தாஜ்மஹால் ரகசியம் – பகுதி 1 (Post No.6292)

Translated by London swaminathan (English article by Vasudev Godbole)


swami_48@yahoo.com


Date: 21 April 2019


British Summer Time uploaded in London – 20-51

Post No. 6292

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

லண்டனுக்கு அருகில் வசிக்கும் திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார். இதோ நீண்ட கட்டுரை:

தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது

தாஜ் மஹால் பற்றிப் பல கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு வாக்கியத்தைக் காணலாம்-இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20,000 பேர் ஈடுபட்டனர். இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப் பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்கு ஆறு முறை 1638 முதல் 1668 வரை துணிகர பயணங்களை மேற்கொண்டார்.. டாவர்னியர் சொல்கிறார்- “இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும் நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு 20000 ஊழியர்கள் இடைவிடாது பணியாற்றினர்” என்று.

டவர்னியரின் புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது.அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம் செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்; பல மொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப மாற வேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல்  வியாபாரம் செய்பவர். ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம் செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது .ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள் வெளியாகின.அதே காலத்தில் 22 பிரெஞ்சு மொழிப் பதிப்புகள் வெளியாகின.

1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர் பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயங்களின் விவரங்களையும் சேர்த்தார். அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான வினாவை எழுப்பும்.

ஷாஜஹானின் மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான் தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.

அவுரங்க சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை க்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க முடியாது.

அப்படியானால் 20,000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர் என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது. ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள் மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே.இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.

பாதுஷாநாமா – இது என்ன சொல்கிறது?

இந்துக்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர். போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக் கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப் பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. ஆங்கில  மேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக் கட்டப்பட்டது  என்று பாதுஷா நாமா சொல்லுவதை எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?

எட்டாவது நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி வீழ்ச்சி அடையும் வரையான இந்திய வரலாற்றை எழுதும் மஹத்தான பணியை  எலியட் மற்றும் டவ்சன் என்ற  இரு ஆங்கிலேயர்கள்  மேற்கொண்டனர். அதாவது 1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள் எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின. ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப்  ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால் என்ற சொல்லே இல்லை.

அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால் பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும் செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.

1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு  என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது  லதீப் எழுதினார்.அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்,………………………..

to be continued…………………………

Leave a comment

Leave a comment