
Written by S.NAGARAJAN
Date: 25 September 2017
Time uploaded in London- 5-18 am
Post No. 4242
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சம்ஸ்கிருதச் செல்வம்
ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!
ச.நாகராஜன்
காதலன் ஒருவன் தவிக்கிறான். ஏனெனில் அவனது காதலி திடீரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.
கோபம்.ஏனென்று தான் தெரியவில்லை.
அவனோ இன்னொரு பெண்ணை வார்த்தையால் கூடத் தொட்டதில்லை.
அவனது புலம்பல் கவிதையாக மலர்கிறது.
சார்தூலவிகிரிதிதா சந்தத்தில் அமைந்த அழகிய கவிதை இது:
உக்தம் துர்வசனம் மயா ந சுபகே ஹாஸ்யேபி துக்கப்ரதம்
த்யக்த்வா ஸ்வாமபி மாஷிதைரபி மயா நான்யாங்கனா லாலிதாI
ஸ்வாமேகாமனவத்யம் பூஷணபரை: சம்பாவயாமி த்வயா
ஹே! நிஷ்காரணகோபனே வ்த க்ருத: கிமர்த்தம் மயி II
கவிதையின் பொருள் இது தான்:
வலியைத் தரும் சுடுசொல் ஒன்றைக் கூட ஒருபொழுதும் நான் பேசியதில்லை;
ஓ! கவர்ச்சிப் பாவையே!
விளையாட்டாகக் கூடப் பேசியதில்லையே!
நீ இல்லாத போதும் கூட எந்த ஒரு பெண்ணையும் வார்த்தைகளினால் கூட நான் தொட்டதில்லை!
குற்றமற்ற குணங்களென்னும் செல்வத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன்னை நான் போற்றுகிறேன்.
ஓ!அன்பே!
எந்த விதக் காரணமும் இன்றி என் மீது கோபம் கொண்டிருக்கிறாயே,
என்னிடம் நீ ஏன் கோபம் கொண்டிருக்கிறாய் என்று சொல்லேன்.
அருமையான இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் தருகிறார் திரு ஏ.ஏ,ஆர் (A.A.R. – A.A.Ramanathan)
Never have I spoken a harsh word which may give pain,
Oh, Charming one, Even during jokes;
Even in your absence no other girl was carassed by me even in words;
I honour you alone adorned with a wealth of faultless merits;
Oh, Dear who get angry for no cause,
Tell me why you are angry with me.
**

இன்னொரு கவிதை
தன் விருப்பத்திற்குகந்த காதலியை எப்படி அணுக வேண்டும்.
யோசனை தருகிறார் ஒரு கவிஞர் இப்படி:
உக்தம் தே ருதிரேணாஹம் ஸ்ப்ருஷ்டம் தே மஸ்தகம் மயா I
இத்யேதாஞ் சபதான் க்ருத்வா சா வை கம்யா புன:புன: II
விதவிருத்தம் என்ற சந்தத்தில் அமைந்த கவிதை இது.
பொருள்:
“உனது ரத்தத்தால் நனைக்கப்பட்டவன் நான். உனது தலை என்னால் வருடப்பட்ட ஒன்று” என்று இப்படி உறுதி மொழிகள் சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் நெருக்கமாக அவளை அணுக வேண்டும்.
“I have been wetted by your blood, your head has been touched (fondled)by me” – swearing words such as these, she must be approached closedly again and again.
(Translation by A.A.Ramanathan)
சம்ஸ்கிருதத்தில் காதல் கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உள்ளன.
சம்ஸ்கிருதத்தை –
வேத மொழி என்பர் சிலர்;
தெய்வ மொழி என்பர் சிலர்.
வித்தக ஞான மொழி என்பர் சிலர்.
ராஜ நீதி மொழி என்பர் சிலர்
இசை மொழி என்பர் சிலர்.
புராண இதிஹாஸ தர்ம சாஸ்திர மொழி என்பர் சிலர்.
கம்ப்யூட்டருக்கான மொழி என்பர் சிலர்.
ஆனால் மேலே உள்ளது போன்ற கவிதைகளைப் படிப்போர்
சரஸ சல்லாப மொழி என்பர்.
எல்லாம் சரி தான்.
சம்ஸ்ருதம் அறிவோம்! சுகமாய் வாழ்வோம்!!
****