30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள் (Post No.7752)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7752

Date uploaded in London – 28 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஏப்ரல் 2020 காலண்டர்; சார்வரி ஆண்டு , சித்திரை மாதம்

பண்டிகை நாட்கள் – Festival Days :- ஏப்ரல்  2 ராமநவமி;   6 பங்குனி உத்தரம் ; 10 புனித வெள்ளி ; 13 ஈஸ்டர் திங்கள் ; 14 தமிழ் புத்தாண்டு சார்வரி துவக்கம் ; 26 அக்ஷய திருத்யை ; 28 சங்கர ஜயந்தி  .

முகூர்த்த தினங்கள் – 9, 17, 26, 27, 29

அமாவாசை -22; பௌர்ணமி -7; ஏகாதசி -4, 18

ஏப்ரல் 2020 காலண்டரை அருணகிரிநாதரின் திருப்புகழ் அலங்கரிக்கிறது. அவர் முருகனிடம் வேண்டியதை நாமும் வேண்டலாம்.

ஏப்ரல் 1 புதன் கிழமை

இன்பரசத்தே பருகிப்  பலகாலும்

என்றனுயிர்க் காதரவுற்  றருள்வாயே

ஏப்ரல் 2 வியாழக்  கிழமை

உயர் கருணை புரியுமின்பக் கடல்மூழ்கி

உனையென துளறியு மன்பைத் தருவாயே

ஏப்ரல் 3 வெள்ளிக்  கிழமை

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்

வம்பிலே துன்புறாமே

வண் குகா  நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே

வந்து நீ யன்பிலாள் வாய்

ஏப்ரல் 4 சனிக்  கிழமை

அந்திபக  லென்றிரண் டையுமொழித்

திந்திரிய சஞ்சலங்  களை யறுத்

தம்புய பாதங்களின் பெருமையைக் கவிபாடி

ஏப்ரல் 5 ஞாயிற்றுக்  கிழமை

உன்புகழே பாடி நானினி

அன்புட னாசார பூசை செய்

துய்ந்திட வீணாள்ப  டாதருள் புரிவாயே

ஏப்ரல் 6 திங்கட்  கிழமை

வன் கானம் போயண்டா  முன்பே வந்தே நின் பொற்  கழல்தா ராய் 

ஏப்ரல் 7  செவ்வாய்க்  கிழமை

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை

தூங்க அனுகூல பார்வைத் தீர

செம்பொன் மயில் மீதி லேயெ ப்போது  வருவாயே

ஏப்ரல் 8 புதன் கிழமை

அறிவாலறிந்து னிருதா  ளிறைஞ்சு

மடியா ரிடைஞ்சல்  களைவோனே –

ஏப்ரல் 9 வியாழக்  கிழமை

இன்சொல் விசா காக்ரு  பாகர

செந்திலில் வாழ்வாகி யேயடி

யென்றனை யீடேற  வாழ்வருள் பெருமாளே

ஏப்ரல் 10 வெள்ளிக்  கிழமை

அந்தகனுமெ னையடர்ந்து வருகையினி

லஞ்சசலென வழிய மயில்மேல் நீ

அந்த மறலி யொடு கந்தமனிதனம

தன்பனென மொழிய வருவாயே

ஏப்ரல் 11 சனிக்  கிழமை

இன்பந்தந்தும்பர்  தொழும்பத

கஞ்சந்தந் தஞ்சமெனும்படி

யென்றென்றுந் தொண்டு செயும்படி   யருள்வாயே

ஏப்ரல் 12 ஞாயிற்றுக்  கிழமை

மங்கை யழுது விழவே  யமபடர்கள்

நின்று சருவ  மலமே யொழுகவுயிர்

மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏப்ரல் 13 திங்கட்  கிழமை

நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்துளாகு ஞான

நூலடங்க வோத வாழ்வு தருவாயே

ஏப்ரல் 14  செவ்வாய்க்  கிழமை

மறை போற் றரிய வொளியாய்ப்பரவு

மலர்தாட் கமலா மருள்வாயே    

ஏப்ரல் 15 புதன் கிழமை

சிவனை நிகர் பொதியவரை முநிவனக  மகிழ இரு

செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே

ஏப்ரல் 16 வியாழக்  கிழமை

