“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா”

IMG_7068 (2)

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2320

 

Time uploaded in London :– காலை 8-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை!

நூலைக் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

IMG_7072 (2)

போளி வடை சாப்பிட்ட ஸம்வாதம்

தண்டுலபுரம் பட்டாமணியக்காரர் சம்சாரம் அன்னபூரணியம்மாள் வீட்டில் குருவும் சீஷனும் திருப்தியாக புசித்துவிட்டு மீளுகையில் கீழே குனியமுடியாமல் சீஷனைப் பார்த்து, “அடே! பிரமானந்த சிஷ்யா! என் காலில் செருப்பு இருக்கிறதா பாரடா” என்றார். சிஷ்யனும் வயிறு நிரம்ப புசித்திருக்கிறபடியாலே குனிந்து பார்க்கச் சக்தியற்று ஆகாசத்தைப் பார்த்து, “சுவாமி, நட்சத்திர மண்டலம் வரை எங்கும் தேடிப்பார்த்தேன். காணப்படவில்லை” என்றான்.

சீ!சீ! பிருஷ்டா, தலை குனிந்து கீழே தேடடா” என்று குருவானவர் கோபித்துக்கொண்டு சொல்ல, “தங்களைப் பார்க்கிலும் குறைவாகச் சாப்பிட்ட முட்டாளென்று நினைத்தீரோ” என்று சீடன் ஜவாப்பு சொன்னான். இவர்கள் நம்மைப் பார்க்கிலும் போஜனப்ரியர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்று நடந்து போகையில் வேறொரு சாப்பாட்டு ராமன், தெருத் திண்ணையில் படுத்துப் புரண்டு வயிற்றைத் தட்டிக்கொண்டு இப்படி அப்படி நெளிந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டி ருக்கையில் அவனது தாயார் வந்து அருகில் நின்று, “அப்பனே, இரண்டு ஓமம் தரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கவன் நகைத்துக் கொண்டு ஒரு ஓமத்துக்கு இடமிருந்தால் இன்னும் இரண்டு போளி சாப்பிட்டிருக்கமாட்டேனா? என்றான்.

இதைச் செவியுற்ற சீடனும் குருவும் இது ஏது நம்மைப் பார்க்கிலும் அகாதமாயிருக்கின்றது என்று தங்களிருப்பிடம் சேர்ந்தார்கள்.

IMG_7072 (3)

பிராமணா போஜனப் பிரியா

ஒரு நாள் ஜலக்கரையில் உட்கார்ந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பிராமணனண்டை மற்றொரு பிராமணன் வந்து “ஐயா, பெரியவரே! இன்று என் ஆத்தில் திவசம், பிராமணார்த்தத்திற்கு வரவேண்டுமென்று கூப்பிட்டான்.

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா” என்றபடி முடாமுழுங்கிப் பிராமணன் வேட்டை கிடைத்ததென்று கனைத்து, கொஞ்சமும் வஞ்சமன்னியில் இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் அறுபடும்படியாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் பொழுது அவ்வீட்டுக்குரிய ஸ்த்ரீ, “ ஏங்காணும் சாஸ்திரிகளே, இப்படி திண்ணையில் விழுந்து புரளுகிறீர்களே! இரண்டு மினறு ஜலம் குடிக்கிறதுதானே என்று கேட்டதற்கு, “ அம்மா!   இரண்டு மினறு ஜலம் சாப்பிட இடமிருந்தால், இன்னும் இரண்டு வடையாவது திணித்திருக்க மாட்டேனா?” என்று சாவதானமாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்திருந்து தன் வீட்டை நாடிச் சென்றான்.

–Subham–