சிலப்பதிகாரம் க்விஸ் QUIZ – வினா விடை(Post No.5579)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 October 2018

Time uploaded in London – 7-24 AM

(British Summer Time)

Post No. 5579

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் நூல் பற்றி ஒரு (quiz) கேள்வி-பதில் தொகுப்பு. உங்கள் தமிழ் அறிவினைச் சோதிக்க ஒரு வாய்ப்பு.

 

1.சிலப்பதிகாரம் என்ன வகை நூல்? யார் எழுதியது?

2.கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு வந்த இலங்கை வேந்தன் யார்?

3.கண்ணகி சிலை செய்ய எங்கேயிருந்து கல் கிடைத்தது? அதை எந்த நதியில் சுத்தம் செய்தனர்?

4.கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?

5.யார் யாரை எரிக்கக் கூடாது என்று அக்னி தேவனுக்குக் கட்டளை இட்டாள்?

6.சிலப்பதிகாரத்தில் ஒரு பிராஹ்மனனை கதைக்குப் பாலமாக அமைத்துள்ளார் ஆசிரியர். அவன் இல்லாவிடில் கதை விளங்காது. அந்தப் பார்ப்பானின் பெயர் என்ன?

7.வீணைக்குப் பெயர்போன ஒரு புராண புருஷரை இளங்கோ சொல்கிறார். யார் அவர்?

8.பாண்டிய மன்னன் ஆயிரம் பேரை பலி கண்ணகிக்குப் கொடுத்தான். யார் அவர்கள்?

9.தமிழர்களை இகழ்ந்த இரண்டு வட இந்திய மன்னர்களை சேரன் செங்குட்டுவன் சிறைப் பிடித்தான். அவர்கள் பெயர் என்ன?

10.மதுரை நகர் எரிந்த தேதி என்ன?

11.வார்த்திகன் மனைவி கார்த்திகா ஏன் அழுதாள்; உடனே என்ன நடந்தது?

12.மதுரைக்கு வந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?

13.புனல் யாறு அன்று; இது பூம்புனல் யாறு என்று கவுந்தி அடிகள் பாராட்டிய நதி எது?

14.மாதவியின் கடிதத்தை   கோவலனுக்குக் கொண்டு வந்தவர் யார்?

15.எந்த நதியை ‘நடந்தாய் வாழி!’ என்று இளங்கோ போற்றுகிறார்?

16.கோவலன், கண்ணகி திருமண வயது என்ன?

  1. கோவலன் , கண்ணகி தந்தையரின் பெயர்கள் என்ன?

18.இளங்கோ அடிகள், கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக ஒரு விநோத மங்கல வாழ்த்துப் பாடுகிறார்? யார், எது அதில் உள்ளன?

19.சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள்? எத்தனை அதிகாரங்கள்?

20.சுனாமி பற்றி இளங்கோ செப்புவது யாது?

 

ANSWERS:-

1.இது காப்பியம். தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. எழுதியவர் இளங்கோ அடிகள்.

2.கடல் சூழ் இலங்கை கயவாகு (கஜபாஹு)

3.புனித இமய மலையில் கல் எடுத்து, புனித கங்கையில் நீராட்டி, சேர நாட்டிலுள்ள வஞ்சி நகருக்குக் கொண்டு வந்தனர்.

4.இடது முலையைத் திருகி எறிந்து மதுரை மீது வீசினாள்; மதுரை எரிந்தது.

இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா…….. மணி முலையை வட்டித்து விட்டாள்  எறிந்தாள்

5.பிராஹ்மணர்கள், சந்யாஸிகள், கோ மாதா (பசு), பத்தினி ஸ்த்ரீக்கள்,குழந்தைகள், கிழவி, கிழவர்கள் ஆகியோரை ஒன்றும் செய்துவிடாதே; மற்ற எல்லாத் தீயவர்களையும் சாம்பல் ஆக்குக.

“பார்ப்பார்,அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,

மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தோர் பக்கமே சேர்க…..

6.மாடல மறையோன்;

அவன் நால் வேதங்களில் வல்லவன்;சதுர்வேதி! இளங்கோ அவனைப் பற்றிச் சொல்கிறார்:-

“நான்மறை முற்றிய நலம்புரிகொள்கை

மாமறை முதல்வன் மாடலன் என்போன்”

7.நாரதர்.