கோப்புக் கட்டியி னாப்பிச்  செற்றிடு

கூட்டிற் புக்குயி  ரலையாமுன்

கூற்றத்    தத்துவ நீக்கிப்  போர்களால்

கூட்டிச் சற்றருள் புரிவாயே  

ஏப்ரல் 17 வெள்ளிக்  கிழமை

தீப மங்கள ஜோதீ நமோநம

தூய அம்பல லீலா நமோநம

தேவ குஞ்சரி பாகா நமோநம  அருள்தாராய்

ஏப்ரல் 18 சனிக்  கிழமை

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நானி னைந்தருட் பெறுவேனோ

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏப்ரல் 19 ஞாயிற்றுக்  கிழமை

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு

மடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக  இடரானதுந் தொலைய

அருள்ஞான  இன்பமது புரிவாயே

ஏப்ரல் 20 திங்கட்  கிழமை

வேத மந்திர ரூபா நமோநம

ஞான பண்டித நாதா நமோநம

ஏப்ரல் 21  செவ்வாய்க்  கிழமை

இசை பயில் சடாக்ஷர மதாலே

இகபர சௌபாக்ய மருள்வாயே    

ஏப்ரல் 22 புதன் கிழமை

சற் போ  தகப்பதும  முற்றே  தமிழ்க் கவிதை

பேசிப் பணிந்துருகு நேசத்தை யி ன்றுதர இனி வரவேணும்

ஏப்ரல் 23 வியாழக் கிழமை

கூடு கொண்டுழல் வேனை யன்பொடு

ஞான நெஞ்சினர் பாலிண ங்கிடு

கூர்மை தந்தினி  யாள வந்தருள் புரிவாயே

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏப்ரல் 24 வெள்ளிக் கிழமை

பிறவிக் கடல் விட்டுயர் நற் கதியைப்

பெறுதற்   கருளைத் தரவேணும்

ஏப்ரல் 25 சனிக் கிழமை

செறிவுமறிவு முறவு மனைய

திகழுமடிகள் தரவேணும்

ஏப்ரல் 26 ஞாயிற்றுக் கிழமை

கமல விமல மரகத மணி

கனக மருவு மிருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு  தரவேணும்

ஏப்ரல் 27 திங்கட் கிழமை

பலகலை படித்தபோது பாவாணர் நாவிலுறை

யிரு சரண வித்தார வேலாயுதா வுயர்செய்

பரண்மிசை குறப்பாவை தோள் மேவு மேகமுறு மணவாளா

ஏப்ரல் 28  செவ்வாய்க் கிழமை

இடமிலிகைக்கொடை யிலிசொற்  கியல்பிலிநற்  றமிழ்பாட

இருபதமுற்றிரு வினை யற்றியல் கதியைப் பெறவேணும்

ஏப்ரல் 29 புதன் கிழமை

இருகண் மாயையிலே மூழ்காதே

யுனது காவிய நூலா ராய்வே

னிடர்ப் படாதருள் வாழ்வே நீயே தரவேணும்

ஏப்ரல் 30 வியாழக்  கிழமை              

தருண மிதையாமி மிகுத்த கனமதுறு  நீள் சவுக்ய

சகல செல்வ யோக மிக்க  பெருவாழ்வு

தகைமை சிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து

தவிபுரிய வேணு  நெய்த்த வடிவேலா

TAGS –  ஏப்ரல் 2020 காலண்டர், திருப்புகழ், பொன்மொழிகள்

tamilandvedas.com, swamiindology.blogspot.com

—subham–

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    இன்னும் மூன்று மணிகள்:

    – பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற
    பெருவாழ்வு பற்ற அருள்வாயே!
    – மனது துயரற வினைகள் சிதறிட மனது பதமுற
    எனது தலைபதம் அருள்வாயே
    -வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து
    மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடலே

  2. Tamil and Vedas's avatar

    VERY GOOD QUOTES.

Leave a comment