
Written by S.NAGARAJAN
Date: 21 NOVEMBER 2017
Time uploaded in London- 5-39 am
Post No. 4418
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 8)
24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
கம்பன் பாட்டால் கல்லெலாம் மணியேயான! கனியெலாம் கனகமான!
ச.நாகராஜன்
கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

Ram Navami in Kolkata
பாடல் 41
சைவம் வைணவம் மென்றிரு சமையத்தின் னிலையிற்
கைவந் தமத நூல்களோ கணக்கில கவியின்
மெய்வந் தேவிக சிக்குமிந் நூல்விர கறியார்
பொய்வந் தேறிடம் பொதிந்தனர் கவிப்புல னில்லார்
பாடல் 42
விரிந்த சாத்திரத் தொகை,கலைத் தொகுதி, வேற் றுமையே
தெரிந்தி லார்பலர், தெரிந்தவர் கலையினும் பிரிவாய்ப்
பொருந்தெ ழிற்கலை தொழிற்கலை வேற்றுமை பூட்டாரே
திருந்து சித்திர கலையுருங் கவிக்கலைத் தெரியார்
பாடல் 43
ஓவியம் சிற்ப மெனுமுயர் கலையினுள்
காவிய மென்னுங் கலைபயப் பதோகவி னின்பம்
தீவு காவியக் கலைவரு வேற்றுமை தெரிப்பின்
பாவி கத்துரு மொழிகொடு பண்ணலே மன்னி
பாடல் 44
இன்னும் வேறொரு வேற்றுமை காவியத் தியலும்;
முன்னங் கூறிய சிற்பமோ வியமமை முறையும்
முன்னும் பாவிக வுருவொரு கணநிலைத் தொகுக்கும்;
மன்னுங் காவியப் பொருளிறப் பெதிர்வினான்
பாடல் 45
காவிய மென்னுங் கடற்படு நூனிரை கணிப்பார்
ஓவி யக்கலை யுள்ளுறை நோக்குண ராதே
கூவிக் காட்டிய கொள்கையுங் கொள்கையாக் கொள்ளேம்;
மேவும் சித்திரம் விழியிலான் மதித்திடின் வினையென்?
பாடல் 46
ஆயினு மிஃதறிந்த் திலார் கித்தம் மதிமார்
தீய னுங்கிய சிந்தைய ராய்ச்செவிச் செறுத்தே
வாய னுங்கிய வாறுரை மதித்தனர் தமிழெந்
தாயு நுங்கிய தனியமு தலையெறி கடலை

Ram Navami in Bengaluru
பாடல் 47
கம்பன் பாவருங் கனிவினைக் கனிதா வியலா:
கம்பன் பாவருங் கடிமணம் மலர்தந்து கமழா;
கம்பன் பாவருங் கவினுரு கலைதந்து நிலையா;
கம்பன் பாவருங் கண்டிசை எண்டிசை காட்டா;
வேறு
பாடல் 48
அளப்பரு மான்ற தன்மை யாழ்ந்துகீழ் போகு நீர்மை
கிளப்பரு நளிர்மை யின்ன கெழுமிய குணத்தி நாலும்
களைப்பற வுயிர்கட் கோசைக் களிப்பையே யளிப்ப தாலும்
வளைப்புறு கடலுங் கம்பன் கவியென மருவிற் றன்றே
பாடல் 49
சவியுறத் தெளித லாலும் தவழ்நயம் தழைத் தலாலும்
புவியுறு முயிர்க்கு மேலாம் புலம்நின்று விளங்க லாலும்
கவினுறு பொருட்கோ ரெல்லை கதுவுறா விதுப்பி னாலும்
கவியுறு விசும்புங் கம்பன் கவியெனக் காட்டிற் றன்றே
பாடல் 50
தொல்லையிற் றொடர்ந்த ஞானத் தொகைவயின் வருத லாலும்
வல்லையில் வரம்பி லின்பம் மக்கட்கு வகுத்த லாலும்
ஒல்லையி லொன்றே யாகி யொப்புயர் வின்மை யாலும்
எல்லையிற் பொருளுங் கம்பன் கவியென இலகிற் றன்றே
பாடல் 51
சொல்வளம் பெரிதென் கோயான்? சொல்லினுட் டுளும்பு ஞான
எல்வளம் பெரிதென் கோயான்? நவையறு மணிகள் வீசும்
வில்வளம் பெரிதென் கோயான்! வியங்கியம் விழுமி தென்கோ?
பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

