HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 75; இந்து மத கலைச்சொல் அகராதி- 75 (Post.15,928)

Picture– 63 Nayanmars

Written by London Swaminathan

Post No. 15,928

Date uploaded in London –29 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N words continued…………………..

நாயன்மார் / நாயனார்

சிவ பெருமானை வழிபட்ட 63  பெரியோர்கள் நாயன்மார் அல்லது நாயனார் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களில் மூவர் பெண்கள்; இவர்களுடைய கதைகளை சேக்கிழார் என்ற புலவர் அறிஞர் பெரியபுராணம் என்னும் நூலில் பாடியுள்ளார் ; இவர்களுடைய சிலைகளை பெரிய சிவன் கோவில்களின் பிரகாரத்தில் காணலாம். இந்த 63 பேரில் மாணிக்கவாசகர் இல்லாதது ஏன் என்று இன்று வரை விவாதிக்கப்பட்டுவருகிறது. 12 ஆழ்வார்களைப் போலவே இவர்களிலும் பல ஜாதிகளைச் சேர்ந்தோர் உள்ளனர் ; அப்பர் என்னும் திருநாவுக்கரசர் (600 CE) மற்றும் ஞான சம்பந்தர் காலம் நமக்குத் தெரிவதால் இவர்கள் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை பரப்பியது உறுதியாகிறது; இவர்களுடைய பாடல்களை பன்னிரு திருமுறைகளில் படிக்கலாம் . 63 பேரில் கண்ணப்ப நாயனார் என்ற வேடரின் கதை மிகவும் பிரபலமானது.

***

நாரதர்

தேவரிஷி என்று பெயர் பெற்றவர் நாரதர் ; பூலோகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் திரிலோக சஞ்சாரி என்று பெயர்பெற்றவர் ; கலகம் விளைவிப்பதில்மன்னன்; ஆயினும் நாரதர் கலகம்  நன்மையில் முடியும் என்ற வசனமும் பிரபலமானதே ; தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் முதல் தடவையாக இவர் பெயர் வருகிறது ; இவர் வீணை என்னும் இசைக்கருவியைக் கண்டுபிடித்தால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ இவரை நாரதர் வீணை என்று பாடியிருக்கிறார்; வீணையும் நாராயண நாராயண என்ற சொற்களும் இவரை அடையாளம் காட்டிவிடும்; பெரிய விஷ்ணு பக்தர் ; மஹாபாரதத்தில் வனவாசம் செய்த பாண்டவர்களை அவ்வப்போது கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியவர்;  துரியோதனனை அடக்கி வையுங்கள் என்று திருத ராஷ்டிரனுக்கும் அறிவுரை வழங்கினார். பிரம்மாவின் மனதில் உதித்த பத்து ரிஷிகளில் ஒருவர் ; பிரபஞ்த்தின் முதல் பிரம்மச்சாரி; இவர் போதித்த பாகவதத்தை வியாசர் அவருடைய பிள்ளையான சுகருக்குச் சொல்லிக்கொடுத்தார் ; நாரதர் பெயரில் பல நூல்கள் உள்ளன. இவர்கள் தேவரிஷி நாரதர் அல்ல ; நாட்டிய சாஸ்திரத்தைப் பரத முனி 6000 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பாடியபோது இவரும் இருந்ததாக நாட்டிய சாஸ்திரம் பகர்கிறது ;

நாரத பக்தி சூத்திரம்

பக்தியின் இலக்கணத்தை விளம்பும் நாரத பக்தி சூத்திரம் என்ற நூலை சம்ஸ்க்ருத மொழியில் இவர் இயற்றினார். பக்தி என்றால்  என்ன, பக்தரின் நடை உடை பாவனை எப்படி இருக்கும், பக்தியால்  விளையும் நன்மைகள் என்னென்ன என்ற 84 சூத்திரங்களை உடைய நூல் நாரத பக்தி சூத்திரம் ஆகும்.

***

நரகாசுரன்

கிருஷ்ண பரமாத்வாலால் வதைக்கப்பட்ட அசுரர்களில் ஒருவன் ; பிரக் ஜோதிஷம் என்னும் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்தவன் ; 16, 000 பெண்களை சிறை வைத்தவன்; இவன் இறந்த நாளை நரக சதுர்த்தி என்ற பெயரில் தீபாவளியாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பூமாதேவியின் புதல்வன் வராஹ அவதாரத்தில் தர்த்தி என்ற பெயர்; தன்னுடைய புதல்வனுக்கு நீண்ட ஆயுளும் அதிக சக்தியும் கொடுக்கவேண்டும் என்று விஷ்ணுவிடம் பூமாதேவி வேண்டினாள்; மேலும் எந்த ஆண் மகனும் இவனைக் கொல்லமுடியாத சக்தி தர வேண்டும் என்றாள்; விஷ்ணுவும் இவன் அடுத்த யுகம் வரை வாழ்வான் என்று சொல்லி வரமளித்தார் . அவனோ பாணாசுரனுடன் சேர்ந்து அதிகார மமதையில் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான் ; சொர்க்க லோகத்தையும் வசப்படுத்த எண்ணினான் ; விஷ்ணுவானவர் கிருஷ்ணனாக அவதரித்தபோது  அவருடைய எட்டு மனைவிகளில் ஒருவரான சத்யபாமா பூதேவியின் அவதாரம் ஆக வந்தாள்; கிருஷ்ணர் அவளையும் அழைத்துக்கொண்டு நரகாசுரனுடன் மோதியபோது பூ தேவி ( சத்யா பாமா) அம்பினாலேயே அவன் அழிந்தான் ; கிருஷ்ணன் 16,000 பெண்களையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்

***

நிகும்ப

பல ராக்ஷஸர்களுக்கு இந்தப் பெயர் உண்டு

மஹாபாரத நிகும்பன் சுந்த–உபசுந்த என்ற ராக்ஷஸர்களுக்கு தந்தை; அவ்விரு ராக்ஷஸர்களும் திலோத்தமை என்ற தேவ லோக அழகி விஷயத்தில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று அழிந்தனர்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் நிகும்பன், வஜ்ரமாலா- கும்பகர்ணன் தம்பதியருக்குப் பிறந்தவன் . அவனுடைய அண்ணன் பெயர் கும்பன்; ராமாயணத்தில் அனுமனால் கொல்லப்பட்டான்

ராவணனுடைய படைத்தளபதிகள் ஒருவனுக்கும் இதே பெயர் ; புராணங்களில் பேய் பிசாசுகளுடன் தொடர்புடையது நிகும்ப வனம்; ராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இலங்கையிலுள்ள நிகும்ப வன குகையில் எதிரிகளை ஒழிக்கும் ஆபிசார யாகத்தை நடத்த முனைந்தபோது அதை அறிந்த லெட்சுமணன் அங்கு சென்று யாகத்தை நடைபெறாதவாறு தடுத்தான்.

***

நிமி 

தத்தாத்ரேயரின் புதல்வன்; அவருடைய மகன் இறந்தவுடன், அவன் சாந்தி அடைவதற்கான பல சடங்குகளை நிமி செய்தார்  ; அவைதான் இப்போது செய்யப்படும் சிராத்தம் என்னும் சடங்குகளுக்கு அடைப்படையாக அமைந்தது .

***

நிவாதக்கவச்ச, நீவாடகவச்ச The nivatakavachas (Sanskrit: निवातकवच,)

நிவாதக்கவச்ச என்றால் ஆயுதம் துளைக்க முடியாத கவசங்களை அணிந்தவர்கள் என்று பொருள் ; இப்போது அரசியல் தலைவர்கள் அணிந்து செல்லும் புல்லெட் ப்ரூப் சட்டை போன்றது; மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நீவாடகவசர்கள் கடலுக்கு அடியில் வாழும் அசுர இனத்தவர், இவர்களை அர்ஜுனன் இந்திரன் உதவியுடன் போரிட்டு வென்றான்.

மஹாபாரதத் தகவல்

இதன் விவரமாவது; இவர்கள் தேவர்களுக்கு எதிரான தானவர்கள் ; தேவர்களின் நகரத்தை இவர்கள் ஆக்ரமித்தவுடன் சண்டை துவங்கியது; இவர்களின் எண்ணிக்கையோ முப்பது லட்சம்; அர்ஜுனன் விண்வெளியில் / சொர்க்க லோகத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தான்; பிரிவுபசாரத்தின் போது தானவர்களை அழித்து விட்டுச் சென்றால் அதுவே பெரிய நன்றி என்று இந்திரன் பகர்ந்தான் ; ஸ்பேஸ் ஷட்டில் என்னும் விண்கலத்தின் பைலட் மாதலியுடன் அர்ஜுனனை பூலோகத்துக்கு அனுப்பினான் ; அர்ஜுனன் விண்வெளியில் கிடைத்த நவீன (லேசர்) ஆயுதங்களை பயன்படுத்தி தானவர்களை அழித்தான்.  அர்ஜுனன் போர் முழக்கத்தை தேவ தத்தம் என்ற சங்கினை முழக்கித் துவங்கினான் ; தானவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிப் போனான் ; அப்போதுதான் ஸ்பேஸ் ஷட்டில் பைலட் மாதலி, ஏன் தெய்வீக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று வினவினான். அதன்பேரில் அர்ஜுனன் தேவலோக ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் .

