சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்! (Post no.5604)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 October 2018

Time uploaded in London – 7-24 AM (British Summer Time)

Post No. 5604

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்!

ச.நாகராஜன்

1

சொந்தத்தில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று ஒரு பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் பழமொழி சபரிமலை தரிசன விஷயத்தில் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

சூன்யத்தைத் தானே வைத்துக் கொண்டு விட்டார்கள்.

தெய்வ சாபம் மற்றும் தேச சாபம் அவர்களை விடாது.

விளைவை சீக்கிரத்தில் அனுபவித்தே ஆக வேண்டும்.

விளைவு தேர்தல் முடிவின் ரூபத்தில் வந்து சேரும்.

கம்யூனிஸ்டுகளின் அக்ரமம் சபரிமலை சாஸ்தாவிந் அருளினால் ஒரு முடிவுக்கு வந்தே தீரும்!

சொந்த நாட்டிலேயே அழிந்து விட்ட கம்யூனிஸம் இந்தியாவில் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சுவாசம் சீக்கிரம் நின்று விட அவர்களே வழியைத் தேடிக் கொண்டு விட்டார்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

2

ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? எந்தக் கடையனும் சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று அர்த்தமா?

ஊடக தர்மம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி இந்தியர்,நாட்டுக்குச் சொந்தமானவர்கள் வாழ்கையில், அதில் ஓரிரு தேச துரோகிகள்  சொல்வதை தினமும் ஒரு மணி நேரம் ஒளி பரப்பி அதை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாகச் சித்தரிக்க முற்படுவது தான் ஊடக தர்மமா?

நீதி மன்ற நியாயம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி மக்களுக்கும் ஒரே நீதி ஒரே நியாயம் ஒரே சட்டம் என்பதல்லாமல் ஹிந்துக்களுக்கு மட்டும் தனியாக ஒரு சட்டம், இதர மதங்களுக்கு இதே இந்தியாவில் ஒரு தனிச் சட்டம் என்பதா நீதி மன்ற நியாயம்?

ஹிந்துக்களுக்கான நாட்டில் ஹிந்துக்களை மட்டும் பாதிக்கும் விதத்தில் சட்டம் இருப்பது நியாயமாகுமா?

எண்ணிப் பார்த்து இதில் உள்ள குறைகளைக் களைய வேண்டிய தருணம் வந்து விட்டது, இல்லையா?!

3

செகுலரிஸம் என்றால் ஹிந்து விரோதம் என்று அர்த்தமா?

அப்படித்தான் கடந்த 70 ஆண்டு கால பாரத வரலாறு கூறுகிறது.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு பெண் பாதிரியாராக இருக்க முடியாது.

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பதுண்டா?

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வஃப் போர்ட் அல்லவா தீர்மானிக்கிறது!

கிறிஸ்தவரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வடிகன் காட்டும் வழியில் இநதிய கிறிஸ்தவ தலைமைப் பீடம் அல்லவா தீர்மானிக்கிறது!

ஆனால் ஹிந்து கோவில்களின் பணமோ அரசு சொல்லும் வழியில் பணத்தை ஹிந்து கோவில்களுக்கான ஆக்கபூர்வமான வழியில் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் செலவழிக்கப்படுகிறது.

நீதி மன்றங்கள் இஸ்லாமியர் பற்றியோ அல்லது கிறிஸ்தவர் பற்றியோ எந்த ஒரு வழக்கையும் மத ரீதியாக சுயேச்சையாக விசாரித்துத் தீர்ப்பு சொல்ல முடியாது.

அதாவது செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் – ஹிந்து விரோதம் மட்டுமே – என்பது உறுதியாகிறது!

4

பாரம்பரிய பழக்கம் என்பது ஹிந்து  மதத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

சபரி மலை, திருப்பதி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆங்காங்கு வழி வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் அப்படியே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கு என்ன சங்கடம், தெரியவில்லை.

அதிக வருமானம் வரும் ஒரு கோவிலின் அதிகப்படியான பணத்தை, வருமானம் அவ்வளவாக இல்லாத கோவிலுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?

அதை விடுத்து நலத் திட்டங்கள் என்ற பெயரால் நினைத்தபடி செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை?

இதற்கான ஆலய வாரியம் ஒன்றல்லவா சுயேச்சையாக செயல்படும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும்?

கம்யூனிஸ்டுகள், நாத்திகக் கும்பலான திராவிட இயக்க ஆதிக்கத்திலிருந்து கோவில்கள் விடுபட இதுவல்லவா வழி?

சபரிமலையில் கம்யூனிஸ்டு பெண்களையும், இஸ்லாமிய பெண்களையும் மாறு வேடத்தில் – குறிப்பாக 10 முதல் 50 வயதுக்குள்ளவராக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து – வலிய அனுப்ப முற்படுவது நியாயமா?

ஹிந்துக்களும் யோக்கியமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இது பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

உரிய முறையில் ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமைகளை – அதிகப்படியான உரிமைகளை அல்ல – அடிப்படை உரிமைகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்குரிய சட்டங்களை இயற்ற வேண்டும்!

இதற்கு ஹிந்துக்கள் ஒரே குரலாக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்.

இதை இயக்கபூர்வமான வழியில் செய்ய வேண்டுமெனில், ஆர் எஸ் எஸ் ஒன்றே தான் வழி!

நான்ய பந்தா வித்யதேயனாய!

இதை விட வேறு வழி ஒன்றுமில்லை!

***

பகுதி 4 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5602)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 October 2018

GMT Time uploaded in London – 8-23 AM

Post No. 5602

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நாலாவது பகுதியில் இந்தியாவுக்கும், ஹிந்து கலாசாரத்துக்கும் உழைத்த சில வெளிநாட்டுப் பெண்மணிகளையும் நினைவு கூறுவோம்; இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்:–

61.இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த குஜராத் பார்ஸி பெண்மணி யார்? இவர் முகத்துடன் தபால் தலையும் வெளியிடப் பட்டுள்ளது

62.இந்தியர்களுக்கும் ஐரிஷ் காரர்களுக்கும் சுய உரிமை தேவை என்று  வாதாடிய பிரம்ம ஞான சபைப் பிரமுகர் யார்? இவர் முகத்துடன் தபால் தலையும் வெளியிடப் பட்டுள்ளது.

63.மார்கரெட் எலிஸபெத் நோபிள், சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யை ஆனாள். அவளுடைய புதிய பெயர்?

64.புதுவையில் புகழ்பெற்ற மிர்ரா ஆல்பாஸா யார்?

65.உத்தரப் பிரதேச பெண் கவிஞர்; முதல் பெண் சத்யாக்ரஹி; ‘ஜான்ஸீ கீ ராணி’ என்ற இந்திப் பாடல் மூலம் சுதந்திரக் கனல் மூட்டியவர் பெயர் தெரியுமா?

66.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேஸீயப் படையின் (INA) பெண் தலைவி யார்?

 

 

67.பன்னிரெண்டாம் நூற்றாண்டுக் கன்னட மொழிக் கவிஞர்;லிங்காயத் வழிபாட்டை ஆதாரித்தவர் யார்?

