
Written by S.NAGARAJAN
Date: 7 September 2017
Time uploaded in London-11-57 am
Post No. 4189
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நாட்டு நடப்பு
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!
ச.நாகராஜன்
இறப்பு என்பது துயரமானது.
யாராக இருந்தாலும் சரி.
ஆனால் ஒரு இறப்பை ஆதாயமாக வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி கிளர்ச்சிகளுக்கு வித்திட்டு தனது சுயலாபங்களை அடைய நினைப்போரை எப்படி விவரிப்பது?
கீழே ஒரு கோடிட்ட வரியைத் தருகிறேன்.
நீங்களே அவர்களுக்கான அடைமொழியைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
——————–
தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் சுய லாபத்தின் அடிப்படையில் அதிகாரத்தையும் பணத்தையும் “பிடிக்க நினைக்கும்” பூதங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.
நீட் தேர்வு இந்தியா முழுவதற்குமான ஒரு தேர்வு.
அதில் எப்படித் தேர்ச்சி பெறுவது என்பதற்கான வழியை சிந்திக்க வேண்டும். அதற்கான கால அவகாசம் தேவையெனில் உரிய முறையில் காரணங்களைச் சுட்டிக் காட்டி அதைப் பெற வழி வகை செய்ய வேண்டும்.
மாறாக கிளர்ச்சிகள், வன்முறைகள் உள்ளிட்டவை நீட் தேர்வை நீக்குவதற்காக இல்லை என்பது மட்டும் நிச்சயம் என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் உணர்கின்றனர்.
ஒரே ஒரு வாதத்தை மட்டும் முன் வைப்போம்:
திருநெல்வேலியில் அரசினர் பள்ளியில் நீட் தேர்வுக்கான ஆயத்தங்களை நன்கு செய்ததால் எட்டு பேர் மருத்துவ படிப்பிற்கான அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால் யாரை வைத்து சுய லாபம் அடைய நினைக்கிறார்களோ அந்தப் பெண் தனியார் பள்ளியில் படித்தவர். 1176 பெற்றாலும் அனைத்திந்தியாவிற்கும் பொதுவான தேர்வில் அவர் திறமையைக் காட்டி எழுதவில்லை.
தனியார் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெறாதவர் ஒரு பக்கம்.
எப்போதுமே ஏளனம் செய்யப்படும் அரசினர் பள்ளியில் எட்டுப் பேர் உன்னத மார்க்குகளைப் பெற்றது ஒரு புறம்.
சிந்திக்க வேண்டும்.
ஏழைகளை உயர்த்துவது சரி தான். அதற்காக பணக்காரர்களை அடித்து அவர்கள் பணத்தைப் பிடுங்குவது சரியல்ல. இது கம்யூனிஸ தோழர்களின் வழி.
இழிவான வ்ழி.
சொந்த சோவியத் யூனியன் தொழிலாளர்களையே ஒன்று படுத்த முடியாமல் அதை சிதற விட்டவர்கள் உலகத் தொழிலாளர்களை எந்தக் காலத்தில் ஒன்று சேர்க்க முடியும்!
சிரிப்புத் தான் வருகிறது.
அதே போல படிக்காத மாணவர்களை விசேஷ வகுப்புகளை நடத்தி அவர்களுக்கு அறிவூட்டி நல்ல முறையில் தேர்வுக்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும்.
அதை விட்டு விட்டு தேர்வே வேண்டாம் என்பது நியாயமில்லை, அல்லவா!
அல்லது 99.99 மார்க்குகள் வாங்கியவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது அதையும் கூட சமுக நீதி அடிப்படையில் எந்த மார்க் எடுத்தவர்களுக்கும் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

சரி,ஒரு வாதத்திற்காகப் பேசுவோம். மூன்று நாட்களுக்கு முன்னர் (3-9-2017) வந்த செய்தியை அகில இந்திய அளவில் அமுல் படுத்தினால் நன்றாக இருக்குமே!
செய்தி இது தான்:
நீதி மன்றம் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீட்டுக் குழந்தைகள் அரசினர் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
சம் நீதி கேட்பவர்கள் இதை ஆதரிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளை அரசினர் பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும்.
முன் வருவார்களா? இதை இன்னும் சற்று விரிவு படுத்திப் பார்ப்போம்:
சமூக நீதி கேட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர்களானவர்களிடம் மட்டுமே இப்படிப் போராடி அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு சென்ற காரணத்தால் – தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரையும்
அவர்களிடம் மட்டுமே வைத்தியம் பார்க்க போராட்டம் நடத்துவோர் அனுப்ப வேண்டும்.
சமூக நீதி கேட்டு வக்கீல் படிப்பு படித்து உயர்நிலை அடைந்தோரிடம் மட்டுமே தங்கள் வழக்குகளுக்கு ஆஜராக வழக்குகளைத் தர வேண்டும்.
கிண்டலுக்காக அல்ல, சிந்த்னையைக் கிளறி விடும் உண்மையின் அடிப்படையில் இதை அமுல் படுத்தலாம்.
அருமையான இளம் தலைவரான ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் பற்றிச் சற்றும் கவலைப்படாதவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டினரின் இழப்பைப் பற்றிக் க்வலை படாதவர்கள் அவரைக் கொலை செய்தவர்களை விடுவிக்க எவ்வளவு அரும்பாடு படுகிறார்கள். அட, கலி காலமே!!
இவர்கள் ஆக்டிவிஸ்டாம். இதற்கு பல செய்தித் தாள்களும் தொலைக்காட்சிகளும் துணை.
ஒரே ஒரு கேள்வி தான் தோன்றுகிறது. அதற்கு பழைய சினிமா பாடல் துணைக்கு வருகிறது.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே?
சொந்த நாட்டிலே?!!!
**** பின் குறிப்பு: புதிய யோசனையைத் தந்த நீதி மன்றத்திற்கு எதிராக சமூக நீதி கேட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படுமா அத்துடன் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட அதைத் தகுதியாகக் கொண்டு அட்மிஷன் தர முடியாது என்று சொல்லும் வேலூர் கிறிஸ்தவ மெடிகல் காலேஜை எதிர்த்து ஒரு சமூக நீதி போராட்டம் ஆரம்பிக்கப்படுமா?
ஆக்டிவிஸ்டுகள் பதில் சொல்வார்களா?!!!நண்பர்கள் ﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