ராமாயணத்தில் வரும் தகவலின் படி இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் ராவணனாலும் இந்திரஜித்தாலும் தோற்க முடியாவார்களாக விளங்கினார்கள் ; இறுதியில் பிரம்மா தலையிட்டு சமரசம் செய்து வைத்தார் ; இந்த தானவர்கள் தலைநகர் மணிமதீ ; இவர்கள் காலகேயர் என்னும் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர்.

****

நர நாராயண

PICTURE OF NARA NARAYANA

நர நாராயணர்கள் என்போர் விஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்றும் இரட்டையர் ரிஷிகள் என்றும் புராணங்கள் செப்புகின்றன;

இதன் கருத்து என்னவென்றால் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு மனித முயற்சியும் தெய்வீக அருளும் தேவை என்பதாகும்.

தட்சனின் மகளான மூர்த்திக்கும் தர்மத்துக்கும் பிறந்தவர்கள் இவர்கள் ;பத்ரிநாத்தில் நீண்ட காலம் தவம் இயற்றினர்

மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் என்னும் நரன் ஆகவும் கிருஷ்ணன் என்னும் நாராயணன் ஆகவும் தோன்றினார்கள்

சிற்பங்களில் நரனை இரு கைகள் உடையவராகவும் நாராயணனை நான்கு கைகள் உடையவராகவும் காட்டியுள்ளனர்.

***

நரசிம்ம/  நரசிம்மவாதாரம்

நரசிம்மவாதாரம் விஷ்ணுவின் நாலாவது அவதாரம் ஆகும்; விஷ்ணு பக்தனான பிரஹலாதன் என்னும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக சிங்க முகமும் மனித உடலும் எடுத்து அவதரித்தார் . ஹிரண்யகசிபுவை கடவுளாக வணங்க மறுத்த பிரஹலாதன் கடவுள் அணுவிலும் மேரு மலையிலும் தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்று சொன்னான் ; மன்னன் ஹிரண்யகசிபு அரண்மனைத் தூணை எட்டி உதைத்து  கடவுளைக் காட்டு என்றான் ; பிரஹலாதன் என்ற சிறுவன் பிரார்த்திக்கவே தூண் வெடித்துப் பிளந்து சிங்க முகப் பெருமாள் வெளியே வந்து, ஹிரண்ய காசிபுவின் உடலைக் கிழித்து எறிந்தார். இந்தச் சிற்பமும் ஓவியமும் நிறைய கோவில்களில் உள்ளன  ; பக்தர்கள் அதை வழிபட்டு வருகின்றனர் ; முதல் மூன்று அவதாரங்களுக்கு அத்தகைய சிறப்பு இல்லை .

***

நாளந்தா

தற்போதைய பீஹார் மாநிலம் முற்காலத்தில் பாரத்தின் வலிமை வாய்ந்த மகத சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது; அதிலிருந்த நாளந்தா  உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தது ; பாட்னா என்னும் பாடலிபுத்ரத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இடம் இப்போது யுனெஸ்கோ பாரம்பர்ய கேந்திரமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

தட்சசீலம், விக்ரமசீலம் முதலிய பல்கலைக்கழகங்களின் மாதிரியில் அமைக்கப்பட்ட இது புத்த விஹாரமாகவும் இருந்தது; சீனா, ஜப்பான் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் பயின்றனர்; வேதம் முதல் பெளத்தம் வரையான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட லைப்ரரியும் இருந்தது; விஷ்ணு பக்தர்களான குப்தர்கள் பேராதரவு நல்கினார்கள் ; ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை கொடிகட்டிப் பறந்தது .

துருக்கிய ஆப்கானிய தில்லி சுலதான் வம்ச மதவெறியன் பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji of the Delhi Sultanate  ) படையெடுத்து வந்து பல்கலைக்கழகத்தை இடித்து நூலகத்துக்கு தீ வைத்தான் ; அந்த நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்தனர் ; பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத நூல்களின் பெயர்களை இன்று உரைகளில் காண்கிறோம்; ஆனால் நூல்கள் கிடைக்கவில்லை ;எல்லாம் அங்கே சாம்பலாயின.

Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.

பக்தியார் கில்ஜி தீவைத்து அழித்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தர்ம சுவாமி என்னும் திபெத்திய புத்த பிட்சு அங்கே வந்து கண்ட காட்சியை நமக்கு எழுதிவைத்துள்ளார் . 90 வயத்துக்கிழவனார் ஒருவர் பாடம் கற்பிக்க 70 மாணவர்கள் இருந்தனர் என்றும் பலக்லைக்கழகம் பயங்கர சேதம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்   அதற்குப்பின்னர் அதை புனருத்தாரணம் செய்யும் முயற்சிகள் பலிக்க வில்லை; காரணம் மேலும் மேலும் முஸ்லீம்கள் படையெடுத்து அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்; இப்போது அதே பேரில் புதிய பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.

Tags- நாளந்தா, நரசிம்ம, நிவாதக்கவச்ச, நரகாசுர, நீவாடகவச்ச, நாயன்மார் , நிகும்ப,  HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 75, நாரதர், நரகாசுரன்

To be continued……………………

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,845)

Written by London Swaminathan

Post No. 15,845

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம்.. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

1) முதல்பிரிவு – கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்

மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – புண்டரீகவல்லி.

விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.

2) இரண்டாம் பிரிவு – திருமலை.

மூலவர் – திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – கல்யாண வெங்கடேச்வரர்.

தீர்த்தம் – சேஷாசல ஸ்வாமி புஷ்கரிணி, பாபவிநாச நீர்வீழ்ச்சி, ஆகாசகங்கை, கோனேரி தீர்த்தம். 14 தீர்த்தங்கள் – வைகுண்ட தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம். வருண தீர்த்தம், ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, ராமக்ருஷ்ண தீர்த்தம், தும்புரு தீர்த்தம், சேஷ தீர்த்தம், ஸுகஸந்தன தீர்த்தம், யுத்தகள தீர்த்தம், சீதம்ம தீர்த்தம் உள்ளன.

விமானம் – ஆநந்த நிலய விமானம்.

ப்ரத்யக்ஷம் – தொண்டைமான், ஆறுமுகன்.

ஆதீவராஹர் ஸந்நிதி – ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.

3) மூன்றாம் பிரிவு – திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)

மூலவர் தாயார் – அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் – பத்மஸரோவரம்.

விசேஷங்கள் – இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு.

திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான்.

திருப்பதி பாசுரங்கள்

மங்களாசாஸனம் –

பெரியாழ்வார் – 56, 104, 180, 184, 207, 247, 463

ஆண்டாள் – 504, 506, 535, 546, 577-586, 601, 604.

குலசேகராழ்வார் – 677-87.

திருமழிசையாழ்வார் – 799, 811, 832, 2415, 2420-29, 2471.

திருப்பாணாழ்வார் – 927, 929

திருமங்கையாழ்வார் – 1018-1057, 1275, 1312, 1371, 1388, 1404, 1518, 1572, 1640, 1660, 1811, 1836, 1849, 1946, 1978, 2001, 2038, 2059, 2060, 2067, 2673 (69) , 2674 (6, 124)

பொய்கையாழ்வார் – 2107, 2118-21, 2149, 2157, 2158, 2163, 2180

பூதத்தாழ்வார் – 2206, 2209, 2214, 2226, 2227, 2234, 2235, 2256.

பேயாழ்வார் – 2295, 2307, 2311, 2313, 2320, 2321, 2326, 2339, 2342-44, 2349-54, 2356, 2370

நம்மாழ்வார் – 2485, 2487, 2492, 2508, 2527, 2537, 2544, 2558, 2754, 2848, 2849, 2862, 2919-29, 2948, 2985, 3061, 3282-92, 3326-36, 3458, 3586, 3716, 3740

மொத்தம் – 202 பாசுரங்கள்.

சென்னை – பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி.. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன.

சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும்  காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.

மலை அடிவாரத்திலிருந்து, மலை உச்சியிலுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.

***

திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா  விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.

உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி,  முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!

பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள்  உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.

பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.

மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.

இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.

பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா  மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.

சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.

தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.

இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி,  சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள். 

தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.

 இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று. 

****

 திருப்பதி லட்டு 

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். 

****

நான்  24 AUGUST 2019-ல் எழுதிய கட்டுரையிலிருந்து  முக்கியத் தகவல்கள்

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.

2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்

பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.

சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.

kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi

dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti

இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.

பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!

திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.

ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+  பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.

1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி  மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.

1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.

பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.

51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.

பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.

ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-

சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,

கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,

அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்

சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்

ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்

இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்

 பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.

*****

திருப்பதி மலைமேல் முருகன் !

