சுப்பிரமணியர் மீது விகடத் துதி

murugan vattam

Compiled by London swaminathan

Date: 9 November 2015

Post No:2315

Time uploaded in London :– 17-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த பாடல்.

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

இராகம்- எதுகுல காம்போதி, தாளம்- ஏகம்

பல்லவி

சொல்லையா கந்தா- துரை மகனே அதைச்

சொல்லையா கந்தா

murugam balan

அநுபல்லவி

தெள்ளுமயிலிருக்கத் தெய்வானையும் இருக்க

வள்ளி மயிலுக்காக வனந்தேடிப் போனதென்ன (சொல்லையா…)

சரணங்கள்

தாரமிரண்டிருக்கத் தால மாமனுமிருக்க

ஆருமறியாத அகதிபோலானதென்ன (சொல்லையா…)

அன்னை தந்தைகளிருக்க அம்மான் மகளிருக்கச்

சன்னாசிக் கோலமான சங்கதியெல்லாம எனக்குச் ((சொல்லையா…)

தந்தையைச் சுற்றிவந்து தமையன் கனியெடுத்தான்

மந்தையைச் சுற்றிவந்து மதிகெட்டுப் போனதென்ன (சொல்லையா…)

கூறிய அஞ்சுமுகன் குழந்தை நீயானாக்கால்

ஆறுமுகமான அதிசயத்தையெனக்குச் (சொல்லையா…)

உற்றுவளர்த்த பிள்ளை ஒன்றுக்கிரண்டிருக்க

பெற்றதகப்பன் முந்திப் பிச்சையெடுத்துண்டதென்ன (சொல்லையா…)

வல்லப்புரம் செயிக்க மாட்டாமலுங்களப்பன்

பல்லைத் திறந்துவிட்ட பரியாசத்தையெனக்குச் (சொல்லையா…)

சேமநிதியிருக்கத் திருப்பாற்கடலிருக்க

மாமன் பசித்ததென்று மண்ணைவாரியுண்டதென்ன (சொல்லையா…)

மண்ணையுண்டு மாமன் வயிற்றுக்குப் போதாமல்

வெண்ணைதிருடியுண்ட விபரமெல்லாமெனக்குச் (சொல்லையா…)

சைவசமயத்துக்குத்  தலைவனீயானாக்கால்

தையல் குறத்தியை நீ சம்மந்தஞ்செய்ததென்ன (சொல்லையா…)

மங்கையிருவரையும் மணம் செய்துவைத்துவிட்டுப்

பங்கமில்லாத சடைப் பண்டாரமானதென்ன (சொல்லையா…)

சீப்பிட்ட கூந்தல் வள்ளி தெய்வானையைக் கலந்து

சாப்பிட்டிருக்காமல் சன்யாசியானதென்ன (சொல்லையா…)

தேவியிருவருக்கும்  தீராத சண்டையினால்

கோவித்துக் கொண்டிருந்தக் கோலமெடுத்தாயோ (சொல்லையா…)

-சுபம்-

Leave a comment

Leave a comment