இந்து மத இடி தாங்கி அர்ஜுனன்! (Post No.5636)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London –15-59

Post No. 5636

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் அர்ஜுனனின் குறைந்தது 16 பெயர்கள் உள்ளன. கண்டு பிடித்து இடி , மின்னல் பயம் அகற்றுங்கள். விடை கீழே உளது.

அர்ஜுனனின் பத்து பெயர்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லப்படும். இடி இடிக்கும்போது குழந்தைகளைத் தாய்மார்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லச் செய்வர். அர்ஜுனன், இந்திரனின் மகன்; அதாவது இந்திரனின் அம்சத்தை உடையவன். இந்திரன்   இடி,மின்னலுக்கு அதிபதி. ஆகையால் இடி மின்னலால் பயம் ஏற்பட்கூடாதென்பதற்காக அர்ஜுனனின் பத்து பெயர்களையும் சொல்ல வேண்டும். அப்படி பத்து பேரும் நினைவு இல்லாவிடில் அர்ஜுனப் பத்து என்று சொன்னாலே போதும்.

கட்டிடங்கள், இடியினால் பாதிக்கப்படாமல் இருக்க, இடி தாங்கி அவசியம்.

இளம் சிறார்கள் இடி,மின்னலைக் கண்டு அஞ்சாமலிருக்க அர்ஜுனப்பத்து அவசியம்.

நூறு சதவிகித நம்பிக்கை உடையவர்களுக்கு இடி மின்னலில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

அர்ஜுனனின் பத்துப் பெயர்கள்

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

xxx

விடை

சவ்யசாசி

அர்ஜுன

பீபத்சு

தனஞ்சய

பல்குண

ஸ்வேதவாஹன

பார்த்த

கிரீடி

கிருஷ்ண

விஜய

பாரத

பரந்தப

குருநந்தன

குடாகேச (ன்)

கபித்வஜ

அனகன்

பாண்டவ

xxxx

 

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன், வெள்ளை நிறம் கொண்டவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்; பாண்டவர்களில் தலை சிறந்த வீரன்; வில்லுக்கு விஜயன்.
தனஞ்ஜயன் =  யுதிஷ்டிரரின் ராஜசூய யக்ஞத்தின் போது உத்தரகுரு வரை சென்று செல்வத்தைக் கொணர்ந்தவன் , அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் =அர்ஜுனன் கொடியில் அனுமன் இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது,  குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்; ப்ருதா என்பது குந்தியின் மற்றொரு பெயர்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி =  இந்திரனால் கிரீடம் சூட்டப்பட்டவன்;  கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = எல்லோரும் வலதுகையால் அம்புவிடுவர். அர்ஜுனன், இடது கையாலும் எய்ய வல்லவன். இடது கையால் அம்பு எய்பவன்.

 

TAGS–தனஞ்ஜயன், அர்ஜுனன், பத்துப் பெயர்கள்

–சுபம்-

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- கடவுள் (Post No.5633)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 8-55 am

Post No. 5633

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 27 சொற்கள் உள. கண்டுபிடித்து தமிழறிவினைப் பெருக்குங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்!!

குறுக்கே

1.பயம், ஸர்ப்ரைஸ்

4.திருடன்

7.கோபுரம் கட்ட பயன்படும்

9.முத்தம் பெறும் இடம்

10.பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.குடித்தால் போதை

12.நாய் மீது எறியலாம்

13.வருக, வருக

14.மாட்டுக்குத் தீவனம்

18.அழகு

19.பொழுதுபோக்கு, தமாஷ்

20.சிவனுடன் இணந்தது

21.பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.வயதான நிலை

3.நெல் விளையும் இடம்

4.இறைவன்

5.காலையில் சோறு போடலாம்

6.பனை மரத்து நன்கொடை

8.இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.- தேவலோக அழகி

14.- வதந்தி

16.- கண்ணே, மணியே, வா, வா

17.ஜனங்கள்

18.பல்லாங்குழி ஆடலாம்

19.ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21. மயிலின் மகிமை

 

 

