
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7595
Date uploaded in London – 20 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீ கத்தில் உள்ள ஒரு புதிர் மேலும் சிக்கலாகிவருகிறது. அங்கு யானை மீது ஒரு உருவம் நிற்கிறது. அதற்கு மேல் ஒரு சக்கரம் இருக்கிறது. அந்த உருவம் இரண்டு மிருகங்களை , அநேகமாக புலிகளை, சர்வசாதாரணமாக சமாளிக்கிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com
.

INDRA- JUPITER- TARANIS IN EUROPE
முதல் புதிர் அந்த உருவம் ஆணா , பெண்ணா? ஏன் எனில் பெண் என்றும் ஆண் என்றும் சொல்லும் அளவுக்கு அது தெளிவற்று இருக்கிறது.
நான் முன்னர் இரண்டு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அது இந்திரனே. அவன்தான் ஐராவதம் என்னும் யானையின் மீது பவனி வருவதை இந்து மத நூல்கள் சித்தரிக்கின்றன என்று எழுதிவிட்டு அவனுக்கு ‘சக்கர ‘ என்ற பெயர் இருப்பதால் மேலே சக்கரத்தைப் பொறித்துள்ளனர் என்று எழுதி இருந்தேன். அப்படி இல்லாவிடில் இந்தியாவை ஒரு குடைக்கீழ் ஆண்ட ஏக சக்ராதிபதி பரதன் என்னும் மன்னனாக இருக்கலாம் என்றும் சக்ர என்பது சக்ரவர்த்தி என்பதைக் குறிக்கலாம் என்றும் சொல்லி இருந்தேன். பாரதியார் கூட ‘சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினை தட்டி விளையாடி’ என்று பாடியிருப்பதையும் இந்த நாட்டிற்கே பாரத நாடு என்று நாம் இந்திய அரசியல் சாசனத்தில் பொறித்து வைத்து இருப்பதையும் உரைத்தேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இப்போது ஒரு அதிசயச் செய்தி!

ரிக் வேதத்தில் சூரியன் பற்றி ஆராய்கையில் ஒரு அதிசயச் செய்தி கிடைத்தது. மூன்று பாடல்களில் சூரியனை இந்திரன் வென்றதாகவும் , அப்போது அவனுடைய தேர்ச் சக்கரத்தை திருடி வந்ததாகவும், வேறு எவரும் இந்த உலகில் இப்பேற்பட்ட செயலைச் செய்ததும் இல்லை, இனிமேல் செய்யவும் இயலாது என்றும் இந்திரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சூரியனின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக புராண, இதிஹாசங்களில் கதை இல்லை. நம்முடைய பாஷ்யக்காரர்களான ஸாயனர் போன்றோரும் விளக்கவில்லை. ஒருவேளை அவர்கள் காலத்தில் அது பிரபலமான கதையாக இருந்திருக்கலாம் அல்லது அழிந்து போன ஆயிரக் கணக்கான நூல்களில் இக்கதை இருந்திருப்பதால் அவர்களும் அதிகமாக கதைக்காமல் இருந்திருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதுபற்றி பாடலின் கீழ் அடிக்குறிப்பு எழுதிய (Griffith) கிரிப்பித் இது
சூரிய கிரகண த்தைக் குறிக்கலாம் அல்லது வானிலை , பருவ நிலை பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்கிறார்.
ரிக் வே தம் முழுதும் இந்திரன், விருத்திரன் என்ற அசுரனைக் கொன்றதை எல்லாப் புலவர்களும் விதந் தோதுவதைக் காண்கிறோம். விருத்திரா என்ற சம்ஸ்க்ருத ச் சொல் ‘வறட்சி’ என்று மருவியது. இந்திரன் பனி யை உருக்கி மழை பொழிவித்ததைக் குறிக்கும் முகத்தான் இப்படி புலவர் பெருமக்கள் பாடியிருப்பார்கள் என்கிறார். ஆனால் ஹில் பிராண்ட் என்ற ஜெர்மானிய சம்ஸ்கிருத அறிஞர் இது இந்திரனையே சூரியனாக வழிபட்டதாக இருக்கலாம் என்பர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