  1. ஆர்.எஸ்.எஸ்.பெண்கள் பிரிவு என்று கருதப்படும் ராஷ்ட்ர ஸேவிகா சமிதியைத் துவக்கியவர் யார்?

69.அசோகன் தனது மகளை இலங்கைக்கு அனுப்பி, புத்த மதப் பிரசாரம் செய்தான்? இலங்கைக்கு வந்த நங்கை யார்?

70.மாதவியின் மகள்; துறவுக்கோலம் பூண்டு புகழ் பெற்றவர்;கடல் வணிகர் வணங்கும் தெய்வத்தின் பெயர்; அவரைத் தெரியுமா?

71.பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய நாகா இன ராணியின் பெயரை அறிவீர்களா?

72.கபிலன் என்னும் பார்ப்பனப் புலவரால் காப்பாற்றப்பட்ட பாரி மகளிரின் பெயர்கள் என்ன?

73.இந்தியாவில் அணுகுண்டு வெடித்தும், வங்க தேசத்தை உருவாக்கியும் உலக அரங்கில்  இந்தியாவின் புகழை உயர்த்திய இரும்பு நங்கை யார்?

74.பார்ப்பன அமைச்சர்கள் தடுத்தும் பாண்டிய மன்னரின் சிதைத் தீயில் குதித்து உடன்கட்டை ஏறிய புறநானூற்றுப் புலவர் யார்?

75.கணித மேதை; கம்ப்யூட்டர்களைத் தோற்கடித்து கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற பெண்ணரசியின் பெயர் என்னவோ?

76.புத்தரைச் சந்தித்த விலை மாது; அவரது உபதேசத்தைக் கேட்டு சந்யாசினியான வைசாலி நகர பேரழகி யார்?

  1. கணவர் சொல்லைத் தட்டாததால் அற்புதம் புரிந்த, வள்ளுவரின் மனைவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன?
  1. விண்ணில் சென்ற முதல் இந்திய மங்கை; ஆனால் பூமிக்குத் திரும்ப இயலாமல் புகழ் உடம்பு எய்திய பெண்ணரசியின் பெயர்?

79.மதுரையில் பிறந்தவர்; பிரம்ம ஞான சபைப் பிரமுகர்; நடனத்தினால் புகழ் எய்திய மாது. அவர் யார்?

80.கணவருக்கும் ஆதி சங்கரர் என்ற உலகப் புகழ்பெற்ற இந்திய தத்துவ ஞானிக்கும் இடையே நடந்த விவாதப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிப் புகழ் எய்திய ஞானியின்  பெயர் என்ன?

 

விடைகள்

61.மேடம் பிகாஜி காமா

62.அன்னி பெஸன்ட்

63.சகோதரி நிவேதிதா

  1. அரவிந்த ஆஸ்ரம அன்னை

65.சுபத்ரா குமாரி சௌவான்

66.கேப்டன் லக்ஷ்மி

67.அக்க மஹாதேவி

68.லக்ஷ்மிபாய் கேல்கர்

69.சங்கமித்ரை

70.மணிமேகலை

71.ராணி கண்டின்லியூ

72.அங்கவை, சங்கவை

73.இந்திரா காந்தி

74.பூதப் பாண்டியன் தேவி

75.சகுந்தலா தேவி

76.ஆம்ர பாலி / அம்பா பாலி

77.வாசுகி (மாதானுபங்கி)

78.கல்பனா சாவ்லா

79.ருக்மிணி தேவி அருண்டேல்

80.உபய பாரதி

 

ANSWERS

61.MADAM BHIKAIJI CAMA

62.ANNIE BEASANT

63.NIVEDITA

64.Mirral Alfasa born to Egyptian mother a Turkish father is known as MOTHER OF AUROBINDO ASHRAM

65.SUBHADRAKUMARI CHAUHAN

66.CAPTAIN LAKSHMI OF INA

67.AKKAMAHADEVI

68.LAKSHMI BHAI KELKAR

69.SANGAMITRAI

70.MANIMEGALAI

71.RANI GAIDINLIU OF NAGALAND

72.ANGAVAI, SANGAVAI (Paari Makalir)

73.INDIRA GANDHI

74.BHUTHAPANDIYAN DEVI

  1. SHAKUNTALADEVI, MATHEMATICIAN
  2. AMRA PALI (AMBA PALI)

77.VASUKI (Mathanubhangi is her other name)

78.KALPANA CHAWLA

79.RUKMINIDEVI ARUNDALE, DANCER

80.UBHAYA BHARATI

XXXXXX SUBHAM XXXXXX

பகுதி 3 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5599)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 October 2018

GMT Time uploaded in London – 6-42 am

Post No. 5599

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Part 3 Tamil Quiz on Great Indian Women

பகுதி 3 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5599)

  1. காகதீய சாம்ராஜ்யத்தின் முழு முதல் மன்னராக ஆட்சி செய்த ராணி. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகராசி. யார் அவர்?

42.காண்டவ வன (கோண்ட்வானா) ராணி; 500 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆண்ட நங்கை யார்?

43.மராட்டிய பக்தி  இலக்கியத்தில் புகழ்பெற்ற மாதரசி; மாமியாரின் கொடுமையையும் மீறி விட்டலாவைத் தொழுதார். தமிழ் உள்பட பலமொழிகளில் திரைப்படக் கதையானவர். யாரோ அவர் யரோ?

44.மதுரை நாயக்க வம்ச ராணி; ராணி மங்கம்மாளின் பேத்தி. யார் அவள்?

45.கணித மேதை பாஸ்கரரின் புதல்வி; அவரது நீங்காத நினைவுக்காக அவள் பெயரில்  புஸ்தமும் எழுதினார். அந்த புகழுக்குரிய பெண்ணரசி யார்?

46.இந்தியாவின் கவிக்குயில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர், வங்காளக் கவிஞர். யார் அவர்?

47.அர்ஜுனன் மணிபுரத்துக்கு வந்தபோது

சித்ராங்கதை என்ற இளவரசியை மணந்தான். அவளுடைய தமிழ்ப் பெயர் என்ன?அவள் பெயரில் நாடகம், நாட்டுப்புற பாடல்கள் உள. அந்த அழகி யார்?

48.தமிழ் கற்கும் அனைவரும் அறிந்த பெண்மணி; சங்க காலம் முதல் மூன்று பெயர்களாவது இவர் பெயரில் நூலெழுதி இருக்கிறார்கள். யார் அந்த மூதாட்டி?

49.மஹாபாரத திரவுபதி போலப் போராட்டக் காரி: துணிச்சல் மிக்க பத்தினித் தெய்வம். 12 வயதில் 16 வயது வணிகனை மணந்த நங்கை யார்?

50.கரிகால் சோழனின் மகள்; காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கணவணை மீட்ட காரிகை யாரோ?

51.திருப்பாவை முப்பதும் செப்பினாள்; பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை. யார் அவர்?

52.காஷ்மீரின் புகழ் பெற்ற சிவ பக்தை; சைவ சித்தாந்தி. யார் அவர்?

53.தட்சிணேஸ்வரத்தில் காளியின் அருட் மழையில் நனைந்தவரின் மனைவி; அவரும் புனிதை; யார்?

