சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 1 (Post No 2670)

Digital-thermometer-1140x625

Written by S NAGARAJAN ( for Radio Talk)

Date: 28 March 2016

 

Post No. 2670

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. காற்றைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

உங்கள் வீட்டை பெயிண்ட் அடிக்கிறீர்களாஆயில் பேஸ்ட் பெயிண்ட் (Oil based paint) எனப்படும் எண்ணெய் சார்ந்த வர்ணங்களைப் பயன்படுத்தாமல் லேடக்ஸ் பெயிண்டுகளைப் (latex paint) பயன்படுத்துவதன் மூலம் ஹைட்ரோகார்பன் புகை வெளியாவதைத் தடுக்கலாம். உங்கள் வாகனங்களுக்கு உரிய காலத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக மைலேஜ் கிடைப்பதோடு நச்சுப் புகை வெளியேற்றத்தையும் பெருமளவு தவிர்க்கலாம். காற்று மாசு படுவதைத் தவிர்க்கலாம்.

 latex paint

கழிவுப் பொருள்களை வீட்டின் முன்போ அல்லது சாலையிலோ போட்டு எரிக்கக் கூடாது. இதன் மூலம் வெளியாகும் புகை சுவாசம் சம்பந்தமான கோளாறுகளையும் பல விதமான அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக் கோளாறுகளையும் அருகில் வாழும் பலருக்கும் ஏற்படுத்தும்.

 

மரம் ஒன்றை நடுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலைப் பெரிதும் காத்தவர்கள் ஆவீர்கள். மரம் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி விடும்.

 

கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் தவிர்த்து நடை பயிலுங்கள். அல்லது பஸ் போன்ற வெகுஜன வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.

 

இனி நாம் வாழும் நிலப்பகுதியைக் காக்கும் சில எளிய வழிகளைப் பார்ப்போம். வீட்டில் உள்ள குப்பைகளைப் போடும் பக்கெட்டில் ஆபத்தை விளைவிக்கும் பெயிண்டுகள், உர வகைகள், கெமிக்கல்கள், கார் பேட்டரிகள், எண்ணெய்க் கழிவுகள் ஆகியவற்றைப் போடக் கூடாது

 

பாதரஸம் உள்ள மெர்க்குரி தெர்மாமீட்டரைப் பயன்படுத்தாமல் டிஜிடல் தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு வரும் பெரும் கேட்டைத் தவிர்க்கலாம். பாதரஸம் கழிவாக அப்புறப்படுத்தப்படும் போது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு பொருளைத் தவிர்த்தவர்கள் ஆவோம். கெமிக்கல்கள், உர வகைகள், பெயிண்டுகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் வைக்காமல் உரிய அளவை மட்டுமே வாங்கலாம். பேப்பரா, பிளாஸ்டிக்கா? பிளாஸ்டிக் தேவையில்லை என்று தைரியமாக எப்போதும் முடிவெடுங்கள். பேப்பரின் இரு பக்கங்களையும் எப்போதும் பயன்படுத்துங்கள்.

சுபம்–

Leave a comment

Leave a comment