
Written by London Swaminathan
Date: 26 MARCH 2018
British Summer Time uploaded in London – 8-04 am
Post No. 4853
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்தேன். ஐந்தே நாட்களில் ஐந்து புகழ்பெற்ற சிவன் கோவில்களுக்குச் சென்றேன்:

சிதம்பரம் நடராஜர் கோவில்
வைதீஸ்வரன் கோவில்
திருவக்கரை சிவன் கோவில்
திருமுதுகுன்றம் சிவன் கோவில்
சென்னை கபாலீஸ்வரர் கோவில்
முன்னர் பார்க்காது இருந்து, இப்பொழுது புதிதாகத் தரிசித்த, இரு கோவில்களின் முக்கிய விஷயங்களை மட்டும் மொழிவேன். ஏனைய கோவில்கள் பற்றி விளம்பியோர் பலர் இருக்க, கூறியது கூறல் குற்றம் என்பதால் விடுக்கிறேன்.
திருவக்கரை கோவில்!
சுவாமி பெயர்- சந்திரமௌலீஸ்வரர்
அம்மன் பெயர்- அமிர்தாம்பிகை/ வடிவாம்பிகை
ஸ்தல விருக்ஷம்- வில்வ மரம்
பழமை-2000 ஆண்டு
பாடியவர்- திரு ஞான சம்பந்தர்
சிறப்பு– காளி கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் சேர்ந்து அமைந்தமை

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!
இங்கு மூன்று முகம் கொண்ட சிவ பெருமான் வீற்றிருப்பது கோவிலின் தனித் தன்மைக்கு சான்று
வக்ர காளி அம்மன் என்ற காளி கோவிலும் வரத ராஜப் பெருமாள் என்ற விஷ்ணுவின் மூர்த்தமும் ஒருங்கே ஒரே இடத்தில் இருக்கின்றன. அக்காலத்தில் சிவ- விஷ்ணு பேதம் இன்றி மக்கள் வழிபட்டமைக்கு சிதம்பரம் கோவில், திருவக்கரை கோவில் முதலியன அத்தாட்சி.
ஒவ்வொரு கோவில், ஒவ்வொரு சந்நிதி, ஒவ்வொரு சிலை பற்றியும் பல கதைகள் உண்டு.
இருப்பிடம்- திண்டிவனம், விழுப்புரம் அருகில்
சிறப்பு- அருகிலேயே கல் மரப் பூங்காவில் பல கோடி ஆண்டுகளில் மரங்கள் கற்களாக மாறிய அதிசய இடம் ( இது பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிறைய படங்களுடன் தனிக் கட்டுரை வரைந்துளேன்; கண்டு மகிழ்க)
திருவக்கரையில் உள்ள மூன்று தலைகள் கொண்ட முகலிங்கம் பற்றிக் கூறப்படுவதாவது:-
தத்புருஷம், அகோரம், வாமதேவம் ஆகிய மூன்று முகங்களுக்கு மூன்று வேளைகளில் மூன்று வித அலங்காரம் செய்யப்படுகிறது.

குண்டலினி முனிவர் சமாதி
ஒவ்வொரு கோவிலும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் உடைத்தாய் இருப்பதற்குக் அங்கு சமாதி அடைந்த முனிவர்களும் சாது சந்யாசிகளுமே காரணம். திருவக்கரையில் குண்டலினி முனிவர் சமாதி உளது. சைவப் பெரியார்கள் இறந்தால் அங்கே சிவலிங்கமும், வைணவப் பெரியார்கள் இறந்தால், அவர்களைப் புதைத்த இடத்தில் துளசி மாடமும் அமைப்பது மரபு. திருவக்கரையில்சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜீவன் முக்தர்களின் சமாதிகளில் என்றும் அந்த முனிவர்களின் அருள் இருப்பதால் இப்போது தரிசித்தாலும் முனிவரின் அருள் கிட்டும்.
இந்தக் கோவிலில், 100 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.
திருவக்கரை இறைவனைப் பாடிய ஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறையில் (தேவாரம்) சில பாடல்கள் மட்டும் தந்துள்ளேன்
| 3438 | கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான் பிறையணி கொன்றையினா னொரு பாகமும்பெண்ணமர்ந்தான் மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்வக்கரையில் உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழலுள்குதுமே |
3.060.1 |
| 3439 | பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர்பாகமதா ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்கடொழுதிறைஞ்ச வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்வக்கரையில் தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடிசெப்புதுமே |
3.060.2 |
| 3440 | சந்திர சேகரனே யரு ளாயென்றுதண்விசும்பில் இந்திர னும்முதலா விமை யோர்கடொழுதிறைஞ்ச அந்தர மூவெயிலும் மன லாய்விழவோரம்பினால் மந்தர மேருவில்லா வளைத் தானிடம்வக்கரையே |
3.060.3 |