விடை

1.திகில்- பயம், ஸர்ப்ரைஸ்

4.கயவன் – திருடன்

7.கருங்கல்- கோபுரம் கட்ட பயன்படும்

9.கன்னம் – முத்தம் பெறும் இடம்

10.குரு- பிரம்மா,விஷ்ணு, சிவன்

11.கள்- குடித்தால் போதை

12.கல்- நாய் மீது எறியலாம்

13.நல்வரவு- வருக, வருக

14.புல்-மாட்டுக்குத் தீவனம்

18.சோபை- அழகு

19.கேளிக்கை- பொழுதுபோக்கு, தமாஷ்

20.லிங்கம்- சிவனுடன் இணந்தது

21.தோல்- பவுடர் போடலாம், க்ரீம் போடலாம்

கீழே

2.கிழவன் – வயதான நிலை

3.வயல்- நெல் விளையும் இடம்

4.கடவுள்- இறைவன்

5.காகம்- காலையில் சோறு போடலாம்

6.நுங்கு- பனை மரத்து நன்கொடை

8.கரும்பு- இனிப்பு தருவது

  1. திறக்கப்படுவது

15.ரம்பை- தேவலோக அழகி

14.புரளி- வதந்தி

16.செல்லம்- கண்ணே, மணியே, வா, வா

17.மக்கள்- ஜனங்கள்

18.சோழி- பல்லாங்குழி ஆடலாம்

19.கேலி- ஆளைப் பாரு, மூஞ்சியைப் பாரு

21.தோகை- மயிலின் மகிமை

–SUBHAM–

வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 6 November 2018

GMT Time uploaded in London – 7-22 am

Post No. 5632

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

வேலைக்காரியை கட்டி அணைத்த  அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)

வெப்ஸ்டர் அகராதியை அறியாதோர் அறியாதோரே (அறிவற்றவர்களே) ஏனென்றால் இன்று அமெரிக்கர்கள் பின்பற்றும்  எளிமையாக்கப்பட்ட ஆங்கில ஸ்பெல்லிங்- குகளை அறிமுகப்படுத்தியவர் அவரே. எழுத்து சீர்திருத்தத்தின் சிற்பி.

அவர் அகராதி ‘படித்தவர்’, அகராதி ‘பிடித்தவர்’, அகராதி ‘செய்தவர்’ என்பது இரு சுவையான சம்பவங்கள்  மூலம் வெளிப்படும்.

அமெரிக்காவின் எழுத்தாளர், அகராதி உருவாக்கியவர், அமெரிக்க அறிவுத் தந்தை, பத்திரிக்கை ஆசிரியர், பெடரெலிஸ்ட் கட்சியின் பிரமுகர் என்று பெயர் எடுத்த நோவா வெப்ஸ்டர் (NOAH WEBSTER) 1758ல் பிறந்தார்; 1843ல் இறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் கற்றவர்.

தமிழில் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவோரை அகராதி பிடித்த ஆள் என்று பறைவர். உண்மையில் அவர்கள் செப்ப விழைவது- அகராதி ‘படித்த’ ஆள் என்பதே. அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றவர்கள், தநது புலமையினை வெளிக்காட்ட நிறைய பொன்மொழிகளை– சுபாஷிதங்களை- உதிர்ப்பர். விதண்டா வாதம், குதர்க்க வாதம், வாக்குவாதம் முதலியவற்றில் ஈடுபட்டு சொற்களுக்கு புது வியாக்கியானம் தருவர். இதன் அடிப்படையில் பிறந்ததே அகராதி ‘பிடித்த’ பயல்.

நோவா வெப்ஸ்டர் ஒரு முறை சமையல் அறையில்  வேலைக்  காரியை கட்டி அணைத்து முத்தம் தந்தபோது அவரது மனைவி திடீரென்று உள்ளே வந்துவிட்டார்.

ஆங்கில பாணியில், “மிஸ்டர் வெப்ஸ்டர், உமது செயலைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்” என்றார்

மற்ற யாராவது இப்படி செய்திருந்தால் கை, கால் நடுங்கி, உளறிக்கொட்டி, கிளறி மூடி இருப்பர்.

ஆனால் (அகராதி பிடித்த) வெப்ஸ்டர் சொன்னார்:

“அடி, என் செல்லக்கிளியே!

“நீ திடுக்கிடவில்லை! நீ ஆச்சர்யப்பட்டுப் (amazed) போனாய்!

நாங்கள் இருவர்தான் திடுக்கிட்டுப் (surprised) போனோம்”.

படித்தவர்கள் தவறு செய்தபோதும் நயமிக்கச் சொற்களைப் பிரயோகித்து தம் அறிவை பிரகாஸம் போட்டுக் காட்டுவர்.

XXXX

 

இன்னொரு முறை எழுத்து அறிவு இல்லாத ஒரு ஜீவனுக்கு கடிதம் எழுத வெப்ஸ்டர் உதவினார். அவன் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, இவர் அதை சரியான மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்.

இறுதியாக கடிதத்தை முடிக்கும் தருவாயில், வெப்ஸ்டர் கேட்டார்,

“ஐயா, வேறு ஏதேனும் சொல்ல விழைகிறீர்களா?” என்று.

அந்த ‘ஜந்து’ சொன்னது,

ஆமாம், மறக்காமல் இந்த வரியையும் சேர்த்து விடுங்கள்.

“இப்படி கொச்சையாக எழுதியதை மறந்துவிட்டு, கடித்தின் அர்த்ததி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!” (என்று எழுதிவிடுங்கள்)

அவனுக்காக அருமையான ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வெப்ஸ்டருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

‘நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’, ‘குலத்து அளவே யாகுமாம் கல்வி’ என்று ஆன்றோர்கள் செப்பியது பொய்யாமோ?