‘நாரதன் வீணை நயம்தெரிபாடலும்’

  1. ‘பொன்தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்

ஒரு முலை குறைந்த திருமா பத்தினிக்கு

ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி’

ஆயிரம் பொற்கொல்லர்களை கண்னணகிக்குப் பலி கொடுத்தான் பாண்டிய மன்னன்.

9.கனகன், விஜயன்

9.முன் காலத்திலேயே ஒருவர் மதுரை மாநகர் எரியப் போகும் தேதியை ஆருடம் சொன்னதாக இளங்கோ பகர்கிறார்–

‘ஆடித்திங்கள் பேரிருள் பக்கத்து

அழல்சேர்குட்டத்து அட்டமி ஞான்று

வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண’

ஆடிமாதம்,கிருஷ்ண பக்ஷம்,கார்த்திகை நக்ஷத்ரம், வெள்ளிக் கிழமை அன்று மதுரை சாம்பலாகும்.

11.பராசரன் என்ற பிராஹ்மணன், தட்சிணாமூர்த்தி என்ற குட்டிப் பையன் வேதம் சொன்னதைக் கேட்டு அசந்து போய், தன்னிடம் இருந்த தங்க நகைகளை எல்லாம் சின்னப் பையனிடம் கொடுத்தான். பொறாமை பிடித்த அக்ரஹாரப் பிராஹ்மணர்கள் , அவனுடைய அப்பன் திருடிக்கொண்டு வந்தான் என்று சொல்ல, தட்சிணாமுர்த்தியின் தந்தை வார்த்திகன் கைது செய்யப்பட்டான். அவன் மனைவி கிருத்திகா ஓவென்று கதறி அழுதவுடன் துர்க்கா தேவி கோவில் கதவு தானாக மூடிக்கொன்ணடது. மக்கள் என்று பாண்டிய மன்னனிடம் முறையிடவே அவன் கார்த்திகை என்ற பெண்ணின் துயர் தீர்த்தான். உடனே கலையமர் செல்வி, ஆர்யாதேவி கோவில் கதவு தானாகத் திறந்தது (ஆர்யை=ஐயை= துர்க்கை)- கட்டுரைக் காதை, சிலம்பு.

12.யாதவ குலப் பெண் மாதரி

13.மதுரையில் அழகான பூக்கள் மிதக்க ஓடிய வைகை நதி

14.கௌசிகன் (கோசிகன்) என்ற பிராஹ்மணன்.

15.நடந்தாய் வாழி காவேரி

16.இருவரும் திருமணம் செய்து கொண்ட போது கோவலனுக்கு வயது 16; கண்ணகிக்கு வயது 12.

17.மாநாய்கன் மகள்- கண்ணகி

மாசாத்துவான் மகன்- கோவலன்

மஹா நாயக – கடல் வியாபாரி

மஹா சாத்துவன் – நில வியாபாரி

18.திங்கள் (சந்திரன்) , ஞாயிறு (சூர்யன்), மழை, பூம்புகார்

19.மூன்று காண்டங்கள்; புகார், மதுரை, வஞ்சி காண்டம்

முப்பது காதைகள் (அதிகாரம், பிரிவு)

20.“வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!”
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தில் கடல்கோள்–

பாண்டிய மன்னன் வேல் எறிந்தவுடன் கோபம் கொண்ட கடல் சுனாமி பேரலையாக எழுந்து நாட்டுக்குள் புகுந்தது.

பஃறுளி ஆறு, பெரிய மலைத் தொடரான குமரி மலை ஆகியன கடல் கோளில் அழிந்தன. பின்னர் இமய மலை, கங்கை ஆகியனவற்றை ஆண்டனன் வடிம்பலம்ப பாண்டியன்.

MY OLD ARTICLE ON SILAPPADIKARAM

சிலப்பதிகாரம் பிராமண காவியமா?

பிராமண காவியமா | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பிராமண…

Posts about பிராமண காவியமா … தமிழில் சிலப்பதிகாரம் … //tamilandvedas.com/2018 …

–SUBHAM–

Leave a comment

Leave a comment