54.மஹாத்மா காந்தியின் மனைவி பெயர் என்ன?

55.ஐ.நா.சபையில் தமிழ் முழக்கம், ஸம்ஸ்க்ருத முழக்கம் செய்யும் கான மழை பெய்த புகழ் மிகு, அருள் மிகு பாடகி  யார்?

56.பாரதியாரின் பாடல்களைத் திரைப்படத்தில் பாடி தேசபக்திக் கனல் எழுப்பிய இசையரசி யார்?

57.மேற்கூறிய இரு கர்நாடக  இசையரசிகளுடன் சேர்ந்து இசை மூவர் என்று பெயர் எடுத்தவர்களில் ஒருவர்; ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்; லலிதாங்கியின் மகள்; யார் அவர்?

58.நடனம் என்றால் தஞ்சாவூர்  மாது ஒருவரின் பெயரே முழங்கும். யார் அவர்?

59.புத்தரின் மனைவி பெயர், ராகுலனப் பெற்றெடுத்த பெண்ணரசி பெயர் என்ன?

60.மஹாஷ்டிர மாநிலத்தின் கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கவிஞர், புனே நகரில் பிளேக் நோய் கண்டு இறந்த பெண்மணி யார்?

 

விடைகள்:–

41.ருத்ரமாதேவி

42.ராணி துர்காவதி

43.சக்குபாய்

44.ராணி மீனாட்சி

45.லீலாவதி

46.சரோஜினி நாயுடு

47.அல்லிராணி- சித்ராங்கதா

48.அவ்வையார்

49.கண்ணகி

50.ஆதிமந்தி

51.ஆண்டாள்

52.லல்லேஸ்வரி, காஷ்மீர்

53.சாரதாபாய்

54.கஸ்தூரிபாய்

55.எம்.எஸ்.சுப்புலெட்சுமி

56.டி.கே.பட்டம்மாள்

57.எம்.எல்.வசந்தகுமாரி

58.பால சரஸ்வதி

59.யசோதரா

60.சாவித்ரிபாய் பூலே

ANSWERS

41.RUDRAMA DEVI

42.RANI DURGAVATI

43.SAKKUBHAI

44.MEENAKSHI OF MADURAI

45.LEELAVATI (Lilavati)

46.SAROJINI NAYUDU

47.ALLI RANI/CHITRANGADA

48.AVVAIYAR

49.KANNAKI

50.ADI MANTHI

51.ANDAL

52.LAL DED (Lalleswari) OF KASHMIR

53.SARADA DEVI

54.KASTURIBHAI

55.MS SUBBULAKSHMI

56.DK PATTAMMAL

57.M L VASANTHAKUMARI

58.BALA SARASVATI

59.YASODHARA, WIFE OF BUDDHA, MOTHER OF RAHULA

60.SAVITRIBHAI PHULE

–subham–

2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 October 2018

Time uploaded in London – 6-18 am

(British Summer Time)

Post No. 5596

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

முதல் பகுதியில் 20 இந்தியப் பெண்க   ளைக் கண்டோம் . மேலும்

இருபது பேரைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்; இலக்கியத்தில், சரித்திரத்தில், வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்கள்

இவர்கள்; யார் இவர்?

21.புத்தர் காலத்தில், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசன் உதயணனின் அன்பு மனைவி; நாடகத்திலும், கதைகளிலும் நீங்காத இடம் பெற்றவள்; யார் அவர்?

22.ஹர்ஷவர்தனனின் அன்பு சகோதரி. அவருடைய கணவர் போரிலிறக்கவே, காட்டில் சிக்கிய இப்பெண்ணை மலைஜாதி மக்கள் உதவியுடன் ஹர்ஷன் மீட்டான்.   யார்?

23.தமிழ்க் கவிஞன் கம்பனின் மகன் அம்பிகாபதி. அவருடைய காதலி யார்?

24.ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க வீர சிவாஜிக்கு கதைகள் மூலம் ஊற்றுணர்ச்சி தந்த தாய் யார்?

25.போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல கணவனைப் பின்தொடர்ந்து வந்து அவரது மதுரை வெற்றியை ‘மதுரா விஜயம்’ நூல் மூலம் தந்த பெண் யார்?

26.ஆப்கானிஸ்தானில் இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் பகுதியிருந்து வந்த பெண்; கணவனுக்குக் கண் தெரியாததால்,வாழ்நாள் முழுதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த பத்தினி யார்?

27.துணிச்சல்மிக்க உண்மை விளம்பி; மகனைப் பள்ளிக்கு அனுப்பி, உன்  தந்தை பெயரைக் கேட்பார் குருநாதர்; தாய்க்கே தெரியாது என்று சொல். ஸத்யகாமனை அனுப்பிய தாய் யார்?

28.உலகமே வியக்கும் இலக்கண புஸ்தகத்தை எழுதியவரின் தாயார் யார்? தன்னை தாயார் பெயரைச் சொல்லி …….புத்ரன் என்று அழைத்தார். பெருமைக்குரிய தாய் யார்?

29.வெளிநாட்டில் தோன்றிய மதங்கள் எல்லாம் கடவுளை ‘அவன்’ HE என்று ஆண்மகனாக எழுதின. ஆனால் இந்துக்களோ பெண்களுக்கு மதிப்பளித்து ‘கடவுளர்க்கெல்லாம் தாய்’ (Mother of all Gods)  என்ற பட்டத்தைப் பெண்ணுக்குக் கொடுத்தது, யார் அவர்?

30.செட்டியார் குலத்தில் அவதரித்து, தென் கிழக்காசிய நாடுகளில் புகழ்பரப்பிய, எலும்பும் தோலுமான சிவ பக்தை யார்?

31.கௌதம புத்தரை ஈன்றெடுத்தவர்; சுத்தோதனனின் மனைவி யாரோ?

32.சீதை மனம் நொந்து தற்கோலை பற்றி பேசிய போதெல்லாம், நல்ல செய்தி வழங்கிய பெண்; விபீஷணனின் மகள் யாரோ?

33.கணவர் கண்டேர் ராவ் ஹோல்கர் போரில் கொல்லப்பட்ட போதும் ,தானே சென்று சண்டையிட்ட மாள்வ தேச வீராங்கனையின் பெயர் என்ன?

34.’ஜான்ஸி கீ ராணி’ என்று புகழ்பெற்றவர். 1857ம் ஆண்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் சுதந்திர யுத்தத்தில் வீரப் போரிட்டவர். அவர் யார்?

35.பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட கிட்டூர் ராணி; கர்நாடகத்தில் இவர் பெயரை அறியாதார் இல்லை; யார் அவர்?

36.கூன் பாண்டியனை, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ மாற்ற உதவியவர்; மிகு சைவம் தழைத்தோங்க உதவிய பாண்டிய ராணி யார்?

37.ஆங்கிலப் படைகளை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ராணி; ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யார்?

38.ராஜ ராஜ சோழனை மாபெரும் கோவில்கள் சமைக்கவும், நாடுகளை வெல்லவும் ஊக்கம் தந்த பெண்; தானும் தானம் செய்து கல்வெட்டுகளில் அழியா இடம் பெற்ற மாதரசி யார்?

