ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்திகள் (Post No.7940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7940

Date uploaded in London – 8 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பிரபஞ்சம்  118 செங்கற்களால் (118 elements) கட்டப்பட்டுள்ளது அவைகளை நாம் மூலகம் அல்லது தனிமம் என்று அழைக்கிறோம். இதில் ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்தியை முதலில் சொல்கிறேன்

இதுவரை 23 மூலகம் பற்றி எழுதிவிட்டேன். இது 24-வது கட்டுரை.

எகிப்துக்கும் ரோமானிய சாம்ராஜ்யத்துக்கும்  நாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதி செய்த சாயப்பொருளுக்கும் ப்ரோமீன் மூலகத்துக்கும் தொடர்பு உண்டு. ஊதா (Purple) வர்ண துணிகளை அணிவது பெரும் அந்தஸ்தைக் குறிக்கும். முதலில் ரோமானியர்கள் மாஜிஸ்திரேட் உடுப்பில் எவ்வளவு ஊதா பார்டர் (Purple Border) இருக்கலாம், அதிகாரி உடுப்பில் எவ்வளவு ஊதா பார்டர் இருக்கலாம் என்றெல்லாம் விதிகள் இயற்றினர். பிற்காலத்தில் ரோம சாம்ராஜ்ய (Emperors)  மன்னர்கள் மட்டுமே ஊதா நிற உடைகளை அணியலாம் என்று கட்டளையிட்டுவிட்டனர்.  ரோமானிய ஆட்சியாளர் பற்றிய ஆங்கில திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த ஊதா ஆடைகள் மனக்கண் முன்னே நிழலாடும். இதற்கெல்லாம் காரணம் ப்ரோமின் மூலகம்.

இந்திய- ரோமானியர் (இத்தாலியர்) வணிகம் பற்றி ஈ எச் வார்மிங்டன் (E H Warmington) 1928ல் ஒரு நூல் வெளியிட்டார். அதில் இண்டிகோ (Indigo) , அவுரி , நீலி  என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சாயத்தையும் இந்தியா ஏற்றுமதி செய்ததாக எழுதியுள்ளார்.

நம்மவர்கள் எகிப்திலுள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா அல்லது மத்தியக் கிழக்கிலுள்ள சிரியா , அரேபிய நாடுகளில் இதை விற்றுவிடுவார்கள். அராபியர்களும் , சோமாலியர்களும் அதை மற்றவர்களுக்கு விற்று விடுவர். எப்படி இந்துக்கள் கண்டுபிடித்த 1, 2, 3, 4, ………. என்ற எண்களை அராபிக் நியூமெரல் (Arabic Numerals)  என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனரோ அப்படி இவைகளை அராபியர் சப்ளை செய்ததாக சிலர் எழுதுவர். இந்த சிவப்பும் நீலமும் கலந்த ஊதா சாயம் அவுரி என்ற செடியின் பூக்களிலிருந்தும்  கடல்வாழ் (Molluscs) நத்தைகளிலிருந்தும் கிடைக்கிறது. சங்குகளில் வாழும் சில இன நத்தைகள் இந்த சாயத்தை உருவாக்குகின்றன.

இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால்   மற்ற வண்ணங்கள் நாளாக, ஆக மங்கிப்போகும். இதனால்தான் நாம் ‘சாயம் வெளுத்துப் போச்சு’ என்ற மரபுத் தொடரையும் (Idioms and Phrases) ஒருவரைக் கிண்டல் செய்யும்போது பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த அவுரி/ இண்டிகோ சாயம் மட்டும் நாளாக, ஆக மெருகு ஏறி வண்ணம் பொலிவடையும்; பிரகாசிக்கும். இதனால் வெள்ளியின் எடைக்குச்  சமமாக இது விற்கப்பட்டது இத்தனைக்கும் நாம் நண்றிக கடன்பட்டிருப்பது ப்ரோமின் மூலகத்துக்கே.

பைபிளில் எசக்கியேல் (Ezekiel)  அத்தியாயத்தில் எலிசா தீவிலிருந்து வந்த மர்மக் கப்பலில் ஊதா நிறம் இருந்ததாக வருவது, அவுரி வியாபாரம் என்றும் சிரியாவிலிருந்து மரகதம், மாணிக்கம், பவளம், லினன் துணி, ஊதா சாயம் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டதை சொல்வதாகவும் அறிஞர்கள் எண்ணுவர்.

1865ல் பதினெட்டே வயது நிரம்பிய ஆங்கில கெமிஸ்ட் வில்லியம் பெர்கின் வயலெட் சாயப்பொருளைக் கண்டுபிடிக்கும் வரை இதன் புகழ் நீடித்தது. நிற்க.

****

ப்ரோமோஸ் (Bromos) என்றால் ‘வெறுக்கத்தக்க நாற்றம்’ என்று கிரேக்க மொழியில் அர்த்தம். இதனால்தான் இதற்கு அந்த அவப்பெயர் சூட்டப்பட்டது இதை ஒரு தனிமம் என்று அறிவித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பலார்ட் (A J Balard)  ஆவார். இந்த உப்பு கலந்த நீர் இயற்கை ஊற்றுகளில் காணப்பட்டதால் ஒரு மாணவர் அதைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார் . அவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன்னர் பலார்ட்  இதை அறிவித்து புகழ் மொண்டு கொண்டு போனார்.

நாம் உண்ணும் உணவில் நாள்தோறும் ப்ரோமின் 1 மில்லிகிராம் முதல் 20 மில்லிகிராம் வரை உடலில் செல்கிறது இதை விட கூடுதலாகப் போனால் நல்லதல்ல. இது மனதின் செயல்பாட்டை, குறிப்பாக செக்ஸ் ஈடுபாட்டைக் (Sexual desire) குறைத்துவிடுகிறது

***

பயன்கள்

இதன் விஷத் தன்மை காரணமாக இவைகளை மருந்தில் பயன்படுத்துவதில்லை. ஆயினும் மருந்துகளை உற்பத்தி செய்கையில் இடைநிலைப் பொருளாகப் பயன்படுகிறது. நாம் எப்படி நறுமணத்துக்கு கருவேப்பிலையைப் பயன்படுத்திவிட்டு, வாய்க்குள் உணவு செல்லும்போது அதை வெளியே தூக்கிப் போடுகிறோமோ  அப்படி கருவேப்பிலையாகப் பயன்படுகிறது மருத்துவத் தொழிலில்.

டை ப்ரோமோ மீதேன் (Di bromo methane)  என்னும் உப்பை பெட்ரோலுடன் கலந்து அதன் (leaded petrol) திறனை அதிகரித்தனர். . இதே போல செடி கொடிகள் பல மரங்களைத் தாக்கும் புழுப்பூச்சிகளைக் கொள்ளுவதற்கு மெத்தைல் புரோமைட் (Methyl Bromide)   உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை புறக் சூழலை மாசு படுத்துகின்றன என்ற கூக்குரல் வலுத்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உப்புக்களை ஜாதிப்ரஷ்டம்  செய்து வருகின்றனர் — விலக்கி வைக்கின்றனர்

தீயணைப்புக் கருவிகளிலும் இதன் வாயு பயன்படுத்தப்பட்டது . அங்கும் இதே கதைதான். புறச்சூழல்  ஆர்வலர்கள் கொடி தூக்கத் துவங்கிவிட்டனர் .

***

இஸ்ரேல் நாட்டில் அதிக உப்புக்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea) இருப்பதால் அங்கும் மற்றும் அமெரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அதிக ப்ரோமின் உற்பத்தியாகிறது; கடலில் இது நிறைய கரைந்திருப்பதால் இதற்குப் பஞ்சமே இல்லை.

பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் ஆங்கிள்சி (Anglesey in Wales, UK) என்னுமிடத்தில் கடல் நீரிலிருந்து ப்ரோமின் எடுக்கப்படுகிறது.

***

திரவமா , வாயுவா ?

ரசாயனப் பகுப்பில் இது குளோரின், அயோடின் ஆகிய மூலகம் உள்ள ஹாலஜன் (Halogen அணியைச் சேர்ந்தது இது. சொல்லப்போனால் அவற்றிற்கு நடுவில் நிற்கிறது ப்ரோமின்.

இது சிவப்பும் பழுப்பும் கலந்த திரவமாக காட்சி தரும் ஆயினும் சாதாரண அறையிலுள்ள வெப்பத்திலேயே கொதித்து ஆவியாக மாறும். ஒருவித மணத்தையும் வீசும் .

இதற்கு கதிரியக்கம் இல்லாத இரண்டு ஐசடோப்புகள் உண்டு.

***

ரசாயன விவரங்கள்

குறியீடு Br

அணு எண் – 35

உருகு நிலை — மைனஸ் 7 டிகிரி சி

கொத்தி நிலை – 59  டிகிரி சி


tags  —  ப்ரோமீன் ,Bromine,  மூலகம்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 30 – இனிக்கும் பாடல்கள்! (Pst No7939)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7939

Date uploaded in London – – – 8 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 30 – இனிக்கும் பாடல்கள்!

R. Nanjappa

இனிக்கும் பாடல்கள்!