அங்குதான் எனது ஆராய்ச்சி வருகிறது.
சரஸ்வதி – சிந்து நதி நாகரீகத்தில் உள்ளது போலவே ஐரோப்பாவில் ஒரு உருவச் சிலை கிடைத்திருக்கிறது . அது ஒரு கையில் பெரிய சக்கரத்தை வைத்திருக்கிறது . மற்றொரு கையில் வஜ்ராயுதமும் இருக்கும்; அதன் கீழ் ஜூபிடர் (Jupiter) என்றும் எழுதி இருக்கிறது. ஜூபிடர் என்பதை இந்தியாவில் இந்திரன் என்று வழிபடுவதாக இந்தியா பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஸ்டிராபோ(Strabo) போன்ற அறிஞர்கள் எழுதி வைத்தனர். உலகிலுள்ள இந்தியவியல் அறிஞர்கள் இதை ஏற்கின்றனர்; அத்தோடு இதுவே கிரேக்க நாட்டின் சூஸ் (Zeus) என்னும் ஆகாயக் கடவுளாக பரிணமித்து இருக்கலாம் என்றும் சொல்லுவார்கள். சூஸ் என்னும் கடவுளை ரிக் வேதத்தில் உள்ள ஆகாயக் கடவுளான த்யவுஸ் (Dyaus) என்பவருடனும் tamilandvedas.com, swamiindology.blogspot.com ஒப்பிடுவர்.
ஆக இந்திரன்தான் ஜூபிடர் என்னும் ரோமானியக் கடவுள்- அவர் கையில் இருப்பது சூரியன் என்பதில் வெளி நாட்டாரிடம் கருத்தொற்றுமை உண்டு.
இப்போது இந்த ஜூபிடர் என்னும் சக்கரத்தாழ்வாரை சிந்து சமவெளி யானை மீதான உருவத்துடன் ஒப்பிடுவோம் ; அவர் தலை மீது காட்டப்பட்ட சக்கரத்தை சூரியன் என்று கொள்ளுவோம். கிணற்றில் கல் விழுந்துவிட்டது…………..

புதிருக்கு விடையும் கிடைத்துவிட்டது; அது இந்திரனே ; மூன்று ரிக் வேதச் செய்யுட்கள் சொல்லுவது போல் , அவர் சூரியனின் ஒரு தேர்ச் சக்கரத்தை திருடி வந்ததும் உண்மையே . சம்ஸ்கிருத இலக்கியங்கள் சொல்லுவது போலவே தமிழ் இலக்கியமும் சூரியனின் ரதத்துக்கு ஏழு குதிரைகள் (வானவில்லின் ஏழு வர்ணங்கள் ) உண்டு என்றும் ஆனால் அவன் ரதத்துக்கு ஒரே சக்கரம்தான் என்றும் சொல்லும். அது ரிக்வேதத்திலும் சரஸ்வதி நதி தீர முத்திரையிலும் ஐரோப்பிய ஜூபிடர் சிலைகளிலும் இருப்பது
tamilandvedas.com, swamiindology.blogspot.comவியப்பிலும் வியப்பே.
xxx
எனது புதிய கண்டு பிடிப்பு

நான் இப்போது என் ஆராய்ச்சி முடிவுகளை சுருக்கி வரைகிறேன்.
1.சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் காணப்படும் யானை மீதான உருவ முத்திரையில் இருப்பது இந்திரனே. அவர் தலை மீது பொறிக்கப்பட்ட சக்கரம் இந்திரன் திருடிவந்த சூரியனின் சக்கரமே. இதையே வெளிநாட்டார் ஜூபிடர் என்று ரோமானிய சாம்ராஜ்யத்தில் வணங்கி வந்தனர். அவர்கள் நம்மைவிட 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலையைச் செய்ததால் சூரியனும் இந்திரனும் அவர்கள் காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கலாம்.
2. எனது இரண்டாவது முடிவு- இதற்கு முன்னர் சிந்து-சரஸ்வதி தீர முத்திரையில் உள்ளது போல ஒரு பசுபதி உருவம் ஹாலந்து நாட்டில் குண்டஸ்ட்ரப் என்னும் சதுப்பு நிலத்தில் கண்டு எடுக்கப்பட்ட வெள்ளி பாத்திரத்தில் இருப்பதை உலக அறிஞர்கள் ஒப்பிட்டு வியந்ததை நானும் எழுதி இருக்கிறேன். அத்தோடு அதே பாத்திரத்தில் கஜ லெட்சுமி உருவம், ஒரு சக்கர தெய்வம் ஆகியனவும் வெவ்வேறு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளதையும் உலக அறிஞர்கள் ஒப்பிட்டுள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதையும் இப்போது கிடைத்த இந்திரத் திருடன் -சூரிய தேர்ச் சக்கரக்கத்தையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் சிந்துவெளி- சரஸ்வதி நதி தீர நாகரிகம் வேதகால நாகரீ ரிகமே எனபது உறுதியாகிறது. இந்திரனையம் வருணனையும் வேதத்தில் உள்ள விஷ்ணுவையும் தொல்காப்பியரும் தமிழ்க் கடவுள் என்று பாடியிருப்பதால் தமிழர் நாகரீகம் வேதகால நாகரீகமே என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.
xxx

இதோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று ரிக் வேத மந்திரங்கள்:–
ரிக் வேத துதி 1-175, மந்திர எண் 4, ரிஷி அகஸ்தியர் பாடியது–
இந்திரனே ! தலைவனான நீ , சூரியனின் தேர்ச் சக்கரத்தை திருடினாய். சுஷ்ணனைக் கொல்வதற்கு உன் ஆயுதத்தை எடு. காற்று போன்ற வேகமுள்ள குதிரையில் கடுகி ஏகு வாயாக ; குத்சனிடம் செல்”.
(இது முழுதும் tamilandvedas.com, swamiindology.blogspot.comபருவ நிலை பற்றிய வருணனைகள் என்பது உரைகாரர்கள் தரும் விளக்கம்)
ரிக் வேத துதி 4-30, மந்திர எண் 4, வாம தேவ கௌசிகன் பாடியது–
“இந்திரனே ! நீ அந்தப் போர்களில் குத்சனுக்காகவும் அவனுடைய நண்பனுக்காகவும் சூரியனின் தேர்ச்சக்கரத்தைத் திருடினாய் “.
(வாம தேவ கௌசிகன் பாடிய இப்பாடலில் நிறைய புரியாத விஷயங்கள் உள்ளன. இந்திரன் 100 கோட்டைகளை இடித்து வென்ற விஷயமும் வருவதால் வெளிநாட்டார் மிகவும் சிலாகிக்கும் மந்திரம் இது. இரண்டு மன்னர்கள் பெயரும் வரசினன் என்ற அரக்கர் பெயரும், பல்லற்ற தேவதை கரூலதி பற்றியும் வருவதால் பல ஊகச் tamilandvedas.com, swamiindology.blogspot.comசெய்திகளுக்கு இடம் தரும் கவிதை இது )
10-43-5 கிருஷ்ண ஆங்கிரசன் பாடியது
“ஒரு சூதாட்டத்தில் எப்படி ஒருவன் வெற்றிகளைக் குவிக்கிறானோ , அப்படி மகவானும் ஒரேயடியாக சூரியனை வென்றான்; இந்த வீர தீரச் செயலை உன்னைத் தவிர வேறு எவரும் செய்ய இயலாது. முன்னரும் செய்தது இல்லை; இப்போதும் செய்ய முடியாது”.
Books used —
The Rig Veda- Griffith’s Translation
A Classical Dictionary of Hindu Mythology , John Dowson
The Sun Gods of Ancient Europe by Miranda Green (1991)
Vedic Hymns by Edward J Thomas, 1923
Sun Goddess- Myth Legend and History , Sheena Mc Grath, (1997)
My Old articles on Indus- Sarasvati River Civilization-

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்? | Tamil …
tamilandvedas.com › 2014/11/01 › ரிக்-வே…
1 Nov 2014 – ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் .
சிந்து சமவெளியில் இந்திரன்! | Swami’s …
swamiindology.blogspot.com › blog-post_6
6 Sep 2014 – மூன்று ஆண்டுகளுக்கு முன், மே 29, 2011-ல் சிந்து சமவெளி … Two of them are just paper cutting figures of Dog and Dove. tamilandvedas.com, swamiindology.blogspot.com. London …
சிந்து சமவெளி … – Swami’s Indology Blog
swamiindology.blogspot.com › blog-post_6
6 Nov 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் …
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
tamilandvedas.com › 2012/08/20 › சிந்து-ச…
20 Aug 2012 – சிந்து சமவெளியில் பேய் முத்திரை. லண்டன் சுவாமிநாதன் (English translation of this article has been posted earler). சிந்து சமவெளி நாகரீகம் என்றும் …

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு …
tamilandvedas.com › 2014/05/10 › சிந்து-ச…
10 May 2014 – எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்:-1033 ; தேதி:- 10 மே 2014 சுமேரிய நாகரீகத்தில் துவக்க காலம் முதலே இரு மொழி …

சிந்து சமவெளியில் கந்தர்வர்கள் …
tamilandvedas.com › 2015/04/17 › சிந்து-ச…
17 Apr 2015 – சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!! பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி. Research Paper No.1807; Date: 17th April 2015. Written by …
“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை …
tamilandvedas.com › 2014/03/29 › சிந்து-ச…
29 Mar 2014 – சிந்து சமவெளி நாகரீகம் பற்றி நேற்று காலையில் … ஸ்ரீ அரவிந்தர், காஞ்சி மஹாபெரியவர் போன்றோர் அவர் தம் எழுத்துக்களில் …
சிந்து சமவெளியில் ஒரு புலிப் …
tamilandvedas.com › 2012/08/23 › சிந்து-ச…
23 Aug 2012 – இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு ஐம்பத்துக்கும் … உள்ள எழுத்துக்கள் இதுவரை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் …
லிங்கம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › லிங்கம்
26 Jul 2013 – சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ‘பிளாக்’கில் எழுதுபவர்கள் … உள்ள எழுத்துக்களை இதுவரையும் யாராலும் படிக்க முடியவில்லை.
சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் …
tamilandvedas.com › 2014/11/06 › சிந்து-ச…
6 Nov 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் …
சிந்து சமவெளி – Tamil and Vedas
tamilandvedas.com › 2014/05/10 › சிந்து-ச…
10 May 2014 – எழுத்து ஒன்றாக இருந்தாலும் மொழி வேறுபட முடியும். இனம் ஒன்றாக … சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் …
சிந்து சமவெளியில் மக் டொனால்ட் …
tamilandvedas.com › 2015/02/16 › சிந்து-ச…
16 Feb 2015 – சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி … அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க …
வதி | Tamil and Vedas
tamilandvedas.com › tag › வதி
20 Oct 2014 – சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் ..
–subham –