வள்ளுவர் குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!

stick2

Written by London swaminathan

Post No.2272

Date: 25 October 2015

Time uploaded in London: 6-37 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சரக சம்ஹிதையில், திருக்குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!

வாக்கிங் ஸ்டிக் பற்றி வள்ளுவர் சொன்னார்:

கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றன் துணை –குறள் 414

பொருள்:– ஒருவன் தானே கற்றுத் தெரிந்துகொள்ளவில்லை என்றாலும், கற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவனுக்கு கஷ்டம் (ஒற்கம்) வரும்போது, அது ஊன்றுகோல் (கைத்தடி, வாக்கிங் ஸ்டிக்) போல உதவும்.

stick3

ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் சத்ரூணாம் ச நிசூதனம்

அவஷ்டம்பனமாயுஷ்யம் பயக்னம் தண்டதாரணம்

–சரக சம்ஹிதா 5-102

கைத்தடியின் ஐந்து உபயோகங்கள்

ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் = கீழே விழுவதிலிருந்து தடுக்கும்

சத்ரூணாம் நிசூதனம் = எதிரிகளைத் தாக்க உதவும்

அவஷ்டம்பனம் = ஊன்றுகோலாக உதவும்

ஆயுஷ்யம் = நீண்ட ஆயுள் கிடைக்கும்

பயக்னம் = பயத்தைத் தடுக்கும்

அந்தக் காலத்தில் முதியோர் நலனில் எந்த அளவுக்கு அக்கறை இருந்தது என்பதை மேற்கூறிய இரண்டு பாடல்களும் காட்டும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே முதியோர் விஷயங்களை எழுதியும் வைத்தனர்.

இதோ மேலும் ஒரு எடுத்துக்காட்டு:

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி  யே ந வதந்தி தர்மம் – நீதி சதகம் 3-58

எங்கு முதியோர் இல்லையோ அது சபை இல்லை;

தர்மத்தை உபதேசிக்காத முதியோர், முதியோரே அல்ல.

என்று நீதி சதகம் கூறும்.

–சுபம்–