(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை  கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

1.            திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் புதிர்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

****

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்

R.Nanjappa

  /  August 24, 2019

Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?

If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.

On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!

When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.

So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.

****

திருப்பதி கோவில் அறிவிப்பு

திருமலையில் பிறந்தார் அனுமன்!

’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

Post No. 12,291

Date uploaded in London –   18 July , 2023                 

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

****

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

****

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

****

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

 ****

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

****

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

****

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

****

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

****

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

****

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

****

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

****

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

****

3. குலசேகர ஆழ்வார்

****

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

****

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।

उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।

uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

****

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

****

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

****

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

****

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

****

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

****

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்.

****

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

****

தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு……………………………

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.

சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.

****

பாசுரங்கள்

3101.  

சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*

என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,*

என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே.

3177.  

மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,*

வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,*

காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,*

வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

3398.  

மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,*

நீலக் கருநிற*  மேக நியாயற்கு,*

கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*

என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

3399.  

சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,*

செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,*

கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என்

மங்கை இழந்தது*  மாமை நிறமே.

56.  

சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*

எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*

கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா     

104.  

என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*

முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய*

மின்னு முடியனே!  அச்சோ அச்சோ*

 வேங்கடவாணனே! அச்சோ அச்சோ 

180.  

தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து*

மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு*

என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*

மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!

வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

504.  

தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*

உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்*

வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)   

020.  

நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்*

என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்*

கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*

சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!  

1021.  

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்*

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்*

தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!  

1023.  

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து*

பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*

ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு*

திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

–SUBHAM–

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவேங்கடம் ,திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம், திருச்சானூர் திருப்பதி அதிசயங்கள் .

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது (Post.15,632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,632

Date uploaded in London – 19  April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (53) மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

‘மால்யவான் முதலியவர்களுடைய உற்பத்தி ‘ என்ற உத்தரகாண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கத்தில் மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்த செய்தியைக் காண்கிறோம்.

விசுவாவஸு என்ற ராக்ஷஸனின் இரண்டாவது புதல்வியான தேவவதீ என்பவளை ஸுகேசன் என்ற ராக்ஷஸன் மணந்தான்.

அந்த தம்பதியர்க்கு மால்யவந்தன், சுமாலி, மாலி ஆகிய குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் திரேதாக்கினிகளான கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி போல தேஜோவான்களாக மிளிர்ந்தார்கள். 

தங்கள் தந்தை பரமேஸ்வரரை தியானித்து புரிந்த தவத்தால் வரபாக்கியம் பெற்றதை அறிந்த அவர்கள், அவரைப் போலவே தாங்களும் தவம் செய்ய மன உறுதி கொண்டு மேருமலைக்கு வந்தனர். கடுமையான தவத்தைப் புரிந்தனர்.

இதனால் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, “வரமளிக்கிறவனாகத் தோன்றி இருக்கின்றேன்” என்று கூறினார்.

பிரம்மாவிடம் சுகேசனது புதல்வர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்க பிரம்மா அதைத் தந்தருளினார்.

அதை விளக்கும் ஸ்லோகங்கள் இவை:

ப்ரஹ்மாணம் வரதம் ஞாத்வா சேந்த்ரைர்தேவகணைர்வ்ருதம்|             ஊசு: ப்ராஞ்ஜல்ய: சர்வே வேபமானா இவ த்ருமா: ||

தபஸாராதிதோ தேவ யதி நோ திஷஸே வரம் |                    அஞேயா: ஷத்ரு ஹந்தாரஸ்ததைவ சிரஜீவின: ||

ப்ரபவிஷ்ணவோ பவாமேதி பரஸ்பரமனுவ்ரதா: ||

ஏவம் பவிஷ்யதீத்யுக்த்வா சுகேசதனயான்விபு: |                           ஸ யயௌ ப்ரஹ்மலோகாய ப்ரஹ்மா ப்ராஹ்மணவத்ஸல: ||

உத்தரகாண்டம் , ஐந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 12,13,14

சேந்த்ரைர்: – இந்திரன் உட்பட்ட                                        தேவ கணௌ – தேவ கணங்களோடு                                    தபஸா – தவத்தால்                                                 ஆராதித: – திருப்தி அடைந்தவராய்                                        ந: – எங்களுக்கு                                                        வரம் – வரத்தை                                                            திஷஸே – அளிக்கப்போகிறீர்                                               யதி – என்றால்                                                        அஞேயா – எவராலும் வெல்வதற்கு அரியவர்களாகவும்                      ததா – அப்படியே                                               சத்ருஹந்தார: – எதிரிகளை வெல்ல வல்லவர்களாகவும்                  பரஸ்பரம் – ஒருவருக்கொருவர்                                       அநுவ்ரதா: – அன்பு மாறாதவர்களாகவும்                                    ப்ரபவிக்ரம: – மிகுந்த பராக்ரமம் உடையவர்களாகவும்                சிரஞ்சீவின: ஏவ – சிரஞ்சீவிகளாகவும்                                        பவாம: – விளங்கவேண்டும்                                              இதி – என்று                                                                  ஊசு: – வேண்டிக் கொண்டார்கள்                                        ப்ராஹ்மண வத்ஸல: – பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவர்களிடத்தில் வாத்ஸல்யம் உடையவரும்                                             விபு: – சாசுவதருமான                                                    ச: – அந்த                                                             ப்ரஹ்மா  – பிரம்மா                                                 சுகேசதன்யாத் – சுகேசனது புதல்வர்களுக்கு                            ஏவம் பவிஷ்யாமி – அப்படியே ஆகட்டும்                                 இதி – என்று பதில் கூறி                                                        ப்ரஹ்மலோகாய – பிரம்மலோகத்திற்கு                               யயௌ – சென்று சேர்ந்தார்

இப்படி பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றவர்கள் பயமே இல்லாமல் தேவர்களையும் அசுரர்களையும் மிகுந்த உபத்திரவத்திற்குள்ளாக்கினர்.

பிரம்மாவிடமிருந்து கேட்டுப் பெற்ற வரமாக இந்த நிகழ்வு வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

**

ராமாயணத்தில் வரங்கள் (48) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! – 2 (Post.15,591)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,591

Date uploaded in London – 8 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ராமாயணத்தில் வரங்கள் (48) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! – 2

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘இந்திரனது தேரிலேறிக்கொண்டு போர் புரிவது’ என்ற நூற்றுமூன்றாவது அத்தியாயத்தில் ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் உள்ளிட்டவற்றைத் தந்து உதவியது பற்றியது பற்றிப் பார்த்தோம்.

இந்த விஷயம் மேலும் பல அத்தியாயங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

சீதா தேவியுடன் அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்கு ராமர் செல்கிறார்.

பரத்வாஜ மஹரிஷி ஶ்ரீ ராமர் வரம் பெற்றதை தனது தவத்தால் அறிந்ததாகக் கூறுகிறார்:-

யதா விநிஹத: சங்க்யே ராவணோ தேவகண்டக: |                சமாகமஸ்ச த்ரிதஷைர்யயா தத்தஸ்ச தே வர: ||

  யுத்தகாண்டம் அத்தியாயம் 127 ஸ்லோக எண் 26

யதா – எப்படி                                                           விநிஹத: – கொல்லப்பட்டானோ, அதுவும்                         த்ரிதஷை: – தேவர்களோடு                                           சமாகம: ச – கூடியதும்                                                தே – உனக்கு                                                         யயா – எப்படியாய்                                                    வர: – வரமானது                                                        தத்த ச – கொடுக்கப்பட்டதோ அதுவும் ஆகிய                           ஏதத் – இது                                                           சர்வம் – யாவும்                                                   தவஸா – தவத்தால்                                                   மம – எனக்கு                                                 விதிதம் – அறியப் பெற்றது

அடுத்து 128 அத்தியாயமான பரதரிடம் ஹனுமாரை அனுப்புவது என்ற அத்தியாயத்திலும் இந்த வரம் பற்றிச் சொல்லப்படுகிறது.

ராமர் தான் சீதையுடன் அயோத்தி வருவதை பரதனுக்குச் சென்று சொல்லுமாறு அனுமனிடம் கூறுகிறார்.  அதில் சுக்ரீவனுடனான நட்பு, வாலியின் வதம், சமுத்திரத்தைத் தாண்டுதல், அணை கட்டல் உள்ளிட்ட செய்திகளோடு தேவேந்திரன் வரம் தந்த விஷயத்தையும் குறிப்பிட்டு இவை அனைத்தையும் பரதனிடம் கூறுமாறு அனுமனிடம் கூறுகிறார்.

வரதான மஹேந்த்ரஸ்ச ப்ரஹ்மணா வருணேன ச |       மஹாதேவப்ரசாதாஸ்ச பின்னா மம சமாகம்ய ||

தேவேந்திரனாலும் பிரம்மதேவராலும் வருணதேவராலும் வரதானத்தையும் சிவபெருமானது அனுக்ரஹத்தால் தந்தையோடு சமாகமத்தையும் சொல் என்று இப்படிக் கூறுகிறார்.