Tags-வெப்ஸ்டர், வேலைக்காரி

–சுபம்–

கற்றோரைக் கற்றோரே காமுறுவர் (Post No.5629)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 5 November 2018

GMT Time uploaded in London – 18-11

Post No. 5629

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

டான்டே (DANTE) என்பவர் உலகப்புகழ் பெற்ற கவிஞர் வரிசையில் இருப்பவர். இதாலிய மொழியில் தி டிவைன்  காமெடி (THE DIVINE COMEDY) என்ற காதல் காவியத்தை யாத்தவர். சிறு வயதிலேயே ரோமானிய கவிஞரான வர்ஜில் (VIRGIL) மூலம் ஊற்றுணர்ச்சி பெற்றவர்.

பிறந்த வருடம் 1265

இறந்த ஆண்டு 1321

இறந்தபோது வயது 56

இதாலியில் உள்ள ப்ளாரன்ஸ்  (FLORENCE) நகரில் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோதே அவருடைய மணப்பெண் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவரோ வேறு ஒரு பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு பீட்ரைஸ் என்று நாமகரணம் செய்தார். அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் பாக்கியமே இல்லாவிடினும் டிவைன் காமெடி என்னும் கவிதை உதயமாக அந்தப் பெண் காரணமானாள்.

இதாலியில் நகரங்கள் இடையே போர்கள் மூளுவது வாடிக்கை. அதில் டான்டே அலிகியரியும் பங்கேற்றார். இவருடைய மானஸீக காதலி, வேறு ஒருவரை மணந்து 24 வயதிலேயே சொர்க்கத்துக்குச் சென்றாள். அவளது நினைவால் பிறந்த ‘கவிதைத் தாஜ்மஹல்’— டிவைன் காமெடி.

ப்ளாரென்ஸ் நகர், இவர் எதிரிகள் வசமானவுடன் இவர் அந்த நகரை விட்டு நீங்கினார். இதற்குப் பிறகே கவிதை உலகில் நுழைந்தார். அவர் அரசியல் அகதியாகி நகர் நகராக அலைந்தார்.

டிவைன் காமெடியில் இவர் நரகம், இடைப்பட்ட பரிகார உலகம், சொர்கம் என்ற மூன்று இடங்களுக்குப் பயணம் செய்து இறுதியில் சொர்க்கத்தில் மானசீகக் காதலி பீட்ரைஸுடன் இணைகிறார்.

மத்தியகால  ஐரோப்பிய நம்பிக்கைகளைக் காட்டும் காலக் கண்ணாடி இந்த காதல் காவியம். எண்ணற்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் 800 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் ஊற்று இது.

XXX

கற்றோரே கற்றோரைக் காமுறுவர்!

டான்டே ஒரு முறை இதாலியின் வெரோனா நகர அரசரைச் சந்தித்தார். அவர் பெயர் டெல்லா ஸ்கேலா (SIGNOR DELLA SCALA). அவர் சொன்னார்:-

ஐயா, திருவாளர் டான்டே அவர்களே! உம்மைக் கண்டால் என் அரசவை ஆட்கள் எல்லோரும் காறித் துப்புகிறார்களே. இவ்வளவு கல்வி கற்றும் உமக்கு ஏன் இந்த நிலை?

டான்டே சொன்னார்:-

மன்னர் அவர்களே! உமக்குத் தெரியாதா? நம்மைப் போல யார் இருக்கிறார்களோ அவர்களைத் தானே நமக்குப் பிடிக்கும். இது உலக இயல்பு என்பதை அறியீரோ?

(கற்றோரே கற்றோர் காமுறுவர் (முட்டாள்களுக்கு முட்டாள்களைத்தான் பிடிக்கும்).

XXX

 

அவ்வையார் அந்தக் காலத்திலேயே சொன்னார்:

நல்தாமரைக் கயத்தில்நல் அன்னம் சேர்ந்தால் போல்

கற்றாரை கற்றாரே காமுறுவர்; – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்– மூதுரை, அவ்வையார்

தாமரைக் குளம் அழகானது; அங்கேதான் அன்னங்கள் போகின்றன. அது போல கற்று அறிந்த அறிஞர்களுடன்தான்  கற்றோர் சேருவர். மூர்க்கர் என்போர் அறிவற்றவர்கள். அவர்கள் முட்டாள்களையே நாடுவர். சுடுகாட்டில் காக்கைகள் இருப்பது போல.

டான்டே சொல்லுவதற்கு முன் அவ்வையார் செப்பிவிட்டார்.

–SUBHAM–

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது-பர்த்ருஹரி (Post No.5623)

WRITTEN BY S  SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 4 November 2018

GMT Time uploaded in London – 6-09 am

Post No. 5623

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நீதி சதகத்தில் 23 ஸ்லோகங்களைக் கண்டோம். மேலும் தொடர்வோம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது தமிழ்ப் பழமொழி. சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது — என்பது  பர்த்ருஹரி மொழி!