நினைவில் நிற்கும் நல்ல பாட்டென்றால் அது சோகம் கலந்ததாகத் தான் இருக்கவேண்டுமா?

ஆங்கிலக் கவி ஷெல்லி கூறியதை ஒரு ஹிந்திப் பாட்டில் எழுதினார் ஷைலேந்த்ரா:


हैं सबसे मधुर वो गीत जिन्हें
हम दर्द के सुर में गाते हैं 

ஹை ஸப்சே மதுர் வோ கீத் ஜின்ஹே

ஹம் தர்த்கே ஸுர் மே காதே ஹை

துன்பம் என்னும் ஸ்வரத்தில் நாம் இசைக்கிறோமே, 

அந்தப் பாடல்களே  அனைத்திலும் இனிமையாக இருக்கின்றன!

ஆனால் நம் கவி  இத்துடன் நிறுத்தவில்லை! மேலும் சொன்னார்:

जब ग़म का अन्धेरा घिर आये
समझो के सवेरा दूर नहीं
हर रात का है पैगाम यही

तारे भी यही दोहराते हैं 

ஜப் கம் கா அந்தேரா கிர் ஆயே

ஸம்ஜோ  கே ஸவேரா தூர் நஹி

ஹர் ராத் கா ஹை பைகாம் யஹீ

தாரே பீ யஹீ தோஹராதே ஹை

துன்பம் என்னும் இருள் கவியத் தொடங்கினால்,

சூரிய உதயம் அதிக தூரத்தில் இல்லை என்று தெரிந்துகொள்.

ஒவ்வொரு இரவின் செய்தியும் இதுதான்

தாரகைகளும் இதையே  மீண்டும் மீண்டும் காட்டுகின்றன!

இடுக்கண் வருங்கால் நகுக-அதனை

அடுத்து ஊர்வது அஃதொப்பதில்    குறள் 621

இப்பாட்டை “பதீதா” என்ற படத்தில் 1953 தலத் மெஹ்மூத் பாடினார்.

சந்தோஷம் தரும் இனிய பாட்டுக்களும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

உஸ் பார் ஸாஜன்

को: ओ टिम का टिमा टिम्भा तारे करें अचम्भा
ओ टिम का टिमा टिम्भा

उस पार साजन इस पार धारे
ले चल ओ माँझी किनारे किनारे
ले चल ओ माँझी किनारे -2

को: ओ कोड़ीया कोड़ीया कवलानी कवलानी -2

दूर यहाँ से गाँव पिया का
हाल न पूछे कोई जिया का -2
गहरा सागर और मैं अकेली
सूझें न कोई सहारे सहारे
ले चल ओ माँझी …

को: ओ टिम का टिमा टिम्भा …

लहरें देखूँ दिल लहराए -2
जल दरपन में पी मुस्काए -2
प्यासी अँखियाँ दोनों ये सखियाँ
हरदम करे हैं इशारे इशारे
ले चल ओ माँझी …

को: ओ टिम का टिमा टिम्भा …

ஓ டிம் கா டிமா டிம்பா தாரே கரே அசம்பா.

ஓ டிம் கா டிமா டிம்பா…

உஸ்பார் ஸாஜன் இஸ் பார் தாரே

லேசல் ஓ மா(ன்)ஜீ கினாரே கினாரே

லேசல் ஓ மா(ன்)ஜீ கினாரே..

ஓ  இந்தத் தாரகைகள் மின்னி மின்னி

ஜாலம் காட்டுகின்றன!

என் அன்பர் அந்தக் கரையில்-

இப்பக்கம் நீர்ப்பெருக்கு!

ஓடக்காரா! என்னை சற்று அந்தக் கரைக்கு கூட்டிச்செல்வாயா?

ஓ கோடீயா கோடீயா கவ்லானீ கவ்லானீ..

தூர் யஹா(ன்) ஸே கா(ன்)வ் பியா கா

ஹால் ந பூசே கோயீ ஜியா கா

கஹ்ரா ஸாகர், ஔர் மை அகேலீ

ஸூஜே ந கோயீ ஸஹாரா ஸஹாரா

லே சல் ஓ மாஜீ கினாரே

என் அன்பரின் வீடு இங்கிருந்து வெகு தொலைவு!

என் மனதின் நிலை பற்றி எதுவும் கேட்டுவிடாதீர்கள்!

ஆழம் மிகுந்த கடல், நானோ தனிமையில்!

துணை யாரும் தெரியவில்லை!

ஓடக்காரா, என்னை அக்கரை சேர்த்துவிடு!

லஹரே தேகூ(ன்) தில் லஹராயே

ஜல் தர்பன் மே பீ முஸ்காயே

ப்யாஸீ அ(ன்)கியா தோனோ யே ஸகியா(ன்)

ஹர்தம் கரே ஹை இஷாரே இஷாரே

லே சல் ஓ மா(ன்)ஜீ கினாரே…

இந்த அலைகளைக் கண்டு என் மனமும் துள்ளுகிறது

அன்பரின் முகம் இந்த நீர்க்கண்ணாடியில் முறுவலிக்கிறது!

இந்த கண்கள் ஜோடியாக ஏதோ ஸமிக்ஞை செய்கின்றன!

ஓடக்காரா, என்னை அக்கரை சேர்த்துவிடு!

Song: Us paar sajan    Film: Chori Chori 1956 Lyrics: Hasrat Jaipuri

Music: Shankar Jaikishan  Singers: Lata & chorus

இந்தப் பாட்டின் இனிமையை சொல்லிமுடியாது! காதில் தேனாகப் பாய்கிறது. அழகிய சிறு கவிதை.

இந்தப் பாட்டு கதா நாயகி பாடுவது அல்ல! ஓடத்தில் போகிறவர் பாடுவது- ஆனால் நாயகியின் நிலைக்கு பொருந்துவது! இத்தகைய பாடல்களை

Surrogate songs என்பர்.

இந்தப் பாட்டில் சில சொற்கள் வெற்று ஒலிக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன. நம் கவிஞர் எழுதிய ‘ஜாலினோ ஜிம்கானா’ , லகரியோ பகரியாமா, போல என்று சொல்லலாம்!

கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இந்தப் பாடலை கவனித்துக் கேளுங்கள்! இதுவே ஒரு பிரார்த்தனை மாதிரி ஆகிவிடும்! வாழ்க்கை-சம்சாரம் என்னும் கடல், நம் எஜமானர்-இறைவன்-இதைத்தாண்டி இருக்கிறார்! அங்கே நம்மைக் கொண்டு சேர்க்க ஓடம்-ஓடக்காரன் தேவை! இந்தக் கருத்து வருகிறதா இல்லையா பாருங்கள்!

இது நம் சமய நூல்களில் வரும் ஒரு முக்கிய கருத்து! வேதத்தில் துர்கா ஸூக்தத்தில் முதலிலேயே வருகிறது;  மன்த்ரபுஷ்பத்திலும் வருகிறது கடவுள் நாமம், அவரைப் பற்றிய சிந்தனை-அதுவே ஓடம். 

இக்கருத்து 1943ல் வந்த ‘கிஸ்மத்” படத்தில் ஒரு பாட்டில் வெளிப்படையாக வருகிறது:


अब तेरे सिवा कौन मेरा कृष्ण कन्हैया
भगवान किनारे स लगा दे मेरी नैया


அப் தேரே சிவா கௌன் மேரா க்ருஷ்ண கன்னையா

பகவான் கினாரே ஸ லகாதே மேரி நையா!

பகவானே, கிருஷ்ணா! எனக்கு உன்னைத்தவிர யார் இருக்கிறார்கள்?

என் (வாழ்க்கையாகிய ) ஓடத்தை கரை சேர்த்து விடு.

கவி ப்ரதீப் எழுதி, அனில் பிஸ்வாஸ் இசையில்  இதைப் பாடியது அமீர்பாய் கர்னாடகி! அக்காலத்தில் மிகப் பிரபலமான பாடல் [எங்கள் தாயாரும் இதை எங்களுக்குப் பாடித் தூங்க வைப்பார்!]

நம் பண்பட்டின் சில அடிப்படைக் கருத்துக்கள் நம் திரைக் கவிகளுக்கு எப்படியோ வந்துவிடுகின்றன!

இனி இந்த உயரத்திலிருந்து சற்றுக் கீழே இறங்கி வருவோம்! இளமைக் காலத்தை வீணாக்காமல் மகிழ்சியாக வாழுங்கள் என்று சொல்கிறார் கவி ஸாஹிர் லுதியான்வி!