அதன்படியே ஹனுமார் பரதனிடம் அனைத்து விவரங்களையும் கூறுகிறார்.

129வது அத்தியாயம் 43 மற்றும் 44வது ஸ்லோகங்களில் இந்த விவரம் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.

அந்த சத்ரு சம்ஹாரகாராகிய ஶ்ரீமானாரும் ஶ்ரீ ராமர் இந்திரரோடும் யமதர்மதேவரோடும் வருணதேவரோசும் அவ்வண்ணமே சிவபெருமானோடும் பிரம்மதேவரோடும் அவ்வாறே தசரதரோடும் ஒன்று சேர்ந்து அவர்களால் எழுந்தருளிய மஹரிஷிகளாலும் தேவரிஷிகளாலும் வரங்களைக் கொடுக்கப்பெற்று மனோரதங்களைப் பெற்றிருக்கின்றார்.

ச சங்கரேன சமாகம்ய யமேன வருணேன ச |   மஹேஸ்வர்ஸ்வயம்பூம்யாம் ததா தசரதேன ச ||

தைஸ்ச தத்தவர: ஶ்ரீமாந்ருபிபிஸ்ச சமாகதை: |                  சுரர்பிபிஸ்ச காகுத்சதோ வராம்லேபே பரந்தப: ||

அடுத்ததாக இதே விவரம் பால காண்டத்தில் முதல் அத்தியாயத்திலும் இப்படி குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

தேவர்களிடமிருந்து வரங்களைப் பெற்று யுத்தத்தில் உயிரிழந்த வானரவீரர்களை உயிர்ப்பித்து  தனது அனைத்து சகாக்களுடனும் அவர் புஷ்பகவிமானத்தில் ஏறி அயோத்தியா வந்தடைந்தார்.

ஆக பல தேவர்களிடம் ஶ்ரீ ராமர் வரம் பெற்ற செய்தியை வால்மீகி முனிவர் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47 (Post No.15,580)

Written by London Swaminathan

Post No. 15,580

Date uploaded in London – 5 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday; here is the Tamil version:

கனகாபிஷேகம்

கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.

பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.

காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.

சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த  சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.

அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.

***

கேனோபநிஷத்

கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர  உபநிஷத் என்றும் இதற்குப் பெயர்.  ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.

இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.

கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது.  ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.

***

கேது கிரஹம்

உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .

புனிதத் தலங்கள்: கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம். ராகு-கேது தோஷ நிவர்த்திக்காக, காளஹஸ்தி போன்ற தலங்களுக்கும் செல்லலாம்.

Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.

சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை  ஒன்று வெட்டும் இடம் இது .

கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.

கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்

ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .

பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.

***

கீசகன் 

பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.

விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்

***

கோலாட்டம்  / கும்மி

தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து  பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.

குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல்  என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.

***

கோவலன் / கண்ணகி

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின்  புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக  மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன்,  கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர்  அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .

***

கிருஷ்ண / கேசவ

கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள்  .

கேசவ  என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .

***

க்ரியா  யோகா

கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு  தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.

பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை  மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம்  போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.

***

க்ருபாச்சார்ய  – க்ருபி  

இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர்  என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .

****

கிரௌஞ்ச த்வீபம்

இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு  கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச   த்வீபம்  என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார். 

To be continued……………..

Tags- கிரௌஞ்ச த்வீபம், க்ருபாச்சார்ய ,க்ருபி, கிருஷ்ண, கேசவ

க்ரியா யோகா , கனகாபிஷேகம் , கண்ணகி, கேனோபநிஷத், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47, கீசகன், கோலாட்டம் கும்மி

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 (Post No.15,559)

Picture of Kushana Coin

Written by London Swaminathan

Post No. 15,559

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Words beginning with letter KA continues…………………………….

English version posted yesterday; Tamil version is posted here today.

***

கனிஷ்கர் ( 127–150 CE)

குஷான மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் ; மாத்திரை ஆசியாவின் சில பகுதிகளையும் மதுரா வரையுள்ள பெரும்பகுதியை ஆண்டவர் . தலைநகர் புருஷபுரம் ; இதன் தற்போதைய பெயர்  பெஷாவர் (பாகிஸ்தான் நகரம் ).சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் ‘கியூசுவான்ங் ‘ என்ற இனமே குஷான ர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது.

கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் உடை  அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி நிற்கிறார் . பிற்காலத்தில் வெளியிட்ட காசுகளில்

சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அபொறித்தார்.  பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.

King Kanishka 

***

கண்வர் /மகரிஷி

காளிதாசனின் உலகப்புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் வரும் கண்வ மகரிஷியைத் தவிர யஜுர் வேதத்திலும் கண்வர் பெயர் வருகிறது .

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர்..

அவர் மேதாதிதி ரிஷியின் மகன் சுக்ல யஜுர்வேதத்தில் கண்வ சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்களும் 2,086  மந்திரங்களும் உள்ளன ; இருவரும் வேறு ரிஷிகள் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.

***

கார்த்திகேயன்


முருகனின் பெயர்களில் ஒன்று. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தையை ஆறு கிருத்திகா பெண்கள் வளர்த்ததால் இந்த நாமம். தாரகாசுரனை வதம் செய்ய எடுத்த அவதாரம் . சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் தோற்றம் இது.

கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இவர்கள் கார்த்திகை நக்ஷத்திரங்களாக வானில் ஜொலிப்பதை இப்போதும் காணலாம். மேலும் கார்த்திகை பெளர்ணமியன்று வீடெங்கும், வீதியெங்கும் விளக்கேற்றி இவர்களையும் முருகனையும் நாம் இன்றும் நினைவு கூறுகிறோம்.

***

கார்த்தவீர்யன் 

புகழ்பெற்ற புராண கால மன்னன் ; யாரேனும் தவறு செய்ய நினைத்தாலே அவர்  முன் இவன் தோன்றுவான் என்பதால் ஆயிரம் கை படைத்தவன் என்று பெயர்; இவன் பெயரும் அர்ஜுனன் .

கார்த்தவீர்யார்ஜுனன், ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன்; , விஷ்ணுவின் அம்சம், தத்தாத்ரேயரின் சீடர்   நர்மதை நதிக்கரையிலுள்ள மகிஷ் மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர், தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கைகள் மற்றும் ஒப்பிட முடியாத வலிமையைப் பெற்றவர். ராவணனைத் தோற்கடித்த்து சிறைப்பிடித்த  பின்னர் அவன் இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிவிட்டான்    .

இவனது ஆட்சியில் மக்கள் பாவம் செய்ய பயந்தனர்; தவறு நடந்தால் இவனது கைகள் அதைத் தடுத்து நிறுத்தின. ஒரு சமயம்

வேட்டையாடித் திரும்பும்போது, பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் காமதேனுவை அபகரிக்க முயன்று, இறுதியில் பரசுராமரால் கொ ல்லப்பட்டார்.

***

கபில முனிவர்

இந்து மதத்திலுள்ள ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று ஸாங்க்யம்; கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை (Sankhya Philosophy) உருவாக்கிய வேதகால மகரிஷி ஆவார். இவர் கர்தம முனிவர் – தேவஹூதி தம்பதியரின் மகன்;பகவத் கீதையில் கிருஷ்ணர் முனிவர்களில் தான்  கபில முனிவராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மகாவிஷ்ணு அவதாரம்: இவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மன்னன் சகரனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த யாகக் குதிரையைத் திருடியதாக நினைத்து அவரை அவமதித்ததால், கபிலர் அவர்களைத் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். அங்கே கங்கை பாய்ந்தது ;இதனால் கடலுக்கு சாகரம் என்று பெயர்

கங்கை பூமிக்கு வருதல்: கபிலரின் சாபத்தால் இறந்த சகர புதல்வர்களுக்கு முக்தி அளிக்கவே பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.

***

சங்கப் புலவர் கபிலர்

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.

குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்ச்சியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடையே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்;  யானே

தந்தை தோழன் இவர் என் மகளிர்;

அந்தணன்புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

 1

“செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர்.. அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் கபிலன்.

****

காசி/  வாரணாசி

இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ; காசி விசுவநாதர் கோவிலைத் தரிசிப்பதையும் அங்குள்ள கங்கை நதியில் குளிப்பதையும் இந்துக்கள் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளனர் .காசியில் இறந்தால் மோ ட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அழியாத நம்பிக்கை

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும்.

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் . அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.  காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.

வருணஅஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழியையே பேசினர்.

***

கடோபநிஷத்

கடோபநிஷத் என்பது யஜுர் வேதத்தின் காடக சாகையைச் சேர்ந்த  முக்கிய உபநிடதமாகும். நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையிலான உரையாடல் மூலம் ஆத்மா, மரணம் மற்றும் அழியாமை பற்றிய ஆழ்ந்த ஞானத்தை இது போதிக்கிறது. நசிகேதஸ் என்ற சிறுவன், எமனிடம் மரணத்திற்குப் பிந்தைய ரகசியத்தைக் கேட்டுப் பெறுகிறான்.

