
Written by S. NAGARAJAN
Date: 4 October 2016
Time uploaded in London:5-59 AM
Post No.3217
Pictures are taken from various sources; thanks
ச.நாகராஜன்
Hindu American Foundation என்ற இணைய தளம் இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு விவரிக்கிறது.
அங்கு, திட்டமிட்டு ஹிந்துக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றனர்,
அவமானப்படுத்தப்படுகின்றனர். இஸ்லாமியர் அல்லாத ஒருவர் ஃபெடரல் ஷரியத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட முடியாது. பாகிஸ்தான் அரசியல் சாஸனப்படி அந்த நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் நிச்சய்மாக ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும்.
மகம்மது நபியைப் பற்றித் தூற்றுவதோ அல்லது விமரிசிப்பதோ தெய்வ நிந்தனைக் குற்றமாகும். இதற்கான ஒரே தண்டனை மரண தண்டனை தான்! தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க இந்த அஸ்திரம் ஏவப்படும். வேண்டாத ஹிந்து அல்லது இதர மைனாரிட்டிகள் இந்தக் குற்றத்திற்கு “ஆட்பட்டு” தங்கள் இன்னுயிரைத் துறப்பர்.
பாகிஸ்தானின் உயர்நீதி மன்ற நீதிபதிகள் – உதாரணமாக லாகூர் ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் நீதிபடி அக்தர் (Justice Akhter of Lahore High Court) – தெய்வ நிந்தனை செய்வோரின் குரல்வளை நசுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திப் பிரச்சாரம் செய்கின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள 20 லட்சம் ஹிந்துக்கள் வழக்கமாக ஒரு பிணைத்தொகையைத் தருதல் வேண்டும். அவர்கள் உடலுக்கு ஊறு நேராமல் இருக்க அங்குள்ள தீவிரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தொகை கண்டிப்பாகத் தருதல் வேண்டும்.
குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் ஒரு ஹிந்துவுக்குக் கிடைக்காது என்பது சாமான்ய அறிவு. வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ ஒரு முஸ்லீமை ‘சைலண்ட் பார்ட்னராக’ -அவர் பெயருக்காகத் தான் இருப்பார் – சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஹிந்துக் கோவில்கள் அங்கு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நடந்த வகுப்புக் க்லவரங்களுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கான ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. (இந்தியாவில் வகுப்புக் க்லவரங்களைத் தூண்டி விடுபவர் இங்குள்ள தீவிரவாத முஸ்லீம்கள் தான் என்பது வேறு விஷயம்!)
ஹிந்துக்களின் கோவில் நிலங்களை/ இடங்களை அநியாயமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்தல். ஹிந்துப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் புரிதல், அவர்களைக் க்டத்தி பெரும் தொகையைப் பிணைத் தொகையாகக் கேட்டல் போன்றவை எல்லாம் அங்கு சர்வ சாதாரணம்.
2016, ஏப்ரல் 16 ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 24 வருடங்களுக்கு முன்னர் 50 வயதான க்ருபால் சிங் என்பவர் அட்டாரி – வாஹ் (Attari –Wagah) எல்லையைத் தாண்டி விட்ட குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அவரைச் சேர்த்து இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. ஏப்ரல் 11ஆம் தேதி மர்மமான முறையில் அவர் லாகூரில் உள்ள காட் லக்பட் (Kot Lakhpat) சிறையில் இறந்து கிடந்தார். அவரது கல்லீரலும் இதய்மும் அவர் உடலிலிருந்து அகற்றப்பட்டிருந்தன!
இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் உடனே மறுக்க ஒரு கோஷ்டி இந்தியாவில் உண்டு. சில கம்யூனிஸ்டுகள், அருந்ததி ராய் போன்ற “அறிவுஜீவிகளாகத்’ தங்களைச் சித்தரித்துக் கொள்வோர், காங்கிரஸை சேர்ந்த நடிகை ரம்யா உள்ளிட்ட சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள், திராவிட தீய சக்திகள் என்று இந்தப் பட்டியல் வெகு நீளம் கொண்ட ஒன்றாக விரியும்.
இவர்கள் அனைவரும் இந்தியாவை வாய்க்கு வந்தபடி விமரிசிப்பர்.
கருத்துச் சுதந்திரம்!!
இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து தெய்வங்களை கண்டபடி விமிரிசிப்பார். (ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாகப் படம் வரைதல், உயரிய மரியாதைக்குரிய தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடித்த உள்ளிட்டவை இதில் அடங்கும்)
கருத்துச் சுதந்திரம்!!!
ஆனால் முகம்மது நபியைப் பற்றியோ அல்லது அல்லாவைப் பற்றியோ ஒரு சிறிய கருத்தைத் தூக்கத்தில் கூட இந்தப் பகுத்தறிவு வீரர்கள் சொல்ல மாட்டார்கள்.
சொன்னால் உடனே கிடைக்கும் தண்டனை எது என்று அவர்களுக்கு நன்றாகவே புரியும்.
அதில் அவர்களின் கருத்துக்கு சுதந்திரமே கிடையாது.
ஒரு சிறிய நாடு மிகப் பெரும் சாத்வீகமான ஒரு நாட்டை எப்படி தைரியமாக எதிர்க்கிறது. ஏன் பிரம்மாண்டமான நாடான இந்தியா அதை எதிர்கொள்ள-அதன் தீவிர வாதத்தை எதிர்க்கச் சற்றுத் தய்ங்குகிறது.
முற்றும்
*********
இந்தக் கட்டுரைக்கான பல கருத்துக்களைத் தந்துதவிய 16-9-2016 TRUTH ஆங்கில வார இதழுக்கு எமது மனமார்ந்த நன்றி!
You must be logged in to post a comment.