தில் ஸே மிலா கே தில்

दिल से मिला के दिल, प्यार कीजिये कोई सुहाना इक़रार कीजिये  १) शरमाना कैसा, घबराना कैसा जीने से पहले, मर जाना कैसा फ़ासलों की छाँव में रस भरी फ़िज़ाओं में इस ज़िन्दगी को गुलज़ार कीजिये, दिल से …  २) आती बहारें, जाती बहारें कब से खड़ी हैं, बांधी कतारें छा रही है बेखुदी कह रही है ज़िन्दगी दिल की उमंगें बेदाद कीजिये, दिल से …  ३) दिल से भुला के, रुसवाइयों को जन्नत बना लें, तनहाइयों को आरज़ू जवान है वक़्त मेहरबान है दिल खो न जाए खुशी यार कीजिये, दिल से …

தில் சே மிலா கே தில் ப்யார் கீஜியே

கோயி ஸுஹானா இக்ரார் கீஜீயே

பிறருடன் மனம் சேர்ந்து அன்புடன் இருங்கள்

வரும் நல்ல, இனிய விஷயங்களை அங்கீகரியுங்கள்

ஷர்மான கைஸா, கப்ரானா கைஸா

ஜீனே கே பஹலே மர்ஜானா கைஸா

ஃபாஸ்லோ(ன்) கீ சாவ்(ன்) மே, ரஸ்பரீ ஃபிஃஜாவோ

(ன்) மே

இஸ் ஃஜிந்தகீ கோ குல்ஃஜார் கீஜியே

தில் ஸே மிலாகே தில்….

ஏன் கூச்சப்படவேண்டும், ஏன் அச்சப்படவேண்டும்?

வாழ்வதற்குமுன் ஏன் மரணம் பற்றி  நினைக்கவேண்டும்?

இங்கிருக்கும் நல்ல விஷயங்களை  நினைத்துப் பார்த்து

இந்த வாழ்க்கையையே ஒரு சோலையாக மாற்றுங்கள்!

ஆதி பஹாரே(ன்), ஜாதீ பஹாரே(ன்)

கப்ஸே கடீ ஹை பாந்தீ கதாரே(ன்)

சா ரஹீ ஹை பேகுதீ, கஹ் ரஹீஹை ஃஜிந்தகீ

தில் கீ உமங்கே பேதாத் கீஜியே

தில் ஸே  மிலாகே தில்

இந்த வஸந்தம் வருகிறது, போகிறது!

காலக் கட்டில் இந்த வரிசை தானே நடக்கிறது!

(காலம் வீணில் கழிகிறது)

சொரணை கெட்ட நிலை போகிறது!

மனதின் ஆசைகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்

என வாழ்க்கை சொல்கிறது

தில் ஸே புலாகே, ருஸ்வாயியோ(ன்) கோ

ஜன்னத் பனாலே தன்ஹாயியோ(ன்)  கோ

ஆர்ஃஜூ ஜவான் ஹை, வக்த் மெஹர்பான் ஹை

தில் கோ ந ஜாயே, குஷீ யார் கீஜியே

தில் ஸே மிலா கே தில்…..

சிறுமைகளை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்

தனிமையை சொர்க்கமாக (இனிமையாக) செய்துகொள்ளுங்கள்

ஆசைகள் எழுகின்றன, காலம் அனுகூலமாக இருக்கிறது

மனம் தன் நிலையிழந்து விடப்போகிறது, 

மகிழ்ச்சியுடன் உறவாடுங்கள்!

பிறருடன் சேர்ந்து அன்பாக இருங்கள்!

Song: Dil se milake dil  Film: Taxi Driver 1954 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer: Lata Mangeshkar

இது அருமையான கவிதை. பல அரிய உருதுச் சொற்கள் கொண்டது. நேரடியாக பொருள் சொல்ல முடியாது.

இது ஒரு ‘கிளப்’ பாடலாக அமைந்தது, ஆனால்  எத்தனை நல்ல விஷயங்களைச் சொல்கிறார்! மெட்டில் என்ன இனிமை! பின்னணி இசையும் அருமை!

வாழ்க்கையில் நல்ல தருணங்கள் இருக்கின்றன, நல்ல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றையும் தகுந்த முறையில் எற்றுக்கொள்ள வேண்டும்.

All work and no play makes Jack a dull boy என்பார்கள்.

Take time to love and be loved.
It is God given en
It is the road to happiness.
Take time to laugh.
It is the music of the soul.  
                                      Martin Greyford 

***

பாவத்தின் தந்தை யார்? (Post No.7938)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7938

Date uploaded in London – – – 8 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாவத்தின் தந்தை யார்?

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் அறிவாளியான ஒரு அரசனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

பாவத்தின் தந்தை யார்? பாவத்திற்கு ஆதி காரணமாக அமைவது எது?

யோசித்து யோசித்துப் பார்த்தான். விடை தெரியவில்லை.

மறுநாள் அரசவைக்கு வந்தவுடன் முதலில் அவன் கேட்ட கேள்வி இது தான்  : “பாவத்தின் தந்தை யார்?”

அரசவையில் மந்திரி, ராஜகுரு, வித்வான்கள் உள்ளிட்ட அனைவரும்  யோசித்துப் பார்த்தார்கள். சரியான விடையைச் சொல்ல முடியவில்லை.

மன்னனுக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.

கற்றறிந்த தலைமை வித்வானாக இருந்த பிராமணரை அவன் பார்த்தான்.

“பிராமணரே! ஒரு வாரம் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். சரியான விடையைச் சொல்லும். இல்லையேல் அதற்கான தகுந்த தண்டனையும் உண்டு.”

ஏழை பிராமணர் நடுங்கி விட்டார்.

இதற்கு எப்படிப் பதிலைக் கண்டுபிடிப்பது?

வீட்டிற்குச் சென்ற அவர் இரவு முழுவதும் படித்தார். யோசித்தார். ஊஹூம். திருப்திகரமான விடை வரவில்லை.

அடுத்த நாள் வழக்கம் போல நதிக்கரைக்குக் குளிக்கச் சென்றார்.

கரையோரம் இருந்த தாசி ஒருத்தி அவரைப் பார்த்தாள். என்றும் தேஜஸுடன் விளங்கும் அவர் முகம் வாடி இருந்தது.

அவரை அணுகிய அவள், “ஐயனே! ஒருநாளும் இல்லாதபடி இப்படி உங்கள் முகம் வாடி இருக்கிறதே? என்ன காரணம்?” என்று கேட்டாள்.

அவர் விஷயத்தைச் சொன்னார்.

“பூ! இவ்வளவு தானா? இதுவும் ஒரு கேள்வியா?  இதற்கு எனக்கு விடை தெரியுமே” என்றாள் அவள்.

திடுக்கிட்டார் பிராமணர்.

“சொல்லு, சொல்லு, விடை என்ன?” ஆவலுடன் கேட்டார்.

“சொல்கிறேன். ஆனால் என் வீட்டு வாயிலுக்கு வர வேண்டும்.”

அந்தணர் தயங்கினார். தாசி வீட்டு வாசலுக்குப் போகலாமா?

“சரி, வாயில் வரை தானே! வருகிறேன்” -அந்தணர் தாசியுடன் அவள் வீட்டு வாயிலுக்குச் சென்றார்.

தாசி: “வந்தது வந்தீர்கள். உள்ளே வாருங்கள். தக்ஷிணையாக நூறு ரூபாய் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். உடனே விடையையும் சொல்கிறேன்.”

அந்தணர் வாயைப் பிளந்தார். நூறு ரூபாயை விட அவருக்கு மனமில்லை. தாசியின் வீட்டிற்குள் நுழைந்தார்.

நூறு ரூபாயைக் கையில் எடுத்த தாசி அந்தணரைப் பார்த்து, “இதோ நூறு ரூபாய்! ஆனால் என் படுக்கை அறைக்குள் வந்து படுக்கையின் மீது உட்காருங்கள். இருநூறாகத் தருகிறேன்” என்றாள்.

இருநூறா?

படுக்கை அறையினுள் நுழைந்த அந்தணர் படுக்கையின் மீது உட்கார்ந்தார்.

தாசி : “வந்து அமர்ந்து விட்டீர்கள். அருமையாக சமைத்து இருக்கிறேன். மாமிச உணவு தான். கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தங்க நெக்லஸையும் தருகிறேன்.”

அந்தணர் யோசித்தார். தங்க நெக்லஸ். கை நிறைய பணம்.

என்ன பிராயசித்தம் செய்யலாம் என்று யோசித்த அவர் உடனே அவளது கோரிக்கைக்கு இசைந்தார்.

வேசி சமையலறையிலிருந்து மாமிசத்தை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.

அதை வாங்கிய பிராமணர் அதில் ஒரு துண்டை எடுத்துத் தான் வாயில் போட வாயைத் திறந்தார்.

வேசி பளீரென்று அதைத் தட்டி விட்டு, பிராமணரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தாள்.

“இது கூடவா தெரியவில்லை. பாவத்தின் தந்தை ஆசை, பேராசை. போ! ராஜாவிடம் சொல்லு போ!” என்றாள்.

பேராசை!

பிராமணர் கண்களில் நீர் துளித்தது.

மெதுவாக வெளியே சென்றார் – வேசியை வணங்கி விட்டு.

அடுத்த நாள் ராஜாவின் கேள்விக்கு பதில் சொல்லி விட முடியும் என்பதால் அவர் முகத்தில் பழைய தேஜஸ் ஜொலித்தது; அத்துடன் புதிதாக பெறுதற்கரிய ஞானமும் பெற்றதால் ஞான தேஜஸும் சேர்ந்தது!

****

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி752020 (Post No.7937)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7937

Date uploaded in London – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. -8 எழுத்துக்கள்–வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரத மிருந்து உயிர்விடும் சடங்கு

4.–3– பாக்கு மரம்

7.–5– ஆண்டாள் செப்பிய 30 பாடல்

10. / வலமிருந்து இடம் செல்க—3– கஜேந்திர மோட்சம் கதையில் யானையின் காலை இழுத்த பிராணி

10A. –2– முடிவான சிரார்த்தம் செய்யும் புனித ஊர்.

