செரிங்கட்டி தரும் 6 விதிகள் (Post No.4687)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-03 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4687

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் மூன்றாவது உரை

 

  1. செரிங்கட்டி தரும் ஆறு   விதிகள்

ச.நாகராஜன்

 

ஆப்பிரிக்காவில் செரிங்கட்டி என்ற அற்புதமான வளம் வாய்ந்த பகுதியை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவில் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள இந்த ஆறு விதிகள் உதவும்.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்படவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

 

செரிங்கட்டியின் நான்காவது விதி,  ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்று கூறுகிறது.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

செரிங்கட்டியின் ஐந்தாவது விதி, மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது என்கிறது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது.

சிங்க்ளேர் என்ற விஞ்ஞானி இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது என்று கூறுகிறது செரிங்கட்டியின் ஆறாவது விதி.

 

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

செரிங்கட்டியில் உள்ள இயற்கைக் காட்டு வளம் தரும் சுவையான பல செய்திகளில், இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

XXXXXXXXXXXXXXX

Leave a comment

Leave a comment