
Written by S.NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 13 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-56 AM
Post No. 6769
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 16-7-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு பன்னிரெண்டாம்) கட்டுரை – அத்தியாயம் 428
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 6

சுறா மீன்களைக் கண்டு அஞ்சாத மைக் ரட்ஸன்
சுறாமீன்கள் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம் ஏற்படும். ஆனால் மைக் ரட்ஸன் (Mike Rutzen) அவற்றிற்கு பயப்படாததோடு பார்வையாளர்களையும் பாதுகாப்பான ஒரு கூண்டில் வைத்து அவற்றிற்கு நடுவே நிற்க வைத்து அற்புதமான அனுபவத்தை வழங்குகிறார் நடுக்கடலில்! 1970, அக்டோபர் 11ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் பிறந்த ரட்ஸன் ஒரு இயற்கை வளப் பாதுகாப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர். சுறாமீன்களின் இனம் அருகி வருவதை எண்ணி மனம் வருந்திய இவர் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். 2007இல் எடுக்கப்பட்ட இவரது ஷார்க் மேன் (Sharkman) பிரபலமான டாகுமெண்டரி படம். வெள்ளைச் சுறாக்களைப் (White Sharks) பற்றி அதிகம் கவலைப்படும் இவரது சாகஸங்களை யூ டியூபில் உடனே காணலாம். உலகெங்கும் ஷார்க் கேஜ் டைவிங் (Cage diving) பிரபலமாக இவரே முக்கிய காரணம்!
ஓடும் காரின் முன் குட்டிக்கரணம் அடிக்கும் ஆரான் இவான்ஸ்
31 வயதே ஆகும் ஆரான் இவான்ஸ் (Aaron Evans) ஒரு அபூர்வப் பிறவி. 30 மைல் வேகத்தில் வரும் காரின் முன்னர் குட்டிக்கரணம் அடித்து அனைவரையும் அசர வைப்பவர் இவர். இப்படி மூன்று கார்கள் படு வேகத்தில் வர அவற்றின் முன் குட்டிக்கரணம் அடித்ததால் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் இவரை படுவேகமாகக் குட்டிக்கரணம் அடிப்பவர் என அங்கீகரித்துள்ளது. இவருக்கு ஸ்பிரிங் என்ற செல்லப் பெயரும் உண்டு. ப்ரூஸ் லீயின் திரைப்படத்தைப் பார்த்து தான் உத்வேகம் பெற்றதாக இவர் கூறுகிறார். தான் செய்வதை அனைவரும் செய்ய முடியும் என்று கூறும் இவர், அதற்கென தனக்கு உள்ளிருக்கும் ஆற்றலைப் பயிற்சி செய்து வெளிக் கொணரலாம் என்கிறார். தனது ஸ்டண்ட் சாகஸங்களை இவர் இப்போது உலகெங்கும் நிகழ்த்தி வருகிறார்.

பறவை மனிதன் ஜோக் சாமர்
ஜோக் சாமர் (Jokke Sommer) உயரமான இடங்களிலிருந்து குதிப்பதில் வல்லவர். பேர்ட் மேன் (Bird Man) என்ற செல்லப் பெயர் பெற்றவர். பிரான்ஸில் உள்ள 3842 மீட்டர் (12601 அடி) உயரமுள்ள அகுல்லி டு மிடி (Aguille du Midi) மலையிலிருந்து இவர் குதித்தது உலகின் மிகப் பெரிய சாகஸம் என்ற புகழைப் பெற்றது. பல லட்சம் பேர்கள் இவரது யூ டியூப் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பரவசம் அடைகின்றனர்.
காலநிலையைச் சொல்லும் ஆர்லாண்டோ செர்ரல்
ஆர்லாண்டோ செர்ரல் (Orlando L. Serrell) 1968 ஆம் ஆண்டு பிறந்தவர்.1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி பந்து ஒன்று அவரது தலையின் இடது பக்கத்தில் வந்து அடிக்க அன்றிலிருந்து அவருக்கு ஒரு விசேஷ திறமை உருவாயிற்று! அதாவது காலண்டரில் எந்த ஒரு தேதியைச் சொன்னாலும் அன்று காலநிலை, (தட்ப வெப்ப நிலை) எப்படி இருந்தது என்று சொல்லும் அரிய திறமையைப் பெற்றார். அது மட்டுமல்ல, அந்த விபத்து நடந்த தினத்திலிருந்து எந்த நாளைக் குறிப்பிட்டுக் கேட்டாலும் அன்று தான் என்ன செய்தேன் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். இந்தத் திறமை அவருக்கு எப்படி ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. உலக விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
நாலரை லிட்டர் தண்ணீரை வயிற்றில் தேக்கும் டிக்ஸன் ஆப்பாங்!
சாதாரணமாக ஒருவர் தனது வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீரைத் தான் கொண்டிருக்க முடியும். ஆனால் டிக்ஸன் ஆப்பாங் (Dickson Oppong) தனது வயிற்றில் நாலரை லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறார். உலகின் அதிசயமான வயிறைக் கொண்டவர் என்ற புகழையும் பெறுகிறார். 1967ஆம் ஆண்டு காணாவில் பிறந்த இவர் தனது நிகழ்ச்சிகளை பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் நிகழ்த்தி வருகிறார்.
பீச்சி அடிக்கும் நீரூற்று நீரைப் போல ஒரே சமயத்தில் தன் வயிற்றில் உள்ள நாலரை லிட்டர் நீரையும் இவர் வாய் வழியே வெளியேற்றுவது அதிசய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது!