பொருள்: இது ஆத்மா அழியாதது, உடல் மட்டுமே இறக்கும், ஆத்மா மீண்டும் பிறக்கும் அல்லது மோட்சம் அடையும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான, உபநிடதம் இது.  ஆதிசங்கரரின் உரை மூலம் இது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

****

கௌரவர்கள்

குரு  KURU வம்சத்தில் தோன்றிய அனைவரும் கெளரவர்கள் என்ற போதிலும் பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூற்றுவர் மட்டும்   கௌரவர்கள் என்ற பெயரைப் பெற்றனர் துரியோதனன் இவர்களில் மூத்தவன்; போட்டி, பொறாமையால் மஹாபாரத யுத்தம் ஏற்பட்டு அதில் கௌரவர்கள் நூற்றுவர் இறந்தனர் . இவர்களுக்குப் போட்டியாக இருந்த பாண்டவர்கள் ஐவரும் பாண்டு என்ற மகாராஜாவின் புதல்வர்கள்; அவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரர் என்னும் தர்மபுத்திரர் ஆவார் .

***

கெளசல்யா

 ராமாயணத்தில்,கெளசல்யா என்ற ராணி அயோத்தி மன்னன் தசரதனின் மூத்த மனைவி ஆவார்  ; ஸ்ரீ ராமரின் தாயார் ஆவார். அவர் தர்மம், பொறுமை மற்றும் தூய்மையான அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார் .

 கெளசல்யா கோசல நாட்டின் இளவரசி, கோசல மன்னன் பானுமந்தனின் மகள். தசரதனுக்கும் கெளசல்யாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, அதன் பலனாக ராமரை மகனாகப் பெற்றார் . ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபோது, அதைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.ராமாயணத்தில் பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த தாய்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறார்.

‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகம் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாகத் திகழ்கிறது ; லட்சக்  கணக்கான வீடுகளில் தினமும் காலையில் ஒலிக்கிறது.

விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அவர் சொன்ன வாசகம் இது “கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல்ஒளி வந்துவிட்டது ! புலி போல் வீரம் படைத்த வீரர்களே எழுந்திருங்கள்! இன்றைய பணியைச் செய்வோம் வாரீர்” .

****

கௌசிக முனிவர் 

இருவர் பெயரில் நாம் இவர் பற்றி அறியலாம் ; ஒருவர் உலகப் புகழ் பெற்ற விசுவாமித்திரர் ; இன்னொருவர் மஹாபாரதக் கதையில் வரும் ஒரு முனிவர் .கௌசிக என்ற சொல்லுக்கு ஆந்தை என்றும் பட்டுநூலில் உருவானவர் என்ற பொருளும் இருக்கிறது . குஷிகா வம்சத்தில் தோன்றிய விசுவாமித்திரர் ரிக் வேதத்தில் ஒரு மண்டலத்தின் ரிஷி; சங்க இலக்கியத்தில் கெளசிக கோத்திர புலவர்களின் பெயர்களையும் காண்கிறோம்.

வசிஷ்ட முனிவருடன் பல முறை மோதி, பின்னர் மன்னர் பதவியை விட்டு, தவம் பல செய்து,  அவர் வாயால் பிரம்ம ரிஷி (பிராமணர்) என்ற பட்டத்தினைப் பெற்றார் .

கெளசிக முனிவர் கதை

மஹாபாரதத்தில் வரும் கெளசிக முனிவர் கதை, கோபம் மற்றும் அகந்தையைத் துறந்து, உண்மையான ஞானம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு கதை.

கெளசிகர் என்ற முனிவர் கடுமையான தவம் செய்து, கண்களை மூடி தியானிக்கும்போது, அவர் மீது பறவை ஒன்று எச்சமிட்டது. இதனால் கோபமடைந்த கெளசிகர், தன் தபோ பலத்தால்  அந்தப் பறவையை எரித்தார்.

தான் செய்த செயலை நினைத்து, “நான் எப்பேர்ப்பட்ட தவவலிமை கொண்டவன்” என்ற அகந்தையுடன், பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டுப் பெண், கணவனுக்குப் பணிவிடை செய்வதில் தாமதமானதால், பிக்ஷை கொடுக்க தாமதமானது.

இதனால் கோபமடைந்த கெளசிகர் முன்னர் பறவையை எரித்த பார்வையுடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தார் , அந்தப் பெண், “நான் அந்தப் பறவை இல்லை, எரிப்பதற்கு” என்று கூறி, கோபத்தைத் துறந்து பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கினார்.

தன் தவறை உணர்ந்த கெளசிகர், உண்மையான தர்மத்தையும், ஞானத்தையும் அந்தப் பெண் மூலமாகவும், பின்னர்  தர்மவியாதன் (கசாப்புக் கடைக்காரன்) மூலமாகவும் கற்று, கோபத்தை வென்றார்.

TO BE CONTINUED…………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 , கனிஷ்கர், கெளசிகர், கபிலர், கடோபநிஷத், கெளசல்யா கண்வர், மகரிஷி

21அரக்கர்கள் ‘காலி’! ஆழ்வார் பாசுரங்களில் கிருஷ்ண லீலைகள்! (Post.15,523)

Krishna fighting with wrestlers 

Written by London Swaminathan

Post No. 15,523

Date uploaded in London – 22 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kamsa killing Male children; Yoga Maya disapperas.

Bhutaki lst her life

Krishna fighting wit wrestlers 

Butter Thief

என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )

என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )

மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )

மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )

வெள்ளைக் காரன் – பலராமன்

கருப்பன் – கிருஷ்ணன்

பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்

கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்

***

ஆழ்வார் பாசுரங்களில் கண்ணனின் லீலைகள் (Krishna Leelas) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாகப் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளையும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோபியர் பாவத்திலும் பாடியுள்ளனர். வெண்ணெய் திருடுதல், கோவர்த்தன கிரியைத் தூக்குதல், கம்ச வதம் போன்ற கிருஷ்ண லீலைகள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளன.

ஆழ்வார் பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கிருஷ்ண லீலைகள்:

குழல் ஊதும் கண்ணன்: கண்ணனின் குழலிசையைக் கேட்டு ஆயர்பாடிப் பெண்கள் மயங்குவதைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

வெண்ணெய் திருடுதல்: தமிழ் வேதம் குறிப்பிடுவது போல, வீடுகளில் வெண்ணெய் உண்டது மற்றும் கோபியர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடிய லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

கோவர்த்தன கிரியைத் தூக்குதல்: இந்திரனின் கோபத்திலிருந்து ஆயர்களைக் காக்கக் கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய நிகழ்வு.

அசுர வதம்: கம்சனால் அனுப்பப்பட்ட கேசி, அரிஷ்டாசுரன் போன்ற அசுரர்களைக் கொன்ற லீலைகளைப் பொய்கையாழ்வார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

நப்பின்னை மணாளன்: கண்ணன் நப்பின்னையை மணந்த லீலையும் பாசுரங்களில் சிறப்பிக்கப்படுகிறது.

***

பாடிய முக்கிய ஆழ்வார்கள்:

பெரியாழ்வார்: கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளைத் தன் பிள்ளையாகப் பாவித்து அனுபவித்துள்ளார் (பெரியாழ்வார் திருமொழி).

நம்மாழ்வார் & திருமங்கை ஆழ்வார்: கோபிகை பாவனையில் கண்ணனோடு ஊடல் மற்றும் பிரேமையை அனுபவித்துப் பாடியுள்ளனர்.

குலசேகராழ்வார்: கண்ணனின் லீலைகளைப் பாடியுள்ளார்.

ஆழ்வார்கள் கண்ணனின் லீலைகளை வெறும் கதைகளாகப் பார்க்காமல், அவனது கருணையின் வெளிப்பாடாகவும், பக்தியின் உச்சமாகவும் பாசுரங்களில் அனுபவித்துள்ளனர்.

***

கிருஷ்ணன் கொன்ற அசுரர்கள்

கிருஷ்ணர் அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் கம்சன் அனுப்பிய பல அசுரர்களைத் தனது சிறு வயதிலேயே வதம் செய்தார். பூதனை, சகடசுரன், திருணாவர்த்தன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், கேசி, வியோமாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோர் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள் ஆவர்.

கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள்:

பூதனை: கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுக்க வந்த அரக்கி (இவர் அழிவின் அடையாளமாக கருதப்படுகிறார்) Wikipedia.

சகடசுரன்: கம்சனின் கட்டளைப்படி வண்டி வடிவில் வந்து கிருஷ்ணனை நசுக்க முயன்றவன்.

திருணாவர்த்தன்: சூறாவளி வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற அசுரன்.

பகாசுரன்: கொக்கு வடிவில் வந்து கிருஷ்ணனை விழுங்க முயன்ற அசுரன் Wikipedia.

அகாசுரன்: மலைப்பாம்பு வடிவில் வந்து தோழர்களை விழுங்கியவன் Wikipedia.