11.–5– நம் மொழி தெற்கில் வளர்ந்ததால் இப்படி அழைப்பர்

12. –3–பெண்களின் அணிகலன்

13.—4– / வலமிருந்து இடம் செல்க– முக்கோணம், சதுரம், வட்டம் ஆகியவற்றை வருணிக்க  உதவும் சொல்.

14= –2– ஓரி, பாரி போல இன்னுமொரு வள்ளல்

15.= –6— திருவாரூரின் புகழ்பெற்ற குளம்

17. 3– சொல் , பேசு என்பதன் ,மற்றுமொரு சொல்

கீழே

1.—8 எழுத்துக்கள்– யானைக்கு Y ஒய் நாமமா, யு U வடிவ நாமமா என்று சண்டைபோட்ட 2 பிரிவுகள்

5. –3– முதலாவது என்பதன் சுருக்கம்

6.–4– மலரின் பெயர், பிரபல வாரப்பத்திரிக்கை

16. –2–ரவா, குஞ்சா , திருப்பதி என்ற பெயர்களுடன் சேர்ந்து வரும் இனிப்பு

2.–3– தியாகராஜர் பாடியது

13A. –3–இடம் என்பதன் எதிர்ப்பதும்

3. –3– கொக்கு

3. –2– கீழிருந்து மேல் செல்க- நமக்கு உபதேசம் செய்பவர்

12. / கீழிருந்து மேல் செல்க—4– இந்து வந்தால் முகமே காட்டிவிடும் என்பார் வள்ளுவர்

13.–3– குழாய் அடியில் பெண்கள் அளப்பது

8. –5– கசப்பான காய்

9. –4– பழனி மலையின் மற்றும் ஒரு  பெயர் ; பெரிய தமிழ் அறிஞரின் பெயருமாம் .

9. –3– திட்டுதல்

12 A. -4— விளங்கிக் கொள்ளல்

—SUBHAM—-

Swami Crossword 752020 (Post No.7936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7936

Date uploaded in London – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.



Across

1. — 7 letters—OLDEST RELIGIOUS BOOK IN THE WORLD

5. – –4–SATAVAHANA KING WHO MADE THE PRAKRIT ANTHOLOGY GATHA SAPTA SATI

8. – 4–LIGHT, DISEASE, LUSTRE

9. –6– NAME OF TAURUS SIGN

12. –8– NOT BY MAN; SUPERNATURAL

13. A – 8–A RAKSHASA KILLED BY GHATOTKACHA IN MAHABHARATA WAR .

Down

1.– 6–SON OF HARISCHANDRA

2. —6–– VISHWAMITRA’S DISCIPLE WHO WAS ASKED TO BRING 800 HORSES AS GURU DAKSHINA

3. –5– FAULT OR DEFECT; ASTROLOGERS AND AYUR VEDIC PHYSIANS USE THIS OFTEN

4.– 6–A VEDIC KINGDOM, A KING’S NAME

6. – 5–IN TAMIL LITERATURE A MYSTERIOUS ANIMAL THAT WILL DIE IF LOUD SOUND IS PLAYED ; ALSO MEANT PYTHON

7.– 4–FOREFATHER OF KAURAVAS AND PANDAVAS ;

10.– 4–THIS STADS FOR FAMOUS MILK PRODUCTS BY A MILK SOCIETY IN ANAND IN GUJARAT

11.– 4– NURSE MAID EMPLOYED BY BRITISH IN INDIA

–subham–

எந்த நூல்? என்ன காலம் ? அறிஞர்கள் கருத்து (Post No.7935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7935

Date uploaded in London – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சில புஸ்தகங்களில் இருந்து தொகுத்த தகவல்கள் — பெரும்பாலும் புகப்பெற்ற நடுநிலை அறிஞர் கமில் ஸ்வெலிபில் (Czech Tamil Scholar Kamil Zvelebil 1927-2009, author of The Smile of Murugan)  கூறியது —

சங்க இலக்கிய காலம் – கி.பி.2-ம் நூற்றாண்டு

சங்க இலக்கிய புலவர் பரணர் – கி.பி.150ஐ ஒட்டி வாழ்ந்தவர்;

முதலாவது நக்கீரர் – கி.பி.250

இரண்டாவது நக்கீரர் – எட்டாம் நூற்றாண்டு

மூன்றாவது நக்கீரர் – பதினோராம் திருமுறை கூறும் நக்கீரதேவ நாயனார்.

ஒரு வேளை ஐந்து நக்கீரர்கள் இருந்திருக்கலாம் என்று கமில் ஸ்வெலிபில் செப்புகிறார்.

முதல் கபிலர் – தொல் கபிலர் – அகம் 282 பாடல் –

இரண்டாம் கபிலர் – சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய பார்ப்பனன்; ஜாதி வெறியை உடைத்தெறிந்த முதல் புரட்சி வீரன்; பாரி மகளிர் அங்கவை, சங்கவை இருவரையும் தன் மக்கள் போல் கா ப்பா ற்றிய சத்திய சந்தன் ; புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று அதிகமான சங்கப்  புலவர்களால் துதிக்கப்பட்ட பிராஹ்மணன் – பரணர் காலத்தில் – கி.பி. 150-ஐ ஒட்டி வாழ்ந்த சத்யா பராக்ரமன்.

மூன்றாவது கபிலர் – பதினோராம் திருமுறையில் உள்ள கபில தேவ நாயனார் ; பிரமணர்களைக் குறைகூறும் கபிலர் அகவல் இயற்றியவர்.

முதல் ஔவையார் – சங்கப் புலவர் ; அதியமான் நண்பர் ; சத்ய புத்திரர் என்பதன் தமிழாக்கம் அதியமான்

இரண்டாம் ஔவையார் – சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் காலத்தவர் – ஒன்பதாம் அல்லது எட்டாம் நூற்றாண்டு.

மூன்றாம் ஔவையார் – தனிப்பாடல் தொகுப்பில் வரும் பெண்மணி; நீ தி நூல்களை இயற்றியவர்.

மொத்தம் ஆறு ஔவையார்கள் இருந்ததாக தற்கால ஆராய்ச்சி நூல் ஒன்று சொல்லும். இவர்களில் நாலாவது ஔவையார் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

***

சேரன் செங்குட்டுவன் – கிபி. 170- 225

மதுரை நகரத்தை கண்ணகி எரித்த ஆண்டு – கி.பி.171

சிலப்பதிகார காலம் – கி.பி.756; பரி பாடல் காலம் கி.பி 634 என்று சுவாமிக்கண்ணு பிள்ளை வானியல் குறிப்புகளைக் கொண்டு கணித்துள்ளார்

***

பத்துப் பாட்டும் தெரியாது; எட்டுத் தொகையும் தெரியாது;

இன்று நாம் சங்க காலத்திய 18 நூல்களை பத்துப் பாட்டு , எட்டுத் தொகை என்று பிரித்துள்ளோம்.

ஆனால் இவையெல்லாம் பிற்காலப் பாகுபாடு .

உரை ஆசிரியர்களில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் கூட இதைக் குறிப்பிடாது நூலின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறார் .

உச்சிமேற் புலவர் கொள் உரைகாரர் நச்சினார்க்கினியர் , மதுரை நகர பாரத்வா ஜ கோத்ர  பார்ப்பனன் – 14ம் நூற்றாண்டு ; அதாவது இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் ( எழுதுவதில் வேத வியாசர், ஆதி சங்கரர்  ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் நிற்கும் எழுத்து மன்னன் .)

***

இறையனார்:– அகப்பொருள் பாடிய இவர் நாலாம் அல்லது ஆறாம் நுற்றாண்டுக்குட்பட்டவர் . குறுந்தொகை இரண்டாம் பாடல் பாடிய இவரை சிவ பெருமான் என்றே கருதினர்.

நக்கீரரின் இறையனார் அகப்பொருள் உரை – எட்டாம் நூற்றாண்டு

பெருந்தேவனார் – எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு;

பேராசிரியர் – உரை காரர் – 13ம் நூற்றாண்டு;

***

தமிழை முதலில் செந்தமிழ் அந்தஸ்துக்கு உயர்த்திய மதுரைப் பார்ப்பனன் வி.கோ .சூர்ய நாராயண சாஸ்திரி 1871- 1903 ; தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டவர் ; இவரைப்பார்த்து பிற்காலத் திராவிடங்களும் தங்கள் பெயர்களைத் தமிழ்ப் படுத்தி. (நச்சினார்க்கினியர் என்பதும் சம்ஸ்கிருதப் பெயரின் தமிழ் வடிவமாக இருக்கலாம்).

பாரதியார் – 1882-1921

உ.வே.சா. – 1855- 1042

தாமோதரம் பிள்ளை – 1832 – 1901

வி. கனகசபைப்பிள்ளை – 1855-1906

ஆனந்தரங்கம் பிள்ளை – 1709- 1761 ; 25 ஆண்டுக் காலம் டைரி (Diary) எழுதியவர்

குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூட ராசப்ப கவிராயர் – 1718.

