காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி! ( (Post No.7080

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-23
Post No. 7080

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை வழி நடப்பவர்.

அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு ஒரு பேராசிரியர் வந்தார்.

அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள் கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

அவரை உற்று நோக்கிய காந்திஜி, “புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.

முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு விட முடியுமா?” என்றார்.

திகைத்தார் புரபஸர். திக்கித் திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு  கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான் பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.

புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.

 செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று அடுக்கினார்.

வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம் வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.

காந்திஜியே நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே நான்!” என்று ஆச்சரியப்படும் குரலில் கூறினார் காந்திஜி.

“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”

பெருமூச்சு விட்ட புரபஸர், “அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவருக்கு மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.

காந்திஜியிடம் மீண்டும் வந்த அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது  இடைமறித்தார் காந்திஜி.

“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள் தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு விடலாமே” – காந்திஜி புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.

தனது நிதானத்தை இழந்த புரபஸர், “முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி!  உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன். ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை  நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.

“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை  செய்யுங்கள். வேறு எதையும் நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : –  Do your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.

*

அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி. வாஸ்வானி கீதையை விளக்கும் தனது  புத்தகமான The Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

அது என்ன செவன் கமாண்ட்மென்ட்ஸ்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***

Gandhiji in Mauritius- Puvana Sharma’s Picture

கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை! (Post No.6071)

Written by S Nagarajan


Date: 14 February 2019


GMT Time uploaded in London – 6-46 am


Post No. 6071

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்! (Post No.4672)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 7-17 am

 

Post No. 4672

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஏன்?

 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் செப்புவான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

 

பொருள் என்ன?

 

ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

 

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக இயம்புவான். இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. அப்பர், சுந்தரர்  தேவாரத்திலும் காணலாம்.

 

 

இதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

 

எட்டு குணங்கள் யாவை?

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

 

இன்னொரு விளக்கம் அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

 

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன: அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

 

 

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

 

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்

குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்

எட்டு வான்குணத் தீசனெம்மான்

 

(அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடம்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

புத்தர் பெருமான்:–

 

புத்தர் பெருமான், இறை வழிபாடு பற்றி யாதும் செப்பாமல் எட்டு வகைக் குணங்கள் இருந்தால் போதும் என்று செப்பிச் சென்றார்.

 

அவையாவன:

நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல்,

நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சிநல்ல சிந்தனைநல்ல நோக்கம்

 

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ், ஜப்பானிய சாமுராய் வீரகள் ஆகியோரும் எட்டு குணங்கள் பற்றி விதந்தோதுகின்றனர்.

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்:–

 

அன்புடைமை, அறம், மரியாதை, ஞானம், உறவினரிடத்தில் நம்பிக்கையைக் காப்பாற்றுதல், விசுவாசம், பெற்றோரிடத்தில் அன்பு பாராட்டல், பெரியோர்களை மதித்தல்

 

ஏற்த் தாழ இதே கொள்கைகளை சில மாறுதல்ளுடன் ஜப்பானிய சாமுராய் வீரர்களும் ஏற்றனர்.

 

கண்ணன் செப்பிய எட்டு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

 

இது பற்றி ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய பகவத் கீதை பேருரையில் விளக்குவார்:

அஹங்காரமே பின்னர் புத்தியாகவும் மனதாவும் பரிணமிகும். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயம், வாயு, தேயு (அக்னி), அப்பு (ஜலம்), ப்ருத்வீ (மண்) இவற்றின் சிருஷ்டி (தைத்ரீய உபநிஷத் 2-1) எல்லாப் பிரவ்ருத்திக்கும் அஹங்காரமே மூல காரணம். இங்கு குறிப்பிட்ட மண் முதலிய பஞ்ச பூதங்கள் ஸூக்ஷ்மத் தன்மாத்திரைகளைக் குறிப்பன., ஸ்தூலமான பொருள்களையன்று.