செங்குத்தான சுவர்களில் ஏறும் ஜோதி ராஜு
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் ஜோதி ராஜு (Jyoti Raju).செங்குத்தான சுவர்களில் எந்த வித உதவி சாதனமும் இன்றி வெறுங்கைகளாலேயே சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறார் இவர். சித்ரதுர்காவில் உள்ள கோட்டையில் இவர் ஏறியது இவருக்கு பெரும் புகழைத் தந்தது. குரங்கு மனிதன் (Monkey Man) என்ற செல்லப் பெயர் இவருக்கு உண்டு. எப்படி இந்த சாதனையைச் செய்ய உங்களால் முடிகிறது என்று கேட்ட போது, “குரங்குகளிடமிருந்து இதைக் கற்றேன்” என்று பதில் கூறினார் இவர்!
மின்சார மனிதன் ஸ்லாவிஷா பஜ்கிக்
ஸ்லாவிஷா பஜ்கிக் (Slavisha Pajkic) ஷாக் அடிக்கும் மனிதர். ஆம், ஒரு அறையில் உள்ள குளிர்ந்த நீரை, கொதிக்க வைக்கும் 97 டிகிரி செல்ஸியஸ் அளவு சூடாக்கி விடுவார். அதாவது அவரது உடம்பிலிருந்து மின்சாரம் நீரில் பாய்ந்து அதைக் கொதிக்க வைக்கும். அவருக்கு எலக்ட்ரிக் மேன் , பேட்டரி மேன் என்றெல்லாம் பெயர் உண்டு. தனது உடலில் மின்சாரத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு அதை நினைத்த நேரத்தில் வெளியிடும் சக்தி கொண்ட அபூர்வ மனிதர் இவர். சாராயத்தில் நனைக்கப்பட்ட ஒரு துணி இவர் உடம்பின் மீது பட்டால் போதும், அது பற்றி எரியும்!
இதுவரை ஏராளமான வித்தியாசமான வல்லுநர்களைப் பார்த்தோம். இவர்கள் தாம் உலகை வியக்க வைக்கும் பெண்மணிகள்; வீரர்கள்!
இதே போல கைரேகையைப் பார்த்தவுடன் பிறந்த நாள், நட்சத்திரம் சொல்லும் நாடி ஜோதிடர்கள், ஒரு கம்பத்தின் உச்சியில் ஒரு நொடியில் ஏறும் வீரர்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றில் சாதாரண மனிதத் திறனையும் மீறி விந்தைகள் காட்டுவோர், வர்மப்புள்ளியால் விந்தைகள் காட்டும் கரத்தாண்டக வீரர்கள் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகும் அளவு விந்தை வீரர்களை தமிழகத்திலும், ஏன், இந்தியாவின் பல பகுதிகளிலும் காணலாம். ஆனால் அவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் திறனைக் காட்டும் தொலைக்காட்சிகள் தான் இங்கு இல்லை போலும்! இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தானே!

R.Nanjappa (@Nanjundasarma)
/ August 14, 2019The world has many intellectual giants; geniuses are less common. But there is another , rare category which is beyond both the above- who display some extraordinary faculty which we can only marvel at. We cannot account for them, except saying that these are God-given gifts or gifts of Nature.
Mark Akenside, the 18th century English poet, wrote in his poem, “The Pleasures of the Imagination” :
From heaven my strains begin; from heaven descends
The flame of genius to the human breast,
And love and beauty, and poetic joy
And inspiration.
But not alike to every mortal eye
Is this great scene unveil’d. For since the claims
Of social life, to different labours urge
The active powers of man;
with wise intent
The hand of nature on peculiar minds
Imprints a different byass, and to each
Decrees its province in the common toil.
To some she taught the fabric of the sphere,
The changeful moon, the circuit of the stars,
The golden zones of heaven: to some she gave
To weigh the moment of eternal things,
Of time, and space, and fate’s unbroken chain,
And will’s quick impulse: others by the hand
She led o’er vales and mountains, to explore
What healing virtue swells the tender veins
Of herbs and flowers; or what the beams of morn
Draw forth, distilling from the clifted rind
In balmy tears. .
But some, to higher hopes
Were destin’d; some within a finer mould
She wrought, and temper’d with a purer flame.
To these the sire omnipotent unfolds
The world’s harmonious volume, there to read
The transcript of himself. On every part
They trace the bright impressions of his hand:
In earth or air, the meadow’s purple stores,
The moon’s mild radiance, or the virgin’s form
Blooming with rosy smiles, they see portray’d
That uncreated beauty, which delights
The mind supreme. They also feel her charms,
Enamour’d; they partake the eternal joy.
Such endowments are beyond intellect, talent or genius, and do not come by laboured cultivation or practice. Some are just born like that. In the language of the Gita, we may say wherever we see such extraordinary features or immense excellence, we perceive there a ray of the splendour of God.
Tamil and Vedas
/ August 14, 2019Thanks.