஒரு சமயம் சி.ஆர்.தாஸின் நண்பரான வ.ரா. (பிரபல தமிழ் எழுத்தாளராக பின்னால் புகழ் அடைந்தவர்) என்னைக் காண வருவதாக இருந்தது.அவரது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காண விரும்பினேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு உரமான முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தைக் கண்டேன். ஆனால் வ.ரா நேரில்வந்த போது சாந்த முகம் உள்ள தென்னிந்திய அந்தணருக்கே உரித்தான தோற்றத்துடன் விளங்கினார்! ஆனால் இரு வருடங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்த போது நான் முதலில் எப்படிக் கண்டேனோ அப்படி அவர் மாறிவிட்டிருந்தார்.”

டீ அடிமையாக அவர் இருந்த போது தனது மைத்துனர் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவர் எண்ணிய சமயத்தில் எதிரே இருந்த சுவரில் டீ வரும் சரியான நேரம் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் டீயும் வந்தது. “அன்று முதல் தினமும் டீ வரும் நேரம் சுவரில் எழுதப்படுவதைக் கண்டேன்” என்று அரவிந்தர் பின்னால் தன் அனுபவங்களைக் கூறினார்.

பாண்டிச்சேரி செல்!

சிறையில் அவருக்கு உள்ளிருந்து குரல் ஒன்று கிளம்பி அவர் செய்ய வேண்டியதைப் பணித்தது.அது எந்த காரணத்தையும் சொல்லாமல் இதைச் செய்; அதைச் செய் என்று மட்டும் பணித்தது. மற்றவர்கள் எல்லாம் அவரை பிரான்சுக்குச் செல்ல ஆலோசனை தந்த போது அவரது உள்ளார்ந்த குரலோ அவரை பாண்டிச்சேரி செல்லுமாறு கூறியது.31-3-1910 அன்று கல்கத்தாவிலிருந்து கப்பலில் கிளம்பிய அரவிந்தர் 4-4-1910 அன்று மூன்று மணிக்குப் புதுவை வந்து சேர்ந்தார். அங்கு மகத்தான யோக சாதனையைச் செய்தார். எதற்காக புதுவைக்குச் செல்லச் சொன்னதோ அந்த மஹாசக்தியின் விருப்பப்படி அரவிந்த ஆசிரமமும் உருவானது.

1926ஆம் தேதி நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணர் பூவுலகில் அவரது உடலில் ஆவிர்பித்ததை அவர் அறிவித்தார். அது இன்றளவும் சித்தி தினமாக்க் கொண்டாடப்படுகிறது. சூபர்மைண்ட் எனப்படும் அதிமானுட மனமும் ஆனந்தமும் பெரும் பணியை நிறைவேற்ற வந்திருப்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்த அன்றைய தினத்தில் அரவிந்தர் தனிமையை நாடித் தன் பெரும் பணியை மேற்கொண்டார். அதன் பின்னர் வருடத்திற்குச் சில குறிப்பிட்ட தினங்களே அவரை தரிசிக்கும் பாக்கியம் சாதகர்களுக்குக் கிடைத்தது.

Sri_aurobindo2

அன்னையின் பார்வை

புதுவை வந்த அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக மாறினார்.
அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டவுடன் அன்னை ஆசிரமத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு சாதகர்களுக்கு உற்ற வழிகாட்டியாகவும் ஆனார். அன்னையின் பல்வேறு அபூர்வ சித்திகளையும் சக்திகளையும் அரவிந்தர் எளிதில் உணர்ந்து கொண்டார்.அன்னையின் பார்வை சகல வல்லமை படைத்தது என்பதை அரவிந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
சாதாரணமாக உடல் அளவில் அன்னை பெற்றிருந்த சக்தியைக் கூட அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு முறை அன்னையின் பார்வை ஆற்றலைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டார்:-“சிறு வயதில் அன்னைக்கு இருளில் கூடப் பார்க்கும் சக்தி இருந்தது.எங்கும் பார்க்கும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.இப்போது கூட தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் அவரால் பார்க்க முடியும்.அவர் கண்களின் பார்வையை விட இந்தப் பார்வை இன்னும் துல்லியமாக இருக்கும். கண்களை மூடிக் கொண்டாலோ இது இன்னும் நன்கு வேலை செய்யும்.”

கூடவே வரும் துணை

அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்படவில்லை. அவரே ஒரு முறை,” முக்தியையும் பரிபூரணத்வத்தையும் எனக்கு மட்டும் பெற எண்ணி இருந்தேனென்றால் எனது யோகம் நெடும் காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும்.எனது சித்தியானது மற்றவர்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடி தான்.” என்று குறிப்பிட்டார்.ஆக சாதகர்களுக்கு அவர் எப்போதும் உற்ற துணையாக இருந்தார்; இருந்து வருகிறார்!

பிரபல எழுத்தாளரான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ கூட வருவது போன்றே உணர்ந்து வந்தார். அரவிந்தரின் போட்டோவைப் பார்த்த போது அது ‘கூட வரும் துணையைப்’ போல இருக்கவில்லை.ஆனால் அரவிந்தரை நேரில் தரிசித்த போது ‘கூட வரும் துணை’ அவரே என்பதை உணர்ந்து கொண்டார்.