  1. மதுரை மாநகரில் அழியாத பல கட்டிடம் கட்டிடய பெண்ணரசி யார்?

40.படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னரின் கை படாமல் மானம் காத்த மாதர் குல திலகம். இன்றும் 100 கோடி இந்துக்களை, தன் உயிர்த் தியாகம் மூலம் பெருமிதம் கொள்ளச் செய்யும் உத்தம பத்தினி யார்?

விடைகள்:-

21.வாசவதத்தா, 22.ராஜ்யஸ்ரீ, 23.அமராவதி, 24.ஜீஜாபாய் 25.கங்காதேவி,

26.காந்தாரி, 27.ஜாபாலா, 28.தாக்ஷி, 29.அதிதி, 30.காரைக்கால் அம்மையார், 31.மாயாதேவி, 32.த்ரிஜடை 33.அஹல்யாபாய் ஹோல்கர், 34.லக்ஷ்மிபாய், 35.கிட்டூர் ராணி சென்னம்மா, 36.மங்கையர்க்கரசியார், 37.வேலு நாச்சியார், 38.குந்தவை,39.ராணி மங்கம்மா, 40.சித்தூர் ராணி பத்மினி (பத்மாவதி)

–subham–

தங்க புத்தர்! (Post No.5595)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 October 2018

Time uploaded in London – 5-43 AM (British Summer Time)

Post No. 5595

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 26-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி நான்காம்) கட்டுரை  

தங்க புத்தர்!

ச.நாகராஜன்

அறிவியலுக்கும் புத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் அது வலுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், ‘எதையும் நீயே ஆராய்ந்து பார்த்து, கண்டுபிடித்து ஒப்புக்கொள்’ என்ற புத்தரின் உபதேசம் தான்! அறிவியலும் இதையே தானே சொல்கிறது!!

அத்துடன் கூட இப்போதுள்ள தலாய்லாமா பிரபல விஞ்ஞானிகளை தனது தர்மஸ்தலாவிற்கு வரவழைத்து அறிவியலும் புத்த மதக் கொள்கைகளும் இணைவதற்கான பாலமாக இலங்குகிறார். அவரது அறிவுரைப்படி நிறைய லாமாக்களும், புத்த பிக்ஷுக்களும் அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த பரிசோதனை மையங்களுக்குச் சென்று தன்னார்வத்துடன் தியானம் உள்ளிட்ட பல வித சோதனைகளுக்கும் உள்ளாகின்றனர்; வியக்கவைக்கும் உண்மைகளை வெளியுலகிற்கு அளிக்கின்றனர்.

புத்த மதத்தை இப்போது “மனம் பற்றிய அறிவியல்” (Science of Mind) என்று கூறத் தொடங்கியுள்ளனர். நீல்ஸ் போர், ஓப்பன்ஹீமர், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் புத்த மதக் கொள்கைகளை தங்கள் ஆய்வு உரைகளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

புத்த மதத்திற்கும் தங்கத்திற்கும் கூட நிறைய தொடர்பு உண்டு; புத்தமதத்தைப் பொறுத்த வரை தங்கம் சூரியனுடன் இணைக்கப்படும் அரிய ஒரு உலோகம். தீ ஜுவாலை அல்லது அறிவு அல்லது விழிப்பு ஆகியவற்றுடன் தங்கம் தொடர்பு படுத்தப்படுகிறது. அறிவு, ஞானம், தூய்மை, சந்தோஷம், சுதந்திரம் ஆகிய அனைத்துமே தங்கத்தினால் குறிப்பிடப்படுகிறது.

அறிவியலும் கூட சூரியனையும் தங்கத்தையும் அவற்றின் பல அரிய சிறப்புக்களுக்காக ஆராய்கிறது; வியப்பூட்டும் உண்மைகளை விளக்குகிறது.

புத்த மதம் அறிவுறுத்தும் அஷ்ட மங்கலம் எனப்படும் எட்டுப் பொருள்களான ஜோடி மீன்கள் இரண்டு, தங்கத் தாமரை, எட்டு ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் செய்யப்படுபவையே. சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் நல்கும், சிரிக்கும் புத்தர் – லாஃபிங் புத்தா – சிலைகளில் பொதுவாக தங்கப் பூச்சு பூசப்படுகிறது.

உலகெங்கும் ஏராளமான இடங்களில் புத்தரின் சிலைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன; ஆனால் அதை விட கூடுதலான் அளவில் புத்தரின் திருவுருவம் தங்கத்தில் வார்த்து எடுக்கப்பட்டுள்ளது. திபத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் பத்தரைமாத்து தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட் ஆலயத்தில் உள்ள தங்க புத்தர் முழுவதும் தங்கத்தால் ஆனது. இதன் எடை மலைக்க வைக்கும் 5.5 டன்கள்! இதன் உயரம் 3.91 மீட்டர்.அகலம் 3.01 மீட்டர். உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை இது தான்!

பண்டைக் காலத்தில் அயுத்தயா என்னும் இடம்  சிதிலமடைய அங்கு இந்த சிலை யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது. பாங்காக் புதிய தலைநகரமாக ஆக்கப்படவே அப்போதிருந்த அரசன் பழைய சிலைகளை புதிய இடத்தில் நிறுவுமாறு கட்டளையிட்டான். சிலைகள் நகர்ந்தன. தங்க புத்தரும் பாங்காக்கில் வாட் சோடாநரம் என்ற இடத்தில் ஒரு ஆலயத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டது. அந்த ஆலயமும் இடியும் நிலைக்கு வரவே சிலை வாட் ட்ரைமட் ஆலயத்திற்கு வந்தது. அங்கு இடமே இல்லாததால் தகரத்தைக் கூரையாகக் கொண்ட ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டது. புது கட்டிடம் ஒன்று கட்டப்படவே 1954ஆம் ஆண்டு சிலையை அங்கு கொண்டு போவதற்காக சிலையை எடுத்தனர். அப்போது சிலை சிறிது சேதமடைந்தது. சாதாரணமாக இது ஒரு துரதிர்ஷ்டமாகக் கருதப்படும். ஆனால் அதுவே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக அமைந்தது. தங்க புத்தர் தானே வெளிப்பட்டார்.

சிலையில் சிறிது தங்கம் தென்படவே ஜாக்கிரதையாக மேல் பூச்சைப் பிரித்தனர். உள்ளே அற்புதமான தங்க மய புத்தர் தரிசனம் தந்தார்.

அதை முறைப்படி ஆராயவே அதன் மதிப்பு உலகிற்குத் தெரிய வந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய தங்கச் சிலையாக பாங்காக்கில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தங்க புத்தர்!

அறிவியல் அறிஞர்களின் பார்வை புத்த மதத்தின் பக்கம் இப்போது திரும்பவே, தங்க புத்தரின் சிலையை தரிசிக்க சாமான்யர்களுடன் விஞ்ஞானிகளும் வருகின்றனர்.