மேலும் அண்ணா சங்கரரின் ஒரு மேற்கோளையும் எடுத்தாளுகிறார்:-

அந்தக் கரணம் என்பது என்ன?

மனது புத்தி சித்தம் அஹங்காரம் – இந்நான்கினையும் அந்தக் கரணம் என்பர். மனதின் ஸ்தானம் கழுத்து, அதன் வேலை சந்தேகித்தல்; புத்தியின் ஸ்தானம் முகம், வேலை- நிச்சயம்; அஹங்காரத்தின் ஸ்தானம் இருதயம், வேலை- அபிமானம்; சித்தம் புத்தியுடனும், அஹங்காரத்துடனும்,மனத்துடனும் சேரும் (சங்கர- ஆத்மனாத்ம விவேகம்)

 

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

 

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

TAGS:– எட்டு எண், ஆன்மீகத்தில், புத்தர், கன்பூசியஸ், சமணர், சாமுராய், கீதை, குறள்

–subham–

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை (Post No. 2656)

blind muslim

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 23 March 2016

 

Post No. 2656

 

Time uploaded in London :–  8-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாராட்டு

 

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை

 

ச.நாகராஜன்

o-MUSLIM-GIRL-facebook

 

நல்ல செய்திகளை அரிதாகவே கேட்க முடிகிறது. அதைப் பாராட்டுபவர்களையோ இன்னும் அரிதாகவே பார்க்க முடிகிறது.

 

 

நாம் நல்லதைப் பாராடுகின்ற அரியவர்கள் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரீடா ஜெஹ்ரா என்ற ஏழு வயது முஸ்லீம் சிறுமி கைகளைக் கூப்பியவாறே கீதை சொல்லும் அழகு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

 

 

மீரட்டில் வாழும் ரீடா கீதை நூலைக் கண்ணால் கண்டதில்லை. பிறக்கும் போதே 80 சதவிகிதம் பார்வையை இழந்த குழந்தை மூன்று வயதிலிருந்தே ஒரு பராமரிப்புப் பள்ளியில் இருந்து வருகிறாள். அவருடைய ஆசிரியர் அவளுக்கு கீதையைப் படித்துக் காண்பிக்க அவள் அதை மனதில் வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

இத்தனைக்கும் அவள் பார்வையற்றோருக்கான ப்ரெய்லி கூட கற்கவில்லை.

 

 

எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன, என்னால் பார்க்க முடியப் போவதில்லை. கீதையோ குர் ஆனோ அதைப் படித்து கடவுளை நான் துதிக்கிறேன்” என்று நம்மை நெகிழ வைக்கும் சொற்களைக் கூறும் ரீடா மீரட்டில் ஜாக்ரிதி விஹாரில் பார்வையற்றோருக்காக அமைந்துள்ள ப்ரிஜ் மோகன் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறாள். ரிடாவின் பெற்றோரும் உடன்பிறப்புகளும் லோஹியா நகரில் வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கும் பண்டிகைகளுக்கும் தவறாமல் வீட்டுக்குச் சென்று விடுவாள் ரீடா.

அவளுடைய பள்ளி முதல்வர் ப்ரவீண் சர்மா, “2015ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கீதை சொல்லும் போட்டி ஒன்று நடக்கவிருப்பது பற்றி அறிந்தேன். ஏன் நமது பள்ளிக் குழந்தைகளும் இதில் சேரக் கூடாது என்று நினைத்தேன். ரீடா கீதையை நன்கு கற்றுக் கொண்டாள்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

 

 

ரீடாவின் பெற்றோருக்கு பாராட்டு. ரீடாவின் பிரின்ஸிபாலுக்கும் கீதையைக் கற்றுத் தந்த ஆசிரியருக்கும் பாராட்டு.

 

 

ரீடாவுக்கு…

 

நமது பாராட்டோ பாராட்டு.

குழந்தைக்குக் கண்ணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க கண்ணனை வேண்டுவோம்!

