உத்தர கீதை! – 2 (Post No.6600)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 26 June 2019


British Summer Time uploaded in London –9-59 am

Post No. 6600


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    கீதை என்ற பெயருக்கே ஒரு தனிப் பெருமை ஸ்ரீமத் பகவத் கீதையால் வந்தது. அதன் பின் பல நூல்கள் கீதை என்றபெயரில் வெளி வந்துவிட்டன. இந்த ‘உத்தர கீதையின்’ நிலையும் அதுதான்.
    ஆஸ்திக உலகில் ‘அண்ணா’ சுப்ரஹ்மண்ய ஐயர் மதிப்பு மிக்க பெரிய பெயர். ஸ்ரீ வழுத்தூர் ராஜகோபால சர்மா என்பவர் ‘அண்ணா’ வின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களைப் பார்வையிட்டு பிழைத்திருத்தம் செய்து கொடுத்தவர் இவர்தான் இங்கு சொல்லப்பட்ட ‘சாஸ்திரி’யா என்பது தெரியவில்லை. இந்த இரு பெரியவர்களும் வெளியிட்ட நூலை, காஞ்சிப் பெரியவர் சம்பந்த முள்ளதும், சி.பி.ராமஸ்வாமி ஐயரின் முகவுரையுடன் கூடியதுமான ஒரு நூலைப் பற்றி கருத்து சொல்ல தயக்கமாக இருக்கிறது.

    பகவத் கீதை சாக்ஷாத் பகவானின் வாக்கு. அதை இப்போதுள்ள வடிவில் கொடுத்தவர். அதே பகவானின் அம்சமான வ்யாசர். இங்கே கருத்து மாராட்டத்திற்கு இடமில்லை.
    பகவத் கீதை ஒரு புரட்சிகரமான நூல். நமது லட்சக் கணக்கான கிரந்தங்களையும் ஒரு தட்டில் வைத்து, கீதையை மறுதட்டில் வைத்தால் கீதைக்கு ஈடாகா.
    கீதையின் நடை மிக எளியது. உபதேசம் நேரடியானது- நெளிவு சுழிவு இல்லை.
    பகவான் எந்தவிதமான தத்துவக் கொள்கையையும் ஆதரித்துப் பேசவில்லை.
    எந்தப் பழைய கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. கர்மா, யோகம்,, யஞ்ஞம், சாங்க்யம் என எல்லாவற்றிலும் முற்றிலும் வேறு பட்ட கோணத்தில் பேசியிருக்கிறார்.
    தர்மவிஷயத்தில் குழப்பமடைந்த அர்ஜுனனுக்கு, தர்மத்தையெல்லாம் விட்டு பகவானைப் பிடித்துக்கொள் என்று சொல்கிறார். இதுதான் பகவானின் உயர்ந்த சொல்- மே பரமம் வச. இதுதான் ரகசியங்களுக்கெல்லாம் உயர்ந்த ரகசியம். குஹ்யதரம், குஹ்ய தமம், குஹ்யாதி குஹ்யம், ராஜவித்யா. ராஜ குஹ்யம்.
    அர்ஜுனனின் சரணாகதியில் தொடங்கிய கீதை, சரணாகதி தத்துவத்துடன் நிறைவுபெறுகிறது.
    பகவான் கீதையில் கர்ம யோகத்தைச் சிலாகித்துப் பேசவில்லை. உடலெடுத்தவன் கர்மா செய்யாமல் இருக்கமுடியாது- அதை எப்படிச் செய்து மீண்டும் கர்ம வலையில்- பிறப்புத் தளையில்- மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்பதையே சொல்கிறார்.-making virtue out of necessity., not an independent imperative.
    பகவான் ஞானத்தையும் சிலாகித்துப் பேசவில்லை. ஞானம் என்பது என்ன? வாசுதேவ ஸர்வம் இதி’ -எல்லாம் பகவானே என்று அறிவதுதான் ஞானம். அப்படி ஞானமடைந்த ஞானிகளும் பகவானே கதியென்று அடங்கியிருக்கிறார்கள் – யுக்த ஆஸீத மத் பர ( 2.61, 8.16)
    ப்ரஹ்மம், பகவான், புருஷோத்தமன், அவதாரம் எல்லாம் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே.
    ஆக அனன்ய பக்தி ஒன்றுதான் பகவான் காட்டிய வழி. ஒரே வழி, நேர்வழி, ராஜ பாட்டை. இது தான் பகவத் கீதையின் ரகசியம்.
    அப்படிப்பட்ட பகவான் பின்னர் பல சாஸ்திர விஷயங்களை மீண்டும் புரட்டினார் என்பது பொருத்தமாகப் படவில்லை.
    இங்கு இன்னொரு விஷயமும் குறிப்பிடவேண்டும். ஸ்ரீமத் பாகவதத்தில் 11வது ஸ்கந்தத்தில் பகவான் பக்தன் உத்தவருக்கு விளக்குவதாக ஒரு பகுதி வருகிறது. இதற்கும் நம்மவர்கள் ‘உத்தவ கீதை’ என்று பெயரிட்டு விட்டனர். இது பகவான் பூலோகத்திலிருந்து கிளம்பும்முன் உத்தவருக்கு உபதேசித்தது. இங்கும் பக்தியைப் பற்றியே பெரிதும் சொல்கிறார். இங்கு சொல்லும் பல விஷயங்கள் பகவத் கீதையின் தொடர்ச்சியாகவும் விளக்கமாகவுமே இருக்கின்றன.
    ஆக, பகவத் கீதையின் முடிவான உபதேசம் பக்தி- அர்ஜுனனுக்கு. பகவானின் இறுதி உபதேசம் உத்தவருக்கு- அதுவும் பக்தியே.
    பின் பல சாஸ்திர விஷயங்களை அலசும் உத்தர கீதை எங்கிருந்து வந்தது? அதன் அவசியம் என்ன? இதன் நடையும் விஷயமும் பகவத் கீதையுடன் பொருந்தவில்லை.
    Scholars should study this critically and determine whether it is not an interpolation- the work of a clever pundit.

  2. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    The correct references to the phrase “yukta aasita mat para” are 2.61, and 6.14. Sorry for the error.

Leave a comment