பர்த்ருஹரி 24,25,26,27

இந்த நான்கு பாடல்களிலும் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். கீழ் மக்கள் நாய் போன்றவர்கள். மேல் மக்களோ சிங்கம் ,யானை போன்றோர். ஒரு லட்சியத்தை அடைய உயர்ந்த உத்திகளை மட்டுமே பயன்படுத்துவர். இதைத் தமிழ்ப் புலவர்களும் அழகாக பாடி வைத்துள்ளனர். அவைகளை ஒப்பிட்டுச் சுவைப்போம்.

ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா

நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24

ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர்.

அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும்  நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும்  உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

xxxxx

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்; ஆனால் கிழடு; உடலில் பலம் குன்றிவிட்டது; உடல் ஊனம்; பலஹீனம்; மனத் தளர்ச்சி; காம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥

xxx

 

ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்; ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

கோப்பெருஞ்சோழன் செப்புவது

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ ॥

xxxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்; எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லை; அதை ஏற்பதுமில்லை.

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

பதினெட்டு சித்தர்களைக் கண்டு பிடியுங்கள் (Post No.5621)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 3 November 2018

GMT Time uploaded in London – 17-54

Post No. 5621

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பதினெட்டு சித்தர்களைக் கண்டு பிடியுங்கள் (Post No.5021)

தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கும். கீழேயுள்ள கட்டத்தில் 20 சித்தர்களுக்கு மேல் இருக்கும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது.

சித்தர்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவியாக பெயர் துவங்கும் இடத்தில் எண்களைக் கொடுத்துள்ளேன் (கட்டத்தில் இல்லாத சித்தர்கள்–கூன்கண்ணர், புண்ணாகீசர்,உரோமரிஷி)

தமிழ் சித்தர்கள்

17 14 13
6 தி 21 தே 1 அ 15
2 போ 5 12
8 கொ
7.ந மு னி
3 கோ
20 4 கை
16 த 9 11
18 பு 10, க   19

 

விடை:–

1.அகத்தியர்

2.போகர்

3.கோரக்கர்

4.கைலாசநாதர்

5.சட்டைமுனி

6.திருமூலர்

7.நந்தி

8.கொங்கணர்

9.மச்சமுனி

10.கபிலர்

11.கூர்மமுனி

12.கமலமுனி

13.இடைக்காடர்

14.சுந்தராநந்தர்

15.பிரமமுனி

16.தன்வந்திரி

17.புலஸ்தியர்

18.புசுண்டர்

19.கருவூரார்

20.இராமதேவர்

21.தேரையர்

–சுபம்–

ஜோதிடரிடம் Rs.1,57,000 ஏமாந்த பெண்மணி! (Post No.5619)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 3 November 2018

GMT Time uploaded in London – 12-28

Post No. 5619

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

என் அண்ணனிடம் (ஸந்தானம் ஸ்ரீநிவாஸன்) இலவசமாக ஜோதிடம் கேட்க நிறைய பேர் வருவார்கள். அதில் ஒரு சுவையான சம்பவம்.

பரோடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி “என் பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளாகக் கல்யாணத்துக்குப் பார்க்கிறோம்; ஒன்றும் அமையவில்லையே; யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறாள்” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

என் அண்ணன் சொன்னார்–

“அந்தப் பெண்ணின் மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாசுக்காக கேட்டுப் பாருங்கள்; ஏனெனில் இது லவ் மேரியேஜ் (LOVE MARRIAGE) ஜாதகம்” .

அந்தப் பெண்மணி சொன்னார்:

“ஐய்யய்யோ!அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது. என் பெண் ஒரு ‘நெருப்பு’. யாரையும் அப்படியெல்லாம் அண்ட விடமாட்டாள்”- என்று.

அந்த அம்மணி போகிறபோக்கில்  இந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக, தான் RS.1,57,000 செலவழித்த கதையைச் சொன்னார்.

அவர் பார்த்த ஒரு ஜோஸ்யர் சொன்னது:

“இதோ பாருங்கள்; உங்கள் பெண்ணின் ஜாதகம் , தோஷ ஜாதகம்; நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரஹத்துக்கும் சாந்தி ஹோமம் செய்ய 17,500 ரூபாய் ஆகும், ஒன்பது பேருக்கு வேஷ்டி, ஒன்பது பேருக்கு சாப்பாடு. ஆனால் ‘எனக்கு குரு தட்சிணை ஒரே ரூபாய்தான்!”

இப்படிச் சொல்லி பலவித கணக்குப் போட்டு ரூ.1 57 000 வாங்கிவிட்டார். இன்னும் கல்யாணம் ஆகவில்லையே!

கொஞ்ச காலம் கழித்து அந்தப் பெண்மணி மீண்டும் வந்தார். நீங்கள் சொன்னது சரிதான் நீங்கள் (என் அண்ணன்) சொன்ன படியே அவள் காதல் கல்யாணம் செய்து கொண்டாள்.