****

18 சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வரிகள் 26,350; சிலர் 30,000 வரிகள் வரை சொல்லுவர் ; கடவுள் வாழ்த்து, பதிகச் செய்யுட்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்; சிலர் திரு முருகாற்றுப்படை , பரிபாடல், கலித்தொகை ஆகியன பிற்காலத்தியவை என்று ஒதுக்குவதில் வரி எண்ணிக்கை குறையும் .

திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களை 5, 6-ம் நூற்றாண்டுகளில் வையாபுரிப்பிள்ளை வைக்கிறார்.; அவருடைய அணுகு முறை –மொழியியல் அணுகுமுறை.

தொல்காப்பியர் காலம் பற்றி முன்னரே பல கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

சம்ஸ்க்ருத இலக்கண நூல் அஷ்டாத்யாயீ யுடன் ஒப்பிடுகிறேன் ; பாணினியின் காலம் :–

கோல்ட்ஸ்டக்கர் – கி.மு ஏழாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் ;

மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர்கள்–

டி .ஆர். பண்டார்கர்

ஆர்.ஜி.பண்டார்கர் – இருவரும் சொல்வது – கி.மு ஏழாம் நூற்றாண்டு;

டாக்டர் வி.எஸ். அக்ரவாலா – கிமு.450.

tags – எந்த நூல்? , என்ன காலம் ? ,அறிஞர்கள்

-subham-

PANINI’S TIME- WHEN DID HE LIVE? (Post No.7934)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7934

Date uploaded in London – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

FOLLOWING DETAILS ARE COLLECTED FROM DR.V. S. AGRAWALA’S BOOK:—

GOLDSTUCKER – SEVENTH CENTURY BCE OR BEFORE THAT—AFTER YASKA- BEFORE BUDDHA;

R. G .BHADARKAR – SEVENTH CENTURY BCE;

D. R . BHADARKAR – SEVENTH CENTURY BCE ;

K B PATHAK – FIRST QUARTER OF SEVENTH  CENTURY BCE ;

CHARPENTIER – 500- 550 BCE;

GRIERSON – 400 BCE;

MACDONELL – BEFORE 500 BCE;

B C BOHTLINGK – 350 BCE;

WEBER – AFTER ALEXANDER’S INVASION;

LIEBICH – AFTER BUDDHA;

AVERAGE  – BETWEEN SEVENTH AND FOURTH CENTURY BCE – A RANGE OF 300 YEARS .

V S AGRAWALA’S BOOK – MIDDLE OF FIFTH CENTURY BCE – MAHANADA’S TIME i.e.450 BCE.

***

FOLLOWING IS TAKEN FROM WIKIPEDIA:-

VON HINUBER – 350 BCE

BOD – SEVENTH TO FIFTH CENTURY BCE

FALK – 350 BCE

GEORGE CORDONA – 350-400 BCE

A. B. KEITH – PANINI’S TEXT MTACHES WITH AITAREYA BRAHMANA OF EIGTH CENTURY BCE

SCHARFE – MATCHES UPANISHADIC LANGUAGE ; So 5TH OR 6TH CENTURY BCE.

This shows there is no agreement on his date till today.

***

My Comments: —

After reading Ashtadyayi in Tamil in three parts by Dr K Meenakshi , published by International Institute of Tamil Studies, Madras and Yonas and Yavanas by Finnish oriental Society , Helsinki and 30,000 lines of Sangam Tamil literature twice plus Tolkappiam , I conclude that PANINI lived in seventh or  8th century BCE. The reason being many scholars have interpreted Yavanas as Greeks who followed Alexander. But the Yavanas in Tamil literature are Romans and the Yavanas in Sanskrit literature including Mahabharata and Ramayana, first meant people who lived in North West India, not Greeks.

Each one of the above foreign authors took some bits that suited them. People who argue on numismatic (coins) evidence forget 90 percent of other materials in Panini’s works. This shows their ignorance of Tamil and Sanskrit literature. Four coins names mentioned by Panini are not even known to Chanakya/Kautilya of Mauryan times.

Two important things must be remembered.

1.From Afghanistan to the southernmost part of Sri Lanka , we see Brahmi script even before Asoka. This covered a vast area and formed the largest ancient country in the world. How come people read Asoka’s edicts from one end to the other end? Hindus were literate at least by 4th century BCE from Afghanistan to Kandy in Sri Lanka.

Second thing , Panini talks about Chandasi grammar (Vedic Sanskrit) in every other Sutra or so. Why? How come no book of the Ten Pre- Paninian scholars is available today? ‘There is no grammar without literature’ — is a famous saying. Where is the Pre- Paninian literature? Panini couldn’t have written a grammar without literature.

People who argue on coinage (numismatics) never answered these questions and could never answer these questions because we have lost a lot of our literature.. We have written script in Indus- Sarasvati civilisation and all agree that it is Hindu civilisation. So Indians knew script and writing around 2500 BCE

Egyptians knew writing 5000 years ago

Babylonians knew writing 5000 years ago

Chinese  knew writing 5000 years ago

Moses wrote Ten Commandments and knew writing 4000 years ago.

Mycenaeans of  Greece knew writing 4000 years ago.

But Hindus did not know anything is the view of many foreigners.

Tags — Panini, age, time

–subham–

ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்! (Post No7933)

ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்! (Post No7933)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7933

Date uploaded in London – – – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 29 – ஆண்கள் உலகம்!

R.Nanjappa

ஆண்கள் உலகம்?

பெண்கள் இல்லாமல் சினிமா இல்லை! ஆனாலும் சினிமா உலகில் பெண்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாகவே

பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றனர். அல்லது அழுகை வர வைக்க அம்மா வேடம்! கதை, வசனம், படப்பிடிப்பு. இயக்கம், இசை-என்று இப்படி எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்! 1953ல் ஒரு பானுமதி ‘சண்டிராணி’ படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கி, பாட்டும் பாடி சாதனை படைத்தார். அது அசாதாரணம்.

mardo ka fir bhi gulam hai zamana  மருதோ(ன்) கா ஃபிர் பீ  குலாம் ஹை ஃஜமானா” [ என்ன இருந்தாலும் இந்த உலகம் ஆண்களின் அடிமைதான்] என்று மிஸ்மேரி படத்தில் ராஜேந்த்ர க்ரிஷன் (தமாஷாக) எழுதிய பாடல் வரி நினைவுக்கு வருகிறது! 

 பாட்டு எழுதும் கவிகள் அனேகமாக ஆண்களே! பெண்களின் பாத்திரத்திற்காக பெண்களின் எண்ணங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களையும் ஆண்கள் தான் எழுதுகிறார்கள்! உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம்- இது உரன் கடோலா படத்தில் வரும்

ஹமாரே தில் ஸே ஜானா

हमारे दिल से जाना, धोका खाना, दुनिया बड़ी बेइमान
पिया दुनिया बड़ी बेइमान  

ஹமாரே தில் சே ஜானா தோகா கானா

துனியா படீ பேயீமான்

பியா துனியா படீ பேயீமான்!

அன்பரே! என் நெஞ்சை விட்டு அகலாதீர்கள்!

உலகில் சென்று ஏமாறாதீர்கள்!

இந்த உலகம் கவுரவமில்லாத இடம்

அன்பரே! உலகம் மோசமான இடம்!


(मैं हूं जी प्यार की पहली निशानी)-
(आँखों से आज कहूं दिल की कहानी)-
ओऽऊऽ सुन लो जी पैंया पड़ूँ होऽऊऽ
(देखो जी विनती करूं)-
होऽऊऽ, उमार भर लाज निभाना
दिल दुखाना
बलमा कहा मेरा मान
ऊऽ पिया दुनिया बड़ी बेइमान
हमारे  

மை ஹூ ஜீ ப்யார் கீ பஹலீ நிஷானீ

ஆன்கோ ஸே ஆஜ் கஹூ(ன்) தில் கீ கஹானீ

; ஸுன் லோ ஜீ பையா படூ(ன்) ..ஹோஓ

தேகோஜீ வினதி கரூ(ன்)

ஹோஉமார் பர் லாஜ் நிபானா

தில் துகானா

பல்மா கஹா மேரா மான்

பியா துனியா படீ பேயீமான்

அன்பரே! உங்கள் அன்புக்கு முதலில் பாத்திரமானது நான் தான்.

தில் உள்ளதை இன்று கண்களால் சொல்லுவேன்!!

, தயவு செய்து கேளுங்கள்காலில் விழுகிறேன்

பாருங்கள்கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்,

ஆயுள் முழுவதும் என் கவுரவத்தைக் காப்பாற்றுங்கள்

மனதிற்கு துன்பம் தராதீர்கள்

அன்பரேஉலகம் கௌரவமில்லாத இடம்அங்கு போய் ஏமாறாதீர்கள்

என் நெஞ்சிலேயே இருங்கள்!

