மனத்தை நம்பாதே – மகான் தந்த அறிவுரை (Post No.6076)

Written by S Nagarajan


Date: 15 February 2019


GMT Time uploaded in London – 5-43 am


Post No. 6076

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மனதை வென்றவன் மஹா ஞானத்தை அடைகிறான்.

பாரதியாரின் பாடலைப் பார்ப்போம்:

Leave a comment

4 Comments

  1. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 15, 2019

    எல்லாவிதமான யோகப்பயிற்சிகளும் மனதை ஆதாரமாக வைத்தே செயல்படுகின்றன. சித்தத்தில் (மனதில்) தோன்றும் எண்ண அலைகளை தடுப்பதே யோகம் என்று பதஞ்சலி முனிவர் வகுத்துவிட்டார். [ யோக: சித்த வ்ருத்தி நிரோத:] .
    தற்காலத்தில் மனப்பயிற்சிகள் மனதின் பன்முக ஆற்றலை வளர்ப்பதாகவே இருக்கின்றன. மனம் [அந்த:கரணம்] வெளிமுகமாகவே செயல்படுவதால் ( கடோபனிஷதம்) இத்தகைய பயிற்சிகள் நம்மை மேன்மேலும் இந்த உலக விவகாரத்திலேயே ஆழ்த்திவிடும்.
    ஆனால் இந்த மனம் என்பது என்ன? இதை எவரும் சரியாக விளக்கவில்லை. மனம் என்பது ஒன்று உண்டு; அதை லயப்படுத்தவேண்டும் என்பதே சாதாரண சமய-ஆன்மீகப் பயிற்சிகளின் குறிக்கோளாக இருக்கின்றன.
    மனம் என ஒன்று உண்டா என்ற அடிப்படை வினாவை எழுப்பியவர் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள். உபதேச உந்தியாரில் சொல்கிறார்:

    மனத்தின் உருவை மறவாது உசாவ
    மனமென ஒன்றில்லை உந்தீபற
    மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

    எண்ணங்களே மனம் யாவினும் நானெனும்
    எண்ணமே மூலமாம் உந்தீபற
    ஞான விசாரமிது உந்தீபற.

    எண்ணங்களின் உருவாகிய மனம் என்பது அகந்தையின் கருவி. மனத்தின் உருவை விசாரிக்கும் போது மனம் லயப்படுவது மட்டுமில்லை-அழிந்தே போய்விடும்!
    இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்கம்
    இலயித் துளதெழும் உந்தீபற
    எழாதுறு மாய்ந்ததேல் உந்திபற.

    எண்ணங்கள் எழும்போது அவற்றின் பின் செல்லாதே, அவற்றைத் தடுக்காதே. ‘யாருக்கு இந்த எண்ணம் வருகிறது? என்று பார். அப்போது எண்ணம் மறைந்து எனக்குதான் வருகிறது என்பது தெரியும். இந்த நான் யார் என்று பார்’ என்பது ஸ்ரீ ரமணர் காட்டிய நேர் பாதை!

    போருக்கு நின்றிடும் போதும் உளம்
    பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!
    பாரதியாரின் அருமை மொழிகள். இவை “யுத்யஸ்வ விகத ஜ்வர:” என்ற கீதையின் 3.30ம் ஶ்லோகத்தில் வரும் கடைசி பாதத்திற்குப் பொருளாயமைந்தவை.
    மயி ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா
    நிராசீர் நிரமமோ பூத்வா யுத்யஸ்வ விகத ஜ்வரம்
    என்பது முழு ஶ்லோகம், இதை 1907ம் வருஷம் மசூலிப்பட்டணத்தில் ஹிந்து ஹைஸ்கூல் தலமையாசிரியராக இருந்த முத்து ஐயர் வெண்பாவாக மொழிபெயர்த்தார்:
    கன்மமெல்லாம் என்பாற் கருதிச் சமர்ப்பித்து
    நின்மலமாம் ஆன்மாவில் நெஞ்சிருத்தி- என்னதெனும்
    பற்றகற்றி ஆசை பறித்துப் படரொழித்திங்
    குற்றதொரு போர்புரிவாய் ஊங்கு.

    முத்து ஐயர் கீதை முழுவதையும் அழகிய வெண்பாவில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இது அவ்வளவு பிரபலமாகவில்லை.

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 15, 2019

    பகவத் கீதை அழகிய மணவாள ஜீயரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதுவும் கீதையைத் தமிழில் தரும் ஒரு அழகிய முயற்சி. இன்னும் ஒரு கீதை வெண்பாவையும் படித்ததாக ஞாபகம் – அதாவது கீதா சாரம் தமிழில் தரப்பட்ட் நல்ல முயற்சி.
    மனம் பற்றிய 4 முக்கிய நூல்கள்
    1) ரமணரின் அனைத்து உபதேச நூல்கள்
    2) யோக வாசிஷ்டம்
    3) பதஞ்சலி யோக சூத்ரம்
    4) அம்ருத பிந்து உபநிஷத் உட்பட்ட நூல்கள்
    ஆங்கிலத்தில் ஏராளமான நல்ல நூல்கள் உள்ளன. இவை அறிவியல் ரீதியிலான முயற்சிகள்.
    முத்துக ஐயரின் கீதை வெண்பா இப்போது கிடைக்கிரதா என்ரு தெரியவில்லை. கிடைத்தால் அது ஒரு வரபிரசாதமே. நல்ல நூல்கள் ஆதரவற்றுப் பிரகாசிக்காமல் போகின்றன. இது வருத்தம் தரும் ஒரு விஷயம்.
    தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி. நன்றி.

  3. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 15, 2019

    பகவத் கீதை வெண்பா அழகிய மணவாள ஜீயரால் எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

  4. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 16, 2019

    முத்து ஐயரின் பகவத் கீதை வெண்பா ‘அண்ணா’ சுப்ரமண்ய ஐயரின் குறிப்புரையுடன் 1958ல் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பிரசுரித்தார்கள். நான் 1965ல் வாங்கினேன். அதன் பிறகு புதிய பதிப்பு வந்ததா எனத் தெரியவில்லை.

Leave a comment