விருத்தாசலம்/ திருமுதுகுன்றம் சிவன் கோவில்
சுவாமியின் பெயர்- பழமலை நாதர்
அம்மன் பெயர்- விருத்தாம்பிகை, பாலாம்பிகை
ஸ்தல மரம் – வன்னி
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய (தேவாரம்) தலம்.

சிறப்பு–மிகவும் பழமையான கோவில் என்பது பழமலை, விருத்த+ அசலம் என்பதில் இருந்தே புலப்படும்
ஸ்வயம்பு லிங்கம் இங்குளது- அதாவது தானே தோன்றியது.
மலைகளுக்கும் கற்களுக்கும் வயது பல கோடி ஆண்டுகள். இஙே லிங்க வடிவில் கல் இருந்தவுடன் இதைப் புனிதமான இடம் என்று கருதி கோவில் எழுப்பி இருப்பர். ஆகையால் கோவிலின் வயது பல கோடி ஆண்டுகள் என்று சொன்னாலும் அறிவியல் முறைப்படி சரிதான்.
திருவண்ணாமலை போல இங்கும் பவுர்ணமியில் கிரிப் ப்ரதக்ஷிணம் ( மலை வலம்) நடைபெறுகிறது.
இங்கு பாதாள அறையில் கணபதி (விநாயகர்) சந்நிதி உளது.

இந்த வட்டாரக் கோவில்கள் சோழ, ஹோய்சாள, நாயக்க மன்னர்களின் திருப்பணிகளை மேற்கொண்டதால் ஒரே மாதிரியான சிலகள் கட்டிட மைப்புகளைக் காணலாம்.
16 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.

ஸ்ரீ முஷ்ணம் கோவில் வாசலில் உள்ள சிற்பங்கள் போலவே இங்கும் இருப்பதால், ஒரே சிற்பியின் கைவண்ணத்தைக் காணலாம்.
பிரம்மாண்டமான வாசல் அருகில் சுவர் முழுதும் கட்டம் கட்டமாக சிற்பங்கள். அதுபோல தோரண வாயில் நங்கைகள் முதலியன.
சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறைப் பதிகத்தில் இருந்து சில பாடல்கள் மட்டும்

| பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர் தீர்முது குன்றமர்ந்தீர் வையிவள் தன்முகப்பே யேன்இட் டளங்கெடவே. |
7.025.1 |
| 250 | உம்பரும் வானவரும் முட
னேநிற்க வேயெனக்குச் ழும்முது குன்றமர்ந்தீர் வையிவள் வாடுகின்றாள் யேன்இட் டளங்கெடவே. |
7.025.2 |
| 251 | பத்தா பத்தர்களுக் கருள்
செய்யும் பரம்பரனே குன்ற மமர்ந்தவனே வையிவள் வாடாமே யேன்இட் டளங்கெடவே. |

திருவக்கரை, திருமுதுகுன்றம் ஆகியவற்றை சம்பந்தர் பாடியிருப்பதால் இவைகள் அவருடைய காலத்துக்கு முன்னமே சிறப்பு பெற்றிருக்க வேண்டும்; ஆகவே 2000 ஆண்டுப் பழமை உடையவை என்று செப்பினாலும் அது மிகையாகாது.
இரண்டு தலங்களிலும் கோவில் திருவிழாக் காலங்களில் மக்கள் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள்.






—-சுபம்—