பாரதி போற்றி ஆயிரம் – 60 (Post No.4799)

 

Date: MARCH 2,  2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4799

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 421 முதல் 429

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

10 முதல் 18 வரை உள்ள பாடல்கள்

இமயம் தன்னில் எழுந்த குரல் – தென்

   குமரி வரைஎதி ரொலித்ததுவே

குமரி யிலொருவன் அடிபட்டால் – அந்த

   இமயம் கண்ணீர் உகுத்ததுவே

சமமென் றனைவரும் சேர்ந்ததினால் – இங்கு

   சகல பேதங்களும் தீர்ந்ததுவே

தமது நாடெனும் உணர்வுடனே – இந்தத்

   தாயினை  யாவரும் வணங்கினரே

  

அன்னை என்னைத் தென்னகம் தன்னில்

    முன்னம் உணர்ந்தாய் பாரதியே

தன்போல் தமிழர் நன்கு உணர்ந்திட

   முன்மொழிந் தனையே பாரதியே

அன்னாள் உந்தன் கவிகளை எனக்கே

   அர்ப்பணி த்தாய்நீ பாரதியே

பன்மணிக் கவிதை உன்போல் எனக்குப்

   படைத்த வருண்டோ பாரதியே

 

பாரத மாதா பாரத மாதா

   பாட்டுகள் யாவும் எனதாக

பாரதம் உந்தன் பாவினி லுளதென

   பாரினில் யாவரும் புகழ்பாட

பாரதி யென்னும் மலையி லிருந்து

   பாய்ந்துறு தேசிய அருவியது

பாரத மாய்த்தமிழ் நதியென ஓடி

   பாரதக் கடலில் படர்ந்ததுவே

 

காலம் தனது தேவைக் கேற்பக்

   கவிஞன் தன்னை உருவாக்கும்

சீலம் மிகுந்தோர் சொல்லுக் கேற்ப

   தேசியத் திற்கே உனையீந்தாய்

ஆலம் உண்டே அமுத மளித்த

   அரனாரைப் போல் உயர்ந்திட்டாய்

காலக் கவிஞன் ஆனதி னாலே

   காலம் கடந்து வாழ்ந்திட்டாய்

 

என்றுநீ தேசிய உணர்வினைப் பெற்றாய்

  என்பதை என்போல் யாரறிவார்?

உன்றன் இளமையில் ஊரூ ராக

   ஓடிய போதும் உதிரத்தில்

என்றும் நீங்கா சுதந்திர வேட்கை

   இருந்ததி னால்நீ சிலிர்த்தெழுந்தாய்

சென்னை நகருறை வாழ்வில் தேசிய

   சேவையி லொன்றிச் சிறப்புற்றாய்

 

கல்கத்தா மாநாட்டில் கலந்திடச் சென்றவன்

   கலக்கங்கள் தீர்வ தற்கே

சொல்லினால் உலகையே சிலிர்த்திடச் செய்திட்ட

   தூயவிவே கானந் தர்தம்

நல்லதோர் மாணவியாய் நாடெல்லாம் மதித்திட்ட

   நிவேதிதா தன்னைக் கண்டாய்

பலவளம் பெற்றதால் களையெலாம் நீங்கிய

   பயிராக வளர்ச்சி பெற்றாய்

 

பாரதியாம் உந்தனைக் குழந்தையாய் அந்நாளில்

   பெற்றவள்லட் சுமியம் மாள்தான்

தீரமுள நல்லதோர் தேசியக் கவிஞனாய்

   தோற்றுவித்தாள் நிவேதி தாவே

ஆரமாம் தங்கத்தை தேசபக்தி என்றிடும்

   அனலிலே சுட்டெ டுத்தாள்

ஈரமுள புதைகுழியில் எழுந்திடும் நெருப்பென

   எழுச்சிமிகு கவிஞ னானாய்

 

இருவேறு வழிகளில் சென்றதால் அல்லவோ

   இலக்கினை அடைவ தற்கு

பெருமளவில் தாமதம் நேர்ந்ததுதீ விரவாதம்

   புகல்மித வாதம் என்றார்

இருஇரு பொறுமையாய் எனும்மித வாதியாய்

   இருந்திட்டார் கோகலேவே

ஒருபெரும் தீவிர வாதிகள் தலைவனாய்

   உயர்திலகர் தலைமை ஏற்றார்

 