(मीठे दो बोल यहां, मुशकिल है बोलना)-
(दुनिया से भेद कभी, मन के खोलना)-
ओऽऊऽ झूठी है प्रीत यहां,होऽऊऽ
(कोई मीत यहां)-
होऽऊऽ, बुरा है आज ज़माना
टूटे जिया ना
उलझन में है मेरी जान
ऊऽ पिया दुनिया बड़ी बेइमां
हमारे  

மீடே தோ போல் யஹா(ன்) முஷ்கில் ஹை போல்னா

துனியா ஸே பேத் கபீ, மன் கே கோல்னா

..ஜூடி ஹை ப்ரீத் யஹா(ன்)   …ஹோஓ

கோயீ மீத் யஹா(ன்)

.. புரா ஹை ஆஜ் ஃஜமானா

டூடே ஜியா நா

உல்ஃஜன்  மே ஹை மேரீ ஜான்

பியா துனியா படீ பேயிமான்

இங்கு இரண்டு  இனிமையான வார்த்தை பேசுவது கடினம்!

உலகத்திலிருக்கும் பிடிக்காத விஷயத்தை மனதை விட்டுச் சொல்லவேண்டாம்!

இங்கு அன்பு என்ற பெயரில் நிலவுவதெல்லாம் போலியே!

இங்கு உண்மையான அன்பர்கள் கிடையாது!

.. இன்று உலகம் கெட்டுக் கிடக்கிறது

மனது உடைந்து போய்விடப்போகிறது– 

இதை நினைத்து என் மனம் சங்கடப்படுகிறது!

அன்பரேஉலகம் கவுரவமில்லாத பொல்லாத இடம்

அங்கு போய் ஏமாறாதீர்கள்

என் நெஞ்சை விட்டு அகலாதீர்கள்!

Song: Hamare dil se na jana Film: Uran Khatola 1955  lyrics: Shakeel Badayuni

Music: Naushad    Singer: Lata  Raga: Bihag

மிக அருமையான கவிதை- இதற்கு “பிஹாக்ராகத்தில் மிக இனிமையாக மெட்டமைத்திருக்கிறார் நௌஷத்.

பாட்டின் கருத்தை மனதைத் தொடும் விதத்தில் வெளிப்படுத்துகிறது.

கவி ஷகீல் பதாயுனி உண்மையான அன்பரின் மன நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது பெண் பாத்திரத்திற்காக எழுதியது. உலகை அதன் கண்ணோட்டத்தில் காட்டுவது. பெண்கள் இப்படிப் பேசுவார்களா?

உலகைப் பற்றிப் பேசலாம்-மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்வார்களா? 

[இந்தப் பாட்டை இதன் தமிழ் டப்பிங்க் “வான ரதம்” படத்திற்காக கம்பதாசன் தமிழில் எழுதினார்.’என் உள்ளம் விட்டு ஓடாதே’ என்று தொடங்கும்.]

ஆண்களின் மன நிலையை பெண்கள் வருணித்தால் எப்படி இருக்கும்? பெண்களில் அதிகம் பாடலாசிரியர்கள் இல்லை. நடிகை நர்கிசின் தாயார் ஜட்டன்பாய் ஒரு பாட்டு எழுதினார். நடிகை நிருபாராய் ஒரு பாட்டு எழுதினார். இசைஞர் ஓ.பி. நய்யாரின் மனைவி ஸரோஜ் மோஹினி “ப்ரீதம் ஆன் மிலோ” என்ற தனிப்பாடலை  எழுதி இது சி.ஹெச். ஆத்மா என்ற பாடகரின் குரலில் பிரபலமானது. இதையே கீதா தத் குரலில் Mr&Mrs.55 என்ற படத்தில்  நய்யார் பாடவைத்தார். பிறகு மாயா கோவிந்த் என்ற பெண் பாடலாசிரியர் வந்தார். ஆனால் ஆண்களின் மன நிலையை விளக்குவதாக நமது பொற்காலத்தில் ஒரு பெண் கவி எழுதியிருக்கிறார். பர்வேஃஜ் ஷம்ஸி Parwaiz Shamsi  என்ற இவர் “நௌஷேர்வான்-ஏ-ஆதில்” என்ற 1957 படத்திற்குப் பாட்டெழுதினார் அதில் ஒரு அருமையான Ghazal. 

யே ஹஸ்ரத் தீ

यह हसरत थी के इस दुनिया में बस दो काम कर जाते तुम्हारी याद में जीते, तुम्हारे ग़म में मर जाते  यह दुनिया डूबती तूफ़ान आता इस क़यामत का अगर दम भर को आँखों में मेरी आँसू ठहर जाते  तुम्हारी याद आकर मेरे नश्तर चुभोती है मगर दिल के सारे ज़ख़्म इतने दिन में भर जाते  कहाँ तक दुख उठाएं तेरी फ़ुर्क़त और जुदाई के अगर मरना ही था एक दिन, क्यूँ फिर आज मर जाते

யே ஹஸ்ரத் தீ கே இஸ் துனியாமே பஸ் தோ காம் கர் ஜாதே(ன்)

தும்ஹாரீ யாத் மே ஜீதே(ன்), தும்ஹாரீ கம் மே மர் ஜாதே(ன்)

இந்த உலகில் எனக்கு இரண்டே ஆசைகள் தான் இருந்தன

உன் நினைவில் வாழவேண்டும், உன் (நீ இல்லாத) வருத்தத்தில் உயிரை விடவேண்டும்!

யஹ் துனியா டூப்தீ தூஃபான் ஆதா இஸ் கயாமத் கா

அகர் தம் பர் கோ ஆங்கோ மே மேரீ (ன்)ஸூ டஹர் ஜாதே

பிரளயம் வந்து இந்த உலகமே மூழ்கிப்போய் விட்டால் தான் என்ன?

காலம் முழுவதும் என் கண்களில் கண்ணீர் நின்றுவிட்டுப் போகட்டுமே!

தும் ஹாரீ யாத் ஆகர் மேரே ்தர் சுபோதீ ஹை

மகர் தில் கே ஸாரே ஃஜக்ம் இத்னே தின் மே பர் ஜாதே

உன் நினைவு வந்து வந்து கத்தி போல் மனதைத் துளைக்கிறது

அனாலும் இத்தனை நாட்களையும்  இந்த காயம் இன்னும் முழுதும் நிரப்பவில்லையோ

கஹா(ன்) தக் துக் உடாயே(ன்) தேரீ ஃபுர்கத் ஔர் ஜுதாயீ கே

அகர் மர் நா ஹீ தா ஏக் தின், க்யூ(ன்) ஃபிர் ஆஜ் மர் ஜாதே

நீ பிரிந்து போனதால் உண்டான துக்கத்தை எத்தனை நாள் தாங்குவது?

ஒரு நாள் உயிர் பிர்ந்துதான் போகுமென்றால்

இன்றே ஏன் உயிரை விட்டுவிடக்கூடாது?

Song: Ye hasrat thi Film: Naushervan-E-Adil  1957

Lyrics: Parwaiz Shamsi

Music: C.Ramchandra  Singer: Mohammad Rafi

மிக அருமையான கஃஜல். இதை மொழிபெயர்ப்பதில் அதன் விசேஷ அர்த்தங்கள் வெளிவருவதில்லை. பெர்ஷியன்-உருது சொற்களும் அவற்றின் பின்னணியும் தெரிந்துகொள்ளவேணும்.

இதற்கு அபாரமாக இசையமைத்திருக்கிறார் சி.ராம்சந்த்ரா.

பாடியவர் முஹம்மது ரஃபி. இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. ரஃபி ராம்சந்த்ராவின் அபிமானப் பாடகர் அல்ல! ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பளர் ஸோஹ்ராப் மோடி ரஃபிதான் பாடவேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பாட்டும் நன்றாகவே வந்தது. 

ஆனாலும் இந்த வகைப் பாடல்களைப் பாட ரஃபி அவ்வளவு தகுந்த ஆளில்லை என்பது என் கருத்து. இதற்குத் தகுந்தவர் தலத் முஹம்மதுதான். ரஃபி பஞ்சாபிலிருந்து வருபவர். அவரது உருது உச்சரிப்பு ஒருவகை. தலத் அசல் உ.பியிலிருந்து வருபவர்- உருது மொழி, இலக்கியம் கவிதையில் தோய்ந்தவர். அவர் உச்சரிப்பு வேறுவிதம். கஃஜல் பாடுவதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

ரஃபி சிறந்த பாடகர் இல்லை எனச் சொல்லவில்லை; இதைச் சரியாகப் பாடவில்லை என்றும் சொல்லவரவில்லை.

This version does not do full justice to the magnificence of the lyrics of this ghazal- that is my opinion. The words do not flow from the depths of his heart-this is what I have felt.

But this is a beautiful song, no doubt about it.

இங்கு நாம் பார்ப்பது, மன உணர்ச்சிகளை, எண்ணங்களை கவிதையில் வடிப்பதில் பெண் கவிகளுக்கும் ஆண் கவிகளுக்குமிடையே ஏதாவது பெரிய அளவில் வித்தியாசமிருக்கிறதா என்பதே. ஆண் கவி எழுதிய பெண்ணின் மன நிலையாகட்டும், பெண்பால் கவி வருணித்த ஆணின் மன நிலையாகட்டும்- உணர்ச்சிச் சுழலில்  ஒன்றேயாகி நிற்கிறது. இரண்டும் பிரிவைத் தாங்க இயலாத நிலை! வெளிப்பாடுதான் வேறுவிதம்- இது சினிமாவின் சூழ்நிலை! இந்த இரண்டுமே அருமையான கவிதைகள்.

