பாரதியாரின் தீர்க்கதரிசனம்

Article No. 2064

Written by S NAGARAJAN

Date : 12  August  2015

Time uploaded in London :–  6-05 am

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 2

By .நாகராஜன்

 1430101410-1335_india1200AD

பாரதியாரின் தீர்க்கதரிசனம்

ஆங்கிலேயர்களின் முக்கிய நோக்கம் எந்த விதத்திலெல்லாம் பிரிக்க முடியுமோ அந்த விதத்திலெல்லாம் பாரதீயர்களைப் பிரித்து இந்திய சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான்.

 

இது முடியாத நிலையில் ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டால் அதை உருப்படியாகத் தக்க வைத்துக் கொள்ளாமல் ஏராளமான பிரிவினைகளுக்கு வித்திட்டு இந்தியாவை கூடிய சீக்கிரம் சிதறுண்டு சின்னாபின்னமாக்குவது தான் ஆங்கிலேயரின் நோக்கம்.

 

இந்த வெள்ளைக்கார குள்ளநரி தந்திரத்தை நன்கு தீர்க்கதரிசனத்தால் கண்ட மஹாகவி பாரதியார் முஸ்லீம்கள்ஹிந்துக்கள் பிளவுபட்டு அழியக் கூடாது, சுதந்திரம் பெறுவதை எந்தக் காரணம் கொண்டும் தள்ளிப் போட்டு விடக் கூடாது என்று ஆரம்பமுதலே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதன் வெளிப்பாட்டையே முந்தைய பாராக்களில் பார்த்தோம். இனி அவரது கட்டுரையின் தொடர்ச்சியில் வரும் ஒரு முக்கிய பாராவைப் பார்ப்போம்:-  

 

 “ஆதி முதல் அந்தியம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டுபண்ணி அவர்களில் தேசத்துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய வீரத்தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோகங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறேதான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம். ஸர்வ ஜீவதயாபரக் கொக்கைப் போல் (ஓடு மீனோட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு) இந்தியா காரியதரிசியாகிய மிஸ்டர் மார்லீ துரை இந்தியாவுக்கு நன்மை செய்வது போல் சில சீர்திருத்தங்களைக் காட்டி மஹம்மதீயர்களுக்கும் மற்ற இந்தியர்களுக்கும் புதிய வேற்றுமையையும் விரோதத்தையும் மூட்டி விட்டார்

 

எப்படி இருக்கிறது கட்டுரையின் வேகமும், வீச்சும்? துரோகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதே ஒவ்வொரு அடியும் என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தீவிரம்!!

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள். சிறந்த பகுப்பாய்வு. மார்லியின் சீர்திருத்தங்களைசர்க்கரையால் மூடப்பட்ட விஷம்என்று அடுத்து வர்ணிக்கிறார் மஹாகவி.

 

 

பிளவுபடுத்தும் சக்திகளை தூர எறிவீர்!

 

ஒற்றுமை குன்றி இன்னும் நாசமாய்ப் போக வந்த மாயை என்பதையுணராது நம் மஹம்மதீய சகோதரர்களும் மற்ற இந்தியர்களும் மனஸ்தாபப்படுவது என்ன மதியீனம்!” என்று அவர் மனம் நொந்து கொள்கிறார்.

 

இன்று இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கு அவர்களே காரணம். அதைத் தீர்க்க அவர்களால் மட்டுமே முடியும். இதை பாரதியாரின் அணுகுமுறையில் சென்றால் அவர்களால் ஒரு நொடியில் சரி செய்து விட முடியும்.

ஆங்கிலேயன் செய்து வைத்த பிரிவினைகளின் வேரை அடியோடு முஸ்லீம்கள் பிடுங்கி எறிய வேண்டும்.

இந்தோனேஷியாவில் ராமர் தேசீய வீரர். கர்ணன் வியந்து பார்க்கப்படும் கதாபாத்திரம்.

 

 

இதனால் தான் சுகர்ணோவின் தந்தை தனக்குப் பிடித்த கதா பாத்திரமான கர்ணனின் பெயரைத் தன் மகனுக்கு வைக்க விரும்பினார். ஆனால் கர்ணன் போல தீயோருக்குத் தோள் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தால் சுகர்ணன் என்று பெயர் வைத்தார். இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸின் பெயர் கருடா ஏர்வேஸ்.

 

பெரிய முஸ்லீம் தேசமான இந்தோனேஷியாவில் இதெல்லாம் சாத்தியமெனில் இந்தியாவில் இது முடியாதா என்ன? தேசம் மதத்தினால் பிளவு படும் ஒன்று அல்ல; அது உணர்வினாலும், நடை, உடை, பாவனைகளினாலும் ஒன்று பட்டு உயிர் அமுதம் தரும் அன்னை என்பதை இந்தியர்கள் அனைவரும் உணரும் போது இந்தியா ஒளிரும்!

 

இதற்கு ஒரே வழி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பிரிவினைக்குத் தூபம் போடும் தங்களின் இன்றைய (2015ஆம் ஆண்டு) தலைவர்களுக்குமுழுக்குப் போட்டு விட்டுபுதிய தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும்; ஒருவேளை அவர்கள் உருவாகி இருந்தால் அவர்களை ஏற்க வேண்டும்; உயரத்தில் ஏற்ற வேண்டும்.

 

இதற்கு ஒவ்வொரு ஹிந்துவும் முஸ்லீம்களுக்கு உதவ வேண்டும்.

மஹாகவிக்கு உண்மையில் நாம் செய்யும் அஞ்சலி இதுவே ஆக இருக்கும்.

***************

Leave a comment

Leave a comment