Ram Ram Seva Sangham in Chennai
பாடல் 52
அழகினை முடியக் காண வகிலத்துப் புலவ ரெல்லாம்
பழகிய நூலின் பண்பே பற்றியொன் றொன்றே கண்டார்
பழையவா சனையிற் கம்பன் பைந்துணர் பூத்த பாவிற்
குழகெலா மொருங்கே கூடிக் குடியிருப் பதையுங் கண்டார்
பாடல் 53
பூவிடைப் பொலிவு நோக்கிப் பொற்றிரு நளினஞ் சார்ந்தாள்
சேவுடை சிவனார் சோதி திகழவே யுமையுஞ் சேர்ந்தாள்
நாவினின் றொலிக்குஞ் சொல்லி னயமெலா மடுத்த கம்பன்
பாவிலில் விருபண் பொன்றப் பாரதி பருகி வென்றாள்
பாடல் 54
வம்பவிழ் மலரில் வந்தோன் வகுத்தவர் கோடி யேனும்
கம்பனார் உதித்த பின்றான் கறுவிய கதமும் கொண்டான்
கொம்பெறும் வாணி தன்னாக் குடிச்செய ணீக்கி யன்னார்
பம்பிசை நாப்புக் காங்கே பணிசெய்து நிற்றல் கண்ட
பாடல் 55
கல்லெலாம் மணியே யான; கனியெலாங் கனக மான;
அல்லெலாம் ஒளியே யான; ஆறெலா மமுத மான;
புல்லெலாம் புலமே யான; புகழெலாம் புகுத லான
சொல்லெலாம் தொகுத்துக் கம்பன் சூழ்ரச வாதச் சீரால்
பாடல் 56
வேறு
பல்வளத்தின் மாரிவான்ப டர்ந்துதாரை சோரலோ
எல்வளத்தி னெல்லிநூ றெழுந்துசோதி வீசலோ
பல்வளத்தி ராமன்வில் வழங்குமீனி வானிலோ
சொல்வளத்தின் பெற்றி முற்றச் சொல்லலாக வற்றதோ!
பாடல் 57
ஓடலாலு லாவலாலுள் ளோய் வுலைத் துற் சாகமே
மூடலால்மு ணுங்கலால்மு ழங்கலால்மு கந்தணி
சூடலால் சொலித்தலால் தொனித்தலாலுள் ளம்நெகிழ்
பாடலாலின் பத்துனாரிப் பாருளாரில் யாருளார்?
*

அழகிய இப்பாடல்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளதைக் கம்பனை நன்கு கற்றோர் உணர முடியும்.
கம்பனின் சொற்களை வைத்தே கம்பனின் இன்பத்தைக் காண்பிக்கும் பாடல்கள் இவை.
எளிதில் பொருள் விளங்கக் கூடியவை!
கோதாவரியைக் கண்ட கம்பன் சவியுறத் தெளிதலால் என்று ஆரம்பித்துக் கவிதையின் இலக்கணத்தைப் பகர்வான். அதே சவி (ஒளி) கம்பனின் கவிதையில் இருக்கிறது என்கிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.
சொல் வளம் பெரிதா? சொல்லினுள் துளும்பும் ஞான ஒளி பெரிதா?
நமக்கும் விடை சொல்லத் தெரியவில்லை!
கல் மணியாக மாற, கனியெல்லாம் தங்கமாக மாற,இருட்டெலாம் ஒளியாக மாற, ஆறெல்லாம் அமுதமாக மாற, புல்லெலாம் புலமாக மாற, புகழ் எல்லாம் ஓடி வந்து கம்பன் தன் பாட்டில்!
கம்பனைச் சுவைத்து மகிழும் கம்ப ரஸிகர் சிவராஜ பிள்ளை அவர்களின் பாடலை மேலும் சுவைப்போம்!
-தொடரும்
***