திகழ்கின்ற காந்தமது இரும்பினை இழுத்தல்போல

   திலகருனை ஈர்த்துக் கொண்டார்

அகழ்ந்திட்டார் மிதவாதச் சோம்பலினை நாடெல்லாம்

   ஆர்த்தெழுந்து நிற்கச் செய்தார்

இகலறவே அவருக்கோர் போர்முரசாய் முழங்கிடவே

   இந்தியா என்னும் பேரில்

தகவுளதோர் இதழதனை தழலெனவே கொணர்ந்திடாய்

   தமிழகமே பற்றச் செய்தாய்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

PLAN YOUR DAY- CHANAKYA’S ADVICE (Post No.4798)

Written by London Swaminathan 

 

Date: 1 MARCH 2018

 

Time uploaded in London – 20-54

 

Post No. 4798

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

It is amazing to see that Chanakya advised us 2300 years ago on the things what we read in hundreds of Self Improvement books today. How to Win Your friends? How to live your life? How to make money? How to plan your day? and books like these decorate the bookshelves at our home and in the book shops.

Here are a few slokas/verses from Chanakya Niti:

One should think about these again and again:

What time it is?

Who are friends?

Which country/town/place it is?

What are the income and expenditure?

Who I am?

How is my strength?

In short, we should take into account the time, place, our aim/purpose/goal in life, our friends and money matters.

kaha kaalaha kaani mitraani ko desaha kau avyayaa agamau

kaschaaham kaa ca me saktiriti cintyam muhurmuhuhu

Chanakya Niti 4-18

xxx

 

 

Don’t Worry Too much

Which family is there that does not have its loopholes?

Who is there who has not suffered ailment?

Who is there who has not met with an adversity?

Who has had happiness endlessly?

3-1

kasya doshah kule naasti vyaadhinaa ko na piiditah

vyasanam kena na praaptam kasya saukhyam nirantaram – 3-1

 

xxx

Who are your Six Relatives?

Truth is mother, knowledge is father, Dharma is brother, compassion is sister, peace is wife, forgiveness is son – these six are my relatives.

satyam maataa pitaa njaanam dharmo brataa dayaa svasaa

saantih patnii kshamaa putrah shadete mama bhandavaah – 12-11

 

xxx

Sacrifice One Person!

One should surrender one person for the sake of the family;

the family for the sake of the village;

the village for the sake of the country and

the earth for one’s own sake

3-10

tyajedekam kulasyaarthe graamasyaarthe kulam tyajet

graamam janapadasyaarthe aatmaarthe pruthviim tyajet

xxx

All Alone!

One takes birth and dies alone, alone one experiences what is good and bad, goes to hell alone and attains the highest goal alone.

5-13

Who is your Friend?

Knowledge acts as friend in foreign visits;

Wife is friend at home;

Medicine is the friend of the sick;

Dharma is the friend of the dead

vidhyaa mitram pravaaseesu bharyaa mitram gruhesu ca

vyaadhitasyausadham mitram Dharmo mitram mrutasya ca

5-15

xxx

Don’t live

 

One should not live there which does not have the following five:–

the means of livelihood, fear (about rules, regulations) , modesty, civility and charity (the nature to give or relinquish)

lokayaatraa bhayam lajjaa daakshinyam tyaagasiilataa

panca yatra na vidyante na kuryaat tatra samsthatim

 

Chapter 1, Sloka 10

xxx

Earth rests on Truth

The earth rests on Truth, through truth the Sun radiates the heat, through truth blows the wind. Everything rests on truth

 

Satyena dhaaryate pruthvii Satyena   tapate ravih

Satyena vaati vaayusca sarvam Satye  pratishtitam

5-19

 

–Subham—

 

 

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் விநோதக் கணக்கு! (Post No.4797)

Written by London Swaminathan 

 

Date: 1 MARCH 2018

 

Time uploaded in London – 7-56 AM

 

Post No. 4797

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

பண மோசடி செய்தவர்கள் எப்படி அழிவார்கள் என்பது பற்றி திருவள்ளுவன் திருக்குறளிலும் ,உலக மஹா மேதை சாணக்கியனின் சாணக்கிய நீதியிலும் சுவையான கணக்குகள் உள்ளன. அழ, அழ பணம் சம்பாதித்தவனை அழ அழ வைத்து லெட்சுமி போய் விடுவாளாம்– இது வள்ளுவன் கணக்கு; ஆனால் சாணக்கியனோ ஒரு விநோதக் கணக்குப் போடுகிறான். பண மோசடி செய்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஆட்டம் போடுவார்களாம்; பின்னர் 11 ஆவது வருஷத்தில் ‘அம்போ’ன்னு போவார்களாம்; வள்ளுவன், சாணக்கியன் சொற்களிலேயே படியுங்கள்.

