
Written by London Swaminathan
Date: 2 September 2017
Time uploaded in London- 16-30
Post No. 4180

பெங்களூரில் 1917ஆம் ஆண்டில் நவம்பர் 13 தீபாவளித் திருநாள். ராமா சாஸ்திரி, வெங்கலெட்சுமி அம்மாளுக்கு தவப் புதல்வராக அவதரித்தார் ஸ்ரீனிவாசன். சிறு வயதில் நல்ல துணிசல் மிக்கவர். ஒரு அமாவாசை தினத்து மாலை வேளையில், இருள் சூழச் சூழ ஒரே பரபரப்பு. இருள் சூழ்ந்த குளத்துக்கு பக்கத்தில் நின்ற சிறுவர்கள் குளத்தில் வசிக்கும் பேய்கள் பற்றி கிசுகி சுக்கத் துவங்கினர். பேய்கள் வாழும் குளத்துக்கு யார் தனியாகச் சென்று திரும்பி வர முடியும் என்று சவால் விட்ட வண்ணம் இருந்தனர். திடீரென ஒரு சிறுவன் விறு விறு என்று குளத்துக்கு நடந்தான்.கை, கால் கழுவி வந்தான். எல்லோரிடமும் காட்டினான். பேய்களும் இல்லை; அதைக் கண்டு பயப்படுபவனும் இல்லை என்ற செய்தி எல்லோருக்கும் கிடைத்தது. அவன் தான் ஸ்ரீனிவாசன்
குண்டு என்ற மாணவன் மகா சுட்டி. விஷமத் தனத்தின் உருவகம். விளையாடும் சிறுவர்களுக்கு இடையே சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பவன். யாரும் அவனை அடக்கத் துணிவில்லை. ஒரு நாள் அவனைவிட ஒல்லியான ஒரு சிறுவன் குண்டுவுடன் மோதினான். குண்டுக்குத் திகைப்பு. எவ்வளவோ சமாளிக்க முயன்றும் முடியவில்லை. குண்டு மல்லாந்து விழவே அவன் மீது நின்றுகொண்டு ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் இனி எந்தச் சிறுவர்க்கும் தொல்லை கொடுப்பதில்லை என்று எழுதி வாங்கினான். குண்டுவை வீழ்த்திய அவந்தான் ஸ்ரீனிவாசன்.

ராமா சாஸ்திரிகள் பெங்களூரில் ஒரு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர். சீனிவாசன் எட்டாம் வகுப்பு மாணவன். தனது மகன் சரியாகப் படிப்பதில்லை என்று எண்ணிய ராமா சாஸ்திரி பையனின் கையில் பிரம்பால் அடிக்கத் தொடங்கினார். அவன் ஒரு கையில் நிறைய அடி வாங்கி விட்டதால் அடுத்த கையை நீட்டினான். அதிலும் அடிக்கத் தொடங்கினார். அந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த வெங்கட்ரா மய்யர் என்னும் ஜோதிடர் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, கையைத் தடவிக் கொடுத்தார். வியப்பும் திகைப்பும் மேலிட்டது ஜோதிடருக்கு.
ராமா சாஸ்திரியிடம் சொன்னார்: நீங்கள் பெரும் பாக்கியசாலி. தலை சிறந்த யோகி இங் கே பிறந்துள்ளார். அடுத்த சங்கராச்சாரியாராக இவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது நீங்களே உங்கள் மகன் காலில் விழ நேரிடும்.

வெங்கட்ரா மய்யர் சொன்னது உண்மயாயிற்று. சிருங்கேரி மடத்தின் 35ஆவது சங்கராச் சாசார்யாராக — அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகள் — என்ற பெயரில் பட்டம் ஏற்று 1989 வரை கொடி கட்டிப் பறந்தார்.
இது போன்ற பல நல்ல செய்திகளும் அவருடைய முக்கிய உபதேசங்களும் ஒரு சிறிய புத்தகத்தில் கிடைக்கிறது. சிருங்கேரி மடத்துக்குச் சென்றாலோ நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கலாம்.
எங்கள் பாக்கியம்

சிருங்கேரி மஹாசந்நிதானம் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அழைத்து, நாங்கள் பாத பூஜை செய்தோம். முடிவில் சஹோதர, சஹோதரியை தனித் தனியே அழைத்து பழம் கொடுத்து ஆசீர்வதித்தார

These pictures are the Rare Photographic Exhibition held at Madurai Setupati High School in August 2017.
—subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 2, 2017ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பெரிய தபஸ்வி. ஆரவாரமும் விளம்பரமும் குறைந்திருந்த 50 வருஷங்களுக்குமுன் ஒரு தரிசனத்தின் போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரில் முகாம்-1964/65ம் வருஷம். ஒரு நாள் பகல் பூஜை முடிந்தபின் தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார். நாங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். அப்படி ஒன்றும் அதிக கூட்டமில்லை.. வரிசையாக எல்லோருக்கும் தீர்த்தம் அளித்துக் கொண்டிருந்தவர், எனக்கு முன் நின்ற நபருக்குக் கொடுக்காமல் பின் நின்றவர்களுக்குக் கொடுத்தார். அந்த நபர் மீண்டும் வரிசையில் நின்று வந்தார். இந்த முறை ஸ்வாமிகள் அவரைப் பார்த்து ” நீ இன்று ஸ்னானம் செய்துவிட்டு வந்தாயா?” எனக்கேட்டார்! அந்த நபர் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்! சிறிய நிகழ்ச்சியே ஆனாலும் மஹான்களூக்குத் தெரிந்துவிடும், ஸ்வாமிகளிடம் போகும்பொது ஸம்பிரதாயத்தை விடக்கூடாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்!