லண்டன் வந்திருக்கும் என் அண்ணன் சந்தானம் சீனிவாசன் சொன்ன சம்பவம் இது.

 

ஸ்வாமிஜி அடித்த ஜோக்!

எங்களுக்கு எல்லாம் மந்திரோபதேசமும் அறிவுரைகளும் வழங்கியவர் ஆயக்குடி (தென்காசி- செங்கோட்டை) ஸ்வாமிஜி கிருஷ்ணா.

அவர் சொல்லுவார்–

‘யாரையும் நம்பக்கூடாது; எந்த சாமியாரையும் நம்பக் கூடாது; சிருங்கேரி, காஞ்சி சங்கராசார்யார்களைத் தவிர வேறு யாரையும் நம்பவேண்டாம்’- என்று 50 ஆண்டுகளுக்கு முன் சொல்லுவார்.

அவர் சொன்ன விஷயம்:

ஒரு சாமியார்  திருவனந்தபுரத்துக்கு வந்தாராம்.

அவர் சொன்னாராம்–

“நான் ஸந்யாஸி; எனக்கு அதிகம் உணவு வேண்டாம்; கொஞ்சம் அன்னமும் மோரும் போதும்; ஆனால் சிஷ்யர்களுக்கு பஞ்சபக்ஷ பரமான்னம் போடுங்கள்; வடை பாயஸம், அப்பளம், ஸ்வீட் எதுவும் குறைவு வைக்கக் கூடாது”- என்று.

அவர் அறைக்குள் ஜன்னல் வழியாகப் பார்த்தால் அவர் அத்தனை வகைகளையும் ‘அடித்து நொறுக்கினாராம்’. (கபளீகரம் செய்தார்).

முன்னர் சொன்ன ஜோதிடர் ‘தனக்கு ஒரே ரூபாய் குரு தக்ஷிணை’ என்று சொன்னவுடன் இது நினைவுக்கு வந்தது!

தலைவனை நம்பாதே; தத்துவத்தை நம்பு.

ஸ்வாமிஜி கிருஷ்ணா எங்களுக்கு சொன்ன இன்னொரு அறிவுரை முன்னரே மநு தர்மசாஸ்திரம் சொன்ன அறிவுரைதான்.

“உண்மையே பேசு; பொய் பேசாதே உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே” (MANU SMRITI 4-138).

எவ்வள வு அருமையான அட்வைஸ்!

 

சுவாமிஜி சொல்லுவார்:

“டேய், யார் ஆத்துக்காவது போய் சாப்பிட்டால் எதையும் நல்லா இல்லை என்று சொல்லாதே; மோர் மிகவும் நன்றாக இருந்தது” என்று சொல்லு என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார்.

அதாவது எதையும் பாஸிட்டிவாக (POSITIVE) சொல் என்பதே இதன் தாத்பர்யம்!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்- குறள் 291

மநு சொன்னதை அப்படியே வள்ளுவனும் செப்பினான்.

-சுபம்–

ஸம்ஸ்க்ருதம் சாகாது! சாகவும் முடியாது!! (Post No.5612)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 8-53 am

Post No. 5612

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஸம்ஸ்க்ருதம் செத்தால் தமிழும் சாகும். ஏனெனில் தமிழ் இலக்கியம், தமிழ் அகராதி, நிகண்டு முழுவதும் பிரிக்க முடியாத அளவுக்கு சம்ஸ்க்ருதச் சொற்கள்!!

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ என்ற உலக சமாதான, உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு பற்றிய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி , ஐ.நா.சபையில் பாடியதன் மூலம் ஸம்ஸ்க்ருத ஒலி உலக நாடுகள் முழுவதிலும் ஒலித்தது.

ஸம்ஸ்க்ருதத்தில் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் போன்ற தனிப்பாடல் திரட்டு நூல்கள் ஏராளம், ஏராளம். அதில் அதி பயங்கர ‘செக்ஸி’ பாடல் முதல் நக்கல், கிண்டல் பாடல்கள் வரை பல்லாயிரம் உள.

யார் எல்லாம் ஸம்க்ருதத்தைக் கிண்டல் செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள், அப்பா பெயர்கள், அம்மா பெயர்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்றும் காட்டினேன்.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ, திருக்குறளில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ அவை செத்துவிடும் என்றும் காட்டினேன்.

தமிழில் இது வரை ஒரு அகராதியோ, நிகண்டோ வரவில்லை என்பதையும் சொல்லுவேன். பக்கத்துக்குப் பக்கம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!! ஆனால் நாம் அதை தமிழ் நிகண்டு, தமிழ் அகராதி என்போம்!!

நிற்க.

