
Written by London Swaminathan
Date: 14 July 2017
Time uploaded in London-21-27
Post No. 4081
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
திருவள்ளுவர் சரித்திரத்தின் (Year 1931) இறுதியில் நக்கீரருக்கும் சிவ பிரானுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ள்து.
சண்டை எப்படி துவங்கியது?
மதுரையை ஆண்ட செண்பக பாண்டியனுக்கு ஒரு சந்தேகம்; பெண்களின் கூந்தலில் இயற்கையாக மணம் உண்டா?
அமைச்சரவையில் யாருக்கும் பதில் தெரியாததால், நாடு முழுதும் தண்டோராப் போட்டு யார் ஒருவர் சரியான விடை தருகின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தான்.
இதைக் கேட்ட ஒரு ஏழைப் பிராமணன் மதுரை மீனாட்சி கோவிலில் நின்றுகொண்டு அடக்கடவுளே! எனக்கு மட்டும் விடை தெரிந்தால் என் வறுமை எல்லாம் நீங்குமே! என்று அங்கலாய்த்தான். அந்த ஏழைப் பார்ப்பனனின் குரலைச் செவிமடுத்த சிவபிரான் மனமிறங்கி ஒரு திருவிளையாடல் செய்வோமே என்று அந்த அந்தணனிடம் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் பின்வருமாறு:-
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்
செறியெயிற் றருவை கூந்தலின்
நறியவுமுளவோ நீயறியும் பூவே
—குறுந்தொகை பாடல் 2
பொருள்:-
பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.
இதைக் கொண்டு பாண்டிய ராஜன் சபையில் வாசித்த தருமி என்ற பிராமணனை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவர் சகட்டுமேனிக்குக் கேள்விகள் கேட்டார். பாடலில் சொற் குற்றமும் பொருட் குற்றமும் இருப்பதாகப் பழி சுமத்தினார்.
தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று புலம்பவே மறுநாள், சிவபெருமானே நேரில் வந்து நக்கீரருடன் மோதினார். அப்போது சிவன் சொன்னதாவது:
அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்
பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்

பொருள்:
எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?
இதைக் கேட்டவுடன் புலவர் நக்கீரனுக்குக் கோபம் வந்தது.
நக்கீரர் சொன்னார்
சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல
இரந்துண்டு வாழ்வதில்லை
பொருள்:
ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் வேளாப் பார்ப்பான் என்ற அந்தண ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை
நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே.
இதற்குப் பின்னர் வாக்கு வாதம் முற்றவே சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவே நக்கீரன் அடி பணிந்தார் என்பது திரு விளையாடல் புராணக் கதை.
–subham–
atpu555
/ July 15, 2017Sir,Thanks for this post. I knew the first poem is in Kurunthokai, but I used to think the last two were penned by A.P.Nagarajan for the fil Thiruvilaiyaadal!! I did not a book called Thiruvalluvar Charithiram existed.
From: Tamil and Vedas To: atpu555@yahoo.co.uk Sent: Friday, 14 July 2017, 21:29 Subject: [New post] சிவபெருமானுக்கு நக்கீரர் சவால் (Post No.4081) #yiv7103431639 a:hover {color:red;}#yiv7103431639 a {text-decoration:none;color:#0088cc;}#yiv7103431639 a.yiv7103431639primaryactionlink:link, #yiv7103431639 a.yiv7103431639primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv7103431639 a.yiv7103431639primaryactionlink:hover, #yiv7103431639 a.yiv7103431639primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv7103431639 WordPress.com | Tamil and Vedas posted: “Written by London SwaminathanDate: 14 July 2017Time uploaded in London-21-27Post No. 4081Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. திருவள்ளுவர் சரித்திரத்தின் (Year 19” | |
Tamil and Vedas
/ July 15, 2017thanks.