பாங்காக்கில் தங்க பிரேமில் மஞ்சள் வண்ணத்தில் பல புத்தரின் படங்களை ஆங்காங்கே வீடுகளிலும், ஹோட்டல்களிலும், பார்க்கலாம். அத்துடன் அங்குள்ள பெரிய கட்டிடங்கள் கூட தங்கம் மற்றும் மஞ்சள் வண்ணக்கலவையிலான உட்புற அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அறிவியலும் ஆன்மீகமும் தங்கம் மூலம் இணையும் ஒரு தலமாக பாங்காக் வாட் ட்ரைமின் ஆலயத் தலம் திகழ்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி வாழ்க்கையை அணுக வேண்டிய முறையைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. அவருக்கு 67 வயது ஆகி விட்ட நிலையில் ஒரு நாள் மாலையில் அவர் தனது லாபரட்டரியிலிருந்து வீடு திரும்பினார். இரவு சாப்பாடு முடிந்த போது ஒரு ஆள் ஓடி வந்து ஒரு அவசரத் தகவலைச் சொன்னான். சில மைல்கள் தள்ளி இருந்த எடிஸனின் ஆய்வு மற்றும் உற்பத்தி கம்பெனி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த மோசமான அவசரத் தகவல்.

அவர் மிக அமைதியாக தனது மகனை நோக்கிக் கூறினார் : “போ,போ! சீக்கிரம் உன் அம்மாவையும் அவளது தோழிகளையும் அழைத்து வா. இப்படிப்பட்ட தீப்பிடிக்கும் காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.” ஒரு குழந்தையின் குதூகலத்துடன் இதைக் கூறிய எடிஸன், “நீ கவலைப்படாதே! தேவையில்லாத எல்லாக் குப்பையும் ஒரு வழியாக ஒழிந்து போயிருக்கும்” என்றார்.

ஒரு கெட்டதில் நல்லதைப் பார்க்கும் உடன்மறை எண்ணம் கொண்ட எடிஸன் வாழ்வில் மோசமான நிகழ்ச்சி எப்போது  நடந்த போதும், “சரி போ! அப்படி நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும்” என்ற தைரியத்துடனேயே இருந்தார்

மனம் உடைந்து போகாத நிலையில் அவர் மறுநாள் பத்திரிகையாளரிடம், தான் திரும்பித் தொழிலை ஆரம்பிக்க முடியாத அளவுக்கு மிகவும் வயதான ஒருவன் அல்ல என்று கூறினார். “இது போல எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்து விட்டேன். சலிப்பும் சோர்வும் மனிதனை அணுகாதபடிக்கு வைக்கும் நிகழ்வுகள் இவை” என்றார்.

முற்றிலும் அழிந்து போன தொழிலகம் மூன்றே வாரங்களில்  பழையபடி இயங்கத் துவங்கியது. நான்காம் வாரத்திலிருந்து பழையபடி இரண்டு ஷிப்ட் வேலை துவங்கியது. புதிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்க ஆரம்பித்தது. அன்றைய மதிப்பில் தீப்பிடித்ததால் நஷ்டம் பத்து லட்சம் டாலர்கள்! (இன்றைய மதிப்பில் 230 லட்சம் டாலர்கள்!) எடிஸன் தன் உழைப்பினாலும் தைரியத்தினாலும் அந்த வருடமே அன்றைய மதிப்பில் நூறு லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டிக் காட்டினார். மனித வரலாற்றில் வெகு சில பேர்களே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளை துணிவுடன் எதிர்கொண்டு அதையும் மீறி நல்ல முன்னேற்றத்தை அடைந்து காண்பித்திருக்கிறார்கள். தைரியமும் உழைப்புமே உயர்வுக்கான வழி!

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் (Post No.5590)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-49

(British Summer Time)

Post No. 5590

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

old articles

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and …

tamilandvedas.com/2016/02/12…

–subham—

அவ்வையாரின் சகோதரன் திருவள்ளுவன் (Post No.5589)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-30

(British Summer Time)

Post No. 5589

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

 

 

–subham–

27 நட்சத்திரங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.5588)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 15-56

(British Summer Time)

Post No. 5588

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கட்டத்துக்குள் மறைந்திருக்கும் 27 நட்சத்திரங்களைக் கண்டு பிடியுங்கள்

27 STARS-TAMIL WORD SEARCH

பஞ்சாங்கத்துள் கொடுத்துள்ள வரிசையில் விடையும் கொடுத்துள்ளேன்.

விளையாட்டுப்போக்கில் 27 நட்சத்திரங்களையும் மனப்பாடம் செய்த பலன் கிட்டும்.

 

Answer

அஸ்வினி, பரணி, கார்த்திகை , ரோகிணி,

மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,

பூரம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி விசாகம், அனுஷம்,

கேட்டை, மூலம்,பூராடம், உத்திராடம், ஓணம், அவிட்டம்,

சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

–subham–

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு சவுக்கடி (Post No.5587)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 7-54 am

(British Summer Time)

Post No. 5587

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 31

முதல் நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டோம்; ஐந்தாவது அத்தியாயத்தின் முதல் 55 ஸ்லோகங்களை ஆராய்வோம்.

 

பிராஹ்மணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னதை முன்னர் எழுதினேன். பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் கட்டளை இட்டதையும் சொன்னேன். இப்பொழுது பிராஹ்மணர்கள் வெங்காயம், உள்ளிப் பூண்டு  (வெள்ளைப் பூண்டு), மஷ்ரூம் mushroom எனப்படும் காளான் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது (5-5, 5-19). சிலவகை மீன், மாமிசம் ஆகியவற்றை கடவுளுக்குப் படைத்தோ நீத்தாருக்குப் படைத்தோ உண்ணலாம் என்கிறார்.

வெங்காயம், பூண்டு சாப்பிடுபவன் ஜாதிப்ப்ரஷ்டம் ஆனவன் (தள்ளி வைக்கப்பட்டவன்) என்கிறார் 5-19

தப்பித் தவறி சாப்பிட்டுவிட்டால் கடுமையான விரதங்கள் நோன்புகளை அனுஷ்டிக்கக் கட்டளை இடுகிறார் (5-21, 5-20)

நோன்பு விவரங்களை 11 ஆவது அத்தியாயத்தில் தருவேன்.

இந்தப் பீடிகையுடன் நான் ‘மானவ தர்ம சாஸ்திர’த்தின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடங்குவதற்குக் காரணம் என்ன?

இப்போதுள்ள மநு தர்ம சாஸ்திரத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகளுக்குக் காரணம் அவ்வப்போது நிகழ்ந்த இடைச் சொருகல்கள் ஆகும்.

இன்னொரு விஷயத்தையும்  நினைவிற் கொள்ள வேண்டும் ; சட்டம் என்பது காலத்துக்கு காலம் மாறு படும்; இடத்துக்கு இடம் வேறு படும். அமெரிக்காவில் இன்றும் சில மாநிலங்களில் மரண தண்டனை உண்டு இன்னும் சில மாநிலங்களில் கிடையாது. இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவிலக்கு உண்டு. அங்கு பாட்டிலுடன் நின்றால் குற்றம்!

