
Written by London Swaminathan
Date: 18 September 2017
Time uploaded in London- 10-33 am
Post No. 4223
Pictures are taken from various sources; thanks.
What does Vajapeya yajna show?
இந்தியாவின் பத்தாவது பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாயீ பதவி ஏற்றவுடன் வாஜபேயம் என்பது ஒரு யாகம் என்பதும் அதைச் செய்த குடும்பத்தில் அவர் பிறந்ததால் அந்த துணைப்பெயர் அவர் பெயரில் ஒட்டிக்கொண்டது என்றும் பலருக்கும் தெரிய வந்தது.

யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அதில் சுக்ல (வெள்ளை) யஜூர் வேதத்தில் சதபத பிராமணம் என்ற உரை நடை நூல் இருக்கிறது. அதில் ராஜ சூயம், அஸ்வமேதம், வாஜபேயம் ஆகியன பற்றிய விரிவான விவரங்கள் இருக்கின்றன.
சதபத பிராமண நூலை நன்கு பயின்ற ஹில்ப்ராண்ட் (Hillebrandt) என்ற அறிஞர் இதை ஒலிம்பிக் விளையாட்டுடன் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளார். ஏனெனில் இதில் வெறும் யாகம் மட்டும் இல்லாமல் நிறைய விளையாட்டுகள் குறிப்பாக பெரிய குதிரை பூட்டிய தேர்ப் பந்தயம் இருக்கிறது. பென்ஹுர் (Benhur) போன்ற திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது எவ்வளவு ரசிக்கக்கூடியது என்பது விளங்கும். ஊரே கூடி ஓ என்றும் ஆ என்றும் கூவி உற்சாகப்படுத்துவர். பெரிய பேரிகைகள் (Drums) முழங்கும்.
இந்துக்கள் செய்யும் 400-க்கும் அதிகமான யாக யக்ஞங்களில் இதுவும் ஒன்று. இந்த யாகம் எதைக்கட்டுகிறது?
வேத கால இந்துக்கள் மிகவும் நாகரீகம் அடைந்தவர்கள்; ஏனெனில் உலகிற்கே பசு மாடு, குதிரை, இரும்பு, தசாம்ச முறையைக் கற்பித்து உலகையே இன்பக்கேணியாக மாற்றியவர்கள். விளையாட்டு வீரர்கள்!
இன்று கோவில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உறியடி போன்றவை எல்லாம் இருக்கிறதென்றால், அதற்கு வேத கால இந்துக்களே முன்னோடிகள்! எகிப்தியர்களுக்கு தேர் பற்றியோ, குதிரை பற்றியோ, யானை பற்றியோ ஒன்றுமே தெரியாது; வெறும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி வந்தனர். அவர்களுக்கு கி.மு.1500 இந்தியர்கள் போய் (யக்ஷர்கள் HYKSOS) குதிரையை உபயோகப் படுத்துவது எப்படி என்று காட்டினர். யானைக ளைப் படைகளில் உபயோகப் படுத்தியதும் இந்துக்களே. அமெரிக்காவில் குதிரை புகுந்தவுடன் அதன் வரலாற்றே மாறியது. இந்தப் பசுமாட்டையும், குதிரையையும் யானையயும் புனித மிருகங்களாக உயர்த்திய பெருமை இந்துக்களுடையதே.

வேத கால இந்துக்கள் எதையுமே பாஸிட்டிவாக (ஆக்கபூர்வமாக) பார்த்தார்கள். ஆயிரம், கோடி லட்சம் என்று உயர்வாகவே எண்ணுவர்.
வாஜபேயம் என்பதை பிராணர்களும் அரசர்களும் செய்தனர். ஆயினும் அரசர்களுக்கு ராஜ சூயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு பிராணர்களுக்கு முக்கியமானது வாஜபேயம் என்று கருதுவர். வைஸ்யர்களும் கூட வாஜபேயம் செய்தனர். ஒரு பிராமணர் புரோகிதராக உயர வாஜபேயம் செய்வார்.
ஆயினும் சங்கத் தமிழ் நூல்களில் வாஜபேயம் பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால் சோழ மன்னர்கள் செய்த ராஜ சூயம் முதலான யக்ஞங்கள் பற்றித் தெளிவான பாடல்கள் புற நானூற்றில் இருக்கின்றன. பாண்டிய மன்னன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்யாத யாகங்களே இல்லை.
காளிதாசன், பாண்டிய மன்னர்களின் குல குரு அகத்தியன் என்று சொல்லிவிட்டு அவர்கள் எப்போதும் யாகத்துக்கான அவப்ருத ஸ்நானத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள் என்று புகழ்கிறான்.
2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இந்த யாக யக்ஞங்கள் புகழ் பெற்றுவிட்டன என்றால் அதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மாபெரும் சரஸ்வதி நதி தீரத்தில் யாகத் தீ எரிந்ததில் வியப்பில்லை.
வாஜ பேயம் என்றால் (உண்ணல்=வாஜ, குடித்தல் = பேயம்) பலத்துக்காக உண்ணுவது பானங்களைக் குடிப்பது என்று பொருள்;இதிலும் சோம ரசம் பருகுதல் உண்டு. ஆயினும் அதற்குப்பின்னர் நடக்கும் தேர்ப் பந்தயத்தில் யாகத்தைச் செய்தவர் வெற்றி பெறும் போட்டியும் இருக்கும்.
யார் ஒருவர் வாஜபேயம் செய்கின்றாரோ அவருக்கு உணவுப்பஞ்சம் என்பதே கிடையாது என்று ஸ்ரௌத சூத்ரங்கள் சொல்லுகின்றன.
வாஜ்பேயம் செய்பவர் பிரஜாபதியைத் துதி பாடுவர். அவருடைய சக்தி போலத் தனக்கும் எல்லாத் திசைகளிலும் வெற்றியும் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று உரைப்பர். பிரஜாபதிக்கு எப்படிப் புகழும் சக்தியும் வெற்றியும் உண்டோ அப்படித் தனக்கும் கிடைக்கும் என்று எண்ணுவர். எல்லாம் ஆ க்கபூர்வ சிந்தனைகளே!

எனது முந்தைய கட்டுரைகள்:
tamilandvedas.com/2014/03/06/400-வகை…
Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna By London Swaminathan லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் — 890 …
tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…
400 types of Yagas. … https://tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas-fire-ceremonies/ Previous Post 400 வகை யாகங்கள்: …
swamiindology.blogspot.com/2016/11/5-14-7-post-no3312.html
பாக யக்ஞங்கள் ஏழு வகை; … 400 வகை யாகங்கள்: காஞ்சி …
Tamil Olympics | Tamil and Vedas
tamilandvedas.com/tag/tamil-olympics
Posts about Tamil Olympics written by Tamil and Vedas
Tags: வாஜபேயம், இந்திய ஒலிம்பிக்ஸ்