அகலாது அணுகாது வாழ்க!

 

அக்னிராபஹ ஸ்த்ரியோ மூர்க்காஹா ஸர்பா ராஜ குலானி ச

நித்யம் யத்னேன ஸேவ்யானி ஸத்யஹ ப்ராணஹராணி ஷட்

 

கீழ்கண்ட ஆறு விஷயங்களில் கவனமாக நடக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் வெகுண்டால் உடனே மரணம் சம்பவிக்கும்: தீ, தண்ணீர், பெண்கள், முட்டாள்கள், பாம்பு, ஆட்சியாளர்கள் (ராஜ குலம்)

 

14-12

அத்யாஸன்னா விநாசாய தூரஸ்தா ந பலப்ரதாஹா

தே ஸேவ்யா மத்யாபாகேன ராஜா வஹ்னிர் குருஹு ஸ்த்ரியஹ

14-11

அரசன், ஆசிரியர், அக்னி (தீ) , பெண்கள் ஆகியோருக்கு மிகவும் அருகில் இருந்தாலும் மிகவும் தூரத்தில் இருந்தாலும் பயனில்லை; ஆகையால் நடு வழியில் செல்க.

 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

 

அரசனைச் சார்ந்து வாழ்பவர்கள்; நெருப்பில் குளிர் காய்பவனைப் போல, மிக அருகிலும் போகக்கூடாது; மிக விலகியும் போகக் கூடாது. நடுவழியில் நின்று கடமை ஆற்ற வேண்டும்

 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப்பட்டார் தொடர்பு (920)

 

பொது மகளிர், கள், சூது ஆகியவற்றில் ஈடுபடுவோரிடம் லெட்சுமி தேவி தங்க மாட்டாள்

XXX

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

–SUBHAM–

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் (Post No. 4796)

Date: MARCH 1,  2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4796)

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

2-3-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு முதல் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 1

.நாகராஜன்

1961இல் மனிதன் விண்ணில் பறந்து 56 வருடங்கள் உருண்டோடி விட்டன. என்னென்ன வியத்தகு சாதனைகளை மனிதன் சாதித்து விட்டான்! பாக்யா வாசகர்களுக்கான ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ரிபோர்ட் – அனைத்து சாதனைகளும் ஒரே இடத்தில்!

யூரி ககாரின்

1961,ஏப்ரல்,12. ரஷிய வீரரான யூரி ககாரின் 108 நிமிட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து உலகை வியக்க வைத்துச் சாதனை படைத்தார்!

 

விண்வெளியில் முதல் வீரர்கள்

ககாரினை அடுத்து ஆலன் ஷெப்பர்ட் என்னும் அமெரிக்கர் 1961, மே,5ஆம் தேதி விண்வெளிக்கு ஏகினார்.

ரஷிய வீ ராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா 1963,ஜூன் மாதம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளி ஏகிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார்; பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்! அவருடன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா அப்போது அவருடன் பறக்க முடியவில்லை. காத்திருந்தார். 1982ஆம் ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது.

விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி ஸாலி ரைட். ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் STS 7இன் ஒரு பகுதியாக 1983, ஜுன்18இல் அவர் விண்வெளியை அடைந்து சாதனை படைத்தார்.

விண்வெளியை ரஷியர்களும் அமெரிக்கர்களுமே சுமார் 20 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடின.இந்த இரு தேசங்களைத் தவிர முதலில் விண்வெளியில் நுழைந்தது  செக்கோஸ்லோவேகியா. 1978இல் சோவியத் சோயுஸ் 28 மிஷனில் செக்கோஸ்லோவேகிய வீரர் விளாடிமிர் ரெமக் விண்வெளி ஏகினார். இதன் பின்னர் ஏராளமான நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு வீ ரர்களை அமெரிக்க, ரஷிய விண்கலங்களில் விண்ணுக்கு அனுப்பின.

விண்வெளியில் அதிக வயதானவர்

அமெரிக்க செனேட்டர் ஜான் க்ளென் தனது 77ஆம் வயதில் டிஸ்கவரி STS -95 மிஷனில் 1998 அக்டோபரில் விண்ணில் பறந்தார்.இந்த மிஷனில் அவரது பயணம் இரண்டாவது பயணம். 1962 பிப்ரவரியில் அவரது முதல் பயணம் அமைந்தது. ஆக அவர் இன்னொரு அரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டார். மிக நீண்ட இடைவெளியான 36 வருடம் 8 மாதங்களில் பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் அவர் தான்!

விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெறுபவர் பெக்கி விட்ஸன். வயது 57. 2016-2017இல் எக்ஸ்பெடிஷன் 50, 51இல் அவர் பறந்தார்.

விண்வெளியில் பறந்த இளைஞர்

ரஷியரான ஜெர்மன் டிடோவ் சோவியத் விண்கலமான வோஸ்டாக் 2இல் ஆகஸ்ட் 1961இல் பறந்தார். அப்போது அவரது 26வது பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு மாதமே இருந்தது.25 மணி நேர பயணத்தில் 17 லூப் பயணம் மேற்கொண்டு பூமியை  வலம் வந்த இரண்டாவது வீரர் இவர்.

டிடோவ் தான் முதலில் விண்வெளியில் தூங்கியவர் என்ற பெருமையைப் பெருகிறார். முதலில் ஸ்பேஸ் சிக்னெஸ் வியாதியால் அவஸ்தைப் பட்டவரும் அவரே. (இதை மோஷன் சிக்னெஸ் என்றும் சொல்வர்)

தெரஷ்கோவா விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி மட்டுமல்ல; 26 வயதில் பறந்த மிகக் குறைந்த வயதுடைய மஙகை என்ற அரிய புகழையும் பெறுகிறார். அவரது ரிகார்டை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை என்பது குற்ப்பிடத் தகுந்தது.

 

தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தோர்

ரஷிய வீ ரரான வாலெரி போலியாகோவ் விண்வெளியில் தொடர்ந்து 438 நாட்கள் மிர் ஸ்டேஷனில் தங்கி இருந்து சாதனை படைத்தார். 1994 ஜனவரியிலிருந்து 1995 மார்ச் வரை இவர் அங்கு தங்கி இருந்தார்.

அமெரிக்கரான ஸ்காட் கெல்லி தொடர்ந்து 340 நாட்கள் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் 2015-16இல் தங்கி சாதனை படைத்தார்

அமெரிக்க விண்வெளி வீ ராங்கனை பெக்கி விட்ஸன் 289  நாட்கள் ஒரே பயணத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி இருந்ததால் அந்தப் பெருமையைப் பெறுகிறார்.

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் 1961,மே, 5ஆம் தேதி தனது மெர்குரி விண்கலமான ஃப்ரீடம் 7இல் பறந்து சாதனை படைத்தார்.

புல்லரிக்க வைக்கும் வெற்றிகள் – மகத்தான தியாகத்தால், உழைப்பால், அறிவுக் கூர்மையால், மனித குலத்தை உயர்த்தத் துடிக்கும் அர்ப்பணிப்பு மனோபாவத்தால்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

1894இல் ஆல்பர்ட் மைக்கேல்ஸன் இயற்பியலில் கண்டுபிடிக்க இனி ஒன்றுமே இல்லை என்றார். முதல் நோபல் பரிசு பெற்ற அவர் சொன்னதை உலகம் ஆமாம் ஆமாம் என்றது. ஆனால் பத்தே ஆண்டுகளில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது இயற்பியல் கொள்கையால் உலகின் போக்கையே மாற்றினார்.

அன்றிலிருந்து இன்று வரை நாளுக்கு நூறு கண்டுபிடிப்புகள்?!

இவையெல்லாம் சரிதானா என்று  ஆராயப் புகுந்தார் ஒருவர். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியரான் ஜான் ஐயான்னிடிஸ் 2005இல் ஏன்  பெரும்பாலான ஆய்வுப் பேப்பர்கள் தவறானவை என்று (Why Most Published Research Findings Are False – John Ionnidis) ஒரு பரபரப்புப் பேப்பரை வெளியிட்டார்.

 

தன் சொந்த அபிலாஷைகளுக்காக நினைத்ததை வெளியிடுவோர் அதிகம். இவை ஊடகத்தால் பரபரப்புச் செய்திகளாக உலா வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் பின்னால் தவறானவை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறு என்பதை ஊடகங்கள் வெளியிடாமல் மௌனம் சாதிக்கின்றன.

இதனால் அறிவியல் ஆய்வுப் பேப்பர் என்றால் யாரும் மதிக்காத ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்கிறார் அவர்.

எதையும் உறுதி செய்து வெளியிடுவதே அறிவியல் ஆய்வு. அதற்கே இந்தப் பாடா என்று விஞ்ஞான உலகம் வியக்கிறது.

பேப்பரில் நடுப்பக்கத்தில் வெளியாகும் “பரபரப்பு” அறிவியல் செய்திகளை இனி சற்று ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டியது தான்!

***