
Written by S NAGARAJAN
Date: 16 JUNE 2018
Time uploaded in London – 6-57 am (British Summer Time)
Post No. 5115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தேசப் பிரிவினையின் கதை
இதற்கு முன்னர் வெளியான ஆகா கானின் அட்டகாசம்: பிரிவினையின் சோகக் கதை என்ற அத்தியாயத்தைப் படித்தவர்களுக்கு இன்னும் ஒரு கட்டுரை இது :
நடக்காத சந்திப்பு – தப்பிப் பிழைத்த பாரதம்! பிரிவினையின் சோகக் கதை!
1
ஒரு சுவாரசியமான (நடக்காத) நிகழ்வை இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய பத்திரிகையாளர்களில் அந்தக் காலத்தில் பிரபலமானவர் எம்.எஸ்.எம். சர்மா (M.S.M. Sarma) என்பவர்.அவர் தனது நினைவலைகளை (Reminiscences) ‘பீப்ஸ் இன்டு பாகிஸ்தான்’ ( Peeps into Pakistan) என்ற நூலில் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சம்பவம் தான் இது.
சவர்காரின் அதி தீவிர தீர்க்கதரிசனத்தால் அவர் ஆதரவு தர தேசம் முழுவதிலிருந்தும் சுமார் இரண்டு லட்சம் ஹிந்து-சீக்கிய இளைஞர்கள் பிரிட்டிஷாருக்கு இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உதவ ராணுவத்தில் சேர்ந்தார்கள்.
பயங்கரமான கோர யுத்தத்தில் பல முனைகளிலும் பணியாற்றிய அவர்கள் பெறுதற்கரிய அனுபவத்தைப் பெற்றனர்.
சவர்க்கார் எதிர்காலத்தில் இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததாக உருவாக இதை தீர்க்கதரிசனத்துடன் செய்தார்.
ஆகா கான், முகம்மதலி ஜின்னாவின் தீவிர தாக்குதலைத் தடுக்க இந்த வீரர்களின் அமைப்பு பெரிதும் பின்னால் உதவியது. இல்லாவிடில் பல லட்சம் ஹிந்துக்கள் உயிரை இழந்திருப்பர்.
ஜின்னாவின் கூட இருந்தவர்கள் பாகிஸ்தான் ஏற்படாவிடில் ரத்தக் களரி தான் ஏற்படும் என்று எச்சரித்தவண்ணம் இருந்தனர்.
ஜின்னா நடப்பதைப் பற்றி யோசித்தார். நேருவைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் ஒரு கோழை என்று ஜின்னா நினைத்தார்.சவர்க்காரின் வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை உணர்ந்த ஜின்னா அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் உணர்ந்திருந்தார்.
ஆகவே தனது நலனை உத்தேசித்து ஜின்னா பிரபல பத்திரிகையாளரான எம்.எஸ்.எம். சர்மாவைச் சந்தித்து சவர்க்காருடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
முஸ்லீம்கள் நிச்சயமாக தாங்கள் கூறும் ரத்தக் களரியை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உறுதி மொழியை அளிக்க அவர் விரும்பினார். இதற்கு பதில் உபகாரமாக இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவில் ஏராளமான நிலங்களை வைத்திருக்கும் முஸ்லீம் பிரமுகர்கள் அதை அப்படியே வைத்து உரிமை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொள்ள நினைத்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இந்த சந்திப்பு நிகழவே இல்லை.
இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகிறது என்ற செய்தி கசிய விடப்பட்டு ஜின்னா மிகவும் சங்கடத்திற்கு உள்ளானார்.
ஆகவே அவர் சர்மாவைக் கூப்பிட்டு சந்திப்பை ரத்து செய்யுமாறு கூறி விட்டார்.

2
இன்னொரு நடக்காத முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பாரதத்தை இரண்டாகப் பிரிக்காமல் இருக்க முகம்மதலி ஜின்னாவை பாரத பிரதமர் ஆக்குவது, அப்படி ஆக்கினால் பாகிஸ்தான் என்ற தனி நாட்டைக் கேட்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் விடுவது என்பது ஒரு திட்டம்.
நல்ல வேளையாக மஹாத்மா ஜின்னாவைச் சந்திக்காமலேயே இந்த திட்டம் கை விடப்பட்டது.
பாரதத்தின் சோகமான பிரிவினை பற்றி அந்த நாட்களில் உயர் மட்டத் தலைவர்களுடன் இருந்த பலரும் பின்னால் எழுதிய புத்தகங்கள் பல திடுக்கிடும் விவரங்களைத் தருகின்றன.
இவற்றையெல்லாம் படித்தால் தெரிய வருவது ஒன்று தான்:
தனி நாடாக முஸ்லீம்களுக்காக மட்டும் பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும். (அங்கு ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது – அடிப்படை உரிமைகள் கூட!)
செகுலர் என்ற பெயரில் செகுலர் நாடாக உருவாகும் இந்தியாவில் மைனாரிட்டி ரைட்ஸ் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளைப் பெற்று இந்தியாவை உருக்குலைக்க வேண்டும்.
இந்த திட்டத்தினால் இப்போது ஏற்பட்டிருக்கும் தீராத தொடர் வியாதியை நீக்க ஒரு வழி இருக்கிறது.
பாரதத்தை ஹிந்து ராஷ்டிரமாக அறிவித்து விட்டால் அனைத்து தீவிரவாத இஸ்லாமிய பிரச்சினைகள் தீரும்; கிறிஸ்தவ பாதிரிகளின் மத மாற்ற முயற்சியில் மண் விழும்.
எதிர்காலம் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் என்றே அனைவரும் நம்புவோமாக!
****