குட்டிக் கதைகள் : மௌனம் சர்வார்த்த சாதனம்! (Post No.9337)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9337

Date uploaded in London – –  4 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மௌனம் சர்வார்த்த சாதனம்!

ச.நாகராஜன்

சிருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீ   அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தனது அருளுரைகளிலும் பக்தர்களிடம் பேசும் போதும் அரிய பெரிய விஷயத்தை சிறிய குட்டிக் கதைகள் மூலமாக விளக்குவது வழக்கம்.

அவற்றில் சில இதோ:-

மௌனத்தின் மஹிமை

ஒரு சமயம் மூன்று பேர்கள் சொர்க்க ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் மூவரும் பாம்பு ஒன்று தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதைக் கண்டனர்.

மூவரில் ஒருவன், “ ஓ! பாம்பே! இந்தத் தவளையின் மீது உனக்கு இரக்கமே கிடையாதா? தயவுசெய்து இதை விட்டு விடு என்றான்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட நாகமானது, “ எனது இரையை விடச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது? நீ நரகத்திற்குப் போகக் கடவது என்று சாபமிட்டது.

அவன் ரதத்திலிருந்து விழுந்து, சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்திற்குப் போனான்.

அடுத்தவன், இதைக் கண்டு திடுக்கிட்டான். பாம்பு சொன்னதே சரி என்று நினைத்தான். அவன், பாம்பைப் பார்த்துநீ சொல்வது தான் சரி, தவளை உனக்கு இயல்பான உணவு தான். அதை நீ நிச்சயமாகப் பிடித்து உண்ணலாம் என்றான்.

இதைக் கேட்ட தவளை கோபம் கொண்டது. அவனைப் பார்த்து அது, “உனக்கு எவ்வளவு தைரியம், பாம்பு என்னைப் பிடித்து உண்ணலாம் என்கிறாய்! உனக்கு இரக்கமே கிடையாதா? நீ நரகத்திற்குச் சென்று சித்திரவதைப் படுவாய் என்றது.

அவன் உடனே சொர்க்க ரதத்திலிருந்து விழுந்து, நரகத்திற்கு அனுப்பப்பட்டான்.

மூன்றாவது ஆள் பேசாமல் இருந்தான். அவன் சொர்க்கத்தை அடைந்தான்.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? சில சமயங்களில் மௌனமாக இருப்பது, உண்மையைச் சொல்வதைக் காட்டிலும் சிறந்தது என்பதையே!

*

ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு இசைக் கலைஞர் அற்புதமாக ஹார்மோனியத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தார் இன்னொருவர். “அடடா, என்ன அற்புதமான இசை இதிலிருந்து வருகிறது என்று நினைத்தார் அவர். ஒருவேளை இந்த இசையானது ஹார்மோனியத்தின் உள்ளேயே இருக்குமோ என்று அவர் எண்ணினார்.

ஆர்வம் தலைக்கு ஏற, உடனே அந்த ஹார்மோனியத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்தார். இனிய ஓசை எந்த இடத்திலிருந்து வருகிறது என்று மூலை முடுக்கெல்லாம் தேடினார். எவ்வளவு முயன்று தேடிய போதிலும் அவர் கேட்ட இனிய இசை அந்த ஹார்மோனியத்தில் எங்கும் இல்லை.

“அடடா! என்ன ஆச்சரியம்! அந்த ஹார்மோனியம் அதற்குள் எங்குமே இல்லாத இனிய இசையை எழுப்புகிறதே என்று முடிவு கட்டினார்.

சில சமயங்களில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அக்கு வேறு, ஆணி வெறாக அலசிப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. இன்னும் பல விஷயங்களில் இந்த உத்தி உபயோகப்படாது. ஆத்மாவை ஆராய்வது என்பது இந்த இரண்டாவது முறையை ஒத்தது. உடலில் குடி கொண்டிருக்கும் ஆத்மாவை உய்த்துணர வேண்டும்.

*

தாராள மனமுள்ள ஒரு பெரிய மனிதர் நான்கு வேதங்களையும் அறிந்தவருக்கு ஐம்பதினாயிரம் பரிசு தருவதாக அறிவித்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒரு இளைஞன் அவரிடம் வந்து பரிசுத் தொகையைக் கேட்டான்.

“நீ நான்கு வேதங்களையும் நன்கு அறிந்திருக்கிறாயா? என்று கேட்டார் அவர்.

“வேதங்கள் நான்கு என்பது எனக்குத் தெரியும்என்று பதில் சொன்னான் அவன். “அது போதாதா, என்ன?என்றான் அவன்.

பெரியவர் நொந்து போனார். அவனைத் திருப்பி அனுப்பினா.

ஒரு பரிசைப் பெற சும்மா மேம்போக்கான அறிவு போதாது. மேலோட்டமான அல்லது குறுகிய அறிவு முக்திக்கான உண்மையைக் கொண்டு வராது. இரண்டில்லாத ஏகமான உயரிய ஒன்றை நேரடியாக உணர்வது என்பது அறியாமையை அகற்றி ,தோன்றி மறையும் இருப்பிலிருந்து  முக்தி பெறுவதாகும்

*

இப்படி ஏராளமான உவமைகளையும், குட்டிக் கதைகளையும் அவர் அருளியுள்ளார்.

Edifying Parables என்ற நூலில் இப்படிப்பட்ட 98 அரிய கதைகளைக் காணலாம்.

சிருங்கேரி ஆசார்யாளின் இந்த உரைகளை வெளியிட்டிருப்பது:

Sri Vidyatheertha Foundation, Chennai, 21 Venkatanrayanada Road, T.Nagar, Chennai 60017

***

tags – குட்டிக் கதைகள் , மௌனம் , 

சில கதைகள்-மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் (Post No.5487)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5487

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சில கதைகள்மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் பர்த்ருஹரி நீதி சதகம் 7,8,9,10

 

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

 

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

 

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

 

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

 

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

 

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

 

 

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

 

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

xxx

यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

 

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்;

அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்;

ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது;

காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

 

 

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

 

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது

xxx

 

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

 

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

 

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

xxx

 

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

 

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

 

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

 

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

 

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

 

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்

 

 

XXX

 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

 

கடன் கொடுத்த ஒருவன் கடனைத் திரும்பி வாங்குவதற்காக ஒரு கடன்காரனை தினமும் விரட்டிக் கொண்டிருந்தான். அவனும் கண்ணில் படாமல் முடிந்தவரை ஒளிந்து வந்தான். ஒருநாள் கடன்கொடுத்தவன், எதிர்பாராத நேரத்தில் கடன் வாங்கியவன் வீட்டை நோக்கி விரைந்து வந்தான். ஜன்னல் வழியாக இதைப் பார்த்துவிட்ட கடனாளி மகனை அழைத்து நான் குதிருக்குள் ஒளிந்து கொள்வேன். யாராவது வந்து உன் அப்பன் எங்கே என்று கேட்டால் சொல்லி விடாதே என்று அவசரம் அவசரமாக ஒளிந்து கொண்டான்.

 

கடன் கொடுத்தவன் கோபாவேசமாக உரத்த குரலில், எங்கே உன் அப்பா? என்று விரட்டியவுடன், எங்கப்பன் வீட்டில் இல்லை; கட்டாயமாக குதிருக்குள் ஒளிந்து கொள்ளவே இல்லை என்று உளறிக் கொட்டினான். இதனால்தான் முட்டாள்களுக்கு மவுனமே கடவுள் கொடுத்த பாதுகாப்புக் கேடயம் என்று ஆன்றோர் நவில்வர்.

xxx

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

 

 

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-