 

maryam

மரியம், என்ற பெண் கீதை போட்டியில் முதலாவது வந்தாள்.

**********

தோன்றிற் புகழொடு தோன்றுக! உத்திஷ்ட! யசோ லப !!

Srimad_Bhagavad__4c53e78e9a0a5

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1440; தேதி 27 நவம்பர், 2014.

பகவத் கீதையில் கண்ண பிரான் உலக மக்களுக்கு ஒரு கட்டளை இடுகிறான்:
உத்திஷ்ட ! யசோ லப !!
எழுந்திரு ! புகழ் அடை!! (பகவத் கீதை 11-33)

இதையே வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான்:

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

பொருள்:- ஒருவன் பிறந்தால் புகழ் அடையவேண்டும் என்ற அவாவோடு – அதற்குரிய குண நலன்களுடன் பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதார் பிறக்காமல் இருத்தலே நல்லது.

கண்ணனும் இதே கருத்தையே வலியுறுத்துவான். அர்ஜுனன் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி யுத்தம் செய்யாமல் தப்பிக்கலாம் என்று பார்க்கிறான். கண்ணன் விடவில்லை. பலவிதமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி வழிப்படுத்தப் பார்க்கிறான்.

பகவத் கீதையில் உத்திஷ்ட! (எழுந்திரு) என்று கண்ண பிரான் குறைந்தது நாலு முறையாவது கட்டளை இடுகிறான். அதாவது, நமது ஊரில் சண்டித்தனம் செய்யும் மாட்டை மாட்டு வண்டிக்காரன் விரட்டுவது போல எழுந்திரு என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கிறான்.
Srimad_Bhagavad__4bfd17abd98d4

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குச் சண்டை போட நம் ஊர் உசிலம்பட்டி இளைஞரை அனுப்புகிறோம். அவர் முதல் நாள் இரவு மஹாத்மா காந்தி புத்தகத்தையும் புத்த பகவான் சரித்திரத்தையும் படித்துவிட்டு அடாடா! நாளைக்கு நாம் துப்பாக்கியே எடுக்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்தால் அவருடைய பாட்டாளத்தின் மேஜர் அவருக்குத் தக்க தண்டணை கொடுப்பார். அவர் அஹிம்சைக்காக ராணுவத்தில் சேரவில்லை. துஷ்டர்களுக்கு ஹிம்சை தருவதே அவர்தம் கடமை.

“சுடச் சுடரும் பொன் போல ஒளிவிடும்” — என்ற உவமையை வள்ளுவன் ஞானிகளுக்குப் பயன்படுத்துவான்.
உசிலம்பட்டி இளைஞருக்கும் அதே வரிகள் வேறு பொருள் தரும். அவர் ஆட்களைச் சுடச் சுட— (சுட்டுத் தள்ளத் தள்ள) — பொன்= தங்கப் பதக்கம் ஒளிரும். அதாவது நிறைய பேரைக் கொன்றால் அவருக்கு தங்கப் பதக்கம் மட்டுமா, ‘’பரமவீர சக்ரம்’’ கூடக் கிடைக்கும்.

AriseAwake_p
ராஜீவ் காந்தியையும் இந்திரா கந்தியையும் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை அளிக்க ஒரு நீதிபதி கருணையின் காரணமாகத் தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ராணுவ வீரனானாலும் நீதிபதி யானாலும் அவரவர் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். போர் வீரன் க்ஷத்ரிய தர்மத்தையும் நீதிபதி ஒரு சட்ட தர்ம (ஸ்மிருதி) நூலையும் பின்பற்ற வேண்டும்.

