
Compiled by London swaminathan
Date:22 July 2016
Post No. 2994
Time uploaded in London :– 8-08 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

புத்தர் சொன்னது
ஒரு பிராமணனும் முனிவனும், கடந்தகால பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள்; அவன் தாய் தந்தையைக் கொன்றிருந்தாலும், இரண்டு மன்னர்களைத் தீர்த்துக்கட்டியிருந்தாலும், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே அழித்திருந்தாலும் அவர்களப் பாபம் பிந்தொடராது
–புத்தர் சொன்னது, தம்ம பதம் 294
எவனும் பிராமணனுக்குத் தீங்கு செய்யக்கூடாது; பிராமணர்களும் யாருக்கும் பதிலடி தரக்கூடாது.
–புத்தர் சொன்னது, தம்ம பதம் 389
தீமையை ஒதுக்கிவைத்ததால் அவனை பிராமணன் என்று அழைக்கிறோம்; அவன் சாந்தமாக இருப்பதால் அவனை சமனன் என்று அழைக்கிறோம்; அவன் எல்லா பாபங்களையும் விட்டுவிட்டதால் அவனை பாபத்தை வென்றவன் (பாப ஜித) என்று அழைக்கிறோம்— –புத்தர் சொன்னது, தம்ம பதம் 388
பழங்காலத்தில் பிராமணன் என்பவன் ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்ததால் அவனை மேலானவன் என்று மக்கள் கருதினர். புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களிலும், திருக்குறளிலும் “அறுதொழிலோர்” என்று பார்ப்பனர்கள் புகழப்படுவர்.
வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி (யாகம்) செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், கொடுத்தல் ஆகிய 6 தொழில்களைச் செய்துகொண்டு பிரம்மத்தை நாடுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டதால் பிராமணன் என்றும், அந்தத்தை (உள்ளுறையும் பிரம்மத்தை) அணவியதால் அந்தணர் என்றும் சொன்னார்கள்.

மனு கூறும் காரணம்:–
பூதானாம் ப்ராணின: ச்ரேஷ்டா: ப்ராணினாம் புத்திஜீவின:
புத்திமத்ஸு நரா: ச்ரேஷ்டான் நரேஷு ப்ராஹ்மணா: ஸ்ம்ருதா:
மனு 1-96
உயிரினங்களில் (வெளிப்படையாக) மூச்சுவிடக்கூடியவை உயர்ந்தவை;
அவ்வாறு மூச்சுவிடுபவைகளில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவை உயர்ந்தவை;
அவ்வாறு சிந்தனைத் திறன் பெற்றவைகளில் மனிதன் மேலானவன்;
அத்தகையோரில் பிராமணனே உயர்ந்தவன் என்று பாரம்பர்யமாகக் கருதப்படுகிறது– மனு 1-96
ஏனென்றால்:-
உத்பத்திரேவ விப்ரஸ்ய மூர்த்தி த்ர்மஸ்ய சாஸ்வதீ
ச ஹி தர்மார்த்தமுத்பன்னோ ப்ரஹ்ம பூயாய கல்பதே –-மனு 1-98
பிராமணந் தர்மத்தின் உரு; அவன் பிறவியே தர்மத்துக்காகவே;
அவன் பிரம்மத்துடன் ஐக்கியமாகவே பிறந்துள்ளான் (ப்ரஹ்ம பூயாய கல்பதே)

(Read Nobale as Noble)
பிரம்ம ஞானி யார்?
ப்ராஹ்மணேஷு ச வித்வாம்சோ வித்வத் சுஹ்ருத் புத்தய:
க்ருதபுத்திஷு கர்தார: கர்த்ருஷு ப்ரஹ்மவேதின:
மனு 1-97
பிராமணர்களில் வேதம் ஓதி, அதன் அர்த்தத்தை உணர்ந்து, அதில்
நல்ல எண்ணம்படைத்து, அவைகளை அனுஷ்டித்து வைராகிகளானவர்களே பிரம்ம ஞானிகள்.
இப்போது புரிகிறதா?
இன்றைய பிராமணர்கள் (பெரும்பாலோர்) இந்த இலக்கண வரையரைக்குள் வரமாட்டார்கள். ஆகையால் இதை உணர்ந்தால் அவர்களும் பிராமணர் என்று உரிமை கொண்டாடமாட்டார்கள்.
சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம் அல்லது ராமானுஜர் செய்தது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம்.
ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபத: பும்ச்த்வம் ததா விப்ரதா
தஸ்மாத் வைதிக தர்ம மார்க பரதா வித்வத்வமாஸ்த்பரம்
–ஆதிசங்கரரின் விவேக சூடாமணி- பாடல் 2
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;
அதிலும் ஆண்களாய்ப் பிறப்பது அரிது;
அதிலும் அரிது பிராமணனாகப் பிறப்பது,
அதிலும் அரிது வேத தர்மத்தைப் பின்பற்றுவது.

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள் -30
எல்லா உயிர்களிடத்திலும் அருள் பாராட்டுவதால் முனிவர்கள், அந்தணர்கள் என்று அழைக்கப்படுவர்.
–Subahm–
kailasam a
/ July 22, 2016verygood explanation
2016-07-22 12:38 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” Compiled by London swaminathan Date:22 July 2016
> Post No. 2994 Time uploaded in London :– 8-08 AM ( Thanks for the Pictures)
> DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE
> COPYRIGHTED BY SOMEONE. (for old ar”
>