
Written by London swaminathan
Date: 28 November 2016
Time uploaded in London: 8-16 AM
Post No.3396
Pictures are taken by Mr Prabhakar Kaza and Mr Aditya Kaza; thanks.
contact; swami_48@yahoo.com
I have already posted it in English
பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நடைபெற்ற ஜாதிகள் பற்றிய கூட்டத்தில் நான் பேசிய உரையின் இரண்டாம் பகுதி; நேற்று முதல் பகுதி “பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்” என்ற தலைப்பில் வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நலம் பயக்கும்; பொருள் விளங்கும்.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் உள்ள “புகழ்பெற்ற” தமிழ்சொல் பறையன். இதை நாள் தோறும் ஆங்கிலேயர்களும் ஆங்கிலப் பத்திரிக்கைகளும் பயன்படுத்துகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன் நமது வெளியுறவு அமைச்சர் BORRIS JOHNSON சிரியா- இன்டெர்நேஷனல் பறையா—Syria- International Pariah என்று பேசியது பத்திரிக்கைகளில் வெளியானது. நியூயார்க் டைம்ஸ், இன்டெர்நேஷனல் ஹெரால்ட்றிப்யூன், லண்டம் டைம்ஸ்– எந்தப் பத்த்ரிக்கையைத் திறந்தாலும் இந்த தமிழ் சொல்லைப் பார்க்கலாம். இது அறியாமையின் பொருட்டு வந்தது. நான் இந்தச் சொல்லை ஆங்கில அகராதியில் இருந்து நீக்குக என்று பேஸ்புக்கில் FACEBOOK ஒரு இயக்கமே நடத்தினேன். இதை அகற்ற வேண்டும். நான் தமிழ் நாட்டில் இந்தச் சொல்லை தவறான பொருளில் பயன்படுத்தினால் என்னைக் கைது செய்வர்; சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.
ஆனால் நீங்கள் இங்கு இன்னும் பயன்படுத்துகிறீர்கள். ஆகையால்தான் நான் சொன்னேன்– ஜாதிப்பிரச்சினையைப் போக சட்டம் தேவை இல்லை. அறிவூட்டுதல் அவசியம் என்று. நாங்கள் எல்லாம் கைவிட்ட சொல்லை ஆங்கிலம் அறிந்தவர்கள்தான் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.
அது சரி: இங்கு சிலர் கூறியது போல ஜாதி வேற்றுமை பிரிட்டனில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் சட்டத்தினால் என்ன சாதித்தோம்?
பயங்கர வாத எதிர்ப்புச்சட்டம் இருக்கிறது. ஆனால் CHIEF OF METROPOLITAN POLICE மெட்றோபாலிடன் போலீஸ் தலைவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அல்ல. முடிந்த மட்டும் ஓடுங்கள். அருகில் நின்று ஏதும் அசட்டுத்தனம் செய்யாதீர்கள் (படம் எடுப்பது; செல்பி எடுப்பது); ஓடமுடியாவிட்டால் ஒளிந்து கொள்ளுங்கள் – என்று.
போதை மருந்து எதிர்ப்புச் சட்டம் இருக்கிறது; சிறைச்சாலைக்குள்ளும் போதை மருந்து வருகிறது; எங்களால் தடுக்க இயலவில்லை என்று அதிகாரிகள் அறிக்கை வெளியிடுவதை தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். பல போதை மருந்துகளை சட்டபூர்வமாக்குகிறோம்- ஆகையால்தான் சொல்கிறேன்- சட்டங்கள் பயன் தராது- மன மாற்றம் அவசியம்- அறிவூட்டுதல் (Educating) அவசியம் என்று.
சரி! இவ்வளவையும் புறக்கணித்து நீங்கள் ஜாதி என்ற சொல்லை சமத்துவ சட்டத்தில் சேர்த்தால் என்ன நிகழப்போகிறது?
தலித்துகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவது அதிகரிக்கும்
விரேந்திர சர்மா போன்றவர் தொகுதியில் அவருக்கு தலித்
வோட்டுகள் அதிகம் கிடைக்கும்.
வீட்டு வேலைக்காரிகளாக வந்த பலர் நஷ்ட ஈடு வழக்குப் போட்டு மில்லியன் கணக்கில் பணம் பறிப்பர்.
வக்கீல்களுக்கு நல்ல காசு கிடைக்கும். பலரையும் தூண்டிவிட்டு வழக்குப் போடச் செய்வர்.
இந்த நாட்டுக்கு வந்த எல்லோரும் இதைச் சாக்கு காட்டி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இங்கேயே தங்கிவிடுவர்.
பிரிட்டன் மீது ஒரு நிரந்தரக் கறுப்புப் புள்ளி விழும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்படும் நாள் பிரிட்டிஷ சட்ட வரலாற்றில் கறுப்பு தினமாக என் போன்றோரால் கருதப்படும்

ஏனெனில் நண்பர்களே!
எங்கள் தமிழ் மக்கள் பத்து லட்சம் பேர் பாரீஸில் வசிக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இரட்டைக் குடியுரிமை பெற்று பிரான்ஸ் சென்றவர்கள். அவர்கள் யாரும் ஜாதிகள் பற்றிச் சட்டம் இயற்றவில்லை. உலகில் இந்தியாவைத் தவிர இந்த தலித் பிரச்சனை இல்லை. ஆக பிரிட்டன் மட்டும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பழமொழி போல உலகில் எங்கள் நாட்டில் ஜாதிப் பிரச்சினை உள்ளது என்று உலகிற்குப் பறை அறிவித்த கதை ஆகிவிடும்.
நண்பர்களே!
என் சிற்றுரையை முடிப்பதற்கு முன் உங்கள் எல்லோருக்கும் ஒரு சவால் விடுகிறேன். இந்த அறையை விட்டு வெளியே சென்று ஏதாவது நூறு இந்து இளஞர்களிடம் ஒரு சர்வே நடத்துங்கள். ஜாதி பற்றித் தெரியும் ஆனால் ஜாதி வேற்றுமை இல்லை என்றே சொல்லுவர். இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆகவே பிரிட்டனில் சட்டத்தில் வேற்றுமை பாராட்டும் விஷயங்களில் ஜாதி என்று சேர்ப்பது சரியல்ல. சட்டம் வேண்டாம் — மக்களின் மன மாற் றமே தேவை — அன்பு, சமத்துவம் என்ற இரண்டையும் பரப்புவோம்.
நன்றி, வணக்கம்.
-சுபம்-