இன்றும் கூட ஸம்ஸ்க்ருதத்தில் நையாண்டி பாடல் எழுத முடியும் என்று மதுரை அன்பர் எழுதியதை எனது சகோதரர் (வாட்ஸ் அப்பில் வந்ததை எனக்கு) அனுப்பினார். இதோ இட்லி பற்றிய ஸம்ஸ்க்ருத  கவிதை:–

 

–subham–

மீ டூ?! Me Too – ஓடாதீங்க, படியுங்க!! (Post No.5610)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 Novemberr 2018

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

Post No. 5610

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

ச.நாகராஜன்

Me Too? மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

Me Too பற்றி ஒரு ஜோக் சொல்லப் போறேன்னு சொல்ல வந்தேன். அதற்குள் இப்படி ஓடினா, எப்படிங்க!

கொஞ்சம் மேலே படிங்க!

ஜோக் இது தான்! கார்ட்டூனில் வந்தது இது.

கணவன் அலுவலகம் செல்லும் போது “ ஐ லவ் யூ” என்று சொல்லி விட்டுக் கிளம்ப ஆயத்தமானான்.

மனைவி Me Too என்கிறாள்.

அவ்வளவு தான், அலறி அடித்துக் கொண்டு கணவன் ஓடுகிறான்!

நல்ல ஜோக், இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

*

மீ டூவை ஒட்டி எழுந்த வீடியோக்களை இணையதளத்தில் காணலாம்.

நாளுக்கு ஒரு – இல்லை, பல – வீடியோக்கள் –  காமவெறிக் கவிஞரைப் பற்றிய பரபரப்பூட்டும்  செய்திகளைத் தருகின்றன.

‘உன் இடுப்போ ஒரு உடுக்கை

உன் மார்போ  ஒரு படுக்கை’

என்ற ‘தமிழை வாழ வைக்கும் மகத்தான தமிழ் காமக் கொடூரக் கவிஞர்’ என்னை நோக்கிப் போனில் பாடினார் என்று ஒரு பெண் சொல்லும் வீடியோ!

பிரபல பாடகர் ஒருவரின் மருமகள், ‘அந்த ஆள் அப்படிப்பட்டவர் தான்’ என்று கூறும் ஒரு வீடியோ!

ஆண்டாளைப் பழித்த அவனுக்கு ஆயுள் முழுவதும் சாபம் தான் என்று ஒரு வீடியோ!

காமக் கொடூரக் கவிஞரின் மனைவியே அவர் நடத்தும் பெண்கள் ஹாஸ்டலில் அந்த மனிதர் வரும் போதெல்லாம் எல்லாப் பெண்களும் கதவை சாத்திக் கொண்டு ரூமிலேயே இருக்க வேண்டும், வெளியில் இருக்க வேண்டிய பெண்கள் மார்பில் துப்பட்டாவைக் கண்டிப்பாக மார்பில் போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாக ஒரு வீடியோ!

ஏகப்பட்ட பெண்கள் அந்தக் கொடூரனால் அவஸ்தைப் பட்டதாகத் தனக்கு ஏராளமான ட்விட் வருவதாக ஒரு வீடியோ!

சொல்லி மாளவில்லை, வீடியோக்களின் எண்ணிக்கை.

இதை வழக்கம் போல பார்ப்பனீயமாக மாற்ற முயலுகிறது இன்னொரு வீடியோ!

தடவிப் பார்க்க ஆசைப்படும் போது பார்ப்பனீயம் தெரியவில்லை, அதைத் தட்டிக் கேட்டால் பார்ப்பனீயமா என்று இன்னொரு வீடியோ!

பிரபல நடிகர் இப்படிப்பட்ட கொடூரங்களைத் தட்டிக் கேட்க நான ஒரு தளம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லும் ஒரு வீடியோ;

அட, உனக்கே ஒரு மீ டூ வரப்போகிறது என்று அவரை நையாண்டி செய்து இன்னொரு பிரப்ல மாஜி வில்லன் நடிகரின் வாரிசு முழங்கும் இன்னொரு வீடியோ!

அட, நல்ல தமிழகமே! உனக்கு இப்படி ஒரு சாபக் கேடா!

நல்லவரை வீட்டிற்கு அனுப்பியதன் பலனை 1967லிருந்து அனுபவிக்கிறாயா!

*

ஒரு அரைவேக்காடு – கிறிஸ்தவ திராவிட இயக்கப் பேர்வழி – சின்ன வயது – கண்டபடி தமிழ்நாட்டாரைப் பேசும் ஒரு வீடியோ! அதில் அந்தப் பண்பாடு கெட்டவன் ரமண மஹரிஷியைப் பற்றியும் பேசுவதைக் கேட்ட பின்னர் தமிழகத்தின் மொத்த அவலமும் தெரிய வருகிறது.

பிரபல அப்பா நடிகரைப் பற்றி மகள் உண்மைகளைக் கொட்டிப் பேசும் வீடியோ!

பிரபல நடிகை பரிதாபமாக நடு இரவில் முழித்துப் புலம்புவதாக – “கேள்விப்படுவதாக” – ஒரு வீடியோ!

பழைய கால ஹீரோ நடிகர் – இன்று பரிதாபகரமான நிலையில் இருப்பதாக ஒரு வீடியோ!

