
WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)
Date: 16 March 2016
Post No. 2635
Time uploaded in London :– 5-46 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!
விண்ணில் உலவும் ஒரு சாடலைட் பூமி வருடந்தோறும் 300 கோடி டன் ஐஸை அதாவது பனிக்கட்டிகளை அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் இழக்கிறது என்பதை அறிவித்துள்ளது. இந்த சாடலைட்டின் பெயர் க்ராவிடி ரிகவரி அண்ட் க்ளைமேட் எக்ஸ்பெரிமெண்ட் (Gravity Recovery
And Climate Experiment – GRACE) என்பதாகும். சுருக்கமாக இதை க்ரேஸ் என்று குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இந்த சாடலைட்டை 2002ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். புவி ஈர்ப்பு விசை மண்டலத்தை ஆராயும் இந்த விண்கலம் அந்த வேறுபாடுகளால் பூமி எவ்வளவு பனிக்கட்டிகளை இழக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும்.
இப்படிப் பெருமளவில் ஐஸ் இழப்பானது கடல் நீர் மட்டத்தை உயரவைக்கும். கடல் வாழ் உயிரினங்களைத் திகைக்க வைத்து அவற்றின் அழிவிற்கு வழி கோலும்.
பூமியில் உள்ள மொத்த பனிக்கட்டிகளில் 99.5 சதவிகிதம் அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் உள்ளது.இந்தப் பனிக்கட்டிகளை பூமி முற்றிலுமாக இழந்து விடுவதாக வைத்துக் கொண்டால் கடலின் நீர் மட்டம் சுமார் 63 மீட்டர் அளவு உயர்ந்து விடும்.அதாவது சுமார் 206 அடி கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். அப்போது ஏற்படும் உலக நாடுகளின் அழிவை எண்ணிப் பார்த்தால் அனைவரின் மனமும் திடுக்கிடும், இல்லையா! ஆகவே தான் மக்களும் மிருகங்களும் இதர கடல் வாழ் உயிரினங்களும் உயிர் வாழ அண்டார்க்டிக் பகுதி ஐஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் பனிக்கட்டிகளை இழப்பதன் மூலம் பூமியின் வெப்பம் எப்படி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதால் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்ச்சியை உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமையாக அமைகிறது. விழிப்புணர்ச்சி பெறுவோம்;பூமியைக் காப்போம்!
*********
You must be logged in to post a comment.