தேனுகாசுரன்: கழுதை வடிவில் வந்து தாலவனத்தில் இருந்த அசுரன்.

அரிஷ்டாசுரன்: காளை வடிவில் வந்து கம்சனால் அனுப்பப்பட்டவன்.

கேசி: குதிரை வடிவில் வந்து வந்த அசுரன்.

வியோமாசுரன்: ஆகாயத்தில் மறைந்து அசுர சக்தி கொண்டவன்.

நரகாசுரன்: சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன் (சுதர்சன சக்கரத்தால் இரு துண்டாக்கப்பட்டது)

கம்சன்: கிருஷ்ணனின் தாய்மாமன், இவன் மதுராவில் கொல்லப்பட்டான்.

இவர்கள் தவிர, கம்சன் அனுப்பிய பல அசுரர்களை கிருஷ்ணர் மற்றும் பலராமர் வதம் செய்தனர்

****

Krishna killing Bakasura- Crane Demon

Krishna killing Agasura- Python Demon

Krishna killing Dhenukasura a- Donkey

Demon

Krishna dancing on Kaliya Snake

பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து

ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு

(செங்கீரைப்பருவம்)

பாடல் 4

வானவர் தாம்மகிழ வன் சகட முருள

வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*

கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்

கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்

என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*

ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பொருள்:

விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு (1)சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் (2)நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த (3)வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! (4)தேனுகாசுரன்நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட (5)முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட (6)நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

***

நரகாசுரனிடமிருந்து 16,000 தேவியரை மீட்ட செய்தி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.–பெரியாழ்வார் திருமொழி 4-1

அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன்.  கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான்  அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.  16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.  தேவர்கள் எல்லோரும்  கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

***

கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தா ன். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ் ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான் கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி விளா மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.

இன்னொரு முறை, ஒரு பெரிய கொக்கின்  வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, (7)அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பாம்பின் வடிவெடுத்து வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கிருஷ்ணரும் அவனது சகாக்களும் பாம்பின் வாயில் புகுந்தனர் ; அதுவும் வாயை மூடியது ;கிருஷ்ணர் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப் பாம்பு வயிறு கிழிந்து இறந்தது..

Krishna lifting Govardhana Hill.

Krishna killing Horse and Elephant

குன்றினால் குடை கவித்ததும் கோலக்

      குரவை கோத்ததுவும் குடமாட்டும்

கன்றினால் விளவு எறிந்ததும் காலால்

      காளியன் தலை மிதித்ததும் முதலா

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்

      அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர

ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்

      காணுமாறு இனி உண்டெனில் அருளே.   

இவ்வடிகள் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் (7-ஆம் திருமொழி) இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளைப் பாடும் இப்பாசுரம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததையும், ஆயர்களுடன் குரவைக் கூத்து ஆடியதையும், கன்றைக் கொண்டு விளாமரத்தை வீழ்த்தியதையும், காளியன் தலையில் நடனமாடியதையும் குறிப்பிடுகிறது

ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அந்த ஆற்றில் (8) காளிங்கன் என்ற நாகம் வசித்தது அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது.  கிருஷ்ணர் தண்ணீரில் குதித்து அவனது தலையில் ஏறி நர்த்த னமாடினார். வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர்  ஓடி வந்தனர். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அந்த நதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றான் .

(9)தேனுகாசுரன் கதை

தாளவனம் என்ற காட்டில் ஈச்ச மரங்கள் (பனை மரங்கள்) மிகுதியாக இருந்தன, ஆனால் தேனுகாசுரன் என்னும் கழுதை வடிவிலான அசுரன் தன் அசுர நண்பர்களுடன் அக்காட்டை ஆக்கிரமித்து, அதன் பழங்களை யாரும் உண்ணாதபடி தடுத்து வந்தான் கிருஷ்ண பலராமரின் வருகை: கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களுடன் அந்தக் காட்டிற்குச் சென்று, தேனுகாசுரனின் கழுதை வடிவ அரக்கர்களைக் கொன்று, பனைப் பழங்களை உண்டு மகிழ்ந்தனர்.

***

Peethambara Krishna, Neelaambhara Balarama 

‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.’

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்- 8

மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணன்

” மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்”

கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.(10)சாணூரன், (11)சலன் முதலிய மல்லர்களை அழைத்து கண்ணன்,  பலராமன் அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். அவர்களை கண்ணனும் பலராமனும் கொன்றனர்.

ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று*  அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,*

ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி*  அன்று குன்றம் ஒன்றினால்,*

ஆனைகாத்து மைஅரிக்கண்*  மாதரார் திறத்து, முன்*

ஆனைஅன்று சென்றுஅடர்த்த*  மாயம் என்ன மாயமே? 

“ஆனை காத்து ஓர் ஆனை கொன்று” என்பது திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தின் 40-வது பாசுர அடி (பாடல் 791). இது கஜேந்திரனைக் (யானை) காப்பாற்ற முதலை வாயிலிருந்து காத்து, கம்சனின் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற கிருஷ்ணனின் மாயாஜால லீலைகளை வியந்து கூறும் பாடல் வரிகளாகும்.

Venugopalan, Flute Master

பாசுரத்தின் விளக்கம்:

ஆனை காத்து: கஜேந்திர ஆழ்வானைக் காத்தது.

ஓர் ஆனை கொன்று: கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை கொன்றது.

ஆயர் பிள்ளையாய்: ஆயர்பாடியில் கிருஷ்ணனாக வளர்ந்தது.

ஆனை மேய்த்து: பசுக்களை (ஆ) மேய்த்தது.

ஆ நெய் உண்டு: பசுவின் நெய்யை உண்டது.

அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து: கோவர்த்தன கிரியைத் தூக்கி பசுக்களை (ஆ-பசு) மழையிலிருந்து காத்தது.

இந்தச் செயல்கள் அனைத்தும் கிருஷ்ணன் செய்த “மாயம்” (அதிசயங்கள்) என்று ஆழ்வார் போற்றுகிறார்.

(12)‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.

(13)கம்சன் கதை

கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன் தான் இந்த கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற அசரீரி ஒலித்தது. இதனால் கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன்.அவர்களையும் வீழ்த்தினான் கண்ணன் .இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன், யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன்.  கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்தான்.  கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையைக் கொய்தார்.

(14)அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணனை நோக்கி வேகமாக வர, அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான்.

^^^

வாட மருது இடை  போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*

சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1

உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே

போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை

கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை

வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,

திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட

துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன்  கூத்தன் என சொல்லும்படியாக

என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான். அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள்

சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!.

(15)கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். இதை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்றும் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்றும் ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்றும் , திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்றும் பாடிப் போற்றினார்கள் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.

Calf demon killed

(16) கம்ஸன் அனுப்பிய (16) வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த யோமாஸுரனையும் கொன்றான்.

***

தூசு போன்ற ரூபத்தில் செயல்படும் (17) திருணாவர்த்தன் என்ற அசுரனை கம்சன் அனுப்பினான். யசோதை கண்ணனை படுக்கையில் கிடத்திவிட்டு வேலை செய்தாள். அந்த நேரத்தில், பயங்கரமான புழுதியுடன் சூறாவளி காற்று ரூபத்தில் திருணாவர்த்தன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். திருணாவர்த்தன் ஆகாயத்தில் உயரே தூக்கிச் செல்லும்போது, கிருஷ்ணர் தனது எடையை  அதிகமாக்கினார். எடையைத் தாங்க முடியாத அசுரன், இறுதியில் கீழே விழுந்து உயிர் துறந்தான். கிருஷ்ணர் பத்திரமாகக் கோகுலம் திரும்பினார்.

***

பாகவதத்தில்  (18) ப்ராலாம்பாசுரன் கதை

கம்சன் அனுப்பிய ப்ராலாம்பாசுரன் இடையன் போல் வேடமிட்டு வந்தான்.கிருஷ்ணனும் பலராமனும் தோழர்களுடன் விளையாடும்போது, ப்ராலாம்பாசுரன் அவர்களுடன் சேர்ந்து, தானும் அவர்களோடு விளையாடினான்.

அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் – ஒருவரை ஒருவர் தூக்கிச் சுமக்க வேண்டும். தோற்றவர்கள் வென்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும்.இந்த விளையாட்டில், ப்ராலாம்பாசுரன் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடினான்.

 பலராமன், அவனுடைய உண்மையான அசுர வடிவத்தைக் கண்டு, தன் சக்தியால் அவனைக் கொன்றார். ப்ராலாம்பாசுரன் தலை பிளந்து, அந்த இடத்திலேயே மடிந்தான்.

***

சிசுபாலன் கதை – 

(19).சிசுபாலன் சேதி நாட்டு மன்னன், கிருஷ்ணனின் அத்தை மகன் . பிறக்கும்போதே நான்கு கைகள், மூன்று கண்களுடன் பிறந்த இவன், இந்திரப்பிரஸ்தத்தில் யதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின்போது கிருஷ்ணரை அவமதித்ததால், சக்ராயுதத்தால் வதம் செய்யப்பட்டான்.