நான் தருகிறேன் உத்தரவாதம்

பாரதம் சுதந்திரம் அடைவது பற்றிய பேச்சை சில சீடர்கள் எழுப்பிய போது அவர்களுள் ஒருவர் “அப்படி ஒரு சுதந்திரம் வர உத்தரவாதம் வேண்டுமே” என்றார். உடனே அரவிந்தர், “ அதற்கு நான் தருகிறேன் உத்தரவாதம்” என்று கூற அனைவரும் வியப்படைந்தனர். அவர் அளித்த உறுதியின் படியே பாரதம் சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அவரது பிறந்த நாள். எனது பிறந்த நாள் பரிசாக இரண்டு பகுதிகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அவர் பிரிவினை பற்றிக் கூறினார். ஆனால்,” பாரதப் பிரிவினை இயற்கையானதல்ல; அது போக வேண்டும். போய் விடும்” என்று தீர்க்கதரிசன வாக்கைக் கூறியுள்ளார்.

பாரத தேசம் மகோன்னதமான நிலையை எய்தும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள அரவிந்தர் அந்த உயரிய நிலை உலகம் முழுவதும் மேம்படுவதற்கான ஒரு ஆரம்பம் என்று அருளினார். அவரது அற்புதமான பூரண யோகம் இதை நோக்கமாகக் கொண்டே அனுஷ்டிக்கப்பட்டு பூரணாத்மாக்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பவானி பாரதி

பவானி பாரதி என்ற அற்புதமான சதகத்தை – நூறு பாடல்கள் கொண்ட சம்ஸ்கிருத நூலை அரவிந்தர் யாத்துள்ளார். உக்கிர மான காளியின் அற்புதவர்ணனைகளுடன் மயிர்க்கூச்சலெழுப்பும் சொற்களுடன் உள்ள ஸ்லோகங்களில் உத்திஷ்ட (எழுமின்)
ஜாக்ரத (விழிமின்) என்ற ஆவேசமூட்டும் சொற்களைக் காணலாம். அதில் இனி வேதகோஷம் முழங்கும் என்றும் துஷ்டன் அழிவான் என்றும் புகழோங்கிய நிலையை பாரதம் அடையும் என்றும் பாடியுள்ளார்.

அரவிந்தரின் பணி பாரதத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அதன் பண்டைய நாகரிகத்தை உணர்த்தி அதன் அடிப்படையில் புதிய யுகத்தை உலகத்தில் நிர்மாணிப்பதே!

அரவிந்த யோகம்

அரவிந்த யோகம் என்றால் என்ன என்பதை -கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார் அழகுற இப்படி விளக்குகிறார்:-
பக்தி யோகம், நிஷ்காம்ய கர்ம யோகம்,கடவுளைத் தியானத்தால் கலந்து நிற்கும் ஞான யோகம், எல்லோரையும் சமமாகக் காணும் சர்வாத்ம சித்தி எல்லாம் ஒருங்கே சேர்ந்தது ஶ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

அரவிந்த யோகம் உலகை உயர்த்துகிறது.அழகில் தெய்வத்தைக் காண்கிறது.அழகை ஆத்ம பரிபூரணத்திற்கு ஒரு வழியாக்குகிறது.வாழ்வைக் குறுக்கி ஒடுக்காமல் விரிந்து பொலியச் செய்கிறது.உலக வாழ்வையே தெய்வ சித்தி பெற ஓர் அகண்ட சமரஸ யோகமாக்குகிறது.

இதுகாறும் உலகில் பெரியார்கள் வகுத்த யோக சாதனங்களின் நன்மைகளை எல்லாம் தன்னகத்துக் கொண்டுள்ளது அரவிந்த யோகம்.அது ஒரு தோட்ட ரோஜாக்களை ஒரு சிறு அத்தர் புட்டியில் காண்பது போன்றது. அது மனிதனில் தெய்வத்தை விளக்குகிறது. வாழ்வை எல்லாம் யோகமாக்குகிறது.”

அரவிந்த யோகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதகர்கள் பெருமளவில் பெருகும் போது இந்தியா அமர நிலையை எய்தும் முறையை உலகிற்குக் கற்பிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

சின்ன உண்மை!
பவானி பாரதி மிகவும் சக்தி வாய்ந்த உக்ரமான சொற்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல். மாதிரிக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம்:-
இதயத்திற்கு அம்ருதத்வத்தை வழங்கும் வேத கோஷ முழக்கத்தை மீண்டும் நான் வனங்களில் கேட்கிறேன். ஆன்ம ஞானத்தை அடைந்த, பெருக்கெடுத்தோடும் மனித குல வெள்ளமானது ரிஷிகளின் குடில்களை நோக்கிப் பாய்கிறது.
பவானி பாரதி 93 ஆம் ஸ்லோகம்
Contact swami_48@yahoo.com

*****************