ஆக, காதலை வருணிப்பதில் இரு  பாலரும் ஒரே விதம் எனச் சொல்லலாமா?

Note: Those interested may listen to these ghazals of Talat Mahmood

 and see for themselves.

1. Aye dil mujhe aisi jagah le chal film: Aarzoo  music: Anil Biswas

2. Ek main hun ek meri                   film: Tarana- Anil Biswas

3. Mohabbat hi na jo samjhe           film: Parchhain -C.Ramchandra

4. Zindagi denewale sun                 film: Dil-e,nadan- Ghulam Mohammad

5. Dekhli teri khudayi                       film: Kinare Kinare – Jaidev

6. Sham e gham ki kasam                 film: Footpath-Khayyam

7. Main pagal                                     film: Aashiana – Madan Mohan

8. Main dil hun                                    film: Anhonee- Roshan

[ please listen on a good music system, with original sound tracks, not the electronically disfigured stuff]

*****

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை! (Post No.7932)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7932

Date uploaded in London – – – 7 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!

ச.நாகராஜன்

ஹிந்து தேசத்தின் நாடித் துடிப்பாக விளங்கும் கீதமான வந்தே மாதரம் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் ஊட்டுகின்ற கீதம்.

தோன்றிய நாளிலிருந்து இன்று வரை உன்னத உணர்ச்சிகளை ஊட்டும் கீதம்.

இந்த கீதத்திற்காக பாரதமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல ஒரு உணர்வைக் காட்டும் வகையில் வட கோடி இமயம் முதல் தென்கோடி குமரி வரை இந்த கீதத்தை பாரத மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குச் சாவு மணி அடித்து சுதந்திர ஒளியை ஏற்ற இந்த கீதத்தை மனதில் ஏற்றிப் பயன்படுத்தினர்.

இதை இயற்றியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி.

வங்காளத்தில் 24 பர்கானா மாகாணத்தில் கந்தலபாரா என்னும் இடத்தில்    27-6-1838 அன்று பங்கிம் பிறந்தார்.



பத்து வயதாக இருக்கும் போதே அவரது அபார துணிச்சல் தெரிந்தது. கிராமத்தைச் சூறையாட வந்த கொள்ளையர்களுக்குப் பயந்து கிராமமே காலி செய்து ஓடும் சூழ்நிலையில் அவர் கிராமத்தை விட்டுக் கிளம்ப மறுத்தார்.

‘இந்த கிராமம் நமது சொந்த மண். இதைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” என்று கூறி கிராமத்திலேயே இருந்தார்; அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கொள்ளையர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.

சொந்த கிராமத்தின் மீது இப்படி ஒரு பற்றைக் கொண்டிருந்த பங்கிம் சந்திரர்

சொந்த தேசத்தின் மீது அடங்கா பற்று கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை.

ஹூக்ளியில் மோஷின் கல்லூரியில் முதலிலும் பின்னர் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியிலும் படித்துப் பட்டப் படிப்பை முடித்த பங்கிம் டெபுடி மாஜிஸ்ட்ரேட்டாகப் பதவியேற்றார்.

ஆங்கிலேய அதிகார வர்க்கத்தைத் தட்டிக் கேட்டு அடிக்கடி ஏற்பட்ட உரசல்களால் அவர் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் அசரவில்லை.

33 வருடங்கள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார். இதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1894, ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.

சம்ஸ்கிருதத்தைக் கல்லூரி நாட்களிலேயே அவர் கற்க ஆரம்பித்தார். நான்கு வருடங்களில் சம்ஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சியைப் பெற்றார்.

இயல்பாகவே இலக்கியத்தில் அவருக்கு ஆர்வம் இருந்தது; அத்துடன் கற்பனா திறனும் படைப்பாற்றல் திறனும் கூடவே இருந்தது.

1872ஆம் வருடம் அவர் வங்க தர்ஷன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.

இந்தப் பத்திரிகையில் அவர் எழுதிய 1880 முதல் இரண்டு வருடங்கள் ஆனந்த மடம் என்ற நாவல் வெளிவந்தது.#

இந்த நாவலில் இடம் பெற்ற அற்புத பாடல் தான் வந்தே மாதரம்.

வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத்தாயை வணங்குதல் செய்வோம் என்று பாரதியார் வந்தே மாதரத்தின் பொருளை அழகுறத் தன் பாடலில் விளக்கி விட்டார்.

அன்னையை வணங்குகிறேன்!

பாரதத் தாயை வணங்குகிறேன்.

இது தான் பாடலின் ஆரம்பம்.

இந்தப் பாடல் எப்படி உருவானது?

1873ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நாள்.

கல்கத்தா நகர வாழ்க்கையில் அலுப்புற்ற பங்கிம் சந்திரர் தன் சொந்த ஊரான கந்தலபாதாவிற்குச் செல்ல எண்ணினார்.

கந்தலபாதா செல்லும் ரயிலில் ஏறினார். நகரத்தை விட்டு ரயில் தாண்டியவுட்ன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற காட்சி.

மனதிற்கு ரம்யமான உணர்வுகள்.

அவர் பாரதத்தின் அகண்ட பெருமையை எண்ணினார்.

உருவானது கீதம்.

வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்

சஸ்ய ஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்

சுப்ர ஜ்யோஸ்த்னா புலகித யாமினீம்

புல்ல குஸுமித த்ருமதல ஷோபினீம்

சுஹாசினீம் சுமதுர பாஷிணீ ம்

சுகதாம் வரதாம் மாதரம் வந்தே மாதரம்

கோடி கோடி கண்ட கலகல நினாத கராலே

கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே

கே பலே கெனோ மா துமி அபலே

பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்

ரிபுதல வாரிணீம் மாதரம் வந்தே மாதரம்

துமி வித்யா துமி தர்ம

துமி ஹ்ருதி துமி மர்ம

த்வம் ஹி ப்ராண சரீரே

பாஹுதே துமி மா சக்தி

ஹ்ருதயே துமி மா பக்தி

தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே மாதரம் வந்தே மாதரம்

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண வாரிணீ

கமலா கமலதல விஹாரிணீ

வாணீ வித்யா தாயினீ

நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்

சுஜலாம் சுபலாம் மாதரம் வந்தே மாதரம்

ச்யாமளாம் சரளாம்

ஸுஸ்மிதாம் பூஷிதாம்

தரணீம் பரணீம் மாதரம் வந்தே மாதரம்

பாடல் பாரதத்தில் சுதந்திரத்திற்கான மகத்தான எழுச்சியை ஊட்டியது!

ஆனால் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (13வது பதிப்பு, ஆறாம் தொகுதி, பக்கம் 10) இதை பங்கிம் சந்திரர் இந்த கீதம் மகத்தான ஒரு கீதமாக எழும் என்று இதை எழுதும் போது எதிர்பார்க்கவில்லை என்று பொய் கூறுகிறது.

இப்படி இந்தியரின் மகத்தான வரலாறைப் பற்றிப் பொய் கூறுவதே பிரிட்டிஷ் பத்திரிகைகளின் வழக்கம் – அன்று முதல் இன்று வரை.

இந்தப் பொய்யை மறுக்கும் வகையில் அமைகிறது பங்கிம் சந்திரர் எழுதிய கடிதம்.

வந்தே மாதரம் தேசீயப் பொறியைத் தூண்டி விட்டுப் பெரும் பங்கை வகிக்கப் போகிறது எனப் பலரும் நினைத்தனர். அவர்களுள் ஒருவர் பந்தவா என்ற பத்திரிகையின் ஆசிரியரான காளி ப்ரசன்ன கோஷ். அவருக்கு 6-1-83 அன்று எழுதிய கடிதத்தில், “What does it matter to me that I wrote Ananda math? What does it matter to you that you interpret its significance? There is no hope for these men consumed by mutual jealousy and utter selfishness. Vande matharam is the right slogan for them”  என்று எழுதினார்.

அத்துடன் மட்டுமல்லாது தனது மகளிடம், “இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் வங்காள மக்கள் இந்த கீதத்தின் மீது பைத்தியமாக இருப்பர்.” (“A day will come 20 or 30 years hence, a day will come when Bengal will go mad over  this song – Bengal will be beside herself with it”)  என்று கூறினார்.

அவர் தீர்க்கதரிசனத்தின்படியே தான் நடந்தது.

ஒரு  முக்கிய விஷயம், முதலில் இந்த கீதத்தில் வங்க மக்களின் ஜனத்தொகையான ஏழு கோடி (சப்த கோடி) என்று குறிப்பிடப்பட்டிருப்பினும் இது தேசம் முழுவதையும் தழுவிய 30 கோடி (கோடி கோடி) மக்களின் கீதமாக ஆனது.

இன்றோ 130 கோடி மக்களின் இதய கீதமாக ஒலிக்கிறது!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் பாட வேண்டிய கீதம் வந்தே மாதரம்!

ஒவ்வொருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நாவல் இந்த கீதத்தைக் கொண்டிருக்கும் ஆனந்த மடம்!

