மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்- மநு தரும் ‘லிஸ்ட்’ (Post No.7489) மநு நீதி நூல் – பகுதி 47


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7489

Date uploaded in London – 24 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில் 73 சுலோகங்களைச்  சென்ற கட்டுரையில் கண்டோம். இன்று 10-74 முதல் இறுதி வரை காண்போம். முதலில் சுவையான விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.

நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக்        கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின்  வாதம்.

10-75 சங்க இலக்கிய நூல்களும் அதைத் தொடர்ந்து வந்த திருக்குறள் முதலியனவும் பிராமணர்களை அறு தொழிலோர் என்று புகழும்; அந்த 6 தொழில்களை 10-75-ல் காணலாம்.

10-77 முதல் 10-80 மற்ற வர்ணத்தாரின் குலத் தொழில்கள்.

10-84 உழவுத் தொழில் , பிராமணர்களுக்கு லாயக்கானது இல்லை. ஏனெனில் உழவின் மூலம் உயிர்க் கொலை நடக்க  வாய்ப்பு இருக்கிறது (இது பிராமணர்களின் பரிபூரண அஹிம்சையைக் காட்டுகிறது; சங்க இலக்கியமும் பிராமணர் வீட்டு உணவு வகைகளில் சைவ உணவை மட்டுமே இயம்பும்.அவர்களுடைய  தெருக்கள்  கோழியும் நாயும் உள்ளே புக முடியாத தூய்மையுடையன  என்றும் 2000 ஆண்டுக்கு முன்னரே புகழ்கின்றது )

10-81 முதல் 10-85 வரை – ஆபத் கால தர்மம்

10-81 முதல் 10-93 வரை பிராமணர்கள் விற்கக்கூடாத பொருட்களின் பட்டியல்

10-94 பண்டமாற்று செய்யலாம்

10-96 பேராசையுடன் மற்றவர்க்குரிய தொழிலை செய்ய விழைவோரை நாடு கடத்து; சொத்துக்களைப்  பறிமுதல் செய்.

10-97 கீதையின் எதிரொலி

ச்ரேயான் ஸ்வதர்மோ விகுணஹ பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்

ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேயஹ  பரதர்மோ பயாவஹக -3-35

பொருள்

நன்கு அனுஷ்டிக்கக் கூடிய பிறருடைய தர்மத்தைக் காட்டிலும்  , தவறுகளுடன் கூடிய சொந்த தருமமே மேலானது. தன்னுடைய தர்மத்தில் சாவும் மேலானதே .

பிறனுடைய தர்மம் பயத்தைத் தரும். 3-35

xxxx

உவமைகள்

10-102 முதல் 10-104 வரை பிராமணர்கள் பற்றிய உவமைகள்

கங்கை நீர்,  தீ , ஆகாயம் போல தூய்மைமிக்கவர்கள்.

xxxx

இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர்  தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா  என்றும் சொல்கிறார்.

ஆனால் விஷமக்கார இந்து மத விரோதிகள் இதையெல்லாம் மறைத்துவிட்டு ‘காமா சோமா’ என்றும் ‘கன்னா பின்னா’ என்றும் எழுதி மகிழ்வர்!

Xxx

10-115, 10-116 ஆகிய இரண்டு ஸ்லோகங்களிலும் மநு மூன்று ஜாதியினரும் பசி வந்த காலத்தே, கஷ்ட காலத்தே பொருள் ஈட்டக்கூடிய 10+7 = 17 வழி முறைகளை விளம்புகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

10-120 ல் மன்னன் எவ்வளவு வரி வாங்கலாம் என்று உரைக்கிறார்.

10-124 ல் சூத்திரர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் பிராமணர்கள் தரவேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

10-127 ல் பஞ்ச காலத்தில் சூத்திரர்களும் வேதம் ஓதுதலைத் தவிர மற்ற உயர்ந்தோர் தொழிலையும் செய்யலாம் என்பார் .

10-129ல் சூத்திரர்கள் அளவுக்கு அதிகமாக பொருள் ஈட்டுவது ஆபத்தில் முடியும் என்பார். இதைப் படிப்போர் முந்தைய அத்தியாயத்தில் பிராமணர்கள் கொஞ்சமும்  பொருள் சேர்த்துவைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இத்துடன் பத்தாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

–subham—

Leave a comment

Leave a comment