
Written by S.NAGARAJAN
Date: 16 September 2017
Time uploaded in London- 5-56 am
Post No. 4216
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகள் உள்ளன.
இவற்றை விடுவிப்பதில் அனைவருக்கும் ஒரு ஆனந்தம்.
இரு கவிதைகளை மட்டும் இங்குக் காண்போம்.
உரசி முரமித: கா காடமாலிங்கிதாஸ்தே
சரஸிஜமகரந்தாமோதிதா நந்தனே கா I
கிரிசமலகுவர்ணைரனர்வாக்யாதிசங்க்யைர்
குருமிரபி க்ருதா கா சந்தஸாம் வ்ருதிரஸ்தி II
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சுபாஷிதத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கவிதை இது.
இதன் பொருள்:
கிருஷ்ணரின் மார்பில் அவரை ஆரத் தழுவி இருப்பது யார்?
மாலினி! (1)
நந்தனா தோட்டத்தில் தாமரைகளின் மது யாருக்கு வழங்கப்பட்டது?
மாலினி! (2)
பெரிய மலைகளின் எண்ணிக்கையால் குற்றோசை உடைய அசைகளாலும், கடல்களின் எண்ணிக்கையால் நெடிலோசை நிறைந்த அசைகளாலும் எந்த சந்தம் இருக்கிறது?
மாலினி! (3)
- மலர் மாலை
- ஆகாய கங்கை அல்லது ஒரு பூக்காரி
- மாலினி என்ற சந்தம்
ஆங்கிலத்தில் இந்தக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை A.A.R. இப்படி வழங்குகிறார்:
Who remains on the chest of Krishna embracing him tightly? (Malini 1)
Who is rendered fragrant by the honey of lotuses in the Nandana garden?
(Malini 2)
With short syllables of the number of the great mountains and with long ones of the number of seas, which metre is made up? (Malini 3)
- Flower – garland
- A female florist or heavenly Ganga
- Malini metre.
*

உபௌ ரம்பாஸ்தம்பாவுபரி விபரீதௌ கமலயோஸ்
ததங்கர்வே ரத்னாஷ்மஸ்தலமய துரூஹம் கிமதி தத் I
தத: கும்போ பஸ்சாத் பிஸகிஸலயே கந்தலமயோ
ததன்விந்தாவிந்தீவரமதுகரா: கிம் புனரிதம் II
பகதத்தரின் சுக்திமுக்தாவளியில் உள்ள கவிதை இது.
இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி
இதன் பொருள்:
இரண்டு தாமரை மலர்களின் மேல் (2) இரு வாழைத் தண்டுகள் (1) வெவ்வேறு விதமாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மேலே ரத்தினக் கல்லென்னும் அகலமான பிரதேச்ம் உள்ளது.(3)
பிறகு அதன் நுண்ணிய தன்மையால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒன்று இருக்கிறது. (4)
பின்னர் இரு கலசங்கள் உள்ளன. (5)
அதன் பிறகு அடுத்து இரு வாழைத்தண்டுகள் உள்ளன.(6)
பின்னர் மிருதுவான குருத்து (7)சந்திரனுடன் (8)வருகிறது.
அதன் மேல் இரு நீல அல்லி மலர்கள் உள்ளன. (9)
அத்துடம் தேனீக் கூட்டம் (10) வேறு உள்ளது.
இது என்ன? (11)
- தொடைகள்
- பாதங்கள்
- ப்ருஷ்ட பாகம்
- மெல்லிய இடை
- மார்பகம்
- கைகள்
- கழுத்து
- முகம்
- இரு கண்கள்
- கூந்தல்
- அழகிய பெண்
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கீழே காணலாம்: (மொழியாக்கம் A.A.R)

Two banana –stems (1) placed differently over two lotuses (2) , above these there is the broad region of a gem-slab (3), and then something (4) which is difficult to guess (due to smallness), then are the two pots (5), and next come two stalks (6), then the tende sprout (7), with the moon (8) over which are two blue lilies (9) and a swarm of bees (10) – What can this be (11) – Translation by A.A.R.
- Thighs
- Feet
- Hips
- Thin waist
- Bosom
- Hands
- Neck
- Face
- Eyes
- Tresses
- A (beautiful woman)
சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான புதிர்க் கவிதைகளை ரசிப்பது ஒரு வாழ்நாள் இலக்கிய அனுபவமாகவே இருக்கும்.
இன்னும் சிலவற்றைப் பின்னர் காண்போம்.
***