பாரத் மாதா கீ ஜெய்!



tags  —  வந்தே மாதரம், Ananda math, பங்கிம் சந்திர சட்டர்ஜி

—subham–

****

Tamil Information from Valmiki Ramayana (Post No.7931)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7931

Date uploaded in London – 6 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Valmiki Ramayana gives us the following information regarding the Tamil customs :–

  1. A poet named Valmiki is in the 2000 year old Sangam Tamil literature and serious scholars believe it is ‘original’ Valmiki!
  2. Like Tamil poets faced Holy North and starved to death as atonement, we have an incident in Valmiki Ramayana.
  3. The great Tamil chozas came to Tamil Nadu from North Western India — Usinara desa — five Sangam poets sang about the glorious northern king Sibi Chakravarty who is portrayed as the forefather of the Chola kings. Support for this theory that both Rama and chola belong to the same tribe, the Chola flag and Bharata flag are shown one and the same in the Ramayana. All belong to Solar race- Surya Vamsa.
  4. South Indian men and women decorate their heads or ears with flowers. Valmiki describe this and attributed it to the southerners.
  5. Kapatapuram, which was the seat of Second Tamil Academy known as Tamil Sangam was located,  is mentioned by Valmiki. Supporting information comes from Kautilya of Arthasastra who also spoke about the ‘Pandya Kavata’, a variety of pearl.
  6. Last but not the least, the burial of Vratha, a demon, is described by some people as a Tamil custom. But it is rejected as baseless and absurd.

***

Before going into details, let me briefly describe the Pandya’s connection with the North.

Pandyas who belonged to Lunar race, Chandra Vamsa, are described as relatives of the Pandavas of Mahabharata. Both of them are called as Kauriar, descendants of Kuru. Great Tamil Brahmin commentator Nachchinarkiniar narrated the stories of the music competition between Agastya and Ravana, and the peace treaty between Ravana and the Pandyas. So this supports the theory that Tamils lived as a civilised group at the time of Ramayana.

But these are all considered un historical.

A historical account comes from the oldest section of Mahavamsa regarding what happened to Vijaya of sixth century BCE.

***

Mahavamsa

Sri Lankan Buddhist history book Mahavamsa narrated what happened in the sixth century BCE. On the day Buddha died, Vijaya, son of Simhabahu, landed in Sri Lanka. He was banished by his father for evil activities. At that time Sri Lanka was occupied by cannibals called Yakshinis. Ramayana also described Lanka the same way. This Vijaya married local Yakshini Queen called Kuveni. But Brahmin ministers advised him to marry an actual Kshatriya by birth. Then what happened is described in Mahavamsa as follows,

“Vijaya, son of Sihabhau (the lion armed) together with seven hundred followers landed in Ceylon from the country of Lala, Eastern Bengal, having been banished from that country by his father for evil conduct. He had been set adrift on a ship, he landed at Supparaka. Then he continued his journey in another ship and landed in Tambapanni, i.e. Ceylon. He became king of the country after defeating and slaying the Yakkas who lived there. And requiring wives for himself and his followers he sent people to the city of Madurai in the Dakshina (south) with gifts to woo the daughter of Pandu king and also secure wives for others.

A number of Tamil girls bedecked with ornaments accompanied by horses and elephants and wagons went to Ceylon”

So the Sinhalese are actually descendants of Tamils and Bengalis. Pali language of Buddha and Mahavamsa is closely related to Sanskrit.

Pandya king didn’t send his daughter and the daughters of his ministers just like that. He knew the history of Pandya’s peace treaty with Ravana.

And before this Arjuna married another Tamil girl Alli Rani also known as Chitrangada.

Vijaya’s marriage with the Tamil girl took place 2500 years ago and it is considered historical.

Patanjali of second century BCE derived the word Pandya from the word Pandu. Mahavamsa also describes Madurai king as a Pandava.

Xxx

Ravana abducting Sita in Cambodia Stamps.

Ramayana References

Ravana frequented Janasthana and other places in South India.

How was it possible?

Asoka’s son and daughter also reached Sri Lanka very easily from Patna in Bihar by using the monsoon. They knew if you leave on a particular day during the monsoon season ,without spending a single penny, you can reach Sri Lanka. In the same way return journey also planned using the monsoon. It is very clearly explained in Mahavamsa. The Sri Lanka partly waited in Patna known as Pataliputra 2600 years ago, for nearly six months for the returning monsoon to set in. South West monsoon returns after hitting the Himalayas. Ravana used Godavari banks as his play ground because he knew the monsoon winds. Some Indian scholars without studying Mahavamsa bluffed that Sri Lanka was a Godavari River island

This shows the connection between the south and north.

Now to the actual references

Kishkinda Kanda and Ayodhya Kanda of Valmiki Ramayana give few references to Tamil Nadu.

When the search parties were sent by the monkey tribe chief Sugriva, each party is given directions. The monkey party that went towards south were instructed to go past Andhra, Pundra ,Chola, Pandya countries.

But this passage of Kishkinda Kanda (sarga 42) is not found in Griffith’s edition. We may not know whether Griffith rejected it as wrong or it was inserted into southern version at a later date.

The second reference is about the golden gate decorated with pearls in the southern coast. The Sanskrit word Kavada stood for Gate. It was the Gate Way of India for anyone comes from the Southern Hemisphere. This Kapata pura was the seat of Second Tamil Academy called Tamil Sangam. Since this Kapata is confirmed in other Tamil sources and Kautilya’s Artha sastra, scholars consider it as historical.

The Dakshiina Madurai which was the seat of first Tamil

Academy may be the one mentioned in Mahavamsa.

This Kapatapuram and the Dakshina Madura were destroyed in two big Tsunamis according to two Tamil books. Geologists also confirm tsunamis that happened in second century BCE and earlier. Taking all these into accounts we may safely say that these incidents confirmed the existence of Tamils from sixth century BCE.

***

Now to the other references,

Tamils , both men and women, were famous for wearing flowers . Tamil literature described the flowers for each occasion.  Even the warriors wore different flowers when they went to the battle field. Like Greeks gave olive branches for the winners Tamils gave Vakai flowers and wore it on the head. As for women,  they always decorate their hair with flowers. When Valmiki describes the army of Bharata he mentioned this custom. It is in Ayodhya kanda, sarga 96.  Bharata says that our soldiers carry shields that look like clouds and they have flowers on their heads like southerners.

***

Fast unto Death

Tamils starve to death if they are insulted or something goes wrong. Two great kings Peruncheralathan and Kopperum cholan went on fast unto death and great poets joined them. This is called Prayopavesam.

Similar to this there is an anecdote in the Ramayana. When Angathan’s search party failed to locate Sita Devi he decided to starve to death. He prepared a seat with the holy ‘darbha ‘grass and stood facing east. (Kishkinda Kanda Sarga 56.

Ayodhya Kanda Sarga 48 also has a reference: When Rama was banished for 14 years, people were thinking of taking Mahaprasthana Vrata. That means one will walk towards North until the body falls on the ground.

Pancha Pandavas, five Pandavas , walked towards Holy North and fell to death one by one. A dog also accompanied them.

***

Kovidhara Tree Flag

Bharata’s flag was the Kovidhara tree. And this was the same tree used by the Chola kings for their garlands. The three great Tamil kings Chera, Chola and Pandya wore different flower garlands. But when a Chola king wore two different garlands that meant he won that king as well. A reference to Palmyra flower garland brings out lot of interesting information.

When Guha saw the army of Bharata coming towards him, he saw the flag according to Ayodhya Kanda Sarga 84.

Three branched palmyra tree, ten branched palmyra trees are mentioned in the Ramayana as land marks or Marking trees in the east and west.. A Tamil scholar says that these were land marks used by  victorious kings.

Another interesting fact comes from the last chapter of Ramayana. When Vibhishana , the newly crowned king of Sri Lanka, said Good Bye to Rama and party, he gave Rama a golden memento of seven palmyra trees. This may be due to Rama’s arrow piercing of seven trees at one go with one arrow. Or it may be something thing to do with the three or ten headed/ branched palmyra trees .

***

Tamil poet Valmiki

Author of Purananuru verse 358 is Valmiki. Tamil spelling with the honorific ending ‘aar’ is Vanmikanaar. The reason for identifying him with the author of Ramayana is that he glorified penance. He said in his Tamil verse that penance is great and family life is an iota. In spite of his philosophical view we cannot place him nearer to original Valmiki. His language betrays him.

***

Burial or Cremation

The shapeless fleshy bodied demon Vratha requested Rama to bury him. Some people pointed out this was a Tamil custom which is wrong. Like Rig Veda we have references to both burial and cremation in Tamil literature. In fact, we even have a few references to Sati custom in the ancient Tamil book Purananuru. Sati, which means wife throwing herself into the funeral fire of her husband, is neither in the Rig Veda nor in the Manu Smrti.

Valmiki left us lot of minute details which needed more attention and research.

To put it in a nut shell, the above references give clear evidence for Valmikis knowledge about South India and Tamil customs.

tags — Tamil information, Valmiki Ramayana, Bharata flag, Kapatapuram, use of flowers, Prayopavesa, Mahaprasthana

–subham–