சிசுபாலன் பிறந்தபோது விசித்திரமான தோற்றத்துடன் (4 கைகள், 3 கண்கள்) இருந்தான். எவனொருவன் இவன் மடியில் அமரும்போது இந்த கூடுதல் அம்சங்கள் மறைகின்றனவோ, அவனாலேயே இவன் இறப்பு நேரிடும் என்று அசரீரி கூறியது.

 கிருஷ்ணர் சிசுபாலனை மடியில் எடுத்தவுடன், அவனது கூடுதல் கைகள் மற்றும் கண் மறைந்தன. சிசுபாலனின் தாய் (கிருஷ்ணனின் அத்தை) தன் மகனை கொல்லக்கூடாது என்று வேண்ட, கிருஷ்ணர் சிசுபாலனின் நூறு தவறுகளை மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

சிசுபாலன், கிருஷ்ணரை எப்போதும் வெறுத்து வந்தான். பாண்டவர்களின் ராஜசூய யாகத்தின்போது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சிசுபாலன், கிருஷ்ணரை அவதூறாகப் பேசினான்.அவனது நூறாவது அவதூறு முடிந்தவுடன் அடுத்த முறை கேலி செய்தபோது , கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை வெட்டினார். 

***

(20)தந்தவக்ரன் கதை

தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். கிருஷ்ணனின்  பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டுத்  தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.

***

(21). கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )

ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச்   செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்

மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் .

இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.

***

ஸ்வாகதம் க்ருஷ்ணா –ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் பாடல்

பல்லவி

ஸ்வாகதம் க்ருஷ்ணா – வரவேண்டும் க்ருஷ்ணா.

சரணாகதம் க்ருஷ்ணா – பணிகிறேன் க்ருஷ்ணா

இஹ. – இங்கு

அனுபல்லவி

போகதாப்த சுலபா – அன்பு ஆர்வம் அல்லது பக்தியினால் அவனை அடைவது சுலபம் .

சுபுஷ்ப கந்த களப – வாசனை மலர்கள்,சந்தணத்தை தரித்தவன்.

கஸ்தூரி திலக மஹிபா – கஸ்தூரி திலகம் அணிந்தபெருமை மிகுந்தவனான அவனே

மம காந்த – என்னுடைய தலைவன்

நந்தகோப கந்த – நந்தகோபர் மகன் .

சரணம்

முஷ்டிகாசூர சாணூரமல்ல மல்லவிஷாரத மதுசூதனா (குவலயாபீட) – முஷ்டிகன் சாணூரன் போன்ற அசுரர்களை மல்யுத்தத்தில் வென்றவன்.மது குவலயாபீட போன்ற அரக்கர்களை .

மர்த்தன- வதம் செய்தவன்

காளிங்க நர்த்தன – காளிங்கன் எனும் பாம்பின் தலை மீது நடனம் ஆடியவன்

கோகுல ரக்ஷண – கோகுலத்தைக் காத்தவன்

ஸகல ஸுலக்ஷண – ஸர்வ லக்ஷணங்களும் பொருந்தியவன்

தேவா சிஷ்ட ஜனபால – தேவர்கள் நல்ல மனிதர்கள் இவர்களை காப்பதில்

ஸங்கல்ப கல்ப ஸதகோடி – பலப்பல கோடி யுகங்களாக

ஸமபராபவ தீர – தீர சிந்தையுடன் விளங்குபவன்.

முனிஜன விஹார – முனிவர்களிடத்தில் வசிப்பவன்

மதன சுகுமார – மன்மதனைப் போன்ற அழகுடையவன்.

தைத்ய ஸம்ஹார – அசுரர்களை வதம் செய்தவன்

தேவா மதுர மதுரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜ – தன் அற்புத ஸாஹஸங்களினால் தேவர்களுக்கு இனிமையானவன்.

யுவதி ஜன மானஸ பூஜித – கோபிகைகளால் மானஸீகமாக பூஜிக்கப்பட்டவன்.

—subham—

Tags- ஸ்வாகதம் க்ருஷ்ணா , ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் , கண்ணன், கொன்ற ,21 அரக்கர்கள் பட்டியல்  ஆழ்வார் பாசுரங்களில், கிருஷ்ண லீலைகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 37; இந்து மத கலைச்சொல் அகராதி-37 (Post No.15,446)

Written by London Swaminathan

Post No. 15,446

Date uploaded in Sydney, Australia –  22 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “J”.

English version was posted yesterday. Here is the Tamil version: 

ஜனார்த்தனன்  (Sanskrit: जनार्दन) விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர். (126th name in the Vishnu Sahasranama)  விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் வழங்கும் ஒரு நாமம்., பக்தர்களை பாதுகாத்து தீமைகளை அழிப்பவர் என்றும் எல்லோருக்கும் வரம் அளிப்பவர் என்றும் பொருள்.

***


ஜகத் குரு

ஜகத் என்றால் உலகம் மற்றும் அதிலுள்ள மக்கள்; குரு என்றால் ஆசிரியர்; உலகத்திற்கே குருவாக விளங்குபவர் என்று அர்த்தம்; சிவபுராணத்தில் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் இந்த அடைமொழி உள்ளது. ராமாயணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் , ராமன் ஆகியோரை இந்தச் சொல்லால் வருணிக்கிறார் வால்மீகி.  தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராசார்ய (1894-1994) சுவாமிகளை இந்தச்  சொல்லால் பக்தர்கள் போற்றினார்கள் .

***

ஜைன 

தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் பொருள்; சமண மத த்தைப் பின்பற்றுவோரை இப்படி அழைக்கிறோம். அவர்கள் அஹிம்சையிலும் சைவ- காய்கறி உணவுகளிலும் – மிகவும் பற்றுடையோர். இந்த சமயம்  புத்தருக்கு முந்திய மகாவீரர் என்ப வரால் மிகவும் பிரபலமானது . தமிழ் நாட்டில் அரசியலில் ஈடுபட்ட சமணர்கள்,  பல்லவ பாண்டிய மன்னர்களை மதம் மாற்றியதால் சைவ  நாயன்மார்களால் பழிக்கப்பட்டார்கள் ; ஞான சம்பந்தர் இந்த மதத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றினார் .மத்திய கால தமிழில் நிறைய நூல்களை சமண முனிவர்கள் இயற்றினார்கள் தமிழ்  காவியமான சிலப்பதிகாரம் சமணர்களைப்  போற்றியது .

***

ஜைன அல்லது சமண சமயம்

இவர்கள் வேதத்தையும் கடவுளையும் ஏற்கவில்லை ஆனால் இந்துக்களைப் போலவே மறுபிறப்புக் கொள்கையையும் கர்மா வினைக் கொள்கையையும் ஏற்றார்கள். 24 தீர்த்தங்கரர் என்ற துறவிகள் இந்தக் கொள்கைகளைப் பரப்பினார்கள் அவர்களில்  கடைசியாக வந்த வர்த்தமான மஹாவீரர் பீஹார் மாநிலத்தில் இந்த சமயத்தை வேரூன்றச் செய்தார் அவர் புத்தருக்கு முன்னால் தோன்றியவர் 

24, தீர்த்தங்கரர் பெயர்கள்  

ரிசபதேவர் (ஆதிநாதர்), அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தநாதர், சுமதிநாதர், பத்மபிரபா, சுபர்சுவநாதர், சந்திரபிரபா, புஷ்பதந்தர், சீதளநாதர், சிரேயன்சுவநாதர், வசுபூஜ்ஜியர், விமலநாதர், அனந்தநாதர், தருமநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனீஸ்வரநாதர், நமிநாதர், நேமிநாதர் (அரிஷ்டநேமி), பார்சுவநாதர், மகாவீரர்.

இவர்களில் நேமிநாதர் (அரிஷ்டநேமி), பார்சுவநாதர்,  வர்த்தமான மகாவீரர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உறுதியாகியுள்ளது.

பிற்காலத்தில் சமணர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் ; திகம்பரர் – ஆடை அணியாத பிரிவினர்; ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை உடுத்துவோர் . தமிழ்நாட்டில் இவர்கள் எங்கே, எப்படி இருந்தார்கள் என்பதை அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்து அறியலாம்.

***

ஜம்பு த்வீபம் – நாவலந் தீவு

மஹாபாரதத்திலும், அசோகன் கல்வெட்டிலும் இந்தப் பெயரைக் காணலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் நாவலந் தீவு என்று பெயர். தாவரங்களின் அடைப்படையில் நிலங்களுக்குப் பெயரிட்டவர்கள் இந்துக்கள்;  நாவல் பழத்தைக் கொண்டு பாரத தேசத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஏழு அல்லது ஒன்பது தீவுகளில் இது ஒன்று என்று புராணங்கள் விளம்புகின்றன.

ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் காம்போஜ என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன்படுத்தினர்.

நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்

சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி

கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்: 

‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது.

தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் ‘நாவல் அம் தண்பொழில்’’ (வரி 465) என்று சொல்கிறார்.

 ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.

சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை (25-2-12/16) ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.

நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவுநாவலொடு பெயரிய பெருந்தீவம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.

ஜம்பூத்வீபம் பற்றி காளிதாசனும்  பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.

ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதை புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் காணலாம்.

***

ஜமதக்னி 

காதி மன்னரின் மகள் சத்யவதிக்கும் ருசிக ரிஷிக்கும் மகனாகப் பிறந்தவர் இவர் .

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ரிஷிகளில் ஒருவரின் வம்சத்தில் வந்தவர்  ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவியின் கணவரும் பரசுராமரின் தந்தையும் ஆவார். உக்ர தபஸ்வி; தந்தை ஜமதக்னியின் கட்டளைக்கு இணங்கி தாயின் தலையை பரசுராமர்  வெட்டினார் . பின்னர் அவரை உயிர்பெறவும் செய்தார். ரேணுகா தேவி கற்புக்கரசி; அவள் சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் கொண்டுவந்த போதும் பானையில் தண்ணீர் அப்படியே நின்றது!

***

ஜனகர்

விதேக நாடு அல்லது மிதிலை நகரின் மன்னர் ; சீதா தேவியின் வளர்ப்புத் தந்தை ; பிருஹத் ஆரண்யக உபநிஷத், சதபத பிராமண நூல்களில் இவர் பெயர் உள்ளது; ராஜ ரிஷியான இவர் பற்று இல்லாமல் ஆட்சி செலுத்தினார் . பெரிய சபைகளைக் கூட்டி தத்துவ மகாநாடுகளை நடத்தினார் அதில் கார்க்கி வாசிக்கனவி போன்ற பெண்களும் பங்கேற்றுப் பேசினர். இவரது காலத்தில் வாழ்ந்த யாக்ஞவல்க்ய ரிஷி பெரும் புகழ்பெற்றவர் .

மிதிலை எரிந்திட வேதப் பொருளை

வினவும் சனகன் மதி—தன்

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

வல்ல நம் அன்னை மதி –(சுப்ரமண்ய பாரதி)

‘’ஜனகன் முதலானோர் கர்மத்தாலேயே உயர்ந்த சித்தியை அடைந்தனர் அன்றோ! மேலும் உலகை நல்வழிப் படுத்தவும் கர்மத்தைச் செய்வதற்கே நீ உரியவன் ஆகிறாய்’’. (பகவத் கீதை ,அத்தியாயம் 3, ஸ்லோகம் 20).

கண்ணனும் பாரதியும் ஏன் இப்படி ஜனகனைப் புகழ்ந்தார்கள்?

மிதிலாபுரியை தலைநகராக கொண்டு ஜனகர் ஆண்டான். சீதா தேவியின் தந்தை பெயரும் ஜனகர் தான். ஆனால் பல ஜனக மன்னர்கள் இருந்தது ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது. வேதகால ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. ஜீவன் முக்தர். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல் வாழ்க்கை நடத்திய அறிஞன். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு பூண்டவர்.

குருவின் அன்பில் சிலருக்கு சந்தேகம். ஜனகன் ஒரு மன்னன் என்பதால் அவருக்கு குரு அதிக சலுகை காட்டுவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. இதைப் பொய் என்று காட்ட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடோடி வந்து மிதிலை நகரம் தீப்பிடித்து எரிவதாகப் பதறினான். எல்லா சிஷ்யர்களும் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கு இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.

***

ஜானகி

சீதா தேவியின் பெயர்களில் ஒன்று ; ஜனகர் மகள் என்று அர்த்தம்; மிதிலை நகரில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் உண்டு.

***

ஜரத்காரு

ஒரு ரிஷியின் பெயர்.

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ வனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காருஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN)  நாகரீகத்தை நிறுவியது

பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ नर्मदायै नमः प्रातः नर्मदायै नमो निशि என்ற மந்திரத்தில் பாம்புகளையும்  ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு.

(யஜுர்வேத சந்தியாவந்தன மந்திரம்)

நர்மதாயை நமஹ பிராதர் நர்மதாயை நமோ நிசி

நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ சர்பதஹ

அபசர்ப்ப சர்ப்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹாயசாஹா

ஜனமேஜஸ்ய யக்ஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்

ஜரத்காரோர்  ஜரத்கார்வாம் சமுத்பன்னோ  மஹாயசாஹா

ஆஸ்தீக சத்ய சந்தோமாம் பன்னகேப்யோ அபிரக்ஷது

பன்னகேப்யோ அபிரக்ஷது ஓம் நம இதி

***

ஜனமேஜயன்

மஹாபாரத போருக்குப் பின்னர், ஹஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னன் ; பரீக்ஷித் மன்னனின் மகன்; அர்ஜுனனின் பேரன் ; பரீக்ஷித்தை நாக வம்ச காட்டு வாசிகள் கொன்றதால் அவர்களைக் கொல்வதற்கு சர்ப்பயாகம் நடத்தியவன்; அதன் கதை பின்வருமாறு :

காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ வனத்தை விட்டுவிடுங்களேன் அந்த இடத்தில் வாழ்ந்த நாகர்கள் மன்றாடினார்கள் (காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்; பலருக்கு இது தெரியாததால் அர்த்தம் புரியாமலேயே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர்).

நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).

இப்படி நாகா இன  மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .

***

ஜபம்

மனதிற்குள் உருப்போடுதல்; இறைவனின் நாமத்தை ஜபமாலையை வைத்துக் கொண்டோ அது இல்லாமலேயோ முனுமுனுத்தல்.

***

ஜாதகர்ம

பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்கள் செய்யும் நாற்பது கருமங்களில்– செயல்களில்– ஒன்று; குழந்தை பிறந்தவுடன் அதன் நாக்கில் மந்திரங்களைச் சொல்லி நெய்யினைத் தடவும் கிரியை.; நாற்பது என்பதை ஷோடச/ பதினாறு கர்மங்கள் என்றும் சொல்லுவார்கள்; மனு ஸ்ம்ருதி முதலிய சட்டப் புஸ்தகங்களில் இதைக் காணலாம்.

***

ஜாதி

ஒருவருக்கு  பிறப்பினால் ஏற்படும் பிரிவினை; வேத காலத்தில் பிராமண,  க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்ற நான்கு ஜாதிகள் மட்டும் இருந்தன; இப்போது ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உள்ளன . தொழில் முறையில் ஏற்பட்ட பிரிவுகள் குலத் தொழில் காரணமாக பிறப்பினால் சொல்லப்பட்டது .

உயர்ந்த வகைப் பொருளுக்கும் இதைப் பயன்படுத்துவர் உ-ம். ஜாதி மல்லி.

இன்ன வகை என்ற பொருளிலும் வரும். …… இந்த ஜாதி மாம் பழம் ; இந்த ஜாதி ….. குதிரை etc

To be continued………………………….

–Subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 36; இந்துமத கலைச்சொல் அகராதி-37, ஜாதி , நாவலந் தீவு, ஜகத் குரு

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)


Written by London Swaminathan

Post No. 15,388

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அரிய செய்திகள்- 9

அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 9

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,

வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

***

நோய்கள், டாக்டர்கள் பற்றி

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

டயாபடீஸ் நோய் வரக்கூடாது

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலிவசிய

மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலிவறள் என்ற

வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …

நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்

விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

காசு பறிக்கும் டாக்டர்கள்

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்

நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது

நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …

சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,

****

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு

இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள

மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்

பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …

உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு

பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்

தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை

வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …

பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

*****

மஹா கோர ராவணன்

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை

அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை

அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு

மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,

****

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை

சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்

இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்

வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,

சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

****

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்

படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய

வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட

பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க

ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்

பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

திருப்புகழில் பூகோள பாடம்

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,

****

பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி

பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.

நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).

உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).

இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு அது  இறுதியில் காவிரியில் கலக்கிறது.

பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.

மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது

****

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்

கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

***

பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை

நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய

தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,

இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான

தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)

இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்

கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான

சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்

சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,

போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான

போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான

ஒளியேபோற்றிபோற்றி,

தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்

பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

சோழநாட்டின் பெருமை

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார

நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்

திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்

உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்

நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா … வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த

திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,

அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,

விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய

(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்

சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து

வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு

ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு

கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

இது திருக்கற்குடி‘ அல்லது உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோதுசுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ஆதி உலா‘ என்ற பாடலைப் பாடகயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.

***

பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி

கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்

தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்

கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …

(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்

உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து

இருக்குமோ எனில் … அவர்களது முகமானதுஒரு செய்யுளும்

வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்

அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்

வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து

போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.

முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்

செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி

போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.

To be continued……………………………

Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும்பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-டாக்டர்கள்நோய்கள்காவேரிசோழநாடுபோலிப்  புலவர்கள்