ஒருவனை ஒருவன் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். அவனே போரில் பல ஆட்களைக் கொன்றால் அவனுக்கு மிகப்பெரிய ராணுவ விருது கிடைக்கும். அது க்ஷத்ரிய தர்மம். உலகம் முழுதுமுள்ள நடை முறை. அதே போல நாம் ஒருவரைக் கொன்றால் ஒரு புறம் சட்டம் நம்மை விரட்டும், மறுபுறம் பாவம் நம்மை விரட்டும். ஆனால் ஒரு நீதிபதி அவரது பதவிக் காலத்தில் நூறு பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவரைப் பாவம் ஒட்டாது. கடமையைச் செய்ததற்குப் புண்ணியமே கிடைக்கும். தூக்கு மேடைப் பொறுப்பாளன் எத்தனை பேர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினாலும் அவனை பாவம் ஒட்டாது. அவன் விருப்பு வெறுப்பின்றி தன் கடமையைச் செய்கிறான்.

இவ்வளவு சின்ன விஷயத்தை அர்ஜுனனுக்குப் புரிய வைக்க, பாவம்! கிருஷ்ண பரமாத்மா படாதபாடு பட்டார். அர்ஜுனனைச் சமாதானப் படுத்த அவர் 1400 வரிகள் பேச வேண்டியதாயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இந்து மத தத்துவங்களை ஒட்டு மொத்தமாக ‘’ஜூஸ்’’ பிழிந்து, அதில் சர்க்கரையையும் தேனையும் சேர்த்து, வாசனைக்கு ரோஸ் எசன்ஸையும் விட்டது போன்ற பகவத் கீதை நமக்குக் கிடைத்திருக்குமா?

malaysia_stamp_vivekananda
கீதையில் இதற்கு முன் சொன்ன உத்திஷ்ட பகுதிகளும் சுவையானதே.
இரண்டாம் அத்தியாயத்தில் (2-3)

க்லைப்யம் மாஸ்மகமஹ = சீ ! சீ ! பேடித்தனத்தை விட்டு எழுந்திரு – என்று கொஞ்சம் அதட்டல் மிரட்டலாகவே பேசி விடுகிறார் கண்ணன்.

இன்னும் ஒரு இடத்தில் இதோ பார்! இந்த அத்தைப் பாட்டி கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லாதே. “போரில் இறந்தால் வீர சுவர்க்கம்- வெற்றி பெற்றாலோ மாபெரும் சாம்ராஜ்யம்! எழுந்திரு! நண்பா! (2-37) என்கிறார்.

4-41-ல் வரும் உத்திஷ்ட அஞ்ஞானத்தை ஞானம் என்னும் வாளால் வெட்டிவிட்டு என்று குறள் கொடுக்கும் ஆன்மீக உத்திஷ்ட ஆகும்.

பகவத் கீதை ஒரு அதிசயமான நூல். எல்லா இடங்களிலும் அர்ஜுனனுக்கு சுதத்திரம் தருகிறார் கண்ணன் —- கொஞ்சம் அதட்டுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார் —- ஆயினும் இறுதியில் நண்பனே! உனக்கு எது நல்லதோ அதைச் சொல்லிவிட்டேன். ஆயினும் உன் இஷ்டம்!! என்று அவனையே முடிவு எடுக்க அனுமதிக்கிறார். அதாவது நம் வீட்டில் அப்பா அம்மா நமக்கு எப்படி அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் அன்பாகவும் பண்பாகவும் சொல்லுகிறார்களோ அதே ‘’டெக்னிக்’’கைத் தான் – உத்தியைத் தான் – கண்ணனும் பின்பற்றுகிறான்.

bhagavad-gita

எப்படி திருக்குறளை திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது பொருள் கிடைக்குமோ அப்படி — தொட்டனைத்தும் மணற்கேணி என — பகவத் கீதையை அதிகாலையில் படிக்கையில் புதுப்புது பொருள் தோன்றும். ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரை அல்லது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய உரை இருந்தால் போதும். ஆங்கிலத்தில் சின்மயானந்தா உரை போதும்.

புத்தகம் இருந்தாலே நீங்களும் ஞானம் என்னும் ஏணியில் முதல் படியில் கால் எடுத்து வைத்ததாகக் கருதலாம்.
–சுபம்—