முஸ்லீம்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

எல்லாம் ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நீடிக்கும் அவ்வளவு தான்!

அதற்குள் செய்ய வேண்டிய டாமேஜை செய்து முடித்து விடும்!

*

இவற்றில் எத்தனை உண்மையோ!

எத்தனை பொய்யோ!

ஒரு தொழில்நுட்ப உத்தியை இந்த அளவு கேவலமாக மாற்றும் “சிறந்த பண்பை” இன்றைய தமிழகம் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கிறதா?

காமக் கொடூரக் கவிஞன் போன்றவரை எக்ஸ்போஸ் செய்ய வீடியோவின் துணையை நாடினேன்; மீடியாவை அழைத்து ‘ மீ டூ’ செய்தேன் என்றால் புரிகிறது;

ஆனால் இதையே வெறுப்பை வளர்க்கும் கிறிஸ்தவ, ஜிஹாதி, கம்யூனிஸ, தீய திராவிட சக்திகள் முதலியவற்றின் கருவியாக மாற்றும் போது தான் மனம் கசக்கிறது!

*

ஆபாசமாக எழுதும் மஞ்சள் பத்திரிகையான ‘இந்துநேசனை’ கண்டு கொதித்து சின்ன அண்ணாமலை அருள் என்ற கமிஷனரிடம் ரிபோர்ட் செய்ய, அவர் ஒரே நாளில் அந்தப் பத்திரிகையைத் தடை செய்ததை சின்ன அண்ணாமலை புத்தகத்தின் வாயிலாகப் படித்து அறிகிறோம்.

மஞ்சள் பத்திரிகை ஒழிந்தது.

இப்போது ஒரு தொழில்நுட்ப உத்தியாக மஞ்சள் வீடியோ மலர்கிறதோ?!

மஞ்சள் வீடியோ தமிழகத்தை மஞ்சள் தமிழகமாக ஆக்கி விடுமோ?!

’இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’, மீ டூ இயக்க வெளிப்பாடுகள் நிச்சயம் அவசியமே!

ஆனால் இதை பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால் திசை திருப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம் அல்லவா!

இதற்கு இன்றைய சட்டத்தில் இடமில்லையா, அல்லது இடமிருந்தும் அமுல் படுத்த மனம் இல்லையா?

சிந்திக்க வேண்டிய கேள்வி இது!

***

5.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? QUIZ க்விஸ்- பகுதி 5 (Post No.5608)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 7-47 AM

Post No. 5608

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மஹாராணிகள்

தமிழ்நாட்டு மஹாராணிகளை அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்; சங்க இலக்கியம் ,கல்வெட்டுகளில் இருந்து புகழ்பெற்ற வரலாற்று, கல்வெட்டு அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது புஸ்தகத்தில் கொடுத்துள்ளார். கடைசி கேள்வியைக் காண்க

81.வர்த்தமான மஹாவீரரின் தாயார் பெயர் என்ன?

82.ஜவஹர்லால் நேருவின் சகோதரி; ஐ.நா.சபையில் பெரும்பதவி வகித்தவர் யார்?

83.முதலில் வக்கீல் தொழில் ஆற்றிய பெண்மணி யார்? பார்ஸி இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பணிபுரிந்தார்

84.இந்தப் பெண் அறிஞர் ஜனகனுடன் தத்துவ விஷயங்களை விவாதித்ததாக மஹாபாரதம் பகரும்; மைத்ரேயியும் அல்ல, கார்கியும் அல்ல; வேறு ஒருவர், யார் அவர்?

85.கேரளத்தில் பிறந்த தாவரவியல் அறிஞர்; இந்திய தாவரவியல் சங்கத்தில் அழியா இடம்பெற்ற மாது யார்?

86.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 115 புஸ்தகங்களை எழுதிக் குவித்த நாவல் ஆசிரியை, பத்திரிகையாளர் யார்?

87.மகனும் மன்னனுமான அலார்கா என்பவனுக்கு தர்ம உபதேசம் செய்த தாய் யார்? மார்கண்டேய புராணம் புகலும், புகழும் நங்கை அவள்.

88.காஷ்மீரின் 17ஆம் நூற்றாண்டு  பக்தை, கவிஞர் யார்?

89.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி, விடுதலைப் போராட்ட வீராங்கனை; இந்திரா காந்தியின் தாய் யார்?

90.ஜெயப் ப்ரகாஷ் நாராயணனின் மனைவி; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் பெயர் என்ன?

91.புத்தர் சொற்பொழிவாற்றுகையில் சப்தம் போட்டவுடன் ஏழு வகை மனைவி பற்றி புத்தர் பட்டியல் கொடுத்தார்; யார் அந்த நங்கை?

92.முதல் குலோத்துங்க சோழனின் மனைவியர் இருவர் என்று கல்வெட்டுகள் பேசும்; அந்த மஹாராணிகள் எவரோ?

93.கவிஞர், பாடகி, 90-க்கும் மேலான இந்திப் படங்களில் நடித்த நடிகை யார்?

94.இந்தியாவின் பொற்காலம் எனப்படும் குப்த சாம்ராஜ்யத்தின் மஹத்தான பேரரசன் சந்திர குப்தன்; அவன் ஒரு இளவரசியை மணந்து மகத சாம்ராஜ்யத்தையே வரதட்சிணையாகப் பெற்றான். யார் அந்த சீதனக் காரி (ஸ்ரீ தனம் = சீதனம்)?

95.அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்றிய சகோதரி யார்?

96.கடைசி கேள்வியில் இணைக்கப்பட்டது

  1. காஷ்மீர் மஹாராணிகளுக்கு விஷேச கஜானா, சிறப்பு அதிகாரங்கள் உண்டு. அதன் கீழ் பத்மராஜாவின் முறைகேடான நிர்வாகத்தை ஒரே ஆணையில் குப்பையில் போட்ட மஹாராணியின் பெயர் என்ன?

98.பாண்டவர் இருவரின் தாய்; பாண்டுவுடன் வானப்ரஸ்தம் சென்று, அவருடன் காட்டில் உயிர் துறந்த புனிதை யார்?

96,99, 100.ஒவ்வொருவர் பெயர் சொல்லியும் யார், எவர் என்று

கேட்காமல் ஒரு தமிழ் மஹாராணி பட்டியல் தருகிறேன் . யார் என்று கண்டுபிடியுங்கள்.

சங்கா-

தரணி முழுதுடையாள்-

செம்பியன் மாதேவி-

அம்மங்கா தேவி-

குந்தவை-

மணக்கிள்ளி-

அவனி முழுதுடையாள்- மங்கையர்க்கரசி-

பதுமன் தேவி-

ரங்கபதாகை-

விலாசவதி-

பஞ்சவன் மாதேவி-

வானவன் மஹாதேவி-

தியாக பதாகை-

மதுராந்தகி-

குந்தவை

ஒரட்டானன் சொரப்பை-

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்-

 

ANSWERS:–

81.திரிஷலா

82.விஜயலெட்சுமி பண்டிட்

83.கார்னீலியா சோரப்ஜி

84.சுலபா

85.டாக்டர் ஜானகி அம்மாள்

86.கோதை நாயகி அம்மாள்

87.மதலஸா

88.ரூப பவானி

89.கமலா நேரு

90.பிரபாவதி தேவி

91.சுஜாதா

92.தியாகவல்லி, ஏழிசை வல்லபி

93.மீனா குமாரி

94.குமார தேவி

95.திலகவதி

97.சூர்யமதி

98.மாத்ரி

  1. 99, 100++++++

சங்கா- பல்லவ மன்னன் நந்திவர்மன் மனைவி

தரணி முழுதுடையாள்- விக்கிரம சோழன் மனைவி

செம்பியன் மாதேவி- கண்டராதித்த சோழனின் மனைவி

அம்மங்கா தேவி- ராஜேந்திர சோழன் மகள்; சாளுக்கிய ராஜ ராஜனின் மனைவி

குந்தவை- ராஜராஜனின் மகள்; சாளுக்கிய மன்னன் விமலாத்தனின் மனைவி

மணக்கிள்ளி- சோழன் மகள்; நெடுஞ்சேரலாதனின் மனைவி

அவனிமுழுதுடையாள்-மலாட குலப் பெண், இரண்டாம் ராஜ ராஜனின் மனைவி

மங்கையர்க்கரசி- சோழன் மகள்; பாண்டியன் நெடுமாறனின் மனைவி

பதுமன் தேவி- வேளாவிக் கோமான் மகள்; சேரலாதன் மனைவி

ரங்கபதாகை- பல்லவமன்னன் இராஜ சிம்மன் மனைவி

விலாசவதி- இராஜ சிம்மனின் மற்றொரு மனைவி

பஞ்சவன் மாதேவி- முத்தரையன் மஹிமாலயன் மனைவி

வானவன் மஹாதேவி- உத்தம சோழன மனைவி

தியாக பதாகை- விக்கிரம சோழன் மனைவி

மதுராந்தகி- முதல் குலோத்துங்கனின் முதல் மனைவி; அவள் இறந்த பின்னர் வேறு இருவரை மணந்தான்.

குந்தவை (ராஜராஜனின் தமக்கை)- வந்தியத்தேவன் மனைவி

ஒரட்டானன் சொரப்பை- உத்தம சோழனின் பல மனைவியருள் ஒருத்தி

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-இராஜ இராஜனின் தேவியரில் ஒருத்தி

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்- விக்ரம சோழனின் முதல் மனைவி; பின்னர் தியாக பதாகை

தமிழ் மஹாராணிகளின் கல்வெட்டுக் குறிப்புகளை டாக்டர் நாகசாமி புஸ்தகத்தில் காண்க.

–SUBHAM–