
Written by London swaminathan
Date: 14 December 2016
Time uploaded in London:- 9-20 am
Post No.3447
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
This story is posted already in English
தமிழில் பல பழமொழிகள், ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் அனுபவத்தையோ வைத்துத் தோன்றியவை.
கம்மவார் நாயுடு என்பது நல்ல பணவசதியும் நில புலன்களும் சொத்து சுகங்களும் நிறைந்த ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நல்ல உழைப்பாளிகள்; விடாமுயற்சியுடையவர்கள்— சில கிராமங்கள் முழுவதும் இச் சமூகம் நிறைந்திருக்கும். இந்த சமூகத்தில் மாப்பிள்ளைமார்கள் ராஜா போல நடத்தப்படுவர்.
ஒரு பணக்கார குடும்பத்தில் பெண் எடுத்த மாப்பிள்ளை அந்தக் கிராமத்திற்குச் சென்று மாமனார் வீட்டில் விருந்தாளியாக அமர்ந்தார். ராஜ போகம்தான். மாப்பிள்ளைக்கு தின்னு தின்னு தினவெடுத்துப் போயிற்று. மாமனாருக்கு 400 ஏக்கர் நிலம். அவர் தனது நிலத்திலுள்ள பயிர்களை அறுவடை செய்யும் காலம் வந்தது. அது பற்றி வேலையாட்களுடன் விவாதிக்கையில் @நுணலும் தன் வாயால் கெடும்@ என்பது போல மாப்பிள்ளையும் வாய் திறந்தார்.
“மாமா, நான் சும்மாத்தானே இருக்கேன். நானும் கொஞ்சம் அறுவடை செய்யறேன். உங்களுக்கும் கூலி மிச்சமாகும். நானும் உதவி செய்ததுபோல இருக்கும்”.
மாமனார் சொன்னார்: “அதற்கென்ன? நீங்களும் என் கூட வரலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலத்துக்குத்தான் போறேன். வேலை என்ன என்று காட்டிக் கொடுக்கிறேன்”.
மாமனாரும் மாப்பிள்ளையும் காலை எட்டு மணிக்கு வயலுக்குச் சென்றார்கள். மாமனார் மேடான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனது நிலத்தின் நான்கு எல்லைகளையும் சுட்டிக்காட்டினார்.
மாப்பிள்ளை
“பூ, இவ்வளவுதானா! இதில் கால் பகுதியை எனக்கு ஒதுக்கிவிடுங்கள்; மிச்சம் முக்கால் பகுதியை கூலியாட்கள் செய்யட்டும்” – என்றார்.
மாமனாருக்கு ரொம்ப சந்தோஷம்.
அப்போது கடும் கோடை காலம்; சித்திரை மாத வெய்யில் உடலைத் தகித்தது. மாப்பிள்ளைக்கு பத்து கஜ தூரம் கூட அறுவடை செய்ய முடியவில்லை. பயிர்களை அறுக்க முடியவில்லை. மெதுவாக வீட்டுக்கு நடையைக் கட்டினார்.
காலலை 11 மணி இருக்கும்; மாப்பிள்ளை வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அப்பொழுதுதான், மாப்பிள்ளையின் பெருமையையும் அவர் தானாக முன்வந்து அறுவடைப் பணியில் உதவி செய்ய முன்வந்ததையும் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார் மாமனார்.
மாப்பிள்ளையைக் கண்டு திடுக்கிட்ட அவர், எப்படி இருந்தது வேலை? எவ்வளவு முடித்தீர்கள்? என்று கேட்டார்.
மாப்பிள்ளை சொன்னார்:
எனக்கு நில வேலை செய்து ரொம்ப நாளாய் விட்டதால் வேகமாகச் செய்யமுடியவில்லை. ஆகையால் நூறு ஏக்கர் வேண்டம் ; 50 ஏக்கரில் பயிர்களை வெட்டி விடுகிறேன்.
மாமனாரும் அதற்கு ஒப்புக் கொண்டார். மறு நாளும் இதே கதைதான். வயிறு புடைக்கச் சாப்பிடும் பழக்கமுள்ள மாப்பிள்ளைக்கு உடம்பு வணங்கவில்லை; மூச்சு முட்டியது; வியர்வை வியர்த்தது. காலை எட்டு மணிக்கு நிலத்துக்குப் போனவர் 11 மணிக்கு வீடு திரும்பிவிட்டார்.

மாமனாரும் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.
மாப்பிள்ளை சொன்னார்:
உடம்பு முன்னைப்போல இல்லை. ஆகையால் 50 ஏக்கரில் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. 25 ஏக்கரை மட்டும் எனக்கு ஒதுக்குங்கள் மற்றதை கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.
மாமனாரும், அதற்கென்ன? ஒரு கவலையும் வேண்டாம். நீங்கள் முடிந்த தைச் செய்யுங்கள் என்றார்.
நாட்கள் ஓடின. மாப்பிள்ளையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மறு நாள் மாமனாருடன் நிலத்துக்குச் சென்றா. இருவரும் அறுவடை நடக்கும் நிலத்தின் நடுவே நின்றனர்.
மாமா, ஒன்று செய்கிறேன். உங்கள் கழுத்தைத் திருப்பிப் பாருங்கள். இந்த கழுத்துக்குக் கீழே எவ்வளவு பயிர் உள்ளதோ அதை அட்டும் நான் அறுப்பேன், மிச்ச எல்லாவற்றையும் கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மாப்பிள்ளை வேலை செய்ய வேண்டிய இடமும் சுருங்கிப் போனது. இதுதான் மாப்பிள்ளை நாயக்கர் தட்டை (ப்பயிர்) அறுத்தது போல என்ற பழமொழியின் வித்து ஆகும்.
–சுபம்–
You must be logged in to post a comment.