இனி ஐந்தாம் அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களைக் காண்போம்:

மநு நீதியை முழுதும் படிப்போர் அவருடைய அறிவாற்றலைப் புகழ்வர்; இடைச் செருகல்களைக் கண்டு கொள்வர். 40, 50 ஸ்  லோகங்களில் “சூத்ராள்” பற்றிச் சொன்னதைக் கூப்பாடு போட்டு அவரைத் திட்டத் தேவை இல்லை. ஏனெனில் “பிராஹ்மணாள்”களே அவரைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

இதே அத்தியாயத்தில் பிராஹ்மணர்கள் மாமிசம் சாப்பிடலாம்; அகஸ்தியரும் இதைச் செய்தார் என்று ஒரு வரி வருகிறது. இது ஒரு நல்ல ஜோக்/ joke தமாஷ்.5-22

அகஸ்தியர் கதையில் அவர் வாதாபி,என்ற அரக்கனை, அவன் சஹோதரன் இலவலன் கறியாகச்   சமைத்துப் போட்டு, ஏ வாதாபியே வெளியே வா- என்று கட்டளை இட்டான். அவரோ தவ வலிமையால் ‘வாதாபி ஜீர்ணோ பவ’ என்று சொன்னவுடன் அவன் அகஸ்தியர் வயிற்றுக்குள் ஜீரணமாகி விடுகிறான் இதை மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் செய்ய முடியாது. ஆகையால் அங்கு அகஸ்தியரின் பெயரை மநு வம்புக்கு இழுத்திருக்க மாட்டார். அது மட்டுமல்ல,2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனை அழைத்துச் சென்று வியட்நாமில் (சம்பா தேசம்) ஒரு அரசு அமைத்தார். அந்த அரசு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும், துலுக்கர்கள் நுழைவதற்கு முன், 1500 ஆண்டுகளுக்க் கொடி கட்டிப் பறந்தது. இதன் பொருள் என்ன? அகஸ்தியர், மநு சொன்ன கட்டளையை மீறி வெளிநாட்டுக்குப் போனார். இதைப் புராணங்கள் அகஸ்தியர் ‘கடலைக் குடித்தார்’ என்று சொல்லும்.

ஆகவே மாமிசம் சாப்பிட்ட கதை மநு எழுதியதல்ல. பிற்காலப் பிற்சேக்கை!

மச்சம், மாமிசம் சாப்பிடுவது பற்றி மநு ஸ்ம்ருதியில் பல குழப்பங்கள் இருக்கின்றன . ஏன்?

சுமார் 2000ஆண்டுகளுக்கு முன் உருவான 2500 சங்கத் தமிழ்ப் பாடல்களில் பிராஹ்மணர்களை மரக்கறி உணவு உண்ணும் ‘வெஜிட்டேரியன்’ vegetarians களாகவே காட்டியுள்ளனர். பிராஹ்மணர் வீட்டுக்குப் போனால்  அந்தப் பெண்மணி உனக்கு என்ன உணவு தருவாள் என்று ஆற்றுப்படை நூலில் இருக்கிறது. அந்த மெனு menu வில், எல்லாம் வெஜிட்டேரியன்!!! பிராஹ்மணர் தெருவுக்குள் நாயோ கோழியோ- போக முடியாது- அவ்வளவு சுத்தமான இடம் அக்ரஹாரம் என்றும் தமிழ் இலக்கியம் விதந்து ஓதுகிறது.

இங்கே காட்டப்படும் மநுவின் 55 ஸ்லோகங்களை திருவள்ளுவர் தமிழ் வேதத்தில்– திருக்குறளில்- ‘புலால் மறுத்தல்’, ‘கொல்லாமை’ ஆகிய இரண்டு அதிகாரங்களில் மொழி பெயர்த்துள்ளார். ஆக ஒரிஜினல் மநு , திருவள்ளுவர் காட்டும் மநுவே. ஏனையன பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே.

ஆனால் திவஸத்திலும், யாகங்களிலும் மாமிசம் சேர்க்கலாம் என்ற மநுவின் கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை. வங்காளி, அஸ்ஸாமி பிராஹ்மணர்கள் மீன்களை ‘ஜல வாழைக்காய்’ போல எண்ணி சாப்பிடுவதை உலகம் அறியும். தர்மம் என்பது கால, தேச,வர்த்தமானங்களை (சூழ்நிலை) அனுசரித்ததே என்று மநு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். இன்றும் கூட நமது பார்லிமெண்டுகளும் சட்ட சபைகளும் பழைய சட்டங்களுக்குத் திருத்தம் கொண்டு வருவதும் புதுச் சட்டங்களியற்றுவதும் மநு சொன்ன ‘பார்முலா’ formula தான்.

Goldsmith 

த்விஜன் யார்?

‘கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனதைப் போல’, இப்போது த்ரிகால சந்தியா வந்தனம், அக்னி ஹோத்ரம், தினமும் பஞ்ச மஹா யக்ஞம் செய்யும் பிராஹ்மணர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆக த்விஜன் என்பது ஆதிகாலத்தில் முதல் மூன்று ஜாதிகளைக் குறித்திருக்க வேண்டும். க்ஷத்ரியர்கள் மாமிஸம் சாப்பிடுவதில் வியப்பில்லை. ராமன் திவஸத்துக்கு மிருகங்களைக் கொண்டு வந்ததாக வால்மீகி ராமாயணம் செப்பும். அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத்தான் சொன்னான். அறவே நிறுத்த உத்தரவிடவில்லை என்பதை அவனது சாஸனங்கள் காட்டும். ஆக “த்விஜன்” என்று மநு சொல்லுவது பிராஹ்மணர்களை மட்டும் அல்ல. பிராஹ்மண, க்ஷத்ரிய, வைஸ்யர்களையும் தான் என்று பொருள் கொண்டால் தவறில்லை.  இப்போதும்கூட செட்டியார், ஆசாரி ஆகிய ஜாதிகள் பூணூல் போடுவதைப் பார்க்கிறோம். பூணூல் போட்ட பின் இரண்டாவது பிறப்பு; அதாவது இருபிறப்பாளன்/ த்விஜன்.

காளிதாசன் படைப்பிலும்கூட ஒரு பிராஹ்மண விதூஷகனைக் கிண்டல் செய்யும்போது அசைவம் பற்றி வருகிறது. சங்கப் பாடலில் புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பலரும் போற்றிய மஹா பிராஹ்மணன் கபிலன், மாமிஸ உணவு  பற்றிப் பாடியதை வைத்து சிலர் கதைத்தனர். ஆயினும் அவை எல்லாம் பசையற்ற வாதமாகக் கரைந்து ஓடிவிட்டது.

2000 ஆண்டு இலக்கியம் காட்டும் பிராஹ்மனணர்கள்- மரக்கறி உண்ட ‘வெஜிட்டேரியன்’களே.

மிருகங்களை அடித்துக் கொன்று சாப்பிடுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்று மநு சொல்லுவதையும் ஒப்பிட்டுப்  பார்த்தால் இது தெள்ளிதின் விளங்கும்.5-51,5-45, 5-38 ETC.

 

டார்வின் கொள்கை!

