
Written by S.NAGARAJAN
Date: 1 October 2017
Time uploaded in London- 5-41 am
Post No. 4260
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மஹாபாரதச் செல்வம்
விதுரர் கூறும் விதுர நீதி – 4
ச.நாகராஜன்
6
செல்வத்தை விரும்புபவன் கீழ்க்கண்ட ஆறு தோஷங்களை விலக்க வேண்டும்.
- அதிக தூக்கம்’ 2) சோம்பல் 3) பயம் 4) கோபம் 5) முயற்சியின்மை 6) எந்தக் காரியத்தையும் தாமதமாகவே செய்தல்
**
- சாஸ்திர அர்த்தங்களை நன்றாகச் சொல்லும் திறமையற்ற ஆசாரியனையும், 2)அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும், 3) குடி மக்களைக் காப்பாற்றாத அரசனையும், 4)பிரியமில்லாது பேசுகின்ற மனைவியையும்,
5)காட்டிற்குச் சென்று ஆடு மாடுகளை மேய்க்காமல் கிராமத்திலேயே வசிக்க வேண்டுமென்று விரும்புகின்ற இடையனையும்,
6) கிராமத்தில் இருந்து தன் தொழிலைக் கவனிக்காமல் காட்டில் வசிக்க வேண்டுமென்று விரும்பும் நாவிதனையும்
ஒருவன் நம்பினால் ஓட்டைக் கப்பலில் ஏறி சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவனுக்கு ஏற்படும் கதியே அவனுக்கு ஏற்படும்.
**
ஒரு மனிதன் எந்தக் காலத்திலும் விடக் கூடாத ஆறு குணங்கள் இவையே:
- உண்மை உரைத்தல் 2) ஈதல் 3) சோம்பலில்லாமை 4) பொறாமைப்படாமல் இருத்தல் 5) பொறுமை 6) தைரியம்
** 1)ஒவ்வொரு நாளும் பொருள் சேர்ந்து கொண்டே இருத்தல்,
2)நோயற்று இருத்தல்
3)அன்புடன் பேசும் மனைவி
4) பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி
5)தனக்கு அடங்கி இருக்கும் பிள்ளை
6) பணத்தைத் தரும் படிப்பு
ஆகிய இந்த ஆறும் ஒருவனுக்கு சுகத்தை இந்த உலகில் அளிக்கும் சாதனங்களாகும்.
**
- நல்ல படிப்பு படித்தவுடன் ஏராளமான வருவாய் வரும் ஒரு வேலை,
- உடனே தனக்குப் பிடித்த பெண்ணைக் கைப்பிடிக்கும் பாக்கியம்
- தேவையான சமயங்களில் அந்த பிரிய நாயகியின் இனிமையான சொற்களைக் கேட்கும் பாக்கியம்
- சரியான சமயத்தில் பிறந்த பிள்ளை
- அவன் தான் சொன்னதைத் தட்டாமல் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பது
- பல துறைகளின் வாயிலாகவும் தினமும் பணம் வந்து கொண்டே இருப்பது
இந்த ஆறும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் இதை விட இனிய சுகம் இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது?!
திருடர்கள் அஜாக்கிரதை உள்ளவினிடம் ஜீவிக்கிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகடம் ஜீவிக்கிறார்கள்.
பெண்கள் காமவசப்பட்டவர்களிடம் ஜீவிக்கிறா.ர்கள்
யாகம் செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
அரசன் வழக்காளிகளிடம் ஜீவிக்கிறான்.
பண்டிதர்கள் மூடர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
இந்த ஆறு பேரைத் தவிர ஏழாமவன் அறியப்படவில்லை.
**
பசுக்கள்,
பிறரிடம் ஊழியம் பா
வேளாண்மைர்ப்பது
மனைவி
கல்வி
தனக்குச் சமமில்லாதவரின் நட்பு
ஆகிய இந்த ஆறும் இடைவிடாமல் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தவறினால் இவை நசித்து விடும்.
**
கற்ற பிறகு சீடர்கள் ஆசிரியர்களையும்
மனைவியை அடைந்த பிறகு தாயையும்
காம உணர்ச்சி அற்றவன் மனைவியையும்
காரியம் முடிந்த பிறகு அது முடிய உதவி செய்தவனையும்
கடலைக் கடந்த பிறகு தோணியையும்
வியாதி குணமானவுடன் வைத்தியனையும்
பெரும்பாலும் பலர் அலட்சியம் செய்கின்றனர்.
அது தவறு. ஒருவர் செய்த உதவியை எநத நாளும் மறக்கக் கூடாது
**
வியாதி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது
கடன் இல்லாமல் இருப்பது
அயல் நாட்டில் வசிக்காமல் சொந்த தேசத்தில் வசிப்பது
நல்ல மனிதர்களுடைய சேர்க்கை
தன் சுய புத்தியால் ஏற்பட்ட ஜீவனம் (வாழ்க்கை)
பயமில்லாத வாழ்க்கை
இந்த ஆறும் இந்த உலகத்தில் சுகத்தை அளிக்கக் கூடியவை.
**
பொறமை உடையவன்
அளவுக்கு மிஞ்சிய இரக்கத்தை உடையவன்
திருப்தியில்லாதவன்
கோபக்காரன்
எப்போதும் எல்லாவற்றிலும் சந்தேகப்படுகிறவன்
பிறருடைய பாக்கியத்தை அண்டிப் பிழைப்பவன்
ஆகிய இந்த ஆறு பேரும் எந்த நாளும் துக்கம் உள்ளவர்கள்.
***
(தொடரும்)