வலுவற்ற மிருகங்கள் வீழ்ந்து அழியும்; வலியோரே வாழ்வர் SURVIVAL OF THE FITTEST என்று டார்வின் சொன்னார். மநுவும் துணிச்சல் மிக்கோருக்கு கோழைகளுணவு COWARDS ARE THE FOOD OF THE BRAVE ஆகி விடுவர் என்று மநுவும் சொல்லும் அரிய கருத்து ஒப்புநோக்கத தக்கது.5-29

பிராஹ்மணர்களுக்கும் சாவு உண்டா?

அத்தியாய ஆரம்பத்தில் மநு கூட்டிய மஹாநாட்டுக்கு வந்தவர்கள் ஒரு வினா எழுப்ப அதற்கு மநு கொடுத்த பதில் சிந்தி   க்கத் தூண்டுவது. மஹா புனிதமான வேதங்களை ஓதும் பிராஹ்மணர்களுக்கு மரணம் வருகிறதே! அது எப்படி சாத்தியம்? என்று சிலர் வியக்க மநு 4 காரணங்களை முன் வைக்கிறார். அதில் ஒன்று தவறான உணவு! இங்கே சாவு என்பதைவிட அவர்களும் கூட ‘இளம் வயதில் இறப்பது எப்படி’ என்று பொருள் கொள்க.5-4

மநுவின் சொல்லாடல் திறன்!

‘மாம்ஸ’ம் என்ற சொல்லை மநு விவரிக்கும் பாங்கு அழகாக இருக்கிது. என்னை உண்பவன் ஆக நான் மாறிவிடுகிறேன் ( மாம்+ சஹ ). இப்போது நீங்கள் மாட்டை உண்டால் அடுத்த ஜன்மத்தில் மாடு மனிதன் ஆகும்; நீங்கள் மாடு ஆவீர்கள். அந்த மனிதன் உங்களை உண்பான் (மாம்+ சஹ= என்னை + அவன்); என்னை அவன் உண்டான் ; நான் அவனை உண்ணுவேன்.5-55

சின்னக் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும்; எறும்பு முதலிய ஜந்துக்களைக் குழந்தைகள் துன்புறுத்தினால் தாய்மார்கள் எச்சரிப்பர். அடுத்த பிறவியில் ‘நீ எறும்பாக, அது நீ ஆகி’ உன்னை துன்புறுத்தும் என்பர். மறு பிறப்புக்கொள்கை சங்க தமிழ் பாடல்களிலும் திருக்குறளிலும் மலிந்து கிடக்கிறது

இறுதியாக மற்ற ஒன்றையும் காட்ட விழைகிறேன். மநு சொல்லும் மிருகம், மீன் வகை பற்றியே அதிக சம்சயங்கள் உண்டு. அவரோ வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிக் கட கதைக்கிறார். இப்படி அவர் சொன்ன மீன் வகைகள் பற்றியே ஐயப்பாடுகள் எழுவதற்குக் காரணம் அவர் மிக, மிக, மிக முற்காலத்தவர். மநு சொன்ன ஸுமுகன் என்ற மன்னன் பற்றி சுமேரியாவில் மட்டுமே காண முடிகிறது. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு மன்னன் பெயர் இல்லை என்று பாஷ்யக்காரர்கள் அனைவரும் பகர்வர். முன்னரே எழுதிவிட்டேன்;

மாமிசத்துக்குப் பதிலாக மாவில் அதே போல உருவம் செய்வது 5-37ல் சொல்லப்பட்டுள்ளது. யாககங்களில் இப்படி உருவ பொம்மைகளே போடப்பட்டன.மிருகங்கள் பலி இடப்படவில்லை என்போர் இதை ஆதாரமாகக் காட்டுவர். ஆதிகால மிருக பலி காலப்போகில் மாவு உருவ பலியாக மாறியது போலும்!

ஸ்லோகம் 5-46, 5-47 இந்த இரண்டு பாடல்களில் கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றும் அவன் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்கிறார்.

ஆகையால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர், ‘ஒரிஜினல்’ மநுவை, போலி மநுவில் இருந்து பிரித்து எடுத்து, காய்தல் உவத்தலின்றி, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல, அவரை எடை போடுவதே முறை.

ஐந்தாம் அத்தியாயம் முதல் 55 ஸ்லோகங்கள்

வாழ்க மநு- வளர்க ‘ஒரிஜினல்’ மநு நீதி!

ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2 (Post No.5586)

WRITTEN BY S NAGARAJAN

Date: 25 October 2018

Time uploaded in London – 7-30 AM (British Summer Time)

Post No. 5586

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 19-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி மூன்றாம்) கட்டுரை  

ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2

ச.நாகராஜன்

இஸ்ரேலின் உளவுப் படையான மொஸாட்டிற்கு எய்ச்மேனை பத்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்வது ஒரு சவாலாகவே இருந்தது. அவருக்கு விமானப் பணியாளரின் உடையை உடுத்தி ஒருவாறாக இஸ்ரேலுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    அர்ஜெண்டினா ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தைக் கிளப்பி இஸ்ரேல் செய்தது தவறு என்று முறையிட்டது.

ஆனால் இஸ்ரேலின் சார்பில் ஆஜரான கோல்டா மேயர் தனது வாதத்தினால் அர்ஜெண்டினாவை நன்கு சமாளித்தார்.

    விசாரணை திட்டமிட்டபடி இஸ்ரேலில் துவங்கியது. எய்ச்மேன்  மீது 15 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான விசாரணைக்கு உலகின் மீடியாக்கள் முக்கியத்துவம் தருமாறு இஸ்ரேல் பார்த்துக் கொண்டது. உலகின் அனைத்துப் பத்திரிகைகளும் இதை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. ஜெருசலத்தில் உள்ள பெரிய ஆடிடோரியத்தில் விசாரணை துவங்கியது. அங்கு எய்ச்மேனை யாரும் சுட்டு விடக் கூடாதென்று அவரை புல்லட் ஃப்ரூப் கண்ணாடி பூத்தில் வைத்தனர். அனைத்துப் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 750 இருக்கைகள் போடப்பட்டன.

   56 நாட்கள் நடந்த விசாரணையில் 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.எய்ச்மேன் தான் நிரபராதி என்றும் தனக்கு மேலிடம் விதித்த கடமைகளையே தான் செய்ததாகவும் வாதிட்டார்.

     கடைசியில் எய்ச்மேன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்படவே எய்ச்மேனின் மனைவி மற்றும் சகோதரர்கள் இஸ்ரேல் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. ரம்லா சிறைச்சாலையில் 1962ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி அதிகாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

    எய்ச்மேனின் கடைசி வார்த்தைகள் : ஜெர்மனி வாழ்க. அர்ஜெண்டினா வாழ்க. ஆஸ்திரியா வாழ்க. இந்த மூன்று நாடுகளுடன் தான் நான் அதிகம் தொடர்பு கொண்டிருந்தேன். அதை மறக்க மாட்டேன். எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் தயார். மற்ற எல்லா மனிதர்களுக்கும் உள்ள விதி போல, மீண்டும் சீக்கிரம் சந்திப்போம். கடவுளை நம்பி நான் சாகிறேன்.

 

     கார்டன் தாமஸ் என்ற எழுத்தாளர், ‘Gideon’s Spies: The Inside Story of Israel’s Legendary Secret Service The Mossad’ என்ற புத்தகத்தில் மொஸாட் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

    அதி நவீன உத்திகளைக் கொண்டு இயங்கும் மொஸாட், கைக்கு அடக்கமான துப்பாக்கி, மிகச் சிறிய வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட பல நுட்பமான சாதனங்களைக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உத்திகளும் சாதனங்களையும் கொண்டே எய்ச்மேனும் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

      நீண்ட ஒரு சம்பவக் கோர்வையைக் கொண்டு சோகமாக முடிந்த ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது என்றால் அதில் நிறையவே சிக்கல் உள்ளது. அதை ஆபரேஷன் பைனல் டைரக்டரும் நடிகர்களும் உணர்ந்திருந்தனர். உளவுப்படை அதிகாரியான மால்கினும் எய்ச்மேனும் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் சட்ட விதிகளின் படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கையெழுத்து இருந்தால் தான் அவர் விசாரிக்கப்பட முடியும். மால்கின்  எய்ச்மேனை சித்திரவதை செய்யாமல், மூன்றாம் தர வழிகளைக் கையாளாமல் அவரது கையெழுத்தைப் பெறுகிறார். மால்கினின் சொந்த சகோதரியும் குழந்தைகளும் எய்ச்மேனின் கொடூர பலிக்கு இரையானவர்கள். ஆகவே சொந்த இழப்பில் மால்கின் மிக உணர்ச்சிகரமாக இதில் இறங்கினார். இந்தக் காட்சிகள் படத்திற்கு ஒரு உணர்ச்சிகரமான, உளவியல் ரீதியான அணுகுமுறை இருப்பதைக் காட்டின.

   ஒவ்வொரு காட்சியும் காட்சியில் வரும் வசனமும் பல முறை சரி பார்க்கப்பட்டன. அவ்னர் அவ்ரஹாம் என்ற மொஸாட் ஏஜண்ட் இந்த சரிபார்க்கும் பணிக்காகவே  நியமிக்கப்பட்டார்.

படத்தை சரியாக எடுப்பதற்காக டைரக்டர் வெய்ட்ஸ் அர்ஜெண்டினாவிற்கு தன் குடும்பத்துடன் சென்று அங்கேயே தங்கினார். அங்கு எந்த இடத்தில் சம்பவங்கள் நடைபெற்றனவோ அந்த இடத்திலேயே படப்பிடிப்பும் நடை பெற்றது.

மால்கினும் எய்ச்மேனும் வரும் காட்சிகளில் விசேஷ காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. விசாரணை நடந்த அறையின் வால் பேப்பரும் கூட கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இருட்டாக இருந்த அந்த அறையின் காட்சிகள் அப்படியே உள்ளது உள்ளபடி படமாக்கப்பட்டன.

1975ஆம் ஆண்டு ஹேரல் நடந்தது என்ன என்பதை விளக்கி ஒரு புத்தகம் எழுதினார். 2012இல் இன்னும் அதிக விவரங்கள் கசிந்து வெளி உலகிற்குத் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அமெரிக்காவிலும் கனடாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான முதல் நாளிலேயே பத்து லட்சம் டாலர் வசூலை பெற்றது. ஆறு நாட்களில் மொத்த வசூல் 95 லட்சம் டாலரைத் தாண்டியது. 1810 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. படத்தை அனைத்துப் பத்திரிகைகளும் நல்ல படம் என்று விமரிசித்தது குறிப்பிடத் தகுந்த விஷயம். ‘தத்ரூபமான வரலாற்று அடிப்படையிலான த்ரில்லர்’ என்று ஹாலிவுட் ரிபோர்ட்டர் என்ற பத்திரிகை விமரிசித்துப் படத்தைப் புகழ்ந்துள்ளது. அமெரிக்கா கனடா தவிர இதர நாடுகளில் உள்ள மக்கள் அக்டோபர் 2018இல் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை வரவேற்கத் தயாராகி விட்டனர். இரண்டாம் உலகப் போர் பற்றிய நூற்றுக் கணக்கான படங்கள் வெளி வந்து விட்டன; அந்தத் தொடர் வரிசையில் ஃபைனலாக – லேடஸ்டாக – வந்த படம் ஆபரேஷன் ஃபைனல்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு வெற்றிகரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கவில்லை. முதல் மனைவியான மிலெவாவை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே எல்ஸா (பிறப்பு 18-1-1876 மறைவு 20-12-1936) என்ற தன் உறவுக்காரப் பெண்மணியை அவர் மணம் புரிந்து கொண்டார். எல்ஸாவின் தாயாரும் ஐன்ஸ்டீனின் தாயாரும் சகோதரிகள். எல்ஸா துணி வர்த்தகத்தில் இருந்த தன் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஐன்ஸ்டீனை மணந்து கொண்டார். ஆனால் அவருக்கு கண் வியாதி முதல் இதயம், நுரையீரல் என பல அங்கங்களிலும் வியாதிகள் உண்டு. மணவாழ்க்கையில் அவர் ஐன்ஸ்டீனின் காவலராகத் தான் திகழ்ந்தார். யாரையும் அனாவசியமாக உள்ளே வந்து ஐன்ஸ்டீனின் நேரத்தை வீணாக்காமல அவர் காத்து வ்ந்தார்.

ஐன்ஸ்டீன் எழுதி இப்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ள 1422 கடிதங்கள் அவர் மண வாழ்க்கையைப் பற்றித் தெரிவிக்கின்றன. முதல் மனைவியிடம் அவர் கண்டிப்பும் கறாராகவும் இருந்ததை இந்தக் கடிதங்கள் காட்டுகின்றன. இரண்டாம் மனைவியான எல்ஸா நியூ ஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டனில் தனது வீ ட்டில் இறந்த போது ஐன்ஸ்டீன் கண்ணீர் விட்டு அழுதார். ஐன்ஸ்டீனின் நண்பரான பீட்டர் பக்கி ஐன்ஸ்டீன் அழுது தான் பார்த்தது அதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார்.

தனது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்பதை ஐன்ஸ்டினே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது நண்பரான மைக்கேல் பெஸ்ஸோ என்பவரின் மகனுக்கு மைக்கேல் இறந்ததை ஒட்டி எழுதிய இரங்கல் கடிதத்தில் அவர் எழுதினார் இப்படி: “உனது தந்தையிடம் நான் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவெனில் தான் வாழ்க்கை முழுவதும் அவர் ஒரே பெண்மணியுடன் வாழ்ந்தார் என்பதைத் தான்! அப்படிப்பட்ட ஒரு திட்டத்தில் நான் மிக மோசமாகத் தோற்று விட்டேன் – இரு முறை!”

ஐன்ஸ்டீனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இப்போது ஏராளமான புத்தகங்கள் வந்து விட்டன. அதன் மூலமாகத் தான் பல புதிய விவரங்களை அறிய  முடிகிறது! உணர்ச்சி அடிப்படையிலானது வாழ்க்கை; அறிவின் அடிப்படையிலானது அறிவியல்! அது வேறு; இது வேறு தான்! ஐன்ஸ்